Monday, April 23, 2012

பிரான்ஸ் அதிபர் தேர்தல்: சர்கோசியை எதிர்த்து போட்டியிட்ட பிராங்காய்ஸ் ஹோலண்ட் முன்னிலை.


பிரான்ஸ் நாட்டில், நேற்று அதிபர் தேர்தல் நடந்தது.பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோசியின் பதவிக் காலம் முடிவடைவதையொட்டி, நேற்று அதிபர் தேர்தல் நடந்தது. இத்தேர்தலில், சர்கோசி மீண்டும் போட்டியிடுகிறார்.

இவரை எதிர்த்து, சோஷலிஸ்ட் கட்சி சார்பில், பிராங்காய்ஸ் ஹோலாண்ட் போட்டியிடுகிறார். அதிபர் தேர்தலுக்குரிய வேட்பாளராக, தற்போது 10 பேர் களத்தில் உள்ளனர்.இந்த தேர்தலில், 50 சதவீத ஓட்டுக்கள் யாருக்கும் கிடைக்காவிடில், மறு தேர்தல், அடுத்த மாதம் 6ம் தேதி, இரண்டாவது கட்ட தேர்தல் நடைபெறும்.


பொருளாதார மந்த நிலை, வேலைவாய்ப்பின்மை, வரி விதிப்பு உள்ளிட்ட விஷயங்களை முன்னிறுத்தி, இத்தேர்தலில் எதிர்க்கட்சியினர் பிரசாரம் செய்தனர். மீண்டும் வாய்ப்பு அளித்தால், பிரான்ஸ் மேலும் வலுவுள்ளதாக மாறும் என, அதிபர் சர்கோசி உறுதியளித்துள்ளார்.

நேற்று ஓட்டுக்கள் எண்ணப்பட்ட நிலையில், சர்கோசியை எதிர்த்து போட்டியிட்ட பிராங்காய்ஸ் ஹோலண்ட் முன்னிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.பிரெஞ்சு காலனி ஆதிக்கத்தில் இருந்த நாடுகளிலும், நேற்று தேர்தல் நடத்தப்பட்டன. புதுச்சேரியிலும், நான்கு இடங்களில் பிரான்ஸ் அதிபர் தேர்தல் நடந்தது.

No comments:

Post a Comment