Tuesday, January 31, 2012

ஈரானுக்கு பொருளாதார தடை விதித்திருப்பது அநியாயம் : அதிபர் ராஜபக்ச !


கொழும்பு: ஈரானுக்கு எதிரான அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையால் இலங்கை போன்ற சிறிய நாடுகள் பாதிக்கப்படுவதாக ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார். கொழும்பில் வெளிநாட்டு செய்தியாளர்களை சந்தித்த அவர், எண்ணைய் வளத்தில் ஈரானை மட்டுமே இலங்கை சார்ந்திருப்பதால் அடுத்த கட்ட நடவடிக்கைகுறித்து ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்க ஈரான் தயாரிக்கும் ஆள் இல்லாத விமானம் !


அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்க ஈரான் தயாரிக்கும் ஆள் இல்லாத விமானம்அமெரிக்காவுக்கும், ஈரானுக்கம் இடையே பனிப்போர் நடந்து வருகிறது. அமெரிக்கா ஆள் இல்லாத விமானங்களை அனுப்பி உளவு பார்த்து வருகிறது. கடந்த மாதம் அமெரிக்கா இதே போல அனுப்பிய விமானம் ஒன்றை ஈரான் சுட்டு வீழ்த்தியது. 
இப்போது ஈரான் ஆள் இல்லாத விமானத்தை விரைவில் தயாரிக்க போவதாக அந்த நாட்டு ராணுவ மந்திரி அகமது வாஜி கூறியிருக்கிறார். இந்த விமானத்துக்கு ஏ-1 என்று பெயரிட்டு உள்ளனர். 10 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும் திறன் கொண்டது. 2 மணி நேரம் தொடர்ந்து பறக்கும். 5 கிலோ குண்டை ஏந்தி சென்று குறிப்பிட்ட இலக்கை தாக்க முடியும்.

இந்தியா: பிரபாஹர் பட்டின் பேச்சுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் கடும் கண்டனம்


பந்தவால்: இஸ்லாத்திற்கு எதிராகவும், முஸ்லிம்களுக்கு எதிராகவும் பேசிய பா.ஜ.க தலைவர் கல்லடக்கா பிரபாஹர் பட்டினை வன்மையாக கண்டிப்பதாக பாப்புலர் ஃப்ரண்டின் கர்நாடக மாநில தலைவர் இல்யாஸ் முஹம்மது தும்பே தெரிவித்துள்ளார்.கடந்த 30ஆம் தேதி அன்று கர்நாடக மாநிலம் உப்பினங்காடியில் ஹிந்து சமஜோத்வ நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பா.ஜ.க தலைவர் பிரபாஹர் முஸ்லிம்களுக்கு எதிராகவும் இஸ்லாத்திற்கு எதிராகவும் விஷமத்தனமான கருத்துக்களை பேசியுள்ளார்.

தமிழ்நாடு: கூடங்குளம் எதிர்ப்பாளர்கள் மீது ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் கொலை வெறி தாக்குதல் !



திருநெல்வேலி: நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூடங்குளம் எதிர்ப்பாளர்கள் மீது இந்து முன்னனிபயங்கரவாதிகள்  தாக்குதல் நடத்தியதால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. கூடங்குளம் அணு உலை தொடர்பாக எதிர்ப்பாளர்களுடன் மத்திய அரசு அமைத்த குழு இன்று 4-ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்துகிறது. இப்பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்களும் இடிந்தகரையைச் சேர்ந்த பெண்களும் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருந்தனர்.



அதே நேரத்தில் கூடங்குளம் அணு உலையை உடனே செயல்படுத்த வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு கொடுப்பதற்காக நெல்லை மாவட்ட இந்து முன்னணிபயங்கரவாதிகள்  அமைப்பின் துணைத் தலைவர் ஜெயக்குமார் தலைமையிலான ஒரு குழுவினரும் அங்கு வந்தனர்.

தினம் ஒரு 'கப்' தக்காளி சூப் – கிடைக்குமே சூப்பர் எபெக்ட் !



ஏழைகளின் ஆப்பிள் என்றழைக்கப்படும் தக்காளியானது புற்றுநோய் செல்களை குணப்படுத்தும் என்று பல்வேறு ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இது ஆண்களுக்கு ஆண்மையை அதிகரிக்கும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். விந்தணு குறைபாட்டினால் புதிய சந்ததியை உருவாக்க முடியாத நிலை. அதனால் ஏற்படும்மனச்சோர்வு ஆண்களை பாதிப்பிற்குள்ளாக்குகிறது. இந்த குறைபாட்டை நீங்க மருத்துவமனைகளுக்கு சென்று பல ஆயிரக்கணக்கில் செலவு செய்ய வேண்டிய நிர்பந்தத்திற்கும் ஆளாகின்றனர்.

Monday, January 30, 2012

தமிழ்நாடு: சட்டப்பேரவை கூடியது- ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள்.


தமிழக சட்டப்பேரவையின் நடப்பு ஆண்டின் முதல் கூட்டம் இன்று காலை ஆளுநர் ரோசய்யாவின் உரையுடன் தொடங்கியது.

ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்களாவன:
* திடமான முடிவுகளைத் துணிச்சலுடன் மேற்கொள்ளவல்ல முதல்வர் ஜெயலலிதாவின் திறமைமிக்க தலைமையின் கீழ், மாநிலத்தின் நலனையும், வளர்ச்சியையும் குறிக்கோளாகக் கொண்டு எண்ணற்ற நலத்திட்டங்களையும், வளர்ச்சிப் பணிகளையும் துவக்கி, செயல்படும் இந்த அரசின் மூலம் மகத்தான செயலாக்கத்தை நமது மாநிலம் கண்டுள்ளது.

* கடுமையான நிதி நெருக்கடி இருப்பினும் இக்குறுகிய காலத்தில் பெரும்பாலான தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிட முதல்வர் எடுத்துள்ள உறுதியும், அர்ப்பணிப்பும் பாராட்டுதலுக்குரியது.

இந்தியா: வேட்பாளரை நிராகரிக்கும் உரிமை வாக்காளர்களுக்கு தேவை- குரேஷி


வேட்பாளரை நிராகரிக்கும் உரிமை குறித்து பரிசீலிக்கும் நேரம் வந்துவிட்டது என்று தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேஷி தெரிவித்தார்.

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், நிலுவையில் இருக்கும் தேர்தல் சீர்திருத்தங்களை விரைந்து அமல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

தேர்தலில் தகுதியான வேட்பாளர்கள் போட்டியிடவில்லை எனில் அவர்களை நிராகரிக்கும் உரிமை வாக்காளர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்தத் திட்டத்தை முழுமனதுடன் வரவேற்றுள்ள குரேஷி, இதனை பரிசீலிக்கும் நேரம் வந்துவிட்டது என்று குறிப்பிட்டார்.

இந்தியா: ஆர்.ஸ்.ஸ் பயங்கரவாதி கோட்சேவை மடக்கி பிடித்த வீரரின் குடும்பம் வறுமையில் !


Godse Family
நாட்டின் தேசத்தந்தை மகாத்மா காந்தியை இதே நாளில் சுட்டுக்கொன்ற ஆர் ஸ் ஸ் பயங்கரவாதி   நாதுராம் கோட்சேவை தீரமுடன் மடக்கிப் பிடித்த ஒரு வீரரின் குடும்பம் இன்று வரை வறுமையால் தீரா சோகத்தில் மூழ்கிக் கிடக்கிறது. 1948 ஆம் ஆண்டு ஜனவரி 30-ந் தேதி மகாத்மா காந்தியை டெல்லி பிர்லா மாளிகையில் ஆர் ஸ் ஸ் பயங்கரவாதி   நாதுராம் கோட்சே சுட்டுக் கொன்றான். காந்தியை படுகொலை செய்துவிட்டு தப்பியோட முயன்ற கோட்சேவை தீரமுடன் மடக்கிப் பிடித்த வீரரின் பெயர் தேவ் ராஜ் சிங் தாகூர்.

ஈரானிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்த முடியாது :பிரணாப் முகர்ஜி !


ஈரானிடமிருந்து இந்தியா தொடர்ந்து எண்ணெய் இறக்குமதியில் ஈடுபடும் என இந்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். இரு நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ள அவர் சிகாகோவில் உரையாற்றூகையில் இவ்வாறு தெரிவித்தார். 
ஈரான் மேற்கொண்டு வரும் அணு ஆயுத திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஈரானிடமிருந்து, பிறநாடுகள் எண்ணெய் இறக்குமதி செய்வதை இடைநிறுத்தி கொள்ள வேண்டும் என ஐ.நா கோரிக்கை விடுத்தது.

ஐரோப்பிய யூனியன் மீது நாங்கள் தடை விதிப்போம் : ஈரான் அதிரடி அறிவிப்பு !


ஐரோப்பிய யூனியனின் தடைக்கு பதிலாக தடை விதிப்போம் என ஈரான் எச்சரித்துள்ளது. அணுசக்தி திட்டத்தை ஈரான் கைவிடாததை கண்டித்து ஈரானில் இருந்து கச்சா எண்ணெயை இறக்குமதிச் செய்வதை வருகிற ஜூலை மாதத்தில் பெருமளவில் குறைக்க ஐரோப்பிய யூனியன் தீர்மானித்தது. 
இதற்கு பதிலடியாக ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு கச்சா எண்ணெயை வழங்குவதை முற்றிலும் நிறுத்தும் நடவடிக்கையை உடனடியாக அமுல்படுத்த தயங்கமாட்டோம் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Sunday, January 29, 2012

தமிழ்நாடு: ஒரே இடத்தில் அனைத்து அரசு சேவைகள் !


ஒரே இடத்தில் அனைத்து அரசு சேவைகளையும் பெறுவதற்கு வசதியாக மக்கள் தொடர்பு மையம் தொடங்க தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக நேற்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: "தொழில்நுட்பத் துறையில் நாளுக்கு நாள் ஏற்படுகின்ற மாற்றங்களை, அன்றாட அரசு நடைமுறைகளில் புகுத்தி, அதன் மூலம் அரசுத்துறையின் பணிகளை எளிதாக்கி அரசை தேடி மக்கள் என்ற நிலையை மாற்றி மக்களை நாடி அரசு என்கின்ற நிலையினை உருவாக்க முதல் அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

பூமிக்கடியில் ஈரான் வைத்துள்ள அணுசக்திகளை தாக்க பங்கர் பஸ்டர் வெடிகுண்டு தயாரிக்கும் அமெரிக்கா !

பூமிக்கடியில் மிக பாதுகாப்பாக ஈரான் துவக்கியுள்ள அணுசக்தி திட்டங்களைத் தாக்கி அழிக்கும் திறன் கொண்ட, "பங்கர் - பஸ்டர்' வெடிகுண்டுகளைத் தயாரிப்பதில் அமெரிக்கா மும்முரமாக ஈடுபட்டுள்ளது.ஈரானின் அணுசக்தி திட்டங்கள் மீது சந்தேகம் கொண்டுள்ள அமெரிக்கா, அது குறித்து தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருவதுடன் உலக அரங்கில் அந்நாட்டைத் தனிமைப்படுத்தவும் பகீரத முயற்சி மேற்கொண்டு வருகிறது.

குழந்தை கடித்து பாம்பு சாவு !


வழக்கத்திற்கு முரணான சம்பவமாக, தவழும்  ஒருவயது குழந்தையொன்று பாம்பின் தலையை கடித்துத் துப்பிய சம்பவம் இஸ்ரேல் நாட்டில் நடந்துள்ளது. இமாத் கதீர் என்னும் பெயருடைய அக்குழந்தையின் அறையில் 13 இஞ்ச் நீளமுள்ள பாம்பு கடந்த வியாழனன்று வந்துள்ளது.


இளங்கன்று பயமறியாது என்ற பழமொழிக்கேற்ப அதனுடைய விளையாடிய குழந்தை, ஒருகட்டத்தில் அந்தப் பாம்பைக் கடித்து தலையை துண்டித்துள்ளது.  தன்னுடைய குழந்தையின் பசியாற்ற சமையலறை சென்று பால்புட்டி எடுத்துவந்த அதன் தாயார் அலைன், குழந்தையின் அருகே நெருங்கியபோது அக்குழந்தை பாம்பொன்றின் தலையை மென்று கொண்டிருப்பதைக் கண்டு அலறியுள்ளார்.

உ.பி.தேர்தல்:சமாஜ்வாதி கட்சிக்கு முஸ்லிம்கள் வாக்களிக்க வேண்டும் – டெல்லி இமாம் !


Samajwadi Party supremo Mulayam Singh with the Shahi Imam of Jama Masjid Maulana Syed Ahmed Bukhari
லக்னோ:உத்திரபிரதேச மாநிலத்தில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் சமாஜ்வாதி கட்சிக்கு முஸ்லிம்கள் வாக்களிக்க வேண்டும் என டெல்லி ஜும்மா மஸ்ஜிதின் ஷாஹி இமாம் மவ்லானா அஹ்மத் புஹாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவுடன் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார் டெல்லி இமாம். அப்பொழுது அவர் கூறியது:
“நாட்டில் முஸ்லிம்கள் வறுமையில் உழல்வதற்கு காங்கிரஸ் கட்சியே காரணம். அதனால் உத்தரப் பிரதேசத் தேர்தலில் முஸ்லிம்கள் சமாஜ்வாதி கட்சிக்கே வாக்களிக்க வேண்டும். ஆட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் முஸ்லிம்களின் முன்னேற்றத்துக்கு பாடுபடுவதாக முலாயம் சிங் உத்தரவாதம் அளித்துள்ளார். அதனால் சமாஜ்வாதி கட்சியின் வெற்றியை முஸ்லிம்கள் உறுதி செய்ய வேண்டும்."

Saturday, January 28, 2012

ஈராக்கில் 24 முஸ்லிம்களை படுகொலை செய்த அமெரிக்கனுக்கு 3 மாத சிறை ?


ஈராக் நகரமான ஹதீஸாவில் கடந்த 2005 ஆம் ஆண்டு 24 அப்பாவி மக்களை கூட்டுப் படுகொலைச் செய்த வழக்கில் ஆக்கிரமிப்பு அமெரிக்க ராணுவ வீரன் ப்ராங் உட்டரிக் குற்றவாளி என உறுதிச் செய்யப்பட்டது. 


நவம்பர் 19-ஆம் தேதி துப்பாக்கிச்சூடு நடத்திய ராணுவ யூனிட்டின் கமாண்டராக பணியாற்றியவர் உட்டரிக். இவ்வழக்கில் இவருடைய சக ராணுவ வீரர்களான ஏழுபேரை நீதிமன்றம் பல கட்டங்களில் விடுவித்தது. வேண்டுமென்ற செய்யாத படுகொலை, உணர்ச்சியைத் தூண்டும் தாக்குதல் ஆகிய வழக்குகளை சுமத்தமாட்டோம் என ராணுவ வழக்குரைஞர்கள் தயாரித்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் உட்டரிக் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். 

கண்களுக்கு ஒளிதரும் பீட்ரூட் கீரைகள் !


Beet Leaves
அன்றாட உணவில் பயன்படுத்தப்படும் காய்கறியான பீட்ரூட்டில் இருந்து கிடைக்கும் இலைகளான பீட்ரூட் கீரைகள் ஊட்டச்சத்து நிறைந்ததாகும். இது மருத்துவ குணம் கொண்டதாகவும் உள்ளது.  பீட்ரூட்டை உணவில் சேர்த்துக்கொள்கின்ற அளவிற்கு பீட்ரூட் கீரையை நாம் பயன்படுத்துவதில்லை. ஆனால் ஐரோப்பியர்கள் இக்கீரையை விரும்பி தங்கள் உணவை சேர்த்துக் கொள்கின்றனர். இது ஐரோப்பா கண்டத்தை பிறப்பிடமாகக் கொண்ட போதிலும் சமீபத்தில்தான் உலகம் முழுவதும் பயிரிடப்பட்டு வருகிறது.

ஐரோப்பாவிலும், வடஅமெரிக்காவிலும், கீரைக்காகவே பீட்ரூட்டைப் பயிரிடுகின்றனர்.. சைபீரியாவில் கால்நடைகளின் உணவிற்காகவே முற்காலத்தில் இந்த கீரையும் கிழங்கும் பயிரிடப்பட்டது எனச் சொல்லப்படுகிறது. கோழிகள் இக்கீரையை விரும்பி உண்கின்றன. எனவே இது ஒரு கோழித் தீவனமாகவும் பயன்படுகின்றன.

இஸ்ரேலிடம் 300 அணு ஆயுதங்கள் உள்ளன-அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்டர்


ஈரானின் அணுசக்தி பரப்புரைச் செய்வது போல் கவலை அளிப்பது அல்ல என்று அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்டர் தெரிவித்துள்ளார். டைம் இதழுக்கு அளித்த பேட்டியில் கார்டன் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் கூறியது: அணு ஆயுதம் தயாரிக்கமாட்டோம் என உறுதியாக மத உணர்வு மிக்க ஈரான் ஆட்சியாளர்கள் கூறியுள்ளனர். அவர்கள் அதனை மீறுவார்கள் என கருதவில்லை. தாங்கள் அணு ஆயுதத்தை தயாரிக்கவில்லை என தொடர்ந்து அவர்கள் கூறி வருகிறார்கள்.

மோசமான கருத்துக்களை சென்சார் செய்ய நாங்க ரெடி! - ட்விட்டர் அதிரடி


Twitterடெல்லி: இந்தியாவில் எந்தவகை மோசமான, ஆபாசமான தகவல்களையும் சென்சார் செய்யமாட்டோம் என்று கூகுளும் பேஸ்புக்கும் அடம்பிடித்து வரும் நிலையில், இணைய தள உலகில் முக்கிய நிறுவனமாகத் திகழும் ட்விட்டர், சட்டம் வலியுறுத்தினால் மோசமான கருத்துக்கள், செய்திகளை நீக்கத் தயார் என அறிவித்துள்ளது. இணையதளங்களை இந்தியாவில் சென்சார் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைக்கு இதன் மூலம் புதிய பலம் கிடைத்துள்ளது.



இணையதளங்களை சென்சார் செய்வது குறித்து இந்தியாவில் இப்போதுதான் புதிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.

இந்தியா: இராமர் கோயிலை கட்டுவோம்! பா.ஜ.கவின் தேர்தல் அறிக்கை


புதுடெல்லி: உத்திரபிரதேச மாநில சட்டசபை தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் வேலையில் அனைத்தும் கட்சிகளும் ஆட்சியை பிடிப்பதற்காக மக்களை கவர்வதற்கான தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. பா.ஜ.கவும் தன்னுடைய தேர்தல் அறிக்கையை கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளியிட்டது. 

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்கு 4.5% உள் ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு சமீபத்தில் அங்கீகரித்தது. இதனை முற்றிலுமாக பா.ஜ.க எதிர்த்து வருகிறது. மேலும் அயோத்தியில் இராமர் கோயிலை கட்டியெழுப்புவோம் என்று எப்பொழுதும் போல் பா.ஜ.கவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் நல்ல ஆட்சியை அமைப்பதோடு மட்டுமல்லாமல் ஊழலை ஒழிப்போம் என்றும் மாயாவதி அரசு அமைத்த நினைவுச்சின்னங்களை மறு சீரமைப்பது போன்ற வாக்குறுதிகளை அளித்துள்ளது பா.ஜ.க.

Friday, January 27, 2012

இந்தியாவில் எதையும் சென்சார் செய்ய மாட்டோம் :கூகுள் !



கூகுள் தளங்களில் கிடைக்கும் ஆபாச, மத உணர்வைப் புண்படுத்துகிற, பயங்கரவாதத்துக்கு துணை போகிற செய்திகள், படங்களை தங்களால் சென்சார் செய்ய முடியாது என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.



 "கூகுள், ட்விட்டர், பேஸ்புக், யாஹூ உள்ளிட்ட 21 இணையதள நிறுவனங்கள் நடத்தும் அல்லது இவற்றின் துணையுடன் இயங்கும் பல லட்சம் இணையதளங்களில் கணக்கற்ற ஆபாச தகவல்கள், படங்கள், தீவிரவாதத்துக்கு துணைபோகும் விஷயங்கள், மத உணர்வை புண்படுத்தும் செய்திகள் கொட்டிக் கிடக்கின்றன. இந்தியாவின் இணையவெளி தடையற்றதாக உள்ளதால், இளம் தலைமுறை ஆபாசம், வன்முறை மற்றும் தீவிரவாதத்துக்கு துணைபோக இந்த இணையதளங்கள் துணைபோகின்றன. இவற்றால் மதக் கலவரம் ஏற்படுகின்றன. எனவே இவற்றை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அல்லது இந்த இணையதளங்களை வழங்கும் கூகுள் போன்ற நிறுவனங்கள் சென்சார் செய்ய வேண்டும்", எனக்கோரி டெல்லியைச் சேர்ந்த வினய் ராய் என்பவர் டெல்லி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

பகவத் கீதையை தடை செய்யாமல் ஓயப்போவதில்லை - ரஷ்ய போராட்டக்காரர்கள் அறிவிப்பு !


மாஸ்கோ: சமூக அமைப்பில் பிரிவினையை தூண்டும் வகையில் இஸ்கான் அமைப்பால் வெளியிடப்பட்ட பகவத் கீதையை ரஷியாவில் தடை செய்யாமல் ஓயப்போவதில்லை என்று கிறிஸ்டியன் ஆர்த்தோடாக்ஸ் சர்ச் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். ரஷியாவின் டோம்ஸ்க் நகரில் பகவத் கீதைக்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. இருப்பினும் அதே நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய புதன்கிழமை வரை அனுமதியும் அளித்திருந்தது. 

தமிழ்நாடு: இஸ்லாமிய இயக்கத்தலைவர்களின் ஒன்று கூடல்


சென்னை: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டிற்கான கலந்தாலோசனை கூட்டம் நேற்று மாலை சென்னையில் வைத்து நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சமூகப் பிரமுகர்கள் மற்றும் சகோதர இயக்கங்களின் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு தங்களுடைய கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர்.




"முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு" பல ஆண்டுகளாக இதற்காக அனைத்து முஸ்லிம் இயக்கங்களும் தங்களால் இயன்ற அளவும் போராட்டங்களை நடத்தி வந்திருக்கின்றனர். இதனால் வரை முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு என்பது ஒரு கனவாக இருந்தாலும் தற்போது மத்திய அரசு முஸ்லிம்களுக்கு மத்தியில் இடஒதுக்கீட்டை வழங்குவது என முடிவெடுத்துள்ளது. இத்துனை நாள் அமைதி காத்துக்கொண்டு தற்போது பல மாநிலங்களில் தேர்தல் நடைபெறுவதையொட்டி இத்தகைய அறிக்கையை அரசியல் லாபத்திற்காக மத்திய அரசு வெளியிட்டிருந்தாலும், முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கலாம் என்ற நிலைக்காவது வந்திருப்பதை பாராட்டுவதில் தவறில்லை.

Thursday, January 26, 2012

பால் கலக்காத டீ சாப்பிட்டால் உடல் எடை குறையும்: ஆய்வில் தகவல் !


பால் கலக்காத டீ சாப்பிட்டால் உடல் எடை குறையும்: ஆய்வில் தகவல்“பால் கலக்காத “டீ” சாப்பிட்டால் உடல் எடை குறையும்” என ஆய்வில் தெரியவந்துள்ளது. உடல் பருமன் மற்றும் எடையை குறைக்க படாத பாடுபடுகின்றனர். மருந்து, மாத்திரைகள் சாப்பிடுவது மற்றும் உடற் பயிற்சி போன்றவற்றை மேற்கொள்கின்றனர். 

அத்துடன் பால் கலக்காத வெறும் டீயை மட்டும் குடித்தால் போதும். உடல் எடை அதிகரிக்காமல் கணிசமாக குறையும் என ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

வானில் ஒளி வெள்ளத்துடன் இங்கிலாந்து-அயர்லாந்தை சூரிய புயல் தாக்கியது !


வானில் ஒளி வெள்ளத்துடன்  இங்கிலாந்து-அயர்லாந்தை சூரிய புயல் தாக்கியது: விமானங்களின் பாதை மாற்றம்உலகம் அழியுமா? என்று பலவித தகவல்கள் மக்களை பயமுறுத்திக் கொண்டு இருக்கின்றன. இந்த நிலையில் சூரியனில் இருந்து வெடித்து சிதறிய காந்த புயல் பூமியை தாக்க வருகிறது என்று அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்தனர். உலகம் முழுவதும் உள்ள விண்வெளி விஞ்ஞானிகள் பயம் கலந்த ஆர்வத்துடன் இந்த நிகழ்வுகளை உற்று கவனித்து வந்தனர்.

சூரிய புயல் பூமியை நோக்கி பல கோடி மைல் வேகத்தில் வந்து கொண்டிருப்பதாகவும், இது செயற்கைகோள்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இதன் மூலம் கம்ப்யூட்டர், செல்போன் மற்றும் தகவல் தொடர்பு சேவைகள் பாதிக்கப்படும் என்று எச்சரித்து இருந்தனர். குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் இந்த தாக்குதல் அச்சம் அதிகம் இருந்தது.

எதிர்காலத்தில் உலகம் எப்படி இருக்கும் - ஜூலியன் அசாஞ்ச் ?


"விக்கிலீக்ஸ்' நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச், உலகின் முக்கிய ஆளுமைகளுடன், தான் பேட்டி எடுக்கும் தொடர் ஒன்றை விரைவில் துவங்கப் போவதாக அறிவித்து உள்ளார். 


அசாஞ்ச் தற்போது தன் மீதான பாலியல் வழக்கில் சுவீடனுக்கு நாடு கடத்தப்படும் விவகாரத்தில் சிக்கியுள்ளார். பிரிட்டனில் தங்கியுள்ள அவர் நேற்று இணையதளத்தில் விடுத்த அறிக்கை: "தி வேர்ல்டு டுமாரோ' என்ற தலைப்பில், 10 பாகங்களாக இந்த தொலைக்காட்சித் தொடர் வெளியாகும். இதில் உலகின் முக்கிய அரசியல்வாதிகள்,சிந்தனையாளர்கள், புரட்சியில் தொடர்புடையவர்கள் உள்ளிட்ட ஆளுமைகள் பலர் கலந்து கொள்கின்றனர். 

கடலில் கலப்பதில் 30 சதவிகிதமே தமிழகத்துக்குப் போதும். 28 ஆண்டுகளாய் இழுத்தடிக்கும் வழக்கு !


நதி நீர் இணைப்பு என்பது நல்ல விஷயம். அந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு எத்தனை ஆண்டுகள் ஆகும் எனத் தெரியாது. ஆனால், அது கங்கையில் பெருவெள்ளம் ஏற்பட்டு கரையோரக் கிராமங்களில் பெருத்த சேதம் ஏற்படுவதும், தென்மாநில நதிகளில் வறட்சி ஏற்பட்டு பயிர்கள் கருகிப்போவதும் ஆண்டாண்டு காலமாகத் தொடரும் பிரச்னை. 


அதனால் கங்கை - காவிரி நதிகளை இணைக்க வேண்டும்’ என்ற கோரிக்கை பலமாக எழுந்தது. வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் இமயமலைப் பகுதி, தீபகற்பப் பகுதி என்று இரண்டாகப் பிரித்து நதி நீர் இணைப்பை செயல்படுத்த ஒரு திட்டம் தீட்டப்பட்டது. அந்த ஆட்சியிலும் அதற்கு பின் வந்த ஆட்சிகளிலும் நதி நீர் இணைப்பு என்று எல்லாரும் பேசுவார்கள். ஆனால், செயல் என்று பார்த்தால், எதுவும் நடந்திருக்காது இதுதொடர்பான ஒரு பொதுநல வழக்கை 1983-ம் ஆண்டு தாக்கல் செய்தார் தி.மு.க. தேர்தல் பணிக்குழு உறுப்பினரும் வழக்கறிஞருமான கே.எஸ்.ராதாகிருஷ்ணன். அந்த வழக்கு இப்போதுதான் விசாரணைக்கே எடுக்கப்பட்டு உள்ளது.

குஜராத்தில் நடந்த போலி என்கவுண்டர்கலை விசாரியுங்கள் : சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவினால் மோடி கலக்கம்


டெல்லி: 2003 முதல் 2006ம் ஆண்டு வரை குஜராத்தில் நடந்த பல்வேறு போலி என்கவுண்டர்கள் குறித்த வழக்குளை விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  இது நரபலி   நரேந்திர மோடிக்கு ஏற்பட்டுள்ள பெருத்த பின்னடைவாக இது கருதப்படுகிறது. இதுதொடர்பான விசாரணையை ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி எம்.பி. ஷா நடத்துவார் என்றும் அப்தாப் ஆலம் தலைமையிலான உச்சநீதிமன்ற பெஞ்ச் அறிவித்துள்ளது.

Wednesday, January 25, 2012

இந்தியாவில் முதன் முறையாக அப்துல் கலாமின் கொடும்பாவி கோவையில் எரிப்பு !


Abdul Kalamகோவை: முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாமின் உருவ பொம்மையை எரித்த கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள் 12 பேரை போலீசார் கைது செய்தனர். கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து மக்கள் மனதில் உள்ள அச்சங்களைப் போக்க முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் முயற்சி செய்து வருகிறார். அணுமின் நிலையத்தை பார்வையிட்ட அவர் அது மிகவும் பாதுகாப்பானது, அதனால் யாரும் கவலைப் பட வேண்டாம் என்று தெரிவித்திருந்தார்.


மக்கள் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு குறித்து பயப்பட வேண்டாம் என்றும், இத்திட்டத்தின் மூலம் தமிழகத்தின் நிதி நிலைமை மேம்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

முஸ்லிம்கள் தத்து எடுக்க சட்டப்படி உரிமை இல்லை: மதுரை உயர்நீதிமன்றம் !

ஈரோடு அவந்தியாபாளையத்தை சேர்ந்தவர் சிவப்பிரகாசம். இவருடைய மனைவி மாலா. இவர்களுக்கு கிரிதரன்(வயது 4) என்ற மகன் உள்ளான். கடந்த 2008- ஆம் ஆண்டு சிவப்பிரகாசம் ஒரு விபத்தில் இறந்து விட்டார். இதன்பின்பு மாலா திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். 



தன் மகன் கிரிதரனை, திருச்சி சங்கிலியாண்டவர்புரத்தில் ஷேக் தாவூது என்பவர் நடத்தி வந்த குழந்தைகள் பராமரிப்பு இல்லத்தில் சேர்த்து விட்டார். இதற்காக மாதம் 1,000 ரூபாய் அவர் செலுத்தி வந்தார்.

முல்லைபெரியாறு விஷயத்தில் தடுமாறும் கேரள அரசு !


kerala and mullaiperiyaru மிழக - கேரள எல்லையில் பதற்றம் குறைந்ததும், முல்லைப் பெரியாறு விவகாரம் முடிந்து விட்டதாக ஒரு தோற்றம் நிலவுகிறது. ஆனால் அணையை உடைத்தே  ஆகவேண்டும் என்கிற தன் நிலையில் இருந்து கேரளா ஒரு அடிகூட பின்வாங்கவில்லை என்றுதான் தோன்றுகிறது. 

இதற்கு அங்குள்ள மீடியாக்களும், அரசியல் கட் சிகளுமே சாட்சி! இது ஒருபுறமிருக்க, அணை பிரச்னை தொடர்பாக, கேரள முதல்வர் உம்மன்சாண்டி மாற்றி மாற்றிப் பேசுவதுதான் ஆளும் காங்கிரஸுக்கு  தலைவலியையும், எதிர்க்கட்சிகளுக்கு உற்சாகத்தையும் கொடுத்துள்ளது. சமீபத்தில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முதல்வர் உம்மன்சாண்டி பேசியது கேரளாவில் பலத்த எதிர்ப்பைக் கிளப்பியுள்ளது.

Tuesday, January 24, 2012

ஈரானின் அணு உற்பத்தி நிலையங்களை குறி வைத்து, தாக்குதல் நடத்தி அழிக்கப் போவதாக இஸ்ரேல் திடீரென அறிவித்தது ?

ஈரானின் அணு உற்பத்தி நிலையங்களை குறி வைத்து, தாக்குதல் நடத்தி அழிக்கப் போவதாக இஸ்ரேல் திடீரென அறிவித்தது. இதனால், அமெரிக்கா உட்பட உலக நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன. 


ஈரான் தொடர்ந்து அணுஆயுதங்களை தயாரித்து குவித்து வருவதாக அமெரிக்கா உட்பட மேற் கத்திய நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. ஈரான் மீது பொருளாதார தடைகளும் விதிக்கப்பட்டன. ஆனால், ஆக்கப்பூர்வ பயன்பாட்டுக்காக மட்டுமே அணுசக்தி உற்பத்தி செய்யப்படுவதாக ஈரான் தொடர்ந்து கூறி வந்தது. இந்த நிலையில், சமீப காலமாக அண்டை நாடுகளான இஸ்ரேல் & ஈரான் இடையே மோதல் வெடித்துள்ளது.

பாலஸ்தீன்: விடுதலைக்காக போராடுவதில் உறுதி- சுவிட்சர்லாந்தில் ஹமாஸ் சூளுரை

ஜெனீவாவில் உள்ள IPV என்ற இன்டர் பார்லிமன்ரி யூனியனின் கருத்தரங்கு மற்றும் பல்கலைகழக கருத்தரங்கு ஆகியவற்றிற்கு ஹமாஸ் அமைப்பினர் அழைக்கப்பட்டனர். இதனை எதிர்த்து சுவிஸ்சில் போராட்டம் நடந்தது. சுவிஸ்-இஸ்ரேல் சங்கமும் இஸ்ரேலிய அதிகாரிகளும் ஹமாஸுக்கு எதிராக குரல் கொடுத்துள்ளனர்."தீவிரவாதிகளுக்கு உரிமை கிடையாது" என்ற முழக்கத்தை முழங்கினர். 

இந்தியா: ராம்தேவ் ஒரு கொள்ளைக்காரன் - திக்விஜய் கடும்தாக்கு


நேற்று உத்தரகாண்ட் மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த  ராகுல் காந்தி பொதுக்கூட்டத்தில் உரையாற்றியபோது அவரை நோக்கி ஷூ வீசிய  நபர் பாபா ராம்தேவ் சாமியாரின் தூண்டுதலின்பேரிலேயே அவ்வாறு செய்தார்   என்று காங்கிரஸ் பொதுச்செயலர் திக்விஜய்சிங் குற்றம் சாட்டியுள்ளார்.