Saturday, June 30, 2012

புதுடெல்லி : பள்ளிவாசலை புதுப்பிக்க பல சமய மக்கள் ஆதரவு!

டெல்லி "மட்டியா மஹல்" சட்டசபை தொகுதிக்குட்பட்ட, பண்டித் வார்டின், ஷங்கர் தெருவில் உள்ளது, வக்ப் போர்டுக்கு சொந்தமான பழமையான "கஜூர் வாலி மஸ்ஜித்". இந்த பள்ளிவாசலுக்கு "சாந்தினி மஸ்ஜித் " என்ற மற்றொரு பெயரும் உண்டு. முக்கிய பகுதியில் இருக்கும் இந்த பள்ளிவாசல், பல வருடங்களாக பராமரிப்பின்றி குப்பை கூளங்கள் கொட்டுமிடமாக மாறியுள்ளதை கண்டு, அந்த பகுதியை சேர்ந்த டெல்லி மாநகராட்சி கவுன்சிலர், ராகேஷ் குமார் உள்ளிட்ட பல ஹிந்து சமுதாய பிரமுகர்கள் கவலை கொள்கின்றனர். 

Thursday, June 28, 2012

எப்படி நடக்கிறது இந்தியாவின் ஜனாதிபதி தேர்தல்...?‏


உலகின் மிகப் பெரிய குடியரசு இந்தியா என்பதும் இந்தியாவின் குடியரசுத்தலைவருக்கான  தேர்தல் நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறதுஎன்பதும்குடியரசுத் தலைவருக்கான  வேட்பாளர்கள் திரு.பிரனாப் முகர்ஜியும்திரு.சங்கமாவும் என்பதும் நாம் அனைவரும்  அறிவோம். ஆனால்,குடியரசுத்தலைவருக்கான தேர்தல் எப்படி நடக்கிறது அதற்கான விதிமுறைகள்என்னஇந்த சந்தேகங்களை தெளிவு படுத்தும் நோக்கமே இந்த பதிவு….
குடியரசுத் தலைவருக்கான தேர்தலில் யார் போட்டியிடலாம் ?
இந்திய அரசியலமைப்பின் படி, குடியரசுத் தலைவருக்கான தேர்தலில்போட்டியிட பின் வரும் அனைத்து தகுதிகளும் பெற்றிருக்க வேண்டும்:

நீங்கள் கைதானால், போலீஸ் காவலிலிருந்து உடனடியாக விடுதலை பெறுவது எப்படி?


பிடிப்பாணை வழக்குகளில், பிடிப்பாணையில் கூறப்பட்டுள்ள நெறிமுறைகளைப் பார்த்து, அதற்கேற்ப பிணையாளிகளுடன் பிணைமுறி எழுதித்தர வேண்டும் (குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு. 71).
சுமத்தப்பட்டுள்ள குற்றம் பிணையில் விடுவிக்கப்படக் கூடியதாகவும், பிடிப்பாணை இல்லாமல் கைது செய்யப்பட்டிருந்தாலும், பிணைமுறி எழுதிக்கொடுத்த பின்பு உங்களை பிணையில் விடுவிக்கும் படி காவல் நிலையப் பொறுப்பில் உள்ள காவல்துறை அதிகாரியிடம் கேட்கலாம்.
ஒரு நபரிடம் பிணையாளிகள் இல்லாமல் பிணைமுறிவு எழுதி வாங்கிக் கொண்டு, பிணையில் விடுவிப்பதற்கு காவல்துறை அதிகாரிக்கு தன் விருப்புரிமை அதிகாரம் உண்டு (குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 436).
  • உடனடியாக உங்களை பிணையில் விடுவிக்காவிட்டால் உங்களது வழக்கறிஞருக்கோ, நண்பர் அல்லது உறவினருக்கோ தொலைபேசியில் தகவல் கூற உங்களுக்கு உரிமை உண்டு. உங்களது வழக்கறிஞரிடம் பிணையாளிகளாக வரக்கூடிய நபர்களின் பெயர், முகவரிகளைத் தரவும், உங்களுக்கு வழக்கறிஞர் இல்லாவிட்டால், நண்பர் அல்லது உறவினருக்கு கீழ்கண்ட விவரங்களைத் தெரிவிக்கவும்.
  • நீங்கள் ஆஜராகப் போகும் குற்றவியல் நீதிமன்றம்.
  • நீதிமன்றம் துவங்கும் நேரம்.
  • உங்களுக்காக பிணையாளிகளாக வரத்தயாராக உள்ளவர்கள் நீதிமன்றத்திற்கு அழைத்து வரச்செய்வது.
  • முடிந்தால், ஒரு வழக்கறிஞரை தொடர்புக் கொள்ளச் சொல்வது.
நீதிமன்றத்திற்குச் செல்லும் முன்பாக, இத்தகையவற்றைக் கவனித்துக் கொண்டால், தேவையில்லாமல் காவலில் வைக்கப்படுவதிலிருந்து நீங்கள் காப்பாற்றப்படுவீர்கள்.

Wednesday, June 27, 2012

கல்வி உதவித்தொகை : வழிகாட்டும் அறக்கட்டளை

இந்த ஆண்டுக்கான மத்திய மாநில அரசுகள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் கல்வி உதவித்தொகைகளை பெறுவது தொடர்பான வழிகாட்டும் அறக்கட்டளை சென்னையில் செயல்பட்டு வருகிறது.
இங்குஆரம்பக்கல்வி முதல் உயர்கல்வி வரைக்கும் பல்வேறு வழிகாட்டல்களை பெறலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி 30.07.2012. விரிவான தகவல்களுக்கும் விவரமான வழிகாட்டலுக்கும் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

Saturday, June 23, 2012

6.30 லட்சம் ஓட்டுக்களுடன் வெற்றியின் விளிம்பில் பிரணாப்-சங்மாவிடம் வெறும் 3 லட்சம் ஓட்டுக்களே!

India Pranab Mukherjee Flies High With 6 29 Lakh Votes
சென்னை: ஐக்கிய முற்போக்குக்கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் பிரணாப் முகர்ஜிக்கு வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. அவருக்கு ஆதரவாக இதுவரை 6.29 லட்சம் ஓட்டுக்கள் திரண்டுள்ளன. அதேசமயம், பாஜக, அதிமுக உள்ளிட்ட நான்கு கட்சிகளின் ஆதரவுடன் போட்டியிடும் பி.ஏ.சங்மாவுக்கு வெறும் 3.10 லட்சம் வாக்குகளே சேர்ந்துள்ளன.
காங்கிரஸ் சார்பில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பிரணாப் முகர்ஜிக்கு இதுவரை 25க்கும் மேற்பட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்தக் கட்சிகளின் மூலம் அவருக்கு இதுவரை 6.29 லட்சம் ஓட்டுக்கள் சேர்ந்துள்ளன.

Saturday, June 16, 2012

அப்துல் கலாமை ஜனாதிபதியாக்கி, மீண்டும் முஸ்லிம்களை கருவறுக்க திட்டம்?!


முஸ்லிம் என்ற பெயரை தவிர அப்துல் கலாம் அவர்களால், முஸ்லிம்களுக்கு ஒரு பலனும் இருந்ததுமில்லை இருக்கப்போவதும் இல்லை.
2002ல் குஜராத் கலவரம் நிகழ்ந்த அதே ஆண்டு, பா.ஜ.க.,வினால்  ஜனாதிபதியாக்கப்பட்ட அப்துல் கலாம், குஜராத் இன அழிப்புக்கு எதிராக, ஒரு துரும்பை கூட நகர்த்தவில்லை. எனவே தான், அடுத்தடுத்து அப்துல் கலாமையே ஜனாதிபதியாக்க பா.ஜ.க. முயற்சித்து வருகிறது. 


கடந்த 2007 ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதுபதி தேர்தலிலும் அப்துல் கலாமையே கடைசி வரை முன் நிறுத்தியது பா.ஜ.க.  இப்போது, மம்தா குரல் மூலம் பா.ஜ.க. தான், இந்த திட்டம் வகுத்து வருகிறது.  முஸ்லிம் சமூகத்துக்கு முற்றிலும் எதிரியாக உள்ள பா.ஜ.க., அப்துல் கலாமை ஆதரிப்பதில் காரணங்கள், மிக அதிகம். 

முஸ்லிம்களுக்கு எதிராக நீதிமன்றங்கள் : கர்நாடக உயர் நீதிமன்றம் பாங்கு சொல்ல தடை!

இரவு 10 மணி முதல் காலை 6 மணிவரை ஒலி பெருக்கியை பயன் படுத்தக்கூடாது, என்ற விதியை சுட்டிக்காட்டி,  இனி, காலை ஸுபுஹ் தொழுகைக்கு ஒலி பெருக்கியில் பாங்கு சொல்லுவது கூடாது, என்று கர்நாடக மாநில ஹைகோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
மாநிலம் முழுவதும் வரும் ஜூன் 17 முதல் இந்த உத்தரவை அமல் படுத்த, போலீசுக்கு அட்வகேட் ஜெனரல் உத்தரவு பிறப்பித்து உள்ளார். இதை தொடர்ந்து பெங்களூருவில் உள்ள அனைத்து மசூதி நிர்வாகத்துக்கும் போலீஸ் கமிஷனர் காலை பாங்குக்கு தடை விதித்துள்ளார்.   பெங்களூருவில் செயல்படும் "ஜெய் நகர் சமிதி" என்ற அமைப்பு தொடர்ந்த வழக்கில் சொல்லப்பட்ட இந்த தீர்ப்பு குறித்து, கர்நாடக மாநில ஜமியதுல் உலமா தலைவர், முப்தி இப்திகார் அஹ்மத் உள்ளிட்ட முஸ்லிம்கள் மேல் முறையீடு செய்ய  ஆலோசித்து   வருகின்றனர்.

Friday, June 15, 2012

ஜனாதிபதி பதவி வேட்பாளர் பிரணாப் முகர்ஜி: சோனியா அறிவிப்பு!

 Upa Announce Pranab Mukherjee As President
டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி போட்டியிடுவதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். இன்று மாலை கூடிய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கூட்டத்தி்ல அவர் பிரணாபின் பெயரை முன்மொழிந்தார். இதை கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் ஒருமனதாக ஏற்றுக் கொண்டனர்.
இதையடுத்து ஜூன் 24ம் தேதி நிதியமைச்சர் பதவியை பிரணாப் முகர்ஜி ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதுக்கோட்டை இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி, ஆனால் அமைச்சர்கள் பீதி...!

 Admk Ll Secure Pudukkottai But
புதுக்கோட்டை: புதுக்கோட்டை இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் கார்த்திக் தொண்டைமான் தான் வெற்றி பெறுவார் என்பது உறுதியாகிவிட்டது. இருப்பினும் சில அமைச்சர்கள் பீதியில் உள்ளனராம்.
புதுக்கோட்டை இடைத்தேர்தலில் வெற்றி பெறப் போவது யார் என்று சின்ன பையனைக் கேட்டால் கூட அதிமுக தான் என்று சொல்வான். தொகுதியின் உள்ள 1,94,680 வாக்காளர்களில் 1,43,277 பேர் தங்களது வாக்குகளைப் வெற்றிகரமாக பதிவு செய்தனர்.
புதுக்கோட்டையில் வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை நடந்தது. அதிமுக வேட்பாளர் கார்த்திக் தொண்டைமான் 71,498 வாக்கு வித்தியாத்தில் தான் வென்றுள்ளார். அதிமுக கணக்குப் போட்டபடி வாக்கு வித்தியாசம் 1 லட்சத்தை தாண்டவில்லை.

Thursday, June 14, 2012

கடும் அச்சத்தில் உள்ளனர் "கண்டீலா" முஸ்லிம்கள்!


உத்தர பிரதேசம் ஷாம்லி மாவட்டத்தில் உள்ளது "கண்டீலா" கிராமம்.  சிறிய கிராமமான இங்கு 70 முஸ்லிம் குடும்பங்கள் வசிக்கின்றனர்.
இங்கு "காசிமுல் உலூம்" என்ற பெயரில் கடந்த 3 ஆண்டுகளாக மதரசா ஒன்று செயல்பட்டு வருகிறது. உள்ளூர் மாணவர்கள் உட்பட பல வெளியூர் மாணவர்களும் தங்கி படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் ஆண்டு விழா வரும் 17ந்தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டு, போஸ்டர் மற்றும் நோட்டீஸ்களும் அச்சிடப்பட்டன. விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக வெளியூரிலிருந்து சில ஆலிம்களை அழைக்கவும் முடிவு செய்யப்பட்டது. 


நேற்று மக்ரிப் தொழுகையின்போது உள்ளூரை சேர்ந்த 300 குண்டர்கள் மதரசாவை சூழ்ந்து கொண்டு, மதரசாவின் முதல்வர், காரி குலாம் ரப்பானியை நோக்கி ஆவேசமாக திட்ட ஆரம்பித்தனர்.  இந்த மதரசாவில் விழா நடத்தக்கூடாது, அப்படியே நடத்துவது என்றாலும் வெளியூரிலிருந்து எவரையும் அழைக்கக்கூடாது, போஸ்டர் ஓட்டக்கூடாது, ஒலிபெருக்கியை பயன்படுத்தக்கூடாது போன்ற ஏகப்பட்ட "கூடாது" நிபந்தனைகளை விதித்தனர். விளக்கம் சொல்ல முற்பட்ட போது, கடும் கலவர சூழலை உருவாக்குவது போன்ற செயல்களில் ஈடுபட்டனர். 

வஞ்சிக்கப்படும் முஸ்லிம்கள் : என்னமோ நடக்குது; ஏதோ நடக்கப்போகுது!

மத்திய அரசு இட ஒதுக்கீடும் விஷயம் ஒரு புறமென்றால், தமிழக அரசு ஏற்கனவே உள்ள ஒதுக்கீட்டையும் அமல் படுத்த மறுக்கிறது. தமிழக அரசு ஒப்பந்தப் பயிற்சி மருத்துவர் பணி நியமனத்தில் மிகப்பெரிய துரோகத்தை முஸ்லிம்களுக்கு இழைத்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் தமிழகத்தில் 1349 மருத்துவர்கள் அரசு மருத்துவப் பணிக்காகப் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் கூட முஸ்லிம் இல்லை. 3.5சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் 47 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். இட ஒதுக்கீடு அடிப்படையில் மட்டும் இல்லாமல் பொதுப்பிரிவில் தகுதியான முஸ்லிம்கள் தேர்வு செய்யப்பட முடியும். 

அணு உலை என்ன? அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலும் தயாரிப்போம்ல..: ஈரான் அதிரடி

Iranடெஹ்ரான்: ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரித்து வருவதாக குற்றம்சாட்டி அந்நாட்டின் மீது அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் பொருளாதாரத் தடையை விதித்திருக்கும் நிலையில் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலையும் அந்நாடு தயாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரானின் அணு ஆயுதத்தால் அலறிப் போய் இருக்கும் இஸ்ரேல் எப்போது வேண்டுமானாலும் போர் தொடுக்கும் என்ற நிலை இருந்தது. இஸ்ரேலின் கோபத்தை கொஞ்சம் கொஞ்சமாக அமெரிக்காதான் தடுத்து பொருளாதாரத் தடை விதித்தது. பின்னர் பேச்சுவார்த்தைகள் நடத்திக் கொண்டிருக்கிறது.

Wednesday, June 13, 2012

சிறுபான்மை ஒதுக்கீடு : உச்ச நீதிமன்றத்தின் வஞ்சகம்!


நீண்ட இழு பறிகளுக்கு பிறகு சிறிய நிவாரணமாக, முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மை சமூகங்களுக்கு வழங்கப்பட்ட 4.5% உள் ஒதுக்கீட்டுக்கு எதிராக "நயவஞ்சகமாக" இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த நயவஞ்சக சதி திட்டத்தில், ஆளும் காங்கிரஸ் அரசுக்கும் பெரும் பங்குள்ளதை மறுக்க முடியாது.

Monday, June 11, 2012

பொருளாதார மந்தநிலை என்றால் என்ன?

What Is Recession
"Recession" (பொருளாதார மந்தநிலை) என்பது ஜிடிபி எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி (GDP) சரிவை சந்திக்கும்போது ஏற்படும் தேக்கமாகும்.
மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி என்பது ஒரு நாட்டின் உற்பத்தியை ஒரு குறிப்பிட்ட காலப் பகுதியில் அளவிடக் கூடிய ஒரு அளவுகோல். உதாரணமாக இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 9 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாகக் குறைந்தால் அது பொருளாதார சரிவு.

Wednesday, June 6, 2012

முஸ்லிம் பெண் பருவமடைந்தால் 15 வயதில் விரும்பியவரை மணக்கலாம்: டெல்லி ஹைகோர்ட்

 Muslim Girl Can Marry At 15 If Attains Puberty Delhi Hc
டெல்லி:பருமடைந்திருந்தால் முஸ்லிம் பெண்கள் 15 வயதில் தங்களுக்கு பிடித்தவர்களை திருமணம் செய்து கொள்ளலாம் என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
16 வயது மகளை பையன் வீட்டார் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கட்டதிச் சென்று க்டடாயத் திருமணம் செய்து வைத்ததாகவும், தங்கள் மகளை தங்களுடனேயே அனுப்பி வைக்குமாறும் கோரி அவரது பெற்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ். ரவீந்திர பட் மற்றும் எஸ்.பி.கார்க் ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்தனர். மேலும் அவர் தங்கள் தீர்ப்பில் கூறியதாவது,

பிரதமர், 14 அமைச்சர்களின் ஊழல் குறித்த ஆவணங்களை சோனியாவிடம் கொடுத்த அன்னா குழு

 Team Anna Gives Files On Pm Ministers To Sonia டெல்லி: பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் 14 அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான ஆவணங்களை அன்னா குழுவினர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அலுவலகத்தில் சமர்பித்துள்ளனர்.
பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் 14 அமைச்சர்கள் மீது அன்னா குழுவினர் ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தினர். தன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் பொது வாழ்க்கையில் இருந்து விலகிவிடுதாக பிரதமர் தெரிவித்தார். ஆனால் அன்னா குழு கூறும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்தார். இதையடுத்து தாங்கள் சுமத்திய ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான ஆவணங்களை சமர்பிப்பதாக அன்னா ஹசாரே தெரிவித்தார்.