Tuesday, January 24, 2012

பாலஸ்தீன்: விடுதலைக்காக போராடுவதில் உறுதி- சுவிட்சர்லாந்தில் ஹமாஸ் சூளுரை

ஜெனீவாவில் உள்ள IPV என்ற இன்டர் பார்லிமன்ரி யூனியனின் கருத்தரங்கு மற்றும் பல்கலைகழக கருத்தரங்கு ஆகியவற்றிற்கு ஹமாஸ் அமைப்பினர் அழைக்கப்பட்டனர். இதனை எதிர்த்து சுவிஸ்சில் போராட்டம் நடந்தது. சுவிஸ்-இஸ்ரேல் சங்கமும் இஸ்ரேலிய அதிகாரிகளும் ஹமாஸுக்கு எதிராக குரல் கொடுத்துள்ளனர்."தீவிரவாதிகளுக்கு உரிமை கிடையாது" என்ற முழக்கத்தை முழங்கினர். 



இவர்களின் எதிர்ப்புக்கு இடையே மத்தியகிழக்கு நாடுகளின் அனைத்து தரப்பினரோடும் உரையாடல் நிகழ்த்த வேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில் சுவிஸ் அதிகாரிகள் கருத்தரங்கில் ஹமாஸ் இயக்கத்தினருடன் பேசிக்கொண்டிருந்தனர். இந்த கருத்தரங்கை அனைவருக்குமான உரிமை (Droit Pour Tous) என்ற அரசு சாரா அமைப்பு நடத்தியது.


இக்கருத்தரங்கில் பேசிய ஆறு பேரில் பாலஸ்தீனிய ஹமாஸ் இயக்கத்தின் செய்தி தொடர்பாளரான முஷிர் அல்-மஸ்ரியும் ஒருவராவார். அவர் கூறியதாவது " 2008-ம் ஆண்டு டிசம்பர் 27-ம் நாள் காசாவுக்கு எதிராக நடந்த போர் நடந்த போது 1500 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதும், சுமார் 5000 பேர் கயம்ப்பட்டதும், 20,000 பேர் வீடிழந்தனர்" என்று பேசினார்.


மேலும் ராணுவ கட்டுப்பாட்டுக்குள் பலஸ்தீனியர்கள் மிகவும் சிரமபடுகின்றனர் என்பதை பற்றி பேச தான் ஜெனீவா வந்ததாக தெரிவித்தார். பாலஸ்தீனியர்கள் தங்கள் விடுதலைக்காக போராடுவதில் உறுதியாக இருப்பதாகவும் அவர் வலியுறுத்தி கூறினார். ஆனால் ஹமாஸ் அமைப்பினரை தீவிரவாதிகளாக முத்திரை குத்தும் இஸ்ரேலியர் இந்த கருத்தரங்கையே நியாயமற்றது என்று எதிர்ப்பு குரல் கொடுத்தனர்.

No comments:

Post a Comment