Monday, April 30, 2012

நேர்மையாக பணியாற்றிய கரூர் ஆர்.டி.ஓ. சாந்தி உசிலம்பட்டிக்கு திடீர் மாற்றம்


RTO Shanthiகரூர்: கரூர் மாவட்டத்தில் நேர்மையாக பணியாற்றிய ஆர்.டி.ஓ. சாந்தி திடீர் என்று உசிலம்பட்டிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கரூர் மாவட்டத்தில் உள்ள காவிரி, அமராவதி, குடனகாறு போன்ற நதிகளில் இருந்து மணல் திருடிய சமூக விரோதிகளையும், அதிகார வர்கத்துடன் கைகோர்த்துக் கொண்டு அரசு அதிகாரிகள் கண்களில் மண்ணை தூவிவிட்டு அரசின் முறையான அனுமதி இன்றி ஆற்று மணலை லாரி லாரியாக கடத்திய கும்பலை கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆர்.டி.ஓ.வாக பொறுப்பேற்ற சாந்தி ஒழித்துக் கட்டினார்.

இப்படி 50க்கும் மேற்பட்ட திருட்டு மணல் லாரிகளைப் பிடித்து அபராதம் விதித்து, மணல் கொளளையர்களை திக்குமுக்காட வைத்தார்.

கரூர் மாவட்டத்தில் உள்ள 112 டாஸ்மாக் கடைகளில் அரசு நிர்ணயம் செய்த விலையை விட அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்வதை அறிந்து பல மதுபான கடைகளுக்கு தானே நேரில் சென்று ஆய்வு செய்து மேல் மட்ட அதிகாரிகளுக்கு செல்ல வேண்டிய பல லட்ச ரூபாய் மாமூலலை தடை செய்தார். 

முஸ்லீம் அல்லது பிரணாப் முகர்ஜி ஜனாதிபதியாக கருணாநிதி ஆதரவு: ஆண்டனி மூலம் சோனியாவுக்கு தகவல்


Karunanidhiசென்னை: முஸ்லீம் ஒருவரை அடுத்த ஜனாதிபதியாக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைமையிடம் திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளதாகத் தெரிகிறது.
கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது பெண் ஒருவரை நிறுத்த வேண்டும் என்ற வலுவான கோரிக்கையை வைத்தார் கருணாநிதி. அவரது கருத்துக்கு ஆதரவு கூடியதையடுத்து பிரதீபா பாட்டீலை களமிறக்கியது காங்கிரஸ்.

இந் நிலையில் கருணாநிதியை நேற்று சென்னையில் சந்தித்துப் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.ஆண்டனி, அவரிடம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் திட்டம் குறித்து விவாதித்தார்.

அப்போது இப்போதைய துணை ஜனாதிபதி அன்சாரி, நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, மக்களவை சபாநாயகர் மீரா குமார் ஆகியோரில் ஒருவரை ஜனாதிபதி பதவிக்கு நிறுத்தலாம் என சோனியா கருதுவதாக கருணாநிதியிடம் ஆண்டனி கூறினார்.

Sunday, April 29, 2012

உணவில் உப்பு குறைக்கிறீர்களா? இதயம் கவனம்!

Saltஅளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள். அதேபோல உப்போ, சர்க்கரையோ, தேவையான அளவு இல்லாவிட்டாலும் அது ஆபத்துதான் என்கின்றனர் மருத்துவர்கள். உணவுப்பொருட்களில் உப்பு அதிகம் சேர்த்தால் உயர் ரத்த அழுத்தம் வரும் என்று பயமுறுத்துகின்றனர். இதை தவிர்க்க உப்பை குறைத்தாலும் இதயநோய் வரும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று தெரியவந்துள்ளது.

எந்த நேரத்தில் யாருக்கு வரும் என்று கூறாமல் வருகிறது மாரடைப்புநோய். இதற்கு உயர்ரத்த அழுத்தமும், கொழுப்பு பொருட்களை கேட்பதும்தான் என்கின்றனர் ஆய்வாளர்கள். எனவேதான் ரத்த அழுத்தம் உள்ள நோயாளிகளுக்கு உணவில் உப்பின் அளவைக் குறைக்க மருத்துவர்கள் ஆலோசனை தெரிவிக்கின்றனர்.

பிளஸ் டூ முடிவுகள் மே 2-வது வாரத்தில் வெளியாகும்?


திருநெல்வேலி: தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் மே மாதம் 10-ந்தேதி முதல் 15-ந் தேதிக்குள் வெளியாகக் கூடும் என்று கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் 8 லட்சத்திற்கும் அதிகமான மாணவ, மாணவிகள் பிளஸ்டூ தேர்வு எழுதினர். இதை தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணி தமிழகத்தின் 32 மாவட்டங்களில் நடைபெற்றது. மொழிப்பாடங்களுக்கான விடைத்தாள்கள் ஒரு மையத்திலும் பிற பாடங்களுக்கான விடைத்தாள்கள் மற்றொரு மையத்திலும் திருத்தப்பட்டன.

Saturday, April 28, 2012

20 ஆண்டுகளுக்கு பின் சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக இந்தியர் தேர்வு.


Indian selected as a judge of International court after 20 years.சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக, இந்திய நீதிபதி தல்வீர் பண்டாரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் இருபது ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக இந்தியர் தேர்வாகி இருக்கிறார்.


ஐ.நா.வின் சர்வதேச நீதிமன்றம் நெதர்லாந்தில் உள்ள ஹாக் நகரில் உள்ளது. இந்த நீதிமன்றத்தின் நீதிபதிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று நடந்தது. இதில் இந்தியாவின் சார்பில் முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி தல்வீர் பண்டாரி போட்டியிட்டார். இவரை எதிர்த்து பிலிப்பைன்ஸ் நீதிபதி புளோரின்டினோ பெலிசியானோ போட்டியிட்டார்.

இந்திய பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டு 6.9 தான்! - ஐ.எம்.எப்


டெல்லி: இந்தியா உட்பட ஆசிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சியானது நடப்பு 2012-ம் ஆண்டில் எதிர்பார்த்த இலக்கை எட்டாது என்று சர்வதேச நிதியமான ஐ.எம்.எப். கவலை தெரிவித்துள்ளது.
ஆசியாவின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியானது 2011-ம் ஆண்டு 5.9 ஆக இருந்தது. நடப்பு ஆண்டில் 6 விழுக்காடு அளவுக்குத்தான் இருக்கும் என்று ஐ.எம்.எப். தெரிவித்துள்ளது. 2013-ம் ஆண்டிலும் கூட ஆசியாவின் பொருளாதார வளர்ச்சியானது 6.5 விழுக்காடு அளவுக்குத்தான் தடுமாற்றமான நிலையையே கொண்டிருக்கும் என்று அதன் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெஹல்காவின் போலி ராணுவ பேர ஊழல் வழக்கு: பங்காரு லஷ்மணுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை!


Bangaru Laxmanடெல்லி: தெஹல்கா ஊடகம் அம்பலப்படுத்திய போலி ராணுவ பேர ஊழல் வழக்கில் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் பங்காரு லஷ்மணுக்கு டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றம் 4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது.
2001-ம் ஆண்டு பங்காரு லஷ்மண், பாரதிய ஜனதா கட்சித் தலைவராக இருந்தார். அப்போது அவரை அணுகிய தெஹல்கா ஊடக குழுவினர் தங்களது இங்கிலாந்தின் ஆயுத தளவாட தயாரிப்பு நிறுவன பிரதிநிதிகளாகக் கூறிக் கொண்டனர். இந்திய ராணுவத்துக்கு தளவடாங்களை தங்கள் நிறுவனத்திடம் இருந்து வாங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறி ரூ1 லட்சத்தை லஞ்சமாகக் கொடுத்தனர். இதனை பங்காரு லஷ்மண் பெற்றுக் கொள்ளுவதையும் அவருடன் பேசிய உரையாடல்களையும் பதிவு செய்து அம்பலப்படுத்தியது தெஹல்கா.

Friday, April 27, 2012

புதுக்கோட்டை இடைத்தேர்தல்: 32 அமைச்சர்கள் உட்பட 43 பேர் கொண்ட அதிமுக பணிக் குழு அறிவிப்பு


Jayalalitha
சென்னை: புதுக்கோட்டை தொகுதிக்கான இடைத்தேர்தலில் பணியாற்ற அமைச்சர்கள் உட்பட 43 பெர் கொண்ட தேர்தல் பணிக் குழுவை அதிமுக அறிவித்துள்ளது.
இதில் 32 பேர் அமைச்சர்கள். தமிழக அமைச்சரவையில் அமைச்சர்கள் எண்ணிக்கை ஜெயலலிதாவையும் சேர்த்து 33தான். இதில் தன்னைத் தவிர அத்தனை அமைச்சர்களையும் அவர் புதுக்கோட்டைக்கு அனுப்புவது குறிப்பிடத்தக்கது.

புதுக்கோட்டை தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முத்துக்குமரன் சாலை விபத்தி உயிரிழந்தார். இதையடுத்து இத்தொகுதிக்கு ஜூன் 12-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. ஏற்கெனவே போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இத்தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவித்து

Thursday, April 26, 2012

பெற்றோர்களின் வெற்றி

இன்றோடு எனது பரீட்சை முடிந்து விட்டது நான் இனிமேல் நன்றாக விளையாடலாம், வெளியூர்களுக்கு செல்லலாம், உறவினர்களை பார்க்கலாம் என்று மனதில் ஒரு கற்பனை கோட்டையை கட்டிக் கொண்டு பரீட்சை முடித்து கோடை விடுமுறையை கொண்டாட வீட்டிற்க்கு வரும் குழந்தைகளுக்கு ஒரு அதிர்ச்சி "இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வேண்டும் அதனால் நாளை முதல் அடுத்த வகுப்புக்கு செல்ல வேண்டும்" என்ற தன் பெற்றோரின் அன்பான உத்தரவு. இதற்கு "இன்றைய இயந்திரதரமான வாழ்க்கையில் என்னுடைய பிள்ளைகள் எப்போதும் ஒரு படி மேலே தான் இருக்க வேண்டும், எஞ்ஜினியராகவோ, டாக்டராகவோ தான் வர வேண்டும் அப்போது தான் அவனுடைய வாழ்க்கை பிரகாசமாக இருக்கும், அதற்கு தேவையான பயிற்சிகளை இப்போதிருந்தே எடுக்க வேண்டும்" என்ற கற்பனையான காரணங்களை சொல்லும் பெற்றோர்கள் தான் அதிகமாக இருக்கிறார்கள். 

Wednesday, April 25, 2012

முல்லைப் பெரியாறு: சுப்ரீம் கோர்ட்டில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்த ஐவர் குழு


Mullaiperiyar Damடெல்லி: முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பான 206 பக்கங்கள் கொண்ட இறுதி அறிக்கையை ஐவர் குழு இன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த மறுத்து வரும் கேரள அரசு, அணை பலவீனமாக இருப்பதாக கூறி புதிய அணை கட்ட முயற்சித்து வருகிறது. ஆனால், அணை வலுவாக இருப்பதால் அதற்கு தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்தப் பிரச்சனை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அணையின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்ய முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையில் 5 பேர் கொண்ட உயர் மட்ட குழுவை உச்ச நீதிமன்றம் கடந்த 2010ம் ஆண்டு நியமித்தது.

Tuesday, April 24, 2012

இடிந்தகரையில் மே 1 முதல் மீண்டும் காலவரையற்ற உண்ணாவிரதம்: உதயகுமார் அறிவிப்பு


Udhayakumarவள்ளியூர்: கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்பாளர்கள் வரும் மே மாதம் 1ம் தேதி முதல் மீண்டும் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.
இது குறித்து போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

இந்தோனேசியாவில் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக தமிழகம், மகாராஷ்டிரா உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. எனவே கூடங்குளம் அணு உலை அமைக்கப்பட்டிருக்கும் பகுதியில் நிலவியல் மற்றும் பூகம்பவியல் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

ஜூன் 12ம் தேதி புதுக்கோட்டை இடைத்தேர்தல்- 15ல் வாக்கு எண்ணிக்கை


டெல்லி: புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு வரும் ஜூன் 12ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் மே 18ம் தேதி தொடங்குகிறது. மனு தாக்கலுக்கான கடைசி நாள் மே 25. மனுக்கள் மே 26ம் தேதி பரிசீலிக்கப்படும். வேட்பு மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் மே 28 ஆகும்.

ஜூன் 12ம் தேதி வாககுப் பதிவு நடக்கும். ஜூன் 15ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Monday, April 23, 2012

பிரான்ஸ் அதிபர் தேர்தல்: சர்கோசியை எதிர்த்து போட்டியிட்ட பிராங்காய்ஸ் ஹோலண்ட் முன்னிலை.


பிரான்ஸ் நாட்டில், நேற்று அதிபர் தேர்தல் நடந்தது.பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோசியின் பதவிக் காலம் முடிவடைவதையொட்டி, நேற்று அதிபர் தேர்தல் நடந்தது. இத்தேர்தலில், சர்கோசி மீண்டும் போட்டியிடுகிறார்.

இவரை எதிர்த்து, சோஷலிஸ்ட் கட்சி சார்பில், பிராங்காய்ஸ் ஹோலாண்ட் போட்டியிடுகிறார். அதிபர் தேர்தலுக்குரிய வேட்பாளராக, தற்போது 10 பேர் களத்தில் உள்ளனர்.இந்த தேர்தலில், 50 சதவீத ஓட்டுக்கள் யாருக்கும் கிடைக்காவிடில், மறு தேர்தல், அடுத்த மாதம் 6ம் தேதி, இரண்டாவது கட்ட தேர்தல் நடைபெறும்.


தமிழகத்தில் சாதிவாரிக் கணக்கெடுப்பு தொடங்கியது: 80 ஆண்டுகளுக்குப் பின் முதன்முறை!


Censusசென்னை: தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு இன்று தொடங்கியது. இந்த கணக்கெடுப்பு 40 நாட்கள் நடைபெற உள்ளது. கிட்டத்தட்ட 80 வருடங்களுக்குப் பின் நாட்டில் இந்த சாதிவாரி சென்ஸஸ் நடக்கிறது.
சமூக, பொருளாதார மற்றும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அனைத்துத் தரப்பு மக்களின் பொருளாதார நிலை, அவர்கள் வசிக்கும் வீடுகள், வேலை, வருமானம், வெளிமாநிலத்தவர்கள் குறித்த விவரம், மாற்றுத் திறனாளிகள், வீடு இல்லாத நபர்கள் குறித்த தகவல்களை சேகரிக்க இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

கடந்த 2010-ம் ஆண்டில் வீடுகள் குறித்த கணக்கெடுப்பு நடந்தது. 2011-ம் ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்தது. 2012-ம் ஆண்டில் சமூக, பொருளாதார மற்றும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

இது குறித்து தமிழக மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் கோபாலகிருஷ்ணன் கூறுகையில்,

முல்லைப் பெரியாறு: ஐவர் குழு அறிக்கை நாளை மறுநாள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல்


டெல்லி: முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பான இறுதி அறிக்கை நாளை மறுநாள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக ஐவர் குழுவில் இடம் பெற்றுள்ள தமிழக பிரதிநிதி ஏ.ஆர். லட்சுமணன் தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த மறுத்து வரும் கேரள அரசு, அணை பலவீனமாக இருப்பதாக கூறி புதிய அணை கட்ட முயற்சித்து வருகிறது.

ஆனால், அணை வலுவாக இருப்பதால் அதற்கு தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

Saturday, April 21, 2012

கூடங்குளம் அணு உலையில் சிக்கல் என்கிறார் உதயகுமார்!


நேற்று முன்தினம் 10 ரஷ்ய விஞ்ஞானிகள் கூடங்குளம் வந்து ஆய்வு செய்தனர். இந்த ஆய்வு கூடங்குளம் அணு உலையில் சிக்கல் இருப்பதையே காட்டுகிறது என்று அணு உலை எதிர்ப்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.



இது குறித்து அவர் கூறுகையில், "கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பாக இந்த பகுதியில் பேரிடர் மேலாண்மை பயிற்சி நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். ஆனால் அணுமின் நிலையம் பேரிடர் மேலாண்மை பயிற்சி நடத்தும் விஷயத்தில் குறுக்குவழியைத்தான் கையாளுகிறது. இதற்காகத்தான் இந்த பகுதியில் உள்ள ஊராட்சி மன்றத் தலைவர்களை வரவழைத்து பேசியுள்ளனர். 

2ஜி விவகாரம்: கனிமொழிக்கு அமலாக்கப் பிரிவு சம்மன்- 26ம் தேதி டெல்லியில் ஆஜராக உத்தரவு

Kanimozhi
டெல்லி: கலைஞர் தொலைக்காட்சிக்கு ஸ்வான் டெலிகாம் நிறுவனத்திடம் இருந்து ரூ.233 கோடி பெறப்பட்டது குறித்து விசாரித்து வரும் அமலாக்கப் பிரிவு, இது குறித்து விளக்கம் அளிக்குமாறு திமுக எம்பி கனிமொழிக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு நடந்த காலத்தில், ஸ்பெக்ட்ரம் வழக்கின் குற்றவாளியான, ஸ்வான் டெலிகாம் நிறுவனத்திடமிருந்து கலைஞர் டிவிக்கு முறைகேடாக ரூ. 200 கோடி பெறப்பட்டது. இதை கடன் என்கிறது திமுக, ஆனால், லஞ்சம் என்கிறது சிபிஐ.

இந்தப் பணத்தை வட்டியோடு சேர்த்து திருப்பித் தந்துவிட்டது திமுக. ஆனால், 2ஜி விவகாரம் பெரிதான பின்னர் தான், அதை கடன் மாதிரி காட்ட வட்டியோடு திருப்பித் தந்தது கலைஞர் தொலைக்காட்சி என்கிறது சிபிஐ.

Friday, April 20, 2012

நெகடிவ் வாக்குகள் அதிகமானதால், டைம்ஸ் இதழின் பட்டியலில் இடம்பெறாத மோடி.


Why modi is not in Times Magazine?அமெரிக்காவை சேர்நத டைம்ஸ் இதழ் வெளியிட்ட உலகின் சக்தி வாய்ந்த 100 பேர் பட்டியலில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இடம்பெற்றிருப்பதற்கு குஜராத் முதல்வர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உலகின் சக்தி வாய்ந்த 100 பேர் பட்டியலை அமெரிக்காவில் இருந்து வெளியாகும் டைம்ஸ் இதழ் சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டது. இதில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இந்த பெருமையை மக்களுக்கும், தாய் மண்ணுக்கும் அர்ப்பணிப்பதாக மம்தா தெரிவித்துள்ளார். 

எண்ணெய் நிறுவனங்கள் மிரட்டல்: பெட்ரோல், டீசல் மீதான வரிகளை குறைக்க மத்திய அரசு முடிவு!


எண்ணெய் நிறுவனங்கள் மிரட்டல்: பெட்ரோல், டீசல் மீதான வரிகளை குறைக்க மத்திய அரசு முடிவு!டெல்லி: பெட்ரோல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைக்காவிட்டால் விலையை லிட்டருக்கு ரூ. 10 வரை உயர்த்துவோம் என்று மத்திய எண்ணெய் நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதையடுத்து, பெட்ரோல்- டீசல் மீதான வரிகளைக் குறைத்த அரசு முடிவு செய்துள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போவதால் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்த கோரிக்கை விடுத்து வருகின்றன.

பெட்ரோல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைக்காவிட்டால் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 10 வரை உயர்த்துவோம் என்று இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் எச்சரிக்கை விடுத்துள்ளது.

'100 பெட்டிஷன்' போட்டு வழக்கை இழுத்தடிக்கும் ஜெ-நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரும் ஆச்சாரியா


Jayalalitha and BV Acharya பெங்களூர்: சொத்துக் குவிப்பு வழக்கை இழுத்தடிக்கும் பல்வேறு நீதிமன்றங்களில் 100க்கும் அதிகமான மனுக்களை தாக்கல் செய்து நீதி நிலைநாட்டப்படுவதை சீர்குலைக்க முயலும் முதல்வர் ஜெயலலிதா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்குமாறும், இந்த வழக்கில் சசிகலாவின் ஜாமீனை ரத்து செய்யுமாறும் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு வழக்கறிஞர் பி.வி.ஆச்சாரியா கோரிக்கை விடுத்துள்ளார்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த முதல்வர் ஜெயலலிதா மீது தொடரப்பட்டுள்ள வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று நீதிபதி மல்லிககார்ஜுனய்யா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயலலிதாவின் தோழி சசிகலா, சுதாகரன் ஆஜராகியிருந்தனர். இளவரசி ஆஜராகவில்லை. அவருக்கு நீரிழிவு நோய் இருப்பதால் அவர் மயக்கமடைந்துள்ளார். எனவே அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்று அவரது தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

Thursday, April 19, 2012

எங்கே சென்றுக்கொண்டிருக்கிறது முஸ்லிம் சமூகம்?


கடப்பா : ஏப்ரல் 18, ஒரு பக்கம் முஸ்லிம்களுக்கு எதிராக, வதந்திகளை பரப்பி - வன்முறைகளை தூண்டி, முஸ்லிம்களின் உயிருக்கும் உடமைக்கும் சேதம் ஏற்படுத்தப்படுறது.

மறுபக்கம், இஸ்லாத்தின் அடிப்படைகளையே தெரியாமல், ஓரிறை கொள்கைகளை தெரியாமல், பல முஸ்லிம்கள், அறியாமையில் வாழ்ந்துக் கொண்டிருப்பதை என்னவென்று சொல்லுவது? தெலுங்கு வருடப்பிறப்பை, ஆந்திராவில் "உகாதி பண்டிகை" என்று, ஹிந்து சமூக மக்கள் கொண்டாடி வருகிறார்கள்.

ராமர் பால விவகாரம்: முடிவெடுக்க மத்திய அரசு மறுப்பு


டெல்லி: ராமர் பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கக் கோரும் சுப்பிரமணிய சாமியின் மனுவுக்கு பதில் அளிக்க விருப்பமில்லை என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
ராமர் பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கக் கோரி ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு கடந்த 27ம் தேதி விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம் இது குறித்து பதில் அளிக்குமாறு மத்திய அரசைக் கேட்டுக் கொண்டது. 

கண்டம் விட்டு கண்டம் பாயும் 'அக்னி-5' ஏவுகணை சோதனை வெற்றி!


Agniபுவனேஸ்வர்:  5,000 கிமீ வரை சென்று கண்டம் விட்டு கண்டம் தாவும் வல்லமை கொண்ட அக்னி V ஏவுகணை இன்று காலை 8.05 மணிக்கு ஒரிசா மாநிலத்தில் உள்ள வீலர் தீவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. 
அக்னி V ஏவுகணை 3 அடுக்குகளைக் கொண்டது, அதன் உயரம் 17 மீட்டர் ஆகும். 5,000 கிலோமீட்டர் தூரம் வரை இது பாயக் கூடியது. ஒரு டன் எடை கொண்ட அணு ஆயுதங்களையும் தாங்கிச் செல்லக் கூடிய திறன் கொண்டதாக அக்னி வடிவமைக்கப்பட்டுள்ளது. இது போன்ற கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளை உலக அளவில் அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் மற்றும் சீனா மட்டும் தான் இதுவரை வைத்திருந்தன. தற்போது அந்த பட்டியலில் இந்தியா இணைந்துள்ளது.

Wednesday, April 18, 2012

டெல்லி தேர்தல் : முஸ்லிம் சிறைக்கைதியை தோற்கடிக்க, காங்கிரஸ் - பா.ஜ.க., கூட்டணி!

அப்பாவி சிறைக்கைதி, ஜியாவுர் ரஹ்மான் 8,195 ஓட்டுக்கள் பெற்று சாதிக்காவிட்டாலும், 7,677 ஓட்டுக்களை பெற்று சரித்திரம் படைத்து விட்டார். வெற்றிக்கும் தோல்விக்கும் 517 வாக்குகள் தான் வித்தியாசம்.
பொய்யான குற்றம் சுமத்தி, குஜராத் சபர்மதி ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள ஜியாவுர் ரஹ்மான் குடும்பத்தினர், தனது மகன் மீது சுமத்தப்பட்ட பழியை போக்க, டெல்லி ஒக்லா, ஜாமியா நகர் 205வது வார்டு தேர்தலில், ஜெயிலில் இருந்த படியே ஜியவுர்ரஹ்மானை, போட்டியிட செய்தனர். அநீதிக்கெதிராக மக்கள் ஒன்று திரண்டு வாக்களித்தாலும், அரசியலில் சதி மற்றும் சூழ்ச்சிகள் செய்து, பா.ஜ.க.,வுடன் மறைமுக கூட்டணி அமைத்து, காங்கிரஸ் வேட்பாளர் ஷுஐப் தானிஷ், 517 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று விட்டார்.

சிறுநீரக கல்லை காணாமல் போக்கும் வாழைத்தண்டு

Banana stemவிலை மலிவான ஒரு பொருள் உயிருக்கே ஆபத்தான நோய்களை குணமாக்கும் ஆற்றல் கொண்டுள்ளது என்பது மருத்துவ உலகம் வியக்கும் உண்மை. வெட்டி எறியப்படும் வாழைத்தண்டு உடல் உபாதையான சிறுநீரக் கல்லினை நீக்கி உடல் உபாதையை நீக்குகிறது என்கின்றனர் மருத்துவர்கள்.

வாழைத்தண்டு நார்ச்சத்துள்ள உணவுப்பொருளாகும். வாழைத்தண்டினை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. இது உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. கோடை காலத்தில் வாழைத்தண்டு அதிகம் சேர்த்துக்கொள்வதன் மூலம் உடல் உஷ்ணத்தைக் குறைக்கும். நீர் சுருக்கு ஏற்படாமல் பாதுகாக்கும்.

பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.10 வரை உயர்த்துவோம்- எண்ணெய் நிறுவனங்கள் எச்சரிக்கை


Petrolடெல்லி: பெட்ரோல் மீதான கலால் வரியை (excise duty) மத்திய அரசு குறைக்க வேண்டும். இல்லாவிட்டால் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 10 வரை உயர்த்துவோம் என்று மத்திய எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிறுவனத்தின் தலைவரான ஆர்.எஸ்.புடோலா கூறுகையில், ஒரு லிட்டர் பெட்ரோல் மீது ரூ. 14.78 கலால் வரி விதிக்கப்படுகிறது. இதை நாங்கள் மத்திய அரசுக்கு செலுத்துகிறோம். இப்போது ஒரு லிட்டரை பெட்ரோல் விற்பதால் எங்களுக்கு ரூ. 8 முதல் ரூ. 10 வரை நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.

Tuesday, April 17, 2012

நெல்லையிலிருந்து அமெரிக்கா போன 'ஹில்' கிருஷ்ணன்... நியூயார்க் நகராட்சி தேர்தலில் போட்டி!


Hill Krishnanநியூயார்க்: நெல்லையைச் சேர்ந்தவரான ஹில் கிருஷ்ணன் நியூயார்க் நகர சபை தேர்தலில் உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடுகிறார். இப்பதவிக்குப் போட்டியிடும் முதல் தமிழர் மற்றும் இந்தியர் இவர்தான் என்பதால் ஹில் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அதிபர் பராக் ஒபாமாவின் ஜனநாயகக் கட்சி சார்பில் வேட்பாளராக களம் இறங்கியுள்ளார் ஹில் கிருஷ்ணன். மேல் கிழக்கு பகுதியிலிருந்து போட்டியிடும் ஹில் கிருஷ்ணனின் பூர்வீகம் நெல்லை மாவட்டமாகும். 10 ஆண்டுகளுக்கு முன்பு இவர் ஏகப்பட்ட கனவுகளுடன் அமெரிக்காவுக்கு வந்திறங்கினார். இன்று அமெரிக்கத் தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு உயர்ந்துள்ளார்.

பாப்புலர் ஃப்ரண்டின் சமூம மேம்பாடு பணிகள் - மார்ச் மாத ரிப்போர்ட்


சென்னை:
1. சென்னையில் எம்.டி. படிப்பிற்காக ஒரு மாணவனுக்கு ரூபாய் 40,000 கடனாக வழங்கப்பட்டது.

2. நான்காம் வகுப்பு படிக்கும் அல்லாஹ் பக்ஷ் என்ற மாணவனுக்கு ரூபாய்  3460/- வழங்கப்பட்டது. மற்றொரு மாணவனுக்கு ரூபாய் 3000/- வழங்கப்பட்டது.

3. இராயபுரத்தில் கேன்சர் சிகிசைக்காக ஒரு நபருக்கு ரூபாய் 10,000/- வழங்கப்பட்டது. 

4. உனைஸ் ரஹ்மான் என்ற 13 மாத குழந்தைக்கு இருதய அறுவை சிகிச்சை செய்வதற்காக ரூபாய் 15,000 வழங்கப்பட்டது.

5. டயாலிஸிஸ் செய்வதற்காக ஒருவருக்கு ரூபாய் 1300/- உதவித்தொகை வழங்கப்பட்டது. 

6. வியாபாரம் செய்ய ஒருவருக்கு ரூபாய் 5000/- வழங்கப்பட்டது.

கர்நாடகத்துக்கு தண்ணீர் தருவது பாம்புக்கு சாப்பாடு தருவது மாதிரி: பால் தாக்கரே


Bal Thackerayமும்பை: கர்நாடகத்துக்கு தண்ணீர் தருவது பாம்புக்கு உணவு தருவது மாதிரி, அது சாப்பாடு போட்டவரையே கடிக்கும் என்று சிவசேனா தலைவர் பால் தாக்கரே கூறியுள்ளார்.
இரு மாநிலங்களிலும் வறட்சியால் பாதித்த மாவட்டங்களுக்கு நதி நீரைப் பகிர்ந்து கொள்வது தொடர்பாக இரு மாநிலங்களும் சமீபத்தில் ஒப்பந்தம் செய்து கொண்டன. இதன்படி மகாராஷ்டிரம் தனது தூத் கங்கா மற்றும் வர்ணா ஆறுகளில் இருந்து கர்நாடகத்தின் வறட்சி பாதித்த வட மாவட்டங்களுக்கு 2 டிஎம்சி நீரைத் தர ஒப்புக் கொண்டுள்ளது.

மாடிப்படி ஏறுங்க! இதயநோய் வராது!

Health Benefits of walking Up Stairsஅபார்ட்மென்ட் வீடுகளிலோ, பணிபுரியும் அலுவலகங்களிலோ இப்பொழுதெல்லாம் யாருமே மாடிப்படியை உபயோகிப்பதில்லை. இதற்கு காரணம் அனைத்து இடங்களிலும் லிப்ட் வசதி உள்ளதால் ஒரு மாடி ஏறவே சோம்பேறித்தனப்பட்டுக்கொண்டு லிப்ட் உபயோகிக்கின்றனர் பலரும். இதனால் உடல் பருமன் உள்ளிட்ட நோய்கள் ஏற்படுகின்றன.
மாடி ஏற படிகளை உபயோகித்தால் உடல்பருமன், இதயநோய் உள்ளிட்டவை ஏற்பட வாய்ப்பில்லை என்கின்றனர் நிபுணர்கள்.

ஜிம்மிற்கு சென்று பணம் செலவழித்து உடற்பயிற்சி செய்வதைக்காட்டிலும் மாடிப்படி ஏறுவது சிறந்த உடற்பயிற்சி என்கின்றனர் நிபுணர்கள். மாடிப்படி ஏறும்போது உடலின் அனைத்து பகுதிகளும் இயங்குகின்றன. இதன் காரணமாக உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புகள் கரைந்து காணமல் போகின்றன.

இமயமலையில் சர்ச்சைக்குரிய அக்சாய் சின் பகுதியில் பிரம்மாண்ட வானியல் மையம் கட்டும் சீனா


Aksai Chinடெல்லி: ஜம்மு காஷ்மீரின் வடமேற்குப் பகுதியில் சர்ச்சைக்குரிய அக்சாய்சின் பகுதியில் பிரம்மாண்ட வானியல் கண்காணிப்பு நிலையம் அமைக்கும் முயற்சியில் சீனா இறங்கியுள்ளது. சீனாவுடன் இணைந்து இந்நிலையத்தை அமைக்க முன்வருமாறு தைவான், ஜப்பான், தென்கொரிய ஆகிய நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்தியா-சீனா உறவு நிலை

சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான எல்லைப் பிரச்சனை பல ஆண்டுகாலமாக நீடித்து வருகிறது. இதற்காக இந்தோ-சீனா யுத்தமும்கூட நடந்திருக்கிறது.

Sunday, April 15, 2012

குவைத் இந்தியா ஃபிரடர்நிட்டி ஃபாரம் நடத்திய ஆரோக்கிய வாழ்விற்கான கருத்தரங்கம்


குவைத்:குவைத் இந்தியா ஃபிரடர்நிட்டி ஃபாரம் (KIFF) ஒரு மாத காலம் நடத்தும் "ஆரோக்கியமான வாழ்க்கையே மகிழ்ச்சியான வாழ்க்கை" விழிப்புணர்வு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இன்று (13/04/2012) ஜம்மியத்துல் இஸ்லாஹி ரவ்தா ஆடிட்டோரியத்தில் வைத்து கருத்தரங்கம் சிறப்பாக நடைபெற்றது.சரியாக மாலை 6:45 மணிக்கு சகோதரர் அப்துல் பாரி அவர்கள் திருமறை குர்ஆன் வசனங்கள் ஓத சகோதரர் சிக்கந்தர் பாட்ஷா அவர்களின் வரவேற்புரையுடன் நிகழ்ச்சி இனிதே துவங்கியது.நிகழ்ச்சி முழுவதையும் சகோதரர் சிக்கந்தர் பாட்ஷா அவர்களே தொகுத்து வழங்கினார்கள்.


பின்னர் KIFF-ன் தலைவர் அப்துல் சலாம் அவர்கள் தலைமை உரை நிகழ்த்தினார்.அவர் தனது உரையில் இந்நிகழ்ச்சிக்கான முக்கியத்துவத்தையும் தேவையையும் எடுத்து கூறினார்.அதன் பிறகு ஜம்மியத்துல் இஸ்லாஹி தலைவர் டாக்டர்.சுலைமான் ஷெட்தி அவர்கள் துவக்க உரை நிகழ்த்தினார்கள்.இஸ்லாத்தில் உள்ள உணவு முறைகளை பற்றி விரிவாக கூறிய அவர், இதற்கு ஏற்பாடு செய்த KIFF-க்கு பாராட்டுக்களை தெரவித்தார்.

Wednesday, April 11, 2012

KIFF நடத்தும் "ஆரோக்கியமான வாழ்கையே மகிழ்ச்சியான வாழ்க்கை" கருத்தரங்கம்

'ஆரோக்கியமான வாழ்கையே மகிழ்ச்சியான வாழ்க்கை' - KIFFகுவைத்: குவைத் இந்தியா ஃபிரடர்நிட்டி ஃபாரம்(KIFF) நடத்தும் ஆரோக்கியமான வாழ்கையே மகிழ்ச்சியான வாழ்க்கை பிரச்சாரத்தின் தொடர்ச்சியாக வருகின்ற ஏப்ரல் 13 அன்று மாலை 6:45 மணிக்கு ஜம்மியத்துல் இஸ்லாஹி, ரவ்தா ஆடிட்டோரியத்தில் வைத்து ஆரோக்கியம் சம்பந்தமான கருத்தரங்கம் நடைபெற இருக்கிறது.

கருத்தரங்கம் KIFF-ன் தலைவர் திரு.அப்துல் சலாம் அவர்களின் தலைமையில் டாக்டர்.சுலைமான் ஷாதி, தலைவர், ஜமியதுல் இஸ்லாஹ் அவர்களின் துவக்க உரையோடு தொடங்கப்படும், சிறப்பு பேச்சாளர்களாக டாக்டர். அப்துர் ரகுமான் (ஜஹ்ரா அரசு மருத்துவமனை) மற்றும் டாக்டர். தாமஸ் ஐசக் (அல்-சபாஹ் மருத்துவமனை) அவர்கள் முறையே ஆரோக்கியமும்,இஸ்லாமும் மற்றும் இதய நோய்களும், தீர்வுகளும் என்ற தலைப்புகளில் உரை நிகழ்த்த இருக்கிறார்கள்.மேலும் உடற்பயிற்சியின் செயல்முறை விளக்கங்களும் விளக்கப்படும்என்று KIFF- ன் தலைவர் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது கூறினார். 

மும்பை அருகே அரபிக் கடலிலும் நிலநடுக்கம்


மும்பை: மும்பை அருகே அரபிக் கடலில் இன்று 3.4 அளவுக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தோனேசியாவில் ரிக்டர் அளவுகோலில் 8.9 அளவுக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து இந்தியா, சிங்கப்பூர், தாய்லாந்து, இலங்கை ஆகிய நாடுகளில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. மேலும் 28 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிம் மும்பை அருகே அரபிக் கடலில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மும்பையில் இருந்து 155 கிமீ தொலைவில் உள்ள இடத்தை மையமாகக் கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.4க பதிவாகியுள்ளது என்று வானிலை ஆய்வுத்துறை இயக்குனர் ராஜீவ் நாயர் தெரிவித்துள்ளார்.

சுனாமி எச்சரிக்கை எதிரொலி: கடலோரப் பகுதி மக்களை வெளியேற்றும் நாடுகள்


ஜகார்த்தா: இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து 28 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதையடுத்து இந்தோனேசியா உள்பட பல நாடுகளின் கடலோரப் பகுதிகளில் வாழும் மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். 
இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவு அருகே அசே பகுதியில் இன்று மிக பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 8.9 ஆக பதிவாகியுள்ளது. பசிபிக் கடலில் நிலத்துக்கடியில் 33 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அந்தமான் நிகோபார் தீவுகள் உள்ளிட்ட இந்தியாவின் கிழக்குப் பகுதிகள், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, தாய்லாந்து உள்பட உலகம் முழுவதும் 28 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் இந்தியா, சிங்கப்பூர், தாய்லாந்தி்ல் ஆகிய நாடுகளில் உணரப்பட்டது. சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தோனேசியாவின் கடலோரப் பகுதிகளில் வாழ்பவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். எச்சரிக்கை விடப்பட்டாலும் சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று அந்நாட்டு அதிபர் சுசிலோ பம்பாங் தெரிவித்துள்ளார். அங்கு ஏறப்ட்டுள்ள சேதமதிப்பு குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. 

புதுவையில் மாலை 4.30 மணிக்கும், சென்னையில் 5 மணிக்கு சுனாமி தாக்கலாம்?


 Tsunamiசென்னை: இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நில நடுக்கத்தினால் 28 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சென்னையில் மாலை 5 மணியளவில் சுனாமி தாக்கும் என்று எச்சரிக்கைவிடப்பட்டுள்ளது. அதற்கு முன்பாக மாலை நாலரை மணியளவில் புதுவையை சுனாமி தாக்கலாம் என்றும் தகவல்கள் கூறுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து இந்தியாவில் சென்னை, விசாகப்பட்டினம், பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளிலும், தமிழ்நாட்டின் முக்கிய கடற்கரை நகரங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்தோனேசியா உள்ளிட்ட 28 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Sunday, April 8, 2012

ராணுவ தளபதி வி.கே.சிங், அப்பழுக்கற்ற நற்பெயர் கொண்டவர்:அழுக்கு அத்வானி கூறுகிறார்


பாகிஸ்தான் அதிபர் சர்தாரி நாளை டெல்லி வரும் நிலையில், பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை அழிக்குமாறு மத்திய அரசு வற்புறுத்த வேண்டும் என்று அத்வானி கோரிக்கை விடுத்துள்ளார். பாகிஸ்தான் அதிபர் சர்தாரி நாளை டெல்லி வருகிறார். ஆஜ்மீர் தர்காவுக்கும் செல்கிறார்.  இந்நிலையில், ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, மும்பை வந்த பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானி, அங்கு 
நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் மண்ணை பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று பாகிஸ்தான் அதிபராக இருந்த முஷரப், இந்திய பிரதமராக இருந்த வாஜ்பாய்க்கு வாக்குறுதி அளித்தார்.

மகனுடன் டெல்லி வந்தார் சர்தாரி- பிரதமருடன் சந்திப்பு- ஆஜ்மீர் தர்காவில் வழிபாடு!


Zardari and Manmohan Singh டெல்லி: 7 ஆண்டுகளுக்குப் பின்னர் பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி டெல்லி வந்தார். பிரதமர் மன்மோகன் சிங்கை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசிய அவர் மதிய உணவை அவருடன் இணைந்து சாப்பிட்டார். இதைத் தொடர்ந்து அவர் ஆஜ்மீர் தர்காவுக்குச் சென்று வழிபட்டு பின்னர் பாகிஸ்தான் திரும்பிச் சென்றார்.
பாகிஸ்தான் விமானப்படை விமானம் மூலம் சர்தாரி டெல்லி பாலம் விமான நிலையத்தில் இன்று பிற்பகல் வந்து இறங்கினார். அவருக்கு அங்கு இந்திய அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து சர்தாரி ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள பிரதமரின் இல்லத்திற்குச் சென்றார். அங்கு அவரை பிரதமர் வரவேற்றார்.

Wednesday, April 4, 2012

கணவனை காப்பாற்ற விமானத்தை தரையிறக்கிய மனைவி


வாஷிங்டன்: அமெரிக்காவில் சிறிய விமானத்தில் பயணித்த 80 வயது தம்பதியினர் நடுவானில் கணவர் திடீரென மயங்கியதால், மனைவியே விமானத்தை தரையில் இறக்கினார். ஆனால் மருத்துவ வசதி கிடைப்பதற்குள்ளாக கணவன் பரிதாபமாக இறந்தார்.அமெரிக்காவில் விஸ்‌கோன்சின் மாகாணத்தில் டோர்கவுண்டி செர்ரிலாண்ட விமானநிலையத்தில் இருந்து சிறிய விமானத்தில் கடந்த திங்களன்று 81 வயது கணவரும், 80 வயது மனைவியும் பயணித்தனர்.நடுவானில் இன்ஜின் கோளாறு ஏற்பட்டதால் கணவருக்கு திடீரென மயக்கமும் நரம்பு தளர்ச்சியும் ஏற்பட்டதால் பதட்டம் அடைந்தார். அப்போது விமானம் நிலை தடுமாறியது. இதனை அருகில் இருந்த 80 வயது மனைவி ச‌மயோசிதமாக செயல்பட்டு தானே விமானத்தை தரையில் இறக்க முயன்றார். 

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு: ப. சிதம்பரத்தை விசாரிக்கக் கோரும் மனு மீது ஏப்ரல் 11 முதல் விசாரணை


P Chidambaramடெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஊழல் வழக்கில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை விசாரிக்கக் கோரும் மனுக்கள் மீதான விசாரணை வரும் 11ம் தேதி முதல் நடைபெறும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஸ்பெக்ட்ரம் வழக்கில் ப.சிதம்பரத்தை சேர்க்கக் கோரும் மனுவை ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் ஆகியோர் தாக்கல் செய்திருந்தனர்.



இம்மனுக்களை இன்று விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம் வழக்கின் அடுத்த கட்ட விசாரணை வரும் 11 முதல் 13ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவித்தது.

இந்தியாவில் ராணுவ புரட்சிக்கு முயற்சியா?: பிரதமர்-பாதுகாப்பு அமைச்சர் மறுப்பு


Manmohan Singh Antony and VK Singhடெல்லி: இந்தியாவில் ராணுவப் புரட்சிக்கு முயற்சிகள் நடந்ததாக வெளிவந்துள்ள செய்தியை பிரதமர் மன்மோகன் சிங் மறுத்துள்ளார். இந்திய ராணுவத்திற்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிப்பது சரியல்ல என்று பிரதமர் மன்மோகன் கூறியுள்ளார்.



வயது பிரச்சனை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ராணுவ தளபதி வி.கே.சிங் வழக்கு தொடர்ந்திருந்தபோது மத்திய அரசுக்கு தெரிவிக்காமல் கடந்த ஜனவரியில் ராணுவத்தின் இரண்டு பிரிவுகள் தலைநகர் டெல்லியில் குவிக்கப்பட்டதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

Tuesday, April 3, 2012

குவைதில் இஸ்லாத்தை ஏற்றுகொண்ட மகாராஜன்

குவைத் சிட்டி: குவைதில் பல்வேறு சமூக நல பணிகளை செய்து வரும் குவைத் இந்தியா பிராடர்நிட்டி  ஃபாரம் சார்பாக அதன் தன்னார்வ தொண்டர்கள் மூலம் செய்து வரும் இஸ்லாத்தை அதன் தூய வடிவில் எடுத்து சொல்லும் தாவா பணி கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. மகபுல்லா, அபுகலிபாஹ், மினாப்துல்லாஹ் போன்ற இடங்களில் நடைபெற்றது. 

மிஞ்சியது ஏமாற்றமே!!



வழக்கத்திற்கு மாறாக அன்று நான் மிகவும் குழம்பிய நிலையில் என்னுடைய அலுவலக பணிகளை செய்து கொண்டிருந்தேன். அந்த குழப்பத்திற்கான காரணத்தை யாரிடமாவது சொல்லவேண்டும் என்று என்னுடய மனம் எண்ணியது. மதிய இடைவேளை அப்போது. என்னுடைய நண்பன் அமீர் எனதருகில் வந்து "நீ ஏதோ குழம்பிய நிலையில் உள்ளாய். அதற்கான காரணம் என்ன?" என்று வினவினான்.


எனக்கோ ஒரு ஆறுதல் வந்தது போல, "ஆம். நானும் காலையில் தினசரிகளை புரட்டிய பிறகே என்னுடைய அலுவல்களை தொடங்கினேன். இன்றைய ஒரு செய்தி என்னை மிகவும் குழம்பிய நிலைக்கு கொன்டு சென்றுவிட்டது. அதுதான் ராணுவத்தில் நடந்த ஊழலை பற்றி ராணுவ தளபதி வி.பி. சிங் அளித்த பேட்டி" என்றேன்.

Monday, April 2, 2012

KIFF நடத்தும் "ஆரோக்கியமான வாழ்க்கையே மகிழ்ச்சியான வாழ்க்கை" நிகழ்ச்சி

Inline image 1குவைத்: குவைத்தில் பல்வேறு சமூக நல பணிகளை மேற்கொண்டு வரும் குவைத் இந்தியா ஃபிரடர்நிட்டி ஃபாரம் நடத்தும் "ஆரோக்கியமான வாழ்க்கையே மகிழ்ச்சியான வாழ்க்கை" என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தின் தொடக்க விழா 30/03/2012 அன்று மங்காஃப் மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.இந்த பிரச்சாரம் 30/03/2012 முதல் 30/04/2012 வரை தொடர்ந்து நடைபெறும்.சரியாக காலை 7:30 மணிக்கு ஆரம்பம் ஆனது அதை சகோதரர் கிபாயத்துல்லாஹ் அவர்கள் நிகழ்ச்சி அனைத்தையும் தொகுத்து வழங்கினார். 

Inline image 5
பின்னர் சகோதரர் ஹசன் அலி வரவேற்புரை நிகழ்த்தினார்.அதன் பிறகு ஆரோக்கியம் சம்பந்தமான புத்தகம் வெளியிடப்பட்டது.அதை KIFF-இன் தலைவர் அப்துல் சலாம் வெளியிட KIFF-இன் தமிழ் பிரிவு தலைவர் அம்ஜத் அலி அவர்கள் பெற்று கொண்டார்கள்.அது தமிழ்,மலையாளம்,கன்னடம்,இங்கிலீஷ்,உருது என 5 மொழிகளில் வெளியிடப்பட்டது.