Thursday, December 1, 2011

எகிப்து தேர்தல்:இஃவானுல் முஸ்லிமீன் முன்னணி


800_egypt_election_ballots_ap_111130

கெய்ரோ:துனீசியாவையும், மொரோக்கோவையும் பின்தொடர்ந்து எகிப்து தேர்தலிலும் இஸ்லாமிய கட்சி முன்னேறுகிறது.ஜனநாயக புரட்சியின் மூலமாக ஹுஸ்னி முபாரக் பதவி விலகியபிறகு நடந்த முதல் கட்ட தேர்தலில் இஃவானுல் முஸ்லிமீன்(முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம்) தலைமையிலான ஃப்ரீடம் அண்ட் ஜஸ்டிஸ் கட்சி 40 சதவீத வாக்குகளை பெற்றுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும்.
வருகிற டிசம்பர், ஜனவரி மாதங்களில் நடைபெறும் இரண்டாவது மற்றும் 3-வது கட்ட தேர்தல்களில் இதே நிலை தொடர்ந்தால், தற்காலிக ராணுவ அரசிடமிருந்து அதிகாரத்தை மீட்க இஃவான்களால் இயலும். பழமைவாத கட்சியான அந்நூர் கட்சியும், ப்ரோக்ரஸிவ் கட்சியான எகிப்தியன் ப்ளாக்கும் அடுத்த இடங்களை பிடித்துள்ளன.
498 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்ற தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு இடங்களுக்கு கட்சி ரீதியாகவும், மூன்றில் ஒரு பகுதி இடங்களுக்கு தனிநபர்களிடையேயும் தேர்தல் நடைபெறும்.

No comments:

Post a Comment