Monday, October 24, 2011

ஆர்.எஸ்.எஸ் தனது கிளைகளை ஐ.ஐ.டி மற்றும் ஐ.ஐ.எம்களில் விரிவாக்க திட்டம்




rss
மும்பை:ஆர்.எஸ்.எஸ் கிராமங்களிலும் டெல்லி, கொல்கத்தா, மும்பை மற்றும் பெங்களூரு போன்ற பெரு நகரங்களிலும் இளைஞர்களை தனது அமைப்புகளில் சேர்க்க புதிய திட்டங்களை வகுத்துள்ளது. இதன் முக்கியப் பகுதியாக ஐ.ஐ.எம் மற்றும் ஐ.ஐ.டி போன்ற தலைசிறந்த கல்வி நிலையங்களில் தொழிற்கல்வி பயிலும் மாணவர்களை குறிவைத்து திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Sunday, October 23, 2011

மோடிக்கு எதிராக அமிக்கஸ் க்யூரி உச்சநீதிமன்​றத்தில் அறிக்கை தாக்கல்

amicus curiae rprt SIT
அஹ்மதாபாத்:2002-ஆம் ஆண்டில் குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை தொடர்பாக அம்மாநில முதல்வர் நரேந்திர மோடியின் மீதான வழக்கை முடிவுக்கு கொண்டுவர வேண்டுமென சிறப்பு புலனாய்வு ஏஜன்சி(எஸ்.ஐ.டி)யின் அறிக்கையை அங்கீகரிக்க இயலாது என உச்சநீதிமன்றம் நியமித்த அமிக்கஸ் க்யூரி(ஒரு குறிப்பிட்ட வழக்கில் நீதிமன்றத்திற்கு பாரபட்சமற்ற ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்டவர்)அறிக்கை அளித்துள்ளது.
குஜராத் இனப்படுகொலையின் போது கொல்லப்பட்ட முன்னாள் காங்கிரஸ் எம்.பி இஹ்ஸான் ஸாப்ரியின் மனைவி ஸாக்கியா ஸாப்ரி அளித்த வழக்கில் உச்சநீதிமன்றம் நியமித்த அமிக்கஸ் க்யூரி ராஜு ராமச்சந்திரனின் அறிக்கை மோடிக்கு மீண்டும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் இனக்கலவர வேளையில் போலீஸில் உயர்பதவி வகித்த சஞ்சீவ் பட் உள்பட உயர் அதிகாரிகளை மேலும் விசாரிக்கவேண்டும் என அமிக்கஸ் க்யூரி பரிந்துரைச் செய்கிறது. ராஜு ராமச்சந்திரனின் அறிக்கையை உச்சநீதிமன்றம் அங்கீகரித்தால் இந்திய தண்டனை சட்டத்தின் கடுமையான பிரிவுகளில் மோடியின் மீது வழக்கு பதிவுச்செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடியும் என சட்டத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அமிக்கஸ் க்யூரியின் அறிக்கை ரகசியமாக பாதுகாக்கப்பட்டு வந்தது. தற்பொழுது இவ்வறிக்கை உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழுவிடம்(எஸ்.ஐ.டி) ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Saturday, October 22, 2011

திருந்தாத தினமலர்


சட்டம் அனைவருக்கும் ஒன்றுதான். ஆனால் நீதி…?

criminology-criminal-justice-different_-800X800
சமீப காலமாக இந்தியாவில் நடந்து வரும் நிகழ்வுகளைப் பார்த்தால் முஸ்லிம்கள் இல்லாத இந்தியாவிற்காக போடப்பட்ட திட்டத்திற்குள் அரசாங்கமும், அதிகாரச் சட்டமும், காவல்துறையும், நீதித் துறையும் மூழ்கிக் கொண்டிருக்கிறதோ என்ற எண்ணத் தோன்றுகிறது.

முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதிகளாக சித்தரிக்கும் சித்து விளையாட்டு அமெரிக்கா மற்றும் அதன் கள்ளக் குழந்தையான இஸ்ரேலால் முழு வேகமாக உலகம் முழுவதும் பரப்பப்பட்டு வருகிறது. அதற்கு இந்தியா என்ன விதிவிலக்கா? ஆளும் அரசாங்கம் (காங்கிரஸ்) அமெரிக்காவின் கைப்பாவையாகவும், ஆண்ட அரசாங்கம் (பா.ஜ.க.) இஸ்ரேலின் நெருங்கிய நண்பானாகவும் இருக்கிறதே… இதற்கு மேல் என்ன வேண்டும்?
அமெரிக்கா போடும் திட்டங்களுக்கு ஆமா சாமி போடுவதையே வேலையாகக் கொண்டிருக்கிறது காங்கிரஸ் கட்சி. சமீபத்தில் ஹிலாரி கிளிண்டன் இந்தியா வந்திருந்தபோது EUM (End Use Monetary)  என்ற ஓர் ஒப்பந்தத்தைப் போட்டு இந்திய இறையாண்மையை அமெரிக்காவுக்கு விற்றது.
 இதற்கு எடுத்துகாட்டு. இந்தியாவில் ஏதேனும் ஒரு இடத்தில் குண்டு வெடித்தால் இதற்குக் காரணம் முஸ்லிம்கள் என்று அமெரிக்க உளவுத்துறை கதறுகிறது. அதை அப்படியே ஏற்றுக்கொண்டு எந்த விசாரணையும் இல்லாமல் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை அள்ளிக்கொண்டு போகிறது இந்திய காவல்துறை.
ஆனால் தேர்தல் நேரத்தில் மட்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கு ஆபத்து என்று  கூப்பாடு போட்டே அப்பாவி முஸ்லிம்களை கைக்குள் வைத்திருக்கும் காங்கிரசின் நிலையைப் பார்க்கும்போது இவர்கள் முஸ்லிம் சமூகத்தை நம்ப வைத்து முதுகில் குத்துபவர்கள் என்பதை உணர முடிகிறது.
இந்தியாவில் முஸ்லிம்கள் இல்லாமல் ஆக்குவதையே இலட்சியமாகக் கொண்டு அரசியல் நடத்தும் சங்கப் பரிவாரக் கட்சியான பா.ஜ.க.வோ இஸ்ரேலை ஒரு நாடாகவே அங்கீகரிக்காத இந்திய அரசாங்கத்தை இஸ்ரேலுக்கு அடமானம் வைத்தது. ஆயுதம் வாங்குவதில் ஆரம்பித்து, இராணுவத்திற்கு பயிற்சி அளிப்பது, சாய்பாபா கோயிலுக்கு பாதுகாப்பு கொடுப்பது, விண்ணில் விண்கலங்கள் ஏவுவது  என அனைத்திலும் இஸ்ரேலுடைய தொடர்பை ஏற்படுத்தி இவர்களை நம் வீட்டின் வாசல் வரை கொண்டு வந்து விட்டார்கள்.

அமீரகத்தில் SDPI-ன் அகில இந்திய தலைவருக்கு EIFF நடத்திய மாபெரும் வரவேற்பு விழா


Friday, October 21, 2011

எடியூரப்பாவின் கைது கட்சிக்கு அவமானம் – ஒப்புக்கொள்கிறார் அத்வானி

advani
நாக்பூர்:ஊழல் வழக்கில் முன்னாள் கர்நாடகா முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா கைது செய்யப்பட்டது கட்சி தலைமைக்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது என பா.ஜ.க தலைவர் எல்.கே.அத்வானி ஒப்புக்கொண்டுள்ளார்.
இத்தகைய ‘சிறிய தவறுகளை(?)’ குறித்து எடியூரப்பாவிற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாம்- என்று அத்வானி கூறுகிறார்.
எடியூரப்பா கைதுத் தொடர்பாக பத்திரிகையாளர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து பதில் அளித்த அத்வானி சுரஙகத் தொழில் ஊழலில் எடியூரப்பாவின் பெயரை விமர்சிக்காமலிருப்பதில் கவனம் செலுத்தினார்.

கத்தாஃபி:வீர நாயகனிலிருந்து வெறுக்கப்பட்ட மனிதனாக…



gaddafi1
உலகை ஆச்சரியமடைய வைத்த புரட்சியாளராக மாறி கடைசியில் மக்கள் கோபத்தால் மரணத்தை சந்தித்த தலைவர்தாம் மக்ரிப் தேசமான லிபியாவை 42 ஆண்டுகளாக ஆட்சிபுரிந்த கடாஃபி.
வெளிநாட்டு ஆக்கிரமிப்பிலிருந்து 1951-ஆம் ஆண்டு சுதந்திர நாடாக மாறிய லிபியாவின் எண்ணெய் வளங்களை மேற்கத்திய நாடுகள்
கொள்ளையடித்த போது நிம்மதியிழந்த லிபியாவின் மக்கள் கண்டெடுத்த தீர்வுதான் முஅம்மர் கத்தாஃபி. ஆனால் ஆண்டுகள் செல்ல செல்ல அதிகாரத்தின் வெறி தலைக்கேறி சொந்த மக்களின் உள்ளங்களிலிருந்து அகன்ற கத்தாஃபியின் சிம்மாசனம் அரபு நாடுகளில் உருவான முல்லைப்பூ புரட்சியில்
எடுத்தெறியப்பட்டுள்ளது.
1942 ஜூன் 7-ஆம் தேதி கடலோர நகரமான ஸிர்த்தில் சாதாரண குடும்பத்தில் கத்தாஃபி பிறந்தார். ஆக்கிரமிப்பு சக்திகளிடம் அடிபணியாத குணம் கத்தாஃபிக்கு இயற்கையிலேயே உண்டு. பெங்காசி பல்கலைக்கழகத்தில் புவியியலில் பட்டப்படிப்பை மேற்கொண்ட போதிலும் 1961-ஆம் ஆண்டு ராணுவ அகடாமியில்
சேர்ந்தபொழுது 19 வயதான கத்தாஃபியின் வரலாறு திரும்பியது.

மனதோடுமனதாய் – கருணையில்லா கஞ்சத்தனம்


manathodu_manathai1
யமனில் ஒரு நல்ல மனிதர் வாழ்ந்து வந்தார். அறுவடை காலங்களில் அவரது தோட்டத்தைச் சுற்றிலும் ஊர்க்காரர்கள் ஒன்று கூடுவார்கள். அந்தத் தோட்டத்திலிருந்து கிடைக்கும் கனி வர்க்கங்களில் கணிசமான ஒரு பகுதியை அந்த நல்ல மனிதர் ஏழைகளுக்குப் பிரித்துக் கொடுப்பார். இந்த அழகிய தர்மம் மூலம் அவருக்கு செல்வம் இன்னும் அதிகரிக்கவே செய்தது.
ஆனால் அவருடைய குடும்பத்தார் அதனைப் புரிந்து கொள்ளவில்லை. ஊர்க்காரர்களுக்கு இவர் அள்ளி இரைப்பது அனைத்தும் தமக்கு ஏற்படும் இழப்பாக அவர்கள் கருதினார்கள். தந்தையைப் பிள்ளைகள் எதிர்த்தார்கள். இருந்தாலும் அவருக்கு உதவிகளும் செய்து வந்தார்கள்.

இருட்டடிப்பு செய்யப்பட்ட பிரச்சனைகளை மக்களின் கவனத்திற்கு ஊடகங்கள் கொண்டுவருவதில்லை – சிறுபான்மை கமிஷன்


இருட்டடிப்பு செய்யப்பட்ட பிரச்சனைகளை மக்களின் கவனத்திற்கு ஊடகங்கள் கொண்டுவருவதில்லை – சிறுபான்மை கமிஷன்

wajahath habibullah
புதுடெல்லி:இருட்டடிப்பு செய்யப்பட்ட பிரச்சனைகளை மக்களின் கவனத்திற்கு கொண்டுவருவதில் ஊடகங்கள் போதுமான அளவு கவனம் செலுத்துவதில்லை என தேசிய சிறுபான்மை கமிஷன் குற்றம் சாட்டியுள்ளது.
ஆயுத கலவரத்திற்கு பிந்தைய செய்திகளை வெளியிடுவதில் ஊடகங்கள் அதிக பொறுப்புடன் கூடிய அணுகுமுறையை கையாளவேண்டும் என தேசிய சிறுபான்மை கமிஷன் தலைவர் வஜாஹத் ஹபீபுல்லாஹ் கூறியுள்ளார். ஆதரவான, எதிர்மறையான பங்கினை ஊடகங்கள் வகிக்கின்றன. குற்றவாளிகளை குறித்து எழுதுவதில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும் எனவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
1987-ஆம் ஆண்டு ஹாஷிம்புராவில் நடந்த கலவரத்தை உதாரணமாக கொண்டு அவர் இதனை தெரிவித்தார். வழக்கில் 40 இளைஞர்கள் சந்தேகத்தின் நிழலில் வைக்கப்பட்டு பின்னர் இவர்களது உடல்கள் கால்வாயிலிருந்து கண்டெடுக்கப்பட்டன. வழக்கின் விசாரணை தற்பொழுதும் தொடருகிறது. குற்றவாளிகளான அதிகாரிகள் மீது இதுவரை குற்றம் சுமத்தவில்லை. இவ்வழக்கில் நீதியை கோருவதில் ஊடகங்கள் தோல்வியை தழுவியுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Thursday, October 20, 2011

இந்திய விசாரணைகளில் குறிவைக்கப்படும் முஸ்லிம்கள் – நீதிபதி மார்கண்டேய கட்ஜு


இந்திய விசாரணைகளில் குறிவைக்கப்படும் முஸ்லிம்கள் – நீதிபதி மார்கண்டேய கட்ஜு

Justice Markandey Katju
புதுடெல்லி:இந்தியாவில் எங்கு குண்டு வெடிப்பு நடந்தாலும் காவல்துறை முஸ்லிம்களை வேண்டுமென்றே சம்பந்தப்படுத்துவதாக சமீபத்தில் பணி ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி காவல்துறையை கடுமையாக விமர்சித்துள்ளார்.
கடந்த மாதம் உச்சநீதிமன்றத்தில் இருந்து பணி ஓய்வு பெற்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜு இந்திய காவல்துறை தடயவியல் துறையில் மிகவும் குறைந்த அளவே பயிற்றுவிக்கப்படுவதால் தீவிரவாத தாக்குதல்கள் தொடர்பான வழக்குகளை முடிக்கமுடியாமல் திணறுகின்றனர் என்று கூறியுள்ளார். மேலும் அவர்கள் உண்மையான குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் சந்தேகிக்கும் நபரை கைது செய்து அவர்களின் மீது அவ்வழக்குகள் திணிக்கப்படுவதாக பத்திரிக்கைக்கு அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.
மேலும் குண்டு வெடிப்புகளை ஆய்வு செய்ய போதுமான பயிற்சியும் அறிவியல் சாதனங்களும் இல்லாததால் அவர்கள் சந்தேகத்தின் அடிப்படையில் செயல்படுகின்றனர் என்றும் எங்கு குண்டு வெடிப்பு நிகழ்ந்தாலும் அங்கு வசிக்கும் முஸ்லிம் இளைஞர்கள் மீது குற்றம் சுமத்தி அவர்களை கைது செய்கிறார்கள் என்றும் கூறியுள்ளார்.
மேலும் பெங்களுர் தகவல் தொழிற்நுட்ப வளாகத்தில் நடந்த குண்டு வெடிப்பு, வாரணாசி, புனே, மும்பை மற்றும் சமீபத்தில் நடந்த புது தில்லி குண்டு வெடிப்பு ஆகிய குண்டு வெடிப்புகளையும் சேர்த்து கடந்த இரண்டு ஆண்டுகளில் நிகழ்ந்துள்ள அனைத்து குண்டு வெடிப்புகளிலும் இன்னும் குற்றவாளிகள் யார் என்று கண்டுபிடிக்கப் படவில்லை என்றும் கூறியுள்ளார்.
மேலும் கட்ஜு கூறியதாவது; ‘கைது செய்யப்பட முஸ்லிம்கள் குற்றத்தை ஒப்புகொள்ள கடுமையான தாக்குதல்களுக்கு உள்ளாகின்றனர் என்று கூறியுள்ள அவர் குறிப்பாக கிராமப் புறங்களில் பணி புரியும் காவல்துறையினர் குற்றம் நடந்தவுடன் தாங்கள் உடனடியான குற்றவாளியை கைது செய்ததாக காட்டிகொள்வதற்காக இது போன்ற தவறுகளில் அதிகம் ஈடுபடுகின்றனர் என்றும் கூறினார்.
கடந்த 2006 -ஆம் ஆண்டு நிகழ்ந்த குண்டு வெடிப்பில் குற்றவாளி என்று கைது செய்யப்பட்டு நான்கரை ஆண்டுகள் கழித்து குற்றம் அற்றவர் என்று விடுதலையாகி இருக்கும் கஷ்மீரை சேர்ந்த இளைஞர் இம்ரான் கிர்மானிக்கு ஏற்பட்டிருக்கும் நீதி மறுப்பே இதற்கு சிறந்த உதாரணம் ஆகும் என்றும் கூறினார்.
மார்கண்டேய கட்ஜு தற்போது இந்திய பத்திரிக்கை கழகத்தின் தலைவராக உள்ளார். மேலும் உண்மையான குற்றவாளிகள் சட்டத்தின் முன் கொண்டு வரப்பட்டால் தாம் மரண தண்டனைக்கு ஆதரவு தெரிவிப்பேன் என்று கூறினார். மேலும் இவர் தலைமை நீதிபதியாக இருக்கும்போது அப்பாவி நபரை காவல்துறை என்கவுண்டர் என்ற பெயரில் கொலை செய்தால் அவர்களுக்கு மரணதண்டனை வழங்க வேண்டும் என்று கூறியவர் என்பதும் மற்றும் கௌரவ கொலைகளுக்கு மரணதண்டனை வழங்க வேண்டும் என்று கூறியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Sunday, October 16, 2011

"சுதந்திரம் எங்களது பிறப்புரிமை"

"சுதந்திரம் எங்களது பிறப்புரிமை" கேரளாவில் மாபெரும் பிரச்சார பேரணி




clt parade

EM TVM



திருவனந்தபுரம்: சுதந்திரம் எங்களது பிறப்புரிமை என்ற தலைப்பில் கேரளாவில கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்ற பிரச்சாரத்தின் இறுதியாக மூன்று இடங்களில் மாபெரும் பேரணியுடன் இப்பிரச்சாரம் முடிவடைந்தது. திருவனந்தபுரம், பெரும்பாவூர் மற்றும் கோழிக்கோடு ஆகிய நகரங்களில் நடைபெற்ற இப்பேரணியில் பெண்கள் உட்ப்ட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


பெரும்பாவூரில் நடைபெற்ற இப்பிரச்சாரப் பேரணி அரசு மருத்துவமனைஅருகில் இருந்து சரியாக 3 மணி அளவில் தொடங்கியது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் பெரும்பாவூர் மாவட்டத்தைச்சேர்ந்த உறுப்பினர்கள் சீறுடை அணிந்து பேண்டு வாத்திய முழக்கத்துடன் மாபெரும் அணிவகுப்பையும் நடத்தினர்.  இந்த அணிவகுப்பு அங்கு கூடியிருந்த மக்களை வெகுவாக கவர்ந்தது. பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய அணிவகுப்பையும், அணிவகுப்பின் போது அவர்களிடம் காணப்பட்ட ஒழுக்கத்தையும் வெகுவாக பாராட்டினார்கள். அணிவகுப்பிற்கு பிறகு ஆயிரக்கணக்கான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் உறுப்பினர்கள் மற்றும் அதன் ஆதராவாளர்கள் பெரும் திரளாக பேரணியில் கலந்து கொண்டனர். பேரணியின் போது மாநில அரசின் சிறுபான்மை விரோத போக்கை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். ஊழலுக்கு எதிராகவும், அநீதிக்கு எதிராகவும், குரல் எழுப்பி கோஷ அட்டைகளை ஏந்திச்சென்றனர்.

திருவனந்தபுரத்தில் வைத்து நடைபெற்ற பேரணி சரியாக 3 மணி அளவில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு அலுவலகம் அருகே தொடங்கியது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் உறுப்பினர்கள் சீறுடை அணிந்து அணிவகுப்பு நடத்த அவர்களுக்கு பின்னால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்ட மாபெரும் பேரணி நடைபெற்றது. திருவனந்தபுரம், கொல்லம், பத்தான்மித்ரா மற்றும் ஆழப்புழா ஆகிய மாவட்டங்களிலிருந்து பாப்புலர் ஃப்ரண்டின் தொண்டர்கள் பேரணியில் கலந்து கொண்டனர். பத்திரிக்கையாளர்கள் அலுவலகம் அருகே தொடங்கிய பேரணி முக்கிய வீதிகள் வழியாக மஹாத்மா காந்தி திடலை அடைந்து அங்கு மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் ஈ.எம். அப்துர்ரஹ்மான் இப்பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். கேரள மாநில தலைவர் கரமணா அஷ்ரஃப் மெளலவி தலைமை தாங்கினார்.  பாப்புலர் ஃப்ரண்டின் தமிழக தலைவர் ஏ.எஸ். இஸ்மாயில், பி. நூருல் அமீன் கேரள மாநில செயற்குழு உறுப்பினர், கேரள மாநில எஸ்.டி.பி.ஐயின் செயலாளர் துலசீதரன், நீலலோகிதாசன் நாடார், டாக்டர் எம்.எஸ் ஜெயபிரகாஷ், ஃபத்துதீன் ரஷாதி, வழக்கறிஞர் ஜேம்ஸ் பெர்னான்டஸ் மற்றும் சுபாஷ் போஸ் ஆகியோர் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.

police


பெரும்பாவூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு தேசிய பொதுச்செயலாளர் கே.எம். ஷரீஃப் அவர்கள் கலந்து கொண்டார். நீதி தொடர்ந்து மறுக்கப்பட்டு வரும்போது மக்கள் தங்களை தடுக்கும் இந்த கொடிய சட்டங்களை உடைக்க முன் வருவார்கள் என்று அரசாங்க அதிகாரிகளை கடுமையாக எச்சரித்தார். தேசிய செயற்குழு உறுப்பினர் பேராசிரியர் கோயா அவர்கள் முக்கிய குறிப்புகளை வெளியிட்டார். ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் பொருளாளர் முஹம்மது ஈசா மெளலவி, எஸ்.டி.பி.ஐயின் மாநில பொருளாளர் சாம் குட்டி ஜேகப், கே.கே. பாபுராஜ், கே.கே ஹுஸைன், கே முஹம்மது அலி ஆகியோர் உரை நிகழ்த்தினர்.


‌கோழிக்கோட்டில் வைத்து நடைபெற்ற இப்பேரணி அரயாடத்துபாளத்திலிருந்து தொடங்கிய் மாவூர் சாலை வழியாக கடற்கரையில் முடிவடைந்தது. வழக்கறிஞரும் பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய பொருளாளருமான கே.பி.ஷரீஃப் இக்கூட்டத்தில் கலந்து கொண்டார். வழக்கறிஞர் ரஃபீக் குட்டிக்காத்தூர், பாப்புலர் ஃப்ரண்டின் கர்நாடக மாநில தலைவர் இல்யாஸ் தும்பே, ஏ. வாசு, எஸ்.டி.பி.ஐயின் கேரள செயலாளர் எம்.கே. மனோஜ் மற்றும் பலர் இதில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.‌‌

கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக நடைபெற இருந்த
 சுதந்திரதின அணிவகுப்பிற்கு கேரள அரசாங்கம் தடைவிதித்தது. இவர்கள் சுதந்திர தின அணிவகுப்பு நடத்தினால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று உளவுத்துறை நிறுவனங்கள் தவறான செய்தியை அளித்ததின் விளைவால் நான்கு மாவட்ட ஆட்சியரும் சுதந்திர தின அணிவகுப்பிற்கு தடைவிதித்தனர். இதனை கண்டித்தும் மக்கள் விழிப்புணர்வு ஏறப்டுத்தும் வகையிலும் "சுதந்திரம் எங்களது பிறப்புரிமை" என்ற தலைப்பில் மாநிலம் முழுவதும் செம்டம்பர் 15 முதல் அக்டோபர் 15 வரை பிரச்சாரம் நடைபெற்றது.

மூன்று இடங்களிலும் நடைபெற்ற இப்பிரச்சாரத்தின் மூலமாக பாரபட்சத்துடன் நடந்துகொள்ளும் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுகின்றோம். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் அநீதிக்கு எதிரான போராட்டங்களும், பிரச்சாரங்களும் இனி வரும் காலங்களில் இன்னும் வீரியத்துடன் நடைபெறும்.

இந்த நிகழ்ச்சிகளில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை என காவல்துறையினரும்,  பத்திரிக்கைகளும் தெரிவித்தன.