Saturday, June 30, 2012

புதுடெல்லி : பள்ளிவாசலை புதுப்பிக்க பல சமய மக்கள் ஆதரவு!

டெல்லி "மட்டியா மஹல்" சட்டசபை தொகுதிக்குட்பட்ட, பண்டித் வார்டின், ஷங்கர் தெருவில் உள்ளது, வக்ப் போர்டுக்கு சொந்தமான பழமையான "கஜூர் வாலி மஸ்ஜித்". இந்த பள்ளிவாசலுக்கு "சாந்தினி மஸ்ஜித் " என்ற மற்றொரு பெயரும் உண்டு. முக்கிய பகுதியில் இருக்கும் இந்த பள்ளிவாசல், பல வருடங்களாக பராமரிப்பின்றி குப்பை கூளங்கள் கொட்டுமிடமாக மாறியுள்ளதை கண்டு, அந்த பகுதியை சேர்ந்த டெல்லி மாநகராட்சி கவுன்சிலர், ராகேஷ் குமார் உள்ளிட்ட பல ஹிந்து சமுதாய பிரமுகர்கள் கவலை கொள்கின்றனர். 

இதற்காக, அந்த வார்டு கவுன்சிலர் ராகேஷ் குமார், டெல்லி சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வான, ஷுஐப் இக்பால் மற்றும் டெல்லி வக்ப் வாரிய தலைவர், மதீன் அஹ்மத் உள்ளிட்ட இஸ்லாமிய தலைவர்களை சந்தித்து, மேற்படி பள்ளிவாசலை புனரமைக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து, அங்குள்ள முஸ்லிம் தலைவர்களிடம் கேட்டபோது, இந்த பள்ளிவாசலை நாங்கள் மராமத்து பனி செய்ய முற்பட்டபோது, முந்தய கவுன்சிலர் தடுத்து விட்டதாகவும், பதட்டத்தை தவிர்ப்பதற்காக, அப்போது பணிகள் நிறுத்தப்பட்டு விட்டதாகவும் கூறினர். 


தற்போது, பல சமயத்தவரும் பள்ளிவாசல் பாழடைந்து போவதை பற்றி கவலை கொள்கின்றனர். அந்த பகுதியை சேர்ந்த கிஷோர் மற்றும் பிரஜேஷ் குமார் கூறுகையில், தாம் இது பற்றி உள்ளூர் முஸ்லிம்களிடம் பல முறை எடுத்து சொல்லியும் எவரும் காதில் போட்டுக்கொள்ளவில்லை, என்கின்றனர். இந்த பள்ளிவாசலை ஒட்டிய வீட்டுக்கு சொந்தக்காரரான, ராகேஷ் குமார் என்பவரோ, வழிபாட்டுத்தளம் பாழடைவது சரியல்ல, எனவே குறைந்த பட்சம் பள்ளியின் நான்கு சுவர்களையாவது துரிதமாக கட்டி முடிக்கப்பட வேண்டும்.


இதற்காக, இந்த பகுதிவாழ் மக்கள் அனைவரின் ஆதரவையும் திரட்டி தர, தயார் என்கிறார், அவர். கடந்த 2008 முதலே இது சம்மந்தமாக பலரும் முயற்சித்து, பகுதிவாழ் முஸ்லிம்களான, ஹாஜி முஹம்மத் இத்ரீஸ் கான், ஹாஜி முஸ்தகீம், முஹம்மத் யூனுஸ், ஹாபிஸ் மத்லூப், கலீல் அஹ்மத், ஜாவீத் உள்ளிட்டவர்களை கொண்ட, பள்ளிவாசல் கட்டிட கமிட்டி அமைக்கப்பட்டும், மெத்தனமாக உள்ளனர், முஸ்லிம் சமுதாயத்தினர்.

No comments:

Post a Comment