Monday, September 24, 2012

தஞ்சை முஸ்லிம் இளைஞர் இராணுவ இரகசியங்கள் கடத்தியதாகக் கைது உண்மை அறியும் குழு அறிக்கை

சென்ற 18ந்தேதி முதல் தமிழக ஊடகங்களில் தஞ்சையைச் சேர்ந்த தமிம் அன்சாரி என்னும் இளைஞன் இலங்கை வழியாக இராணுவ இரகசியங்களைப் பாகிஸ்தானுக்குக் கடத்தியதாக ஒரு செய்தி மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. திருச்சி ‘கியூ’ பிரிவு போலீசார் அவரைக் கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர் (மு.த.அ எண் 1/2012. குற்றப் பிரிவுகள்; The Official Secret Act 3, 4 & 9 மற்றும் IPC 120(B)). இவருடன் சக குற்றவாளிகளாக இலங்கை கொழும்பு நகரைச் சேர்ந்த ஷாஜி மற்றும் லங்கா ஷாஜி ஆகியோரும் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி அமீர் சுபைர் சித்திக் என்பவரும் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் பாகிஸ்தான் நாட்டு உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐயின் தென் ஆசியப் பகுதியின் முக்கிய முகவர்கள் என்பதாகவும் கியூ பிரிவு போலீசார் ஊடகங்களுக்குச் செய்திகள் தந்துள்ளனர்.

“மத விரோதம் காரணமாகவும் சொந்த லாபத்திற்காகவும்” தமிம் அன்சாரி இதைச் செய்துள்ளார் எனவும், (1) இந்தியாவை இஸ்லாமிய நாடாக்கும் நோக்கத்துடனும், (2) வட இந்தியாவைப் போல தென்னிந்தியாவிலும் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தி இந்திய அரசை அச்சுறுத்தும் நோக்கத்துடனும் இச்சதி வேலை தொடங்கப்பட்டுள்ளதாகவும் கியூ பிரிவு போலீசார் கொடுத்துள்ள செய்தி காட்சி மற்றும் அச்சு ஊடகங்களில் பெரிய அளவு முக்கியத்துவத்துடன் தொடர்ந்து வெளிவருகிறது.

Sunday, September 23, 2012

இறைத்தூதருக்கு அவமதிப்பு : விழிப்புணர்வு "பிரச்சார" போராட்டம்!


இறைவனின் இறுதித்தூதரான முஹம்மது நபி (ஸல்) அவர்களை இழிவுப்படுத்தும் விதமாக வெளியான அமெரிக்க திரைப்படத்தைக் கண்டித்து, உலகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
பல போராட்டங்களுக்கு உரிய அனுமதி மறுப்பதுடன், அமெரிக்க தூதரகங்களை நெருங்கவிட மறுக்கிறது, இந்திய அரசு. எனவே "குதாயீ மதத்கார்" என்ற பட்டதாரி வாலிபர்களின் அமைப்பு புதிய யுக்தியை கையாண்டு "டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரக நுழைவு வாயில் வரை" நேரடியாக தனது போராட்டத்தை எடுத்து சென்றது.

கேரள போலீசின் இரட்டை நிலை : பொங்கியது முஸ்லிம்களின் கோப அலை!


மீலாது (நபிகள் நாயகம் பிறந்த நாள்) ஊர்வலத்தில் "ராணுவ உடை" அணிந்து சென்ற முஸ்லிம்கள் மீது "தேச துரோக வழக்கு" தொடர்ந்த கேரள போலீஸ்,
தற்போது கிருஸ்தவர்கள் ஊர்வலத்தில், ராணுவ உடை அணிந்து சென்றவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க மறுக்கிறது. கேரள போலீசின் இந்த பாரபட்சமான செய்தியாவது, இந்த வருட துவக்கத்தில் காசர்கோடு மாவட்டம் கஞ்சன்காடு "ஜும்ஆ மசூதி கமிட்டி"யின் சார்பில் மீலாது ஊர்வலம் நடந்தது.

அதில் கலந்துக்கொண்ட ஜுனைத், அர்ஷத், ஆரிப் ஆகிய மூன்று இளைஞர்கள், ராணுவ உடை அணிந்து மிடுக்கான வகையில் சென்றனர். ராணுவ உடை அணிந்து செல்வது "தேச துரோக குற்றம்" என பா.ஜ.க. இளைஞர் அணித்தலைவர் சுரேந்திரன் கொக்கரித்தார். மீடியாக்களும் இதை ஊதிப்பெரிதாக்கின.

Wednesday, September 19, 2012

மமதா அதிரடி... பிரதமர், அமைச்சர்களுடன் சோனியா இன்று அவசர ஆலோசனை

 Sonia Meet Top Leaders Discuss Mamata Banerjee Withdraw
டெல்லி: ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து விலகுவதாகவும், ஆட்சிக்கு அளித்து வரும் ஆதரவைத் திரும்பப் பெறுவதாகவும், அமைச்சர்களை விலக்கிக் கொள்வதாகவும் மமதா பானர்ஜி அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, மத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு சிறுபான்மை அரசாக மாறியுள்ளது. இதையடுத்து காங்கிரஸ் தலைவர்கள், பிரதமர் உள்ளிட்டோருடன் தலைவர் சோனியா காந்தி இன்று அவசர ஆலோசனை நடத்தவுள்ளார்.
நேற்று இரவு தனது அதிரடி முடிவை அறிவித்தார் மமதா பானர்ஜி. இதனால் காங்கிரஸ் தரப்பில் பெரிய அளவில் அதிர்ச்சி இல்லை என்ற போதிலும் கூட நெருக்கடியான நிலையில் ஆட்சி இருப்பதால் கட்சித் தலைவர் சோனியா காந்தி இன்று காலை 10 மணிக்கு அவசரக் கூட்டம் ஒன்றைக் கூட்டியுள்ளார். சோனியா காந்தியின் வீட்டில் நடைபெறும் இக்கூட்டத்தி்ல பிரதமர் மன்மோகன் சிங், ப.சிதம்பரம், ஏ.கே.அந்தோணி உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். அகமது படேலும் கலந்து கொள்கிறார். இக்கூட்டத்தில் அடுத்து என்ன செய்வது என்பது குறித்து பரிசீலிக்கப்படவுள்ளது.

Monday, September 17, 2012

அனைத்து முஸ்லிம் இயக்கங்களும் "நாளை" அமெரிக்க தூதரக முற்றுகை போராட்டம்! : TNTJ பங்கேற்காது!

சென்னை:  முஹம்மது நபி அவர்களை இழிவுபடுத்தும் வகையில் சினிமாவை இயற்றிய யூதனை கண்டித்தும் அதற்கு துணை நிற்கும் உலக ரவுடி நாடான அமெரிக்காவை கண்டித்தும் நாளை மாலை 4 மணியளவில், அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானித்துள்ளது.
உலக முஸ்லிம்கள் அனைவரையும் உலுக்கி கொதித்தெழ வைக்கும் வகையில் அமெரிக்க யூதன் பாசிலி,  முஹம்மது நபி அவர்களை இழிவுபடுத்தும் விதத்தில் திரைப்படம் தயாரித்துள்ளான். இதனை கண்டிக்க வேண்டுமென அமெரிக்க அரசிடம் கூறினால், அது அவரவர் தனிப்பட்ட கருத்து என முஸ்லிம் விரோத போக்கை கையாண்டுள்ளது. உலகின் பல பாகங்களிலும் அமெரிக்காவிற்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ளது. தமிழகத்திலும் அனைத்து இயக்கங்கள் சார்பில் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. தற்போது முஸ்லிம் சமூகம் தங்களுடைய பலத்தை தெரிவிக்கும் வகையில் அனைத்து இயக்கங்களையும் ஒன்றினைத்து மாபெரும் போராட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது.  நாளை மாலை 4 மணியளவில் சென்னை இராயப்பேட்டை புதுக்கல்லூரியிலிருந்து புறப்பட்டு அமெரிக்க தூதரகம் நோக்கி முற்றுகை போராட்டம் நடைபெறும் இன்ஷா அல்லாஹ்.
இதில் கீழ் கண்ட் இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் பங்கெடுக்கவுள்ளன:

Saturday, September 15, 2012

சதாம் ஹுசைனை போன்ற தோற்றம் கொண்ட "முஹம்மத் பிஷர்" கடத்தல்!


மிஸ்ர் நாட்டை சேர்ந்த முஹம்மத் பிஷர் என்பவர், தோற்றத்தில் அச்சு அசலாக முன்னாள் ஈராக் அதிபர் சதாம் ஹுசைன் போன்று இருக்கிறார்.
இவரை தொடர்பு கொண்ட சிலர், சதாம் ஹுசைன் குறித்த திரைப்படம் தயாரிக்கவிருப்பதாகவும், அதில் நீங்கள் நடிக்க வேண்டும் எனவும் ஒப்பந்தம் போட்டனர். இதற்காக 3,33,000 டாலர்கள் ஊதியம் பேசப்பட்டது. மார்க்க பற்று நிறைந்த "முஹம்மத் பிஷர்" நல்லெண்ண அடிப்படையில் நடிக்க ஒப்புக்கொண்டார். ஆனால், படப்பிடிப்பு நெருங்கும் வேளையில் சதிகாரர்களின் சூழ்ச்சியை புரிந்துக்கொள்ள முடிந்தது.

சதாம் ஹுசைனை கேவலப்படுத்தும் நோக்கில், அவரை சம்மந்தப்படுத்தி ஆபாசக்காட்சிகளை தயாரிக்க முற்பட்டனர். இதை கடுமையாக ஆட்சேபித்த முஹம்மத் பிஷரை, கடந்த வார இறுதியில் "இஸ்கந்திரிய்யா" என்ற இடத்தில் வைத்து, "கருப்பு உடைகளில் வந்த மூன்று நபர்கள்" ஒரு வேனில் கடத்தி சென்று அடித்து உதைத்தனர்.

Wednesday, September 12, 2012

கர்நாடகா : குர்-ஆன் ஓதி முடித்த "அன்ன பூரணி"


ஹுப்ளி, பஞ்சாரா தெருவை சேர்ந்த சுரேஷ்-ராஜேஸ்வரி தம்பதியினரின் மகள் அன்னபூரணி, திருமறை குர்-ஆன் முழுவதையும், அதன் மூல மொழியான அரபியில் ஓதி முடித்துள்ளார்.
ஹுப்ளி "விமன்ஸ் பாலிடெக் கல்லூரி"யில் படித்து வரும் அன்னபூரணிக்கு, சிறு வயது முதல், தானும் முஸ்லிம் குழந்தைகளைப்போல குர்-ஆன் ஓத வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டு, அதை தனது தாயிடம் கூறியுள்ளார். அதை தொடர்ந்து, அன்னபூரணி குடும்பத்தினர் "காசின் பாஷா-குல்ஜார் பானு தம்பதி"களை அணுகியுள்ளனர்.

அவர்களது ஏற்பாட்டின் பேரில், பள்ளிவாசல் இமாமின் மனைவி பீபிஜான், அன்னபூரணிக்கு குர்-ஆன் (பார்த்து) ஓத பயிற்சி கொடுத்து வந்தார். கல்லூரி படிப்புக்கிடையிலும், தினமும் பிற முஸ்லிம் குழந்தைகளுடன் சேர்ந்து, குர்-ஆன் ஓதிவந்த அன்ன பூரணிக்கு, குர்-ஆன் முழுமையாக ஓதி முடிக்க, 4 ஆண்டுகளானது.

பள்ளி மாணவனை கடத்த முயன்ற "ATS" போலீசுக்கு அடி-உதை!


டெல்லி ஜாமியா நகர் "ஷாஹீன் பாக்" பகுதியில், 16 வயது பள்ளி மாணவனை கடத்த முயன்ற, மும்பை "ATS" படையை சேர்ந்த போலீசாரை பொதுமக்கள் அடித்து உதைத்தனர்.
நேற்று (11/09) மாலை 6.30 மணியளவில் ஒரு வீட்டின் எதிரில், சப் இன்ஸ்பெக்டர்கள் ஆனந்த் மற்றும் விக்ரம் தலைமையில் "சாதாரண உடை"யில் இருந்த 7 பேர் கொண்ட ATS போலீசார் மறைந்து நின்றுக்கொண்டு, அந்த வீட்டை கண்காணித்தனர். அப்போது, டியூஷன் படிக்க செல்வதற்காக வீட்டை விட்டு வெளியே வந்த 11ம் வகுப்பு பள்ளி மாணவன், ஹசன் அஹ்மத் (16) என்ற சிறுவனை வலுக்கட்டயாமாக காரில் கடத்த முயன்றனர்.

Sunday, September 9, 2012

முஸ்லிம்களை சீண்டி பார்க்கும் பால் தாக்கரே!


எனக்கு கோபம் வந்து விட்டால், முஸ்லிம்களை மகாராஷ்டிரம் உட்பட இந்தியாவில் எங்கும் விட்டு வைக்க மாட்டேன் என்று, 86 வயது கிழட்டு ரவுடி பால்தாக்கரே, தனது துவேஷ பேச்சுக்களால் முஸ்லிம்களை சூடேற்றிப்பார்க்கிறார்.
நேற்று (08/09) மதியம் வெளவந்த சிவசேனை கட்சியின் "சாம்னா" பத்திரிக்கைக்கு, அவர் அளித்த பேட்டி : முஸ்லிம்கள், முதன்முதலாக 1992ல் "பாபர் மசூதி" இடிப்புக்குப்பின்னர் வீதியில் இறங்கினர்.

உத்தரப்பிரதேசத்தில் இடிக்கப்பட்ட மசூதிக்காக மும்பை வீதிகளில் இறங்கியது ஏன்? என்று கேள்வி எழுப்பும் அவர்? அஸ்ஸாம் முஸ்லிம்களுக்காக "மும்பை ஆசாத் மைதானத்தில்"  நிகழ்த்திய வன்முறை, திட்டமிட்ட செயல் என்றார்.

போலீசால் பழி வாங்கப்படும் முஸ்லிம்கள் : ஆதாரங்களுடன் "டாக்குமென்ட்ரி" படம்!


டெல்லியை சேர்ந்த "பகர்தீப் சக்கரவர்த்தி" என்ற பிரபல "டாக்குமென்ட்ரி" பட இயக்குனர், தீவிரவாத குற்றச்சாட்டின் பெயரில் கைது செய்யப்பட்டு, பல ஆண்டுகள் சிறை வாசத்துக்குப்பின் நிரபராதிகள் என தீர்ப்பளிக்கப்பட்டு
விடுதலை பெற்ற 7 முஸ்லிம் இளைஞர்களின் உண்மை வரலாற்றை "டாக்குமென்ட்ரி"  படமாக இயக்கியுள்ளார். இதற்கு, "மா பாத் ஹங்காமா" (பரபரப்புக்குப்பின்) என பெயர் சூட்டியுள்ளார். இதில் வரும் உண்மை கதாபாத்திரங்கள் : 1.முக்தார் அஹ்மத்.  2.முஹம்மத் பசீஹுத்தீன். 3.உமர் பாரூக். 4.முஹ்தஷிம். 5.ஹுரியத் அன்சாரி. 6.முஹம்மத் முசர்ரத் ஹுசைன். 7.ஷேக் அப்துல் கலீம்.  

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இந்தியாவின் 100வது ராக்கெட்

 Isro S 100th Mission Ready Take Off
திருப்பதி: இந்திய விண்வெளி ஆய்வுக் கழகமான இஸ்ரோவின் 100வது ராக்கெட் பயணம் இன்று வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. பிரதமர் மன்மோகன் சிங், மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி ஆகியோர் முன்னிலையில், ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்திலிருந்து விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது பி.எஸ்.எல்.வி - சி21 ராக்கெட்.
2 செயற்கைக் கோள்களுடன் ஏவப்பட்ட பிஎஸ்எல்வி சி21 ராக்கெட் சரியாக 9.51 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இதையடுத்து பிரதமர் உள்ளிட்டோர் கைகளைத் தட்டி சந்தோஷத்தை வெளிப்படுத்தினர்.
இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் ஆர்யபட்டா. இதை ரஷ்ய ராக்கெட் மூலம், 19-4-1975 அன்று விண்ணில் செலுத்தியது. ஆர்யபட்டாவின் மூலம் தனது விண்வெளி பயணத்தை துவங்கிய இஸ்ரோ இன்று காலை 9.51 மணிக்கு தனது 100வது ராக்கெட்டை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தியது.

Thursday, September 6, 2012

மன்மோகன்சிங் மீதான விமர்சனம்: வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையாளரை சாடுகிறது பிரதமர் அலுவலகம்

 Pmo Replies Washington Post Slams Journalist
டெல்லி: பிரதமர் மன்மோகன்சிங்கை மிகக் கடுமையாக விமர்சித்து வாஷிங்டன் போஸ்ட்டில் கட்டுரை இடம்பெற்றிருப்பதற்கு பிரதமர் அலுவகம் விளக்கம் அளித்திருக்கிறது. மன்மோகன்சிங்கை விமர்சித்து ஒருதலைபட்சமாக கட்டுரை எழுதியதற்காக பத்திரிகையாளரையும் மிகக் கடுமையாக சாடியிருக்கிறது பிரதமர் அலுவலகம்.
இது தொடர்பாக கட்டுரை எழுதிய பத்திரிகையாளர் சைமனுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
அரசாங்கத்தை விமர்சிக்கும் ஒரு பத்திரிகையாளரிடன் உரிமையை பற்றி நாங்கள் குறிப்பிடவில்லை. ஆனால் வரம்புமீறிய முறையற்ற உங்களது செயல்பாடுகளைத்தான் இக்கடிதத்தில் குறிப்பிடுகிறோம்.

Tuesday, September 4, 2012

ஆசிரியர்கள் தினம்!!!

கருவறையில் இருந்து வெளிவரும் ஒரு குழந்தைக்கு அந்த தாய் உலகை அடையாளம் காட்டுகிறாள். அந்த உலகை புரிந்து பண்பட்டவனாய் வாழும் கலையை ஆசிரியர் தான் அந்த குழந்தைக்கு செவ்வனே கற்று கொடுத்து மனிதனை மனிதனாக மாற்றும் வேலையை செய்கின்றனர். 

அந்த உண்ணதமான பணியை செய்யும் ஆசிரியர்களை நினைவுகூறும் விதமாகவும், நன்றி தெரிவிக்கும் விதமாகவும் இந்தியாவின் இரண்டாவது ஜனாதிபதி சர்வபள்ளி திரு.ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் 5-ம் தேதியை ஆசிரியர் தினமாக கொண்டாடுகிறோம். 

அவர் ஒரு சிறந்த ஆசிரியராக மட்டும் இல்லாமல் சிறந்த தத்துவமேதையாகவும், சிறந்த கல்வியாளராகவும் விளங்கினார். இந்தியாவில் 1962 முதல் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 5ஆம் தேதியை ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. 

Monday, September 3, 2012

பிரதமர் அலுவலகத்தை நினைத்தால் 'பி.பி' ஏறுகிறது- சுப்ரீம் கோர்ட் வரலாறு காணாத தாக்கு!

 Cauvery Water Dispute Supreme Court Slams Pm Office
டெல்லி: காவிரி நதிநீர் அலுவலக விவகாரத்தில் பிரதமர் மன்மோகன்சிங் அலுவலகம் செயல்படுவம் போக்கை நினைத்தாலே ரத்த கொதிப்புதான் வருது... என்று இதுவரை இந்திய வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு ஒரு பிரதமர் அலுவலகம் பற்றி கடுமையான விமர்சனத்தை வைத்திருக்கிறது உச்சநீதிமன்றம்.
காவிரி நதிநீர் பிரச்சனை என்பது தமிழக மக்களின் வாழ்வாதார விவகாரம். தமிழகத்தில் பல்லாயிரம் ஏக்கரிலான குறுவை சாகுபடியே செய்ய முடியாமல் போய் சம்பா சாகுபடியும் நடக்குமா? என்ற கேள்விக்குறியோடு தமிழகம் தவித்துக் கொண்டிருக்கிறது. தமிழக அரசும் காவிரி நதிநீர் ஆணையத்தைக் கூட்டுங்கள் என்று மன்றாடிக் கொண்டிருக்கிறது.
ஆனால் காவிரி நதிநீர் விவகாரத்தில் பிரதமர் மன்மோகன்சிங் அலுவலகம் எப்படியெல்லாம் அலட்சியமாக, தமிழக மக்களின் வாழ்வாதார பிரச்சனையில் எப்படியெல்லாம் படுகேவலமாக மெத்தனமாக நடந்து கொண்டிருக்கிறது என்பதை உச்சநீதிமன்ற நீதிபதிகள் இன்று வெட்ட வெளிச்சமாக எச்சரிக்கையுடன் கூடிய கடுமையான வார்த்தைகளால் வறுத்தெடுத்துவிட்டனர்.

Sunday, September 2, 2012

மஹ்மூத் அப்பாஸை கொலை செய்ய இஸ்ரேல் அமைச்சர் உத்தரவு! : பாலஸ்தீனத்தில் பதற்றம்!


ஈரானில் நடைபெற்ற அணி சேரா நாடுகள் இயக்கத்தின் "NAM" (Non Aligned Movement) மாநாட்டில் கலந்துக்கொண்ட பாலஸ்தீன ஆணையத்தலைவர் மஹ்மூத் அப்பாஸை கொலை செய்ய வேண்டும்,
என்று இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் "அவிக்டோர் லைபெர்மன்" ஆவேசமாக கூறியுள்ளார். நேற்று (01/09) இஸ்ரேலின் தொலைகாட்சி "சேனல்10" க்கு அவர் அளித்த பேட்டி : ஈரானில் நடைபெற்ற அணிசேரா இயக்கத்தின் "NAM" மாநாட்டில் பாலஸ்தீன தலைவர் "மஹ்மூத் அப்பாஸ்" கலந்துக்கொண்டது "இஸ்ரேல் வரலாற்றின் கருப்பு தினமாகும்". அவர், பாலஸ்தீனத்தின் "ரமல்ல அத்தாரிட்டி"யை சட்ட விரோதமானது என கூறியதற்கு பதிலடியாக, அவர் மாநாட்டிலிருந்து திரும்பி வரும்போதே அவரை வழிமறித்து "கொலை செய்திட வேண்டும்" என்று, வன்முறையை தூண்டும் வகையில் பேசினார்.

கோத்னானியை காப்பாற்ற முயன்றது மோடி அரசு-நரோடா பாட்டியா வழக்கை விசாரித்த நீதிபதி

 Patia Judge Hinted At Narendra Modi Govt Bid To Shield
அகமதாபாத்: நரோடா பாட்டியா படுகொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் பாஜக அமைச்சர் மாயா கோத்னானியை காப்பாற்ற முதல்வர் நரேந்திர மோடியின் அரசு தீவிரமாக முயன்றது என்று இந்த வழக்கில் மாயாவுக்கு 28 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்த நீதிபதி ஜோத்சனா யாக்னிக் தெரிவித்துள்ளார். இதனால் மோடிக்கு புது நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
2008ம் ஆண்டு குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்திற்குப் பின்னர் சிறுபான்மை இஸ்லாமியர்களுக்கு எதிராக பெரும் இனக் கலவரம் ஏற்பட்டது. பஜ்ரங் தளம், விஎச்பி உள்ளிட்ட இந்து அமைப்புகள் நடத்திய இந்த இனவெறிப் படுகொலை வன்முறையில் சிக்கி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
அதில் நரோடா பாட்டியா பகுதியில்தான் மிகப் பெரிய அளவில் அதிக அளவிலானோர் படுகொலை செய்யப்பட்டனர். மொத்தம் 97 இஸ்லாமியர்கள் இங்கு நடந்த வன்முறையில் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் 36 பேர் குழந்தைகள், 35 பேர் பெண்கள் ஆவர்.

Saturday, September 1, 2012

அஸ்ஸாமை தொடர்ந்து மணிப்பூர் : வங்கத்தின் பெயரால் வதைக்கப்படும் முஸ்லிம்கள்!


வெள்ளையர் ஆட்சிக்காலத்தில், வங்கத்திலிருந்து அழைத்து வரப்பட்ட முஸ்லிம்களை அந்நியப்படுத்தும் அக்கிரமம், இப்போது அஸ்ஸாமை கடந்து மணிப்பூர் மற்றும் நாகலாந்திலும் தலை விரித்தாடுகிறது.
ஆனால், இந்த 2012லும் நேபாள நாட்டிலிருந்து இந்தியாவுக்குள் வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, நேபாள நாட்டு பெண்கள் "விபச்சாரத்தொழிலுக்காகவே, அதிகளவில் அழைத்து வரப்படுகின்றனர். முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்துக்காக, அஸ்ஸாமை தொடர்ந்து இப்போது மனிப்பூரின் "இம்பால்" மற்றும் முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் "லைலாங்" மாவட்டத்திலும், முஸ்லிம்களை போலீஸ் அச்சுறுத்தி வருகிறது.

இஞ்சீனியர் - டாக்டர் என குறி வைத்து கைது செய்யும் காவல் துறை : கலக்கத்தில் முஸ்லிம் சமூகம்!


தீவிரவாத தொடர்பு என்ற பொய்யான குற்றச்சாட்டுக்களின் பெயரில், 11 முஸ்லிம் இளைஞர்களை கைது செய்து, மீண்டும் தனது முஸ்லிம் வேட்டையை துவக்கியுள்ளது கர்நாடகா பா.ஜ.க அரசு.
இதில் பிரபல பத்திரிகையான "டெக்கான் ஹெரால்டில்" பணியாற்றும் பத்திரிகையாளர் மற்றும் டி.ஆர்.டி.ஒ, விஞ்சானி,  இஞ்சீனியர் மற்றும் டாக்டர் ஆகியோரும் அடங்குவர்.  இதுவரை பல்லாயிரம் முஸ்லிம் இளைஞர்களின் வாழ்க்கையை சீரழித்த (சில) காவல் துறை கயவர்களால் ஒருவர் மீது கூட குற்றத்தை நிரூபிக்க முடியவில்லை.

ராஜ்தாக்கரே ஒன்றும் மும்பையின் பூர்வகுடி அல்ல.. பீகாரிலிருந்து குடியேறியவர்தான்..

டெல்லி: மகாராஷ்டிர மாநிலம் மராட்டியர்களுக்கு மட்டுமே சொந்தமானது என்று அவ்வப்போது கூச்சல் போட்டு வன்முறையைத் தூண்டும் மராட்டிய நவநிர்மாண் சேனாவின் தலைவர் ராஜ்தாக்கரே இப்பொழுது வசமாக சிக்கிக் கொண்டிருக்கிறார்.
மும்பையில் அண்மையில் ஆசாத் மைதானத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவம் தொடர்பாக பீகாரைச் சேர்ந்த ஒருவரை மும்பை போலீசார் கைது செய்தனர். இதற்கு பீகார் தலைமைச் செயலர் எதிர்ப்புத் தெரிவித்து மும்பை காவல்துறை ஆணையருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.
இது தொடர்பாக கருத்துத் தெரிவித்திருந்த ராஜ்தாக்கரே, பீகாரிகளை ஊடுருவல்காரர்கள் என்றும் வந்தேறிகள் என்றும் கூறியிருந்தார்.