Wednesday, February 29, 2012

சரத்பவாரை அடித்தவருக்கு கிடைத்தது தர்ம அடி !


சரத்பவாரை தாக்கியவர் கடத்தல்: அடித்து உதைத்து ஆஸ்பத்திரி முன்பு தள்ளி விட்டனர்
மத்திய மந்திரி சரத்பவாரை அடித்தவர், மர்ம மனிதர்களால் கடத்திச்சென்று தாக்கப்பட்டார். மிரட்டல் காரணமாக தலைமறைவாக வாழ்கிறார். முன்னாள் தொலைபேசி துறை மந்திரி சுக்ராம் மற்றும் விவசாயத்துறை மந்திரி சரத்பவார் ஆகியோர் பொது இடத்தில் வைத்து தாக்கப்பட்டனர். இவர்கள் பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, கடந்த நவம்பர் மாதம் ஹர்விந்தர்சிங் என்ற இளைஞர்இவர்களை தாக்கினார். சரத்பவாரை கன்னத் தில் அறைந்தார். இந்த சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இது தனது 'சமூக சேவை' என்று ஹர்விந்தர் சொன்னார். போலீசாரால் கைது செய்யப்பட்ட ஹர்விந்தர் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஈரானின் அடுத்த எச்சரிக்கை. உலக வரை படத்திலிருந்து இஸ்ரேலை அழித்து விடுவோம்.



உலக வரை படத்திலிருந்து இஸ்ரேலை அழித்து விடுவோம், ஈரான் கடும் எச்சரிக்கை.எங்கள் நாட்டின் மீது போர் தொடுத்தால், இஸ்ரேல் என்ற நாடே இல்லாமல் போய்விடும்" என்று ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானின் அணு உலைகள் மீது கட்டுப்பாடு விதிக்க அமெரிக்கா முயற்சிகள் மேற்கொண்டதால் ஈரான், அமெரிக்கா இடையேயான மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது அறிந்ததே.

Tuesday, February 28, 2012

இது போலி என்கவுன்டர் - யாரையோ திருப்திப்படுத்த நடந்தது: உண்மை அறியும் குழுவின் அறிக்கை

பிப்ரவரி 26, 27 தேதிகளில், சென்னை வேளச்சேரி என்கவுன்டர் கொலைகள் குறித்து ஆய்வு செய்த அ மார்க்ஸ் தலைமையிலான உண்மை கண்டறியும் குழு, இந்த என்கவுன்டர் போலியானது என்றும், சிபிஐ விசாரணை வேண்டும் என்றும் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

இதுதொடர்பாக அ. மார்க்ஸ் வெளியிட்டுள்ள விரிவான அறிக்கை: 
வேளச்சேரியில் கடந்த 22 தேதியன்று இரவு (23 அதிகாலை) நடந்துள்ள என்கவுன்டர் கொலைகளில் ஐவர் பலியாகியுள்ள செய்தி தொடர்பாக தமிழகத்தில் இருந்து வெளிவரும் ஊடகங்கள் பல நியாயமான அய்யங்களை எழுப்பியுள்ளன. இதுகுறித்து ஆய்வு செய்ய மனித உரிமை அமைப்புகளைச் சேர்ந்த கீழ்க்கண்ட 10 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது.

கோத்ரா நினைவு தினத்தில் மோடியை புகழும் பாஜக !


புது டெல்லி : கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தின் பத்தாம் ஆண்டு நினைவு நாளான இன்று, குஜராத் முதல்வரும் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து நடைபெற்ற முஸ்லீம்களின் மீதான இனக்கலவரங்களைத் தூண்டியதாக குற்றம் சாட்டப்படுபவருமான நரேந்திர மோடியை வளர்ச்சியின் நாயகன் என்று பாஜக வானளாவ புகழ்ந்துள்ளது.

குரான் எரிப்பு சம்பவத்திற்கு ஒபாமா மன்னிப்பு கேட்டது தவறு : நியூத் ஜிங்க்ரிச்ன் திமிர் பேச்சு


Obama's sorry is a wrong decision in the Quran matter. Newth Jingrich
ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கா ராணுவத் தளத்தில் குரானின் பிரதிகள் எரிக்கப்பட்ட சம்பவத்துக்கு, அதிபர் ஒபாமா மன்னிப்புக் கோரியிருக்கக் கூடாது என்று குடியரசு கட்சியின் மூத்தத் தலைவர் நியூத் ஜிங்க்ரிச் சாடியுள்ளார். 
ஆப்கானிஸ்தானில் உள்ள ஓர் அமெரிக்க ராணுவத் தளத்தில் அண்மையில் குரானின் பிரதிகள் எரிக்கப்பட்டன. இது, அந்நாட்டு மக்களிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. 

சங்கரன்கோவிலில் அமைச்சர்கள்: காத்து வாங்கும் தலைமைச் செயலகம்


சென்னை: அமைச்சர்கள் அனைவரும் இடைத்தேர்தல் பணி செய்ய சங்கரன்கோவிலுக்கு சென்றுள்ளதால் தலைமைச் செயலகம் வெறிச்சோடி காணப்படுகிறது. சங்கரன்கோவிலில் வரும் மார்ச் 18ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதையொட்டி தேர்தல் பணி செய்ய முதல்வர் ஜெயலலிதா தனது அமைச்சரவையில் உள்ள 34 பேரையும் சங்கரன்கோவில் அனுப்பியுள்ளார். இதனால் தலமைச் செயலகமே சங்கரன்கோவிலுக்கு மாறிவிட்டது போன்று உள்ளது. ஆனால் சென்னையில் உள்ள தலைமைச் செயலகம் அமைச்சர்கள் இன்றி வெறிச்சோடிக் காணப்படுகிறது.



அமைச்சர்கள் 34 பேரும் தலைமைச் செயலகத்தில் இருந்தால் அவர்களைப் பார்க்க அதிகாரிகள், கட்சிக்காரர்கள், பொது மக்கள் என பலரும் வருவார்கள். அதனால் தலைமைச் செயலகம் எப்பொழுது பார்த்தாலும் கூட்டமாக இருக்கும். தற்போது முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் அமைச்சர்கள் மட்டும் சென்னைக்கு வந்து ஓரிரு நாட்கள் இருந்துவிட்டு சங்கரன்கோவிலுக்கு சென்றுவிடுகின்றனர். மற்ற அமைச்சர்கள் சங்கரன்கோவிலிலேயே முகாமிட்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர். 

Monday, February 27, 2012

முதல் முறையாக 2 மணி நேரம் 'பவர் கட்'...சென்னை மக்கள் செம டென்ஷன்!!


Power Cutசென்னை: மின் பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில், தமிழக அரசு அறிவித்துள்ள புதிய மின் தடை இன்று தமிழகம் முழுவதும் அமலுக்கு வந்தது. சென்னையில் முதல் முறையாக 2 மணி நேர தொடர் மின்வெட்டை சந்தித்த மக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.


தமிழகம் முழுவதும் நிலவி வரும் கடும் மின் தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில் திருத்தப்பட்ட மின்தடையை இன்று முதல் மின்வாரியம் அமல்படுத்தியது. அதன்படி இதுவரை ஒரு மணி நேரம் மட்டுமே மின்தடை இருந்த சென்னை மற்றும் புறநகர்களில் இன்று முதல் 2 மணி நேரமாக உயர்த்தப்பட்டது. பிற மாவட்டங்களில் 8 மணி நேர மின்தடை என்பது 4 மணி நேரமாக குறைந்தது.

மின்வெட்டை கண்டித்து எஸ்.டி.பி.ஐ யினர் சென்னையில் ஆர்ப்பாட்டம்



சென்னை: சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியாவின்   தென் சென்னை மாவட்டம் சார்பாக தமிழகம் முழுவதும் ஏற்படும் மின்வெட்டை கண்டித்து ஆர்பாட்டம் 16.02.12 அன்று மாலை 4 மணி அளவில் சைதாபேட்டை பனகல் மாளிகை அருகில்  மாவட்ட தலைவர்   முஹம்மது ஹுசைன் அவர்கள்  தலைமையில் நடைபெற்றது.   மாவட்ட  செயலாளர் அஹமது அலி அவர்கள் வரவேற்புரையாற்றினார். மாவட்ட பொருளாளர் அஹமது ரிபாய், மாவட்ட செயலாளர்கள் சாகுல் ஹமீது, அனீஸ் முஹம்மது மற்றும் தொகுதிதலைவர்கள் முன்னிலை வகித்தனர். 

முஹம்மது நபியை குறித்து இயேசு முன்னறிவிப்புச் செய்யும் பைபிள் கண்டுபிடிப்பு !


The text, reportedly worth $22 million, is said to contain Jesus’ prediction of the Prophet’s coming but was suppressed by the Christian Church for years.அங்காரா:இஸ்லாத்தின் இறுதி தூதரான முஹம்மது நபியை குறித்து இயேசு(ஈஸா நபி) முன்னறிவிப்புச் செய்யும் 15 நூற்றாண்டுகள் பழமையான பைபிள் துருக்கியில் கண்டெடுக்கப்பட்டது. பர்ணபாஸின் சுவிசேஷம் என்று அழைக்கப்படும் இந்த நூல் 12 ஆண்டுகளாக துருக்கியில் ரகசியமாக பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது. பைபிளில் கூறப்படும் பர்ணபாஸ் இயேசுவின் முக்கிய சீடராவார்.

Sunday, February 26, 2012

தஞ்சை தெற்கு SDPI கட்சியின் மாவட்ட செயலாளரை தாக்கிய TMMK வினர்.

அதிராம்பட்டினம், பிப்ரவரி 26 : அதிரையில் இன்று காலை 9 மணியளவில் SDPI கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் முஹம்மது இல்யாஸ் அவர்கள் திருவாரூரில் இன்று SDPI கட்சி சார்பில் நடைபெற இருக்கும் திருவாரூர் முதல் காரைக்குடி வரை அகல ரயில் பாதை திட்டத்தை உடனே அமைக்க வலியிறுத்தி ரயில் மறியல் போரட்டத்திற்கு அதிராம்பட்டினத்தில் இன்று பொது மக்களை அழைத்துகொண்டிருந்தார். 

பாதம்பருப்பு சாப்பிடுங்க!-நீரிழிவு ஓடிப்போயிடும்!!


நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் ஆற்றல் பதாம் பருப்புக்கு உண்டு என்று புதிய ஆய்வு முடிவு ஒன்று தெரிவித்துள்ளது. எனவே நீரிழிவு நோய் உள்ளவர்கள் தினசரி பாதம் பருப்பு உட்கொள்வதன் மூலம் டைப் 2 நீரிழிவு குணமாகும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் நியூ ஜெர்சி மருத்துவ பல்கலைக்கழக மருத்துவ விஞ்ஞானிகள் சர்க்கரை நோயை குணப்படுத்தும் உணவுப் பொருட்கள் பற்றிய ஆய்வு மேற்கொண்டனர். அதில் பாதம் பருப்பானது நீரிழிவினை ஏற்படுத்தும் காரணிகளை கட்டுப்படுத்துவதாக கண்டறிந்துள்ளனர்.

போலியோ பாதித்த நாடுகள் பட்டியலிலிருந்து இந்தியா நீக்கம்!


டெல்லி: இந்தியா போலியோ இல்லாத தேசம் என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. போலியோ பாதித்த நாடுகள் பட்டியலிலிருந்தும் இந்தியாவின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. 


பிரதமர் மன்மோகன் சிங்குடன் போலியோ குறித்த உச்சிமாநாட்டில் கலந்து கொண்ட மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் இதுகுறித்து கூறுகையில், "ஐக்கிய நாடுகளின் உலக சுகாதார நிறுவன அமைப்பில் போலியோவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான், இந்தியா, நைஜீரியா, ஆப்கானிஸ்தான் ஆகிய 4 நாடுகள் இடம்பெற்றிருந்தன.

Saturday, February 25, 2012

ஆப்கான் மக்களிடம் ஒபாமா மன்னிப்பு கோரினார்



ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு அமெரிக்க இராணுவத் தளத்தில் அண்மையில் குரானின் பிரதிகள் எரிக்கப்பட்டதற்காக ஆப்கானிய மக்களிடம் அமெரிக்க அதிபர் ஒபாமா மன்னிப்பு கோரியுள்ளார். அந்த எரிப்புச் சம்பவம் தவறுதலாக நடந்து விட்டது என்றும் அதற்காக தான் மிகவும் வருந்துவதாகவும் ஆப்கானிய அதிபர் ஹமீத் கர்சாயுக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஒபாமா தெரிவித்துள்ளார்.

எகிப்து:அதிபர் தேர்தலில் போட்டியிடும் இஸ்லாமிய கட்சி வேட்பாளர் மீது தாக்குதல்: கவலைக்கிடம் !


Abdel Moneim Abol Fotohகெய்ரோ:ஆயுதம் ஏந்திய மர்மநபர்கள் நடத்திய தாக்குதலில் எகிப்தின் இஸ்லாமிய கட்சி அதிபர் வேட்பாளர் டாக்டர் அப்துல் முனீம் அப்துல் ஃபத்தாஹிற்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
கெய்ரோவில் தீவிரகண்காணிப்பு பிரிவில் அவருக்கு சிகிட்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருடைய மூளைக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக உதவியாளர்களும், போலீசாரும் கூறுகின்றனர்.
முனூஃபியாவில் பிரச்சாரம் முடிந்து வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த அப்துல் முனீமின் காரை தடுத்து நிறுத்திய மூன்று நபர்களை கொண்ட முகமூடி கும்பல் அவரது தலையில் பல தடவை தாக்கியுள்ளனர். பின்னர் காரில் ஏறி தப்பிவிட்டனர் என்று பிரச்சார குழுவில் இடம்பெற்றுள்ள அஹ்மத் உஸாமா கூறுகிறார்.

Friday, February 24, 2012

முதல்வர் பதவி கேட்டு கட்காரியுடன் மல்லுக்கட்டும் எடியூரப்பா

பெங்களூர்: கர்நாடக முதல்வராக தம்மை மீண்டும் நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் எடியூரப்பா பெங்களூரில் பாரதிய ஜனதா கட்சித் தலைவர் நிதின் கட்காரியை இன்று காலை சந்தித்துப் பேசினார். தம்மை கர்நாடக முதல்வராக மீண்டும் நியமிப்பது குறித்து பிப்ரவரி 27-ந் தேதிக்குள் தீர்மானிக்க வேண்டும் என்று கட்சித் தலைமைக்கு எடியூரப்பா கெடு விதித்திருந்தார்.

இந்நிலையில் கட்சி நிகழ்ச்சிக்காக பெங்களூருவில் முகாமிட்டுள்ள நிதின் கட்காரியை தமது ஆதரவாளர்களுடன் நேரில் சென்று சந்தித்த அவர், தமது அரசியல் எதிர்காலம் குறித்து கட்சி தெளிவான நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். எந்த குற்றமுமே செய்யாமல் தாம் சிறையில் இருக்க நேரிட்டதையும் கட்காரியும் எடியூரப்பா இன்றைய சந்திப்பில் சுட்டிக்காட்டியதாக கூறப்படுகிறது.

ஈரானிடமிருந்து விலகுகிறதா இந்தியா?- சவூதியிடம் கூடுதல் கச்சா எண்ணெய் கேட்கிறது !


டெல்லி: ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் தடைவிதித்துள்ள நிலையில் சவூதி அரேபியாவிடமிருந்து கூடுதலாக 5 மில்லியன் டன் கச்சா எண்ணெய் கொடுக்குமாறு இந்தியா கோரியிருக்கிறது. சவூதி அரேபியாவின் பெட்ரோலியத் துறை துணை அமைச்சர் அப்துல் அஜிஸ் பின் சல்மானுடனான சந்திப்புக்குப் பிறகு பெட்ரோலியத் துறை இணை அமைச்சர் ஆர்.பி.என்.சிங் இதனைத் தெரிவித்தார்.

ஆங்கிலேயர் ஆட்சியில் இந்தியா நன்றாக இருந்துச்சாம் : ஆர் எஸ் எஸ் பயங்கரவாதிகள் புலம்பல் !


டெல்லி: ஆங்கிலேயர் ஆட்சியல் இந்தியா தற்போதைவிட நன்றாக இருந்ததாக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பக்வத் தெரிவித்துள்ளார். இது குறித்து ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பக்வத் தெரிவித்ததாக முன்னணி செய்தித்தாள் ஒன்றில் வெளியான செய்தியில் கூறியிருப்பதாவது, பணபலமும், ஆள்பலமும் உள்ளவர்கள் தான் அரசியலில்ஆதிக்கம் செலுத்துகின்றனர். விண்ணைத் தொடும் விலை உயர்வால் மக்கள் அவதிப்படுகின்றனர். கடந்த 64 ஆண்டுகளில் கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் ஆட்சியில் இருந்துள்ளன. இருப்பினும் நாட்டின் நிலைமையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. எது தவறாகப் போனது என்பதை மக்கள் தான் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்றார்.

ஹலா பிப்ரவரி - பிப்ரவரி திருவிழா

வருடந்தோறும் பிப்ரவரி 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் குவைத் திருவிழா கோலம் பூணுகிறது. இந்த இரட்டை நாட்களை கொண்டாட முதன்மை காரணம் பிப்ரவரி 25-யை தேசிய தினமாகவும், பிப்ரவரி 26-யை சுதந்திர நாளாகவும் குவைத் அரசாங்கம் அனுஷ்டிப்பதே ஆகும். பிரிட்டிஷாரின் காலனியாதிக்கத்தில் இருந்து 1961-இல் விடுபட்ட பிறகு வருடத்தில் ஒரு நாளை மட்டுமே கொண்டாடி வந்த குவைத் மக்கள், மறைந்த ஈராக் அதிபர் சதாம் ஹுசைனின் ஆக்கிரமிப்பை சர்வதேச சக்திகளின் ஆதரவுடன் அகற்றிய பிறகு இரட்டை தின கொண்டாட்டமாக பிப்ரவரி 25 மற்றும் பிப்ரவரி 26 தேதிகளில் "ஹலா பிப்ரவரி" என்ற பெயரில் 1999-ம் ஆண்டு அறிமுகபடுத்தபட்டு ஒவ்வொரு ஆண்டும் ஆண்டு திருவிழாவாக நடத்தி அமர்களபடுத்தி வருகிறது. மேலும் இவ்விழாவுக்கான ஏற்பாடுகள் ஒரு மாத காலத்திற்கு முன்பாக திட்டமிடப்பட்டு கோலாகலபடுதபடுகிறது. 


இந்த வருடமும் பிப்ரவரி திருவிழாவுக்கான ஏற்பாடுகள் பிப்ரவரி 2 அன்று  தொடங்கப்பட்டு  அதை கொண்டாட தயாராகி கொண்டிருக்கிறார்கள் குவைத் மக்கள். இதன் ஒரு பகுதியாக ஓங்கி உயர்ந்த தனியார் மற்றும் அரசு கவர்னரேட், முனிசிபாலிடி கட்டடங்கள் குவைதின் மூவர்ண தேசிய கொடியை மின்விளக்குகளால் கம்பீரமாக ஜொலித்து கொண்டிருக்க செய்கின்றன.

Thursday, February 23, 2012

இம்சை அரசன் 2012 ம் புலிகேசி !



இந்தியாவில் விவசாயம் அழிந்து வருகிறது. நூறு கோடிக்கும் அதிகமான மக்களின் உணவு தேவையை வரும் காலங்களில் நாம் எப்படி சம்மாளிக்கப் போகிறோம் என்கிற கேள்வி எழுத்துள்ளது. ஒருபுறம் விவசாயத்திற்கு தேவையான போதிய மழை இல்லாதது மறுபுறம் உரம், விதை போன்றவற்றின் விலை உயர்வால் தவிக்கும் விவசாயிகள் குடும்பத்தோடுதற்கொலை செய்து கொள்வது அன்றாடம் செய்தி ஆகிவிட்டது. இதுவரை உரங்களின் விலையை கட்டுபடுத்தி வந்த மத்திய அரசு இனி அதை உரகம்பெனிகளே தீர்மானித்து கொள்ளட்டும் என்று விட்டுவிட்டது. இதை தொடர்ந்து உர நிறுவனங்கள் அனைத்தும் ஒன்றாய் சேர்ந்து ஒரு கூட்டமைப்பை உருவாக்கி கொண்டு விலைகளை கண்டபடி உயர்த்தி விவசாயிகளின் வயிற்றில் அடிக்கின்றனர்.

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி ஆகும் உரங்களை பதுக்கல் வியாபாரிகள் கள்ளச்சந்தையில் விற்று கொள்ளை லாபம் அடிக்கின்றனர். இந்தியாவில் உற்பத்தியாகும் உரங்களுக்கு மத்திய அரசு ஆண்டு ஒன்றுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் மானியமாக வழங்குகிறது. அதையும் அதிக உற்பத்தி செய்ததாக போலி ஆவணங்களை காட்டி கொள்ளை அடிக்கின்றன இந்த உர நிறுவனங்கள்.

கொள்ளையர் தலைவனுக்கு 'பேனர்' கட்டுவதற்குள் சுட்டு வீழ்த்திய போலீஸ் !


Vinoth Kumar
சென்னை: சென்னை வங்கிக் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளைக் கும்பலின் தலைவனாக செயல்பட்ட வினோத்குமாரின் உருவப் படத்தை பிளக்ஸ் போர்டு மூலம் அனைத்து வங்கிகள் முன்பும் பேனர் போல வைப்பதற்கு காவல்துறையினர் திட்டமிட்டிருந்தனர். 


ஆனால் அதற்குள்ளாகவே அவன் சிக்கி செத்துப் போய் விட்டான். சென்னை பெருங்குடி பாங்க் ஆப் பரோடா, கீழ்க்கட்டளை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகியவற்றின் கிளைக்குள் புகுந்து துப்பாக்கி முனையில் கொள்ளையடித்த கும்பலைப் பிடிக்க சென்னை போலீஸார் 40 தனிப்படைகளை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர்.

Wednesday, February 22, 2012

கோவா கடற்கரை இஸ்ரேலியர்கள்-ரஷ்யர்களால் ஆக்கிரமிப்பு !


பனாஜி : இந்தியாவின் புகழ் பெற்ற சுற்றுலா தலமான கோவாவின் கடற்கரை கிராமங்களை இஸ்ரேலியர்கள் மற்றும் ரஷ்யர்கள் ஆக்கிரமித்துள்ளதாகவும் இந்நிலை தொடர்வது அபாயகரமானது என்றும் இது உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றும் காங்கிரஸ் ராஜ்யசபா உறுப்பினர் சாந்தாராம் நாயக் கூறினார்.

ஈரானில் மீண்டும் அதிரடி கூகுள்,யாஹூ போன்ற இணயதளங்களுக்கு தடை !


பார்லிமென்ட் தேர்தல் விரைவில் நடக்கவுள்ள நிலையில், வெப்சைட்களை மக்கள் பார்க்க ஈரானில் திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளது. கூகுள், யாஹூ உள்ளிட்ட வெப்சைட்கள் தடை செய்யப்பட்டுள்ளன. ஈரானில் 2009-ம் ஆண்டு அதிபர் தேர்தல் நடந்தது. 2-வது முறையாக முகமது அகமதிநிஜாத் வெற்றி பெற்று அதிபரானார்.

கள்ளச்சந்தைகளுக்கு எதிரான 7846 இணையதளங்கள் முடக்கம். சீன அரசு அதிரடி !


சீனாவில் சட்டவிரோதமாக வர்த்தகத்தில் ஈடுபட்ட 7846 இணைய தளங்கள் மூடப்பட்டுள்ளன.  ஆன்லைன் கள்ள சந்தைகளுக்கு எதிராக சீனாவில் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 


சட்டவிரோதமாக ஆயுதங்கள், வெடிபொருட்கள், ரசாயனங்கள் விற்பனையை களையெடுக்கும் விதமாக இந்த இணைய தளங்கள் மூடப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

Tuesday, February 21, 2012

டில்லியில் பாகிஸ்தான் உளவாளி.. “தமாஷ் பண்ணாதிங்க சாப்!”


இந்தியாவில் 20 வருடங்களாக வாழ்ந்துவரும் நிலையில், பாகிஸ்தானிய உளவாளி என்ற குற்றச்சாட்டில் 39 வயதான நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என அறிவித்துள்ளது டில்லி போலீஸ். (அப்படியானால் இவர் 19 வயதில் இந்தியாவுக்கு வந்திருக்க வேண்டும்) இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான ரகசிய ஆவணங்கள் இவரிடம் இருந்து கைப்பற்றப் பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ளவரின் பெயர், காம்ரான் அக்பர். கடந்த 1992-ல் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு வந்த அக்பர், கடந்த 20 ஆண்டுகளாக கொல்கத்தாவில் வசித்து வருகிறார். 2009-ல் இந்தியப் பெண் ஒருவரையும் மணந்து கொண்டார். டில்லி போலீஸ் வைத்திருக்கும் தகவல்களின்படி, அக்பர் இந்தியாவுக்கு வந்தது, ஒரு பாகிஸ்தானி பாஸ்போர்ட்டில். தரை மார்க்கமாக அத்தாரி எல்லைப் பகுதியைக் கடந்து இந்தியாவுக்குள் வந்த இவர், கொல்கத்தாவில் தமது உறவினர் ஒருவருடன் தங்கியிருக்கிறார். சுமார் 4 ஆண்டுகள் இந்தியாவில் வசித்த நிலையில், ஆசிஃப் ஹொசேன் என்ற பெயரில் இந்திய பாஸ்போர்ட் ஒன்றுக்கு விண்ணப்பித்தார். எதுவித சிக்கலும் இல்லாமல் பாஸ்போர்ட்டையும் பெற்றிருக்கிறார்.

துணை அதிபர் ஒருவர் மட்டுமே வேட்பாளராக நிற்கும் ஏமன் தேர்தல் !


The vice president is the only candidate in Yemen.ஏமனில், அதிபர் அலி அப்துல்லா சலேயின் 33 ஆண்டுக் கால ஆட்சி முடிந்ததன் அறிகுறியாக, அங்கு இன்று அதிபர் தேர்தல் நடக்கிறது. துணை அதிபர் அப்துர் அபு மன்சூர் ஹாடி மட்டுமே வேட்பாளராக நிற்கும் இத்தேர்தலுக்கு அமெரிக்கா வரவேற்பு தெரிவித்துள்ளது. ஏமனில் கடந்த 33 ஆண்டுக் காலமாக அலி அப்துல்லா சலே அதிபராக இருந்து வந்தார். எகிப்தில் ஏற்பட்ட மக்கள் புரட்சி அரபு நாடுகளுக்கும் பரவியது. ஏமனில் சலேயை எதிர்த்து மக்கள் போராடத் துவங்கினர்.

நாம் தேச துரோகி என்று உரக்கச் சொல்லுவோம் !



கூடங்குளம் அணு மின்நிலையத்தை எதிர்க்கும் அனைவரும் தேச துரோகிகள் என்று மத்திய அரசு கொக்கரிக்கிறது.  கூடங்குளம் அப்பாவி மீனவ மக்கள் மீது தேச துரோக வழக்கு உட்பட பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேச தந்தை காந்தியடிகளை கொன்ற காவி கும்பல் தேச பக்தர்களாம். சுதந்திர போராட்ட வீரர்களை வெள்ளையர்களுக்கு காட்டி கொடுத்த ஆர்.எஸ்.எஸ். வர்ணாசிரம ஹிந்துத்துவா கூட்டம் தேச பக்தர்களாம். ஈழத்தமிழர்களை இலட்சக்கணக்கில் கொன்று குவிக்க காரணமாக இருந்த காங்கிரஸ்காரர்கள் தேசபக்தர்களாம். தமிழக மீனவர்களை சிங்கள பயங்கரவாதிகள் சுட்டு கொல்லும்போது வேடிக்கைபார்த்த மன்மோகனும், சோனியாவும் தேசபத்தர்களாம்.

முல்லைப்பெரியாறில் புதிய அணை கட்ட மத்திய அரசு அனுமதி இல்லை: கேரள அரசு கோரிக்கை நிராகரிப்பு !


முல்லைப்பெரியாறில் புதிய அணை கட்ட மத்திய அரசு அனுமதி இல்லை:
கேரள அரசு கோரிக்கை நிராகரிப்புதேனி மாவட்டத்தில் தமிழக-கேரள எல்லையில் உள்ள முல்லைப் பெரியாறு அணை மூலம் தமிழகத்தின் 5 மாவட்டங்கள் பாசன வசதி பெறுவதுடன் குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது. அணை கேரளாவில் இருந்தாலும் 999 ஆண்டு ஒப்பந்தப்படி தமிழகம் அணையின் பராமரிப்பு நிர்வாகத்தை கவனித்து வருகிறது.தண்ணீரைப் பயன்படுத்துவதற்கான ராயல்டி தொகையும் தமிழக அரசு செலுத்தி வருகிறது.
முல்லைப் பெரியாறு அணையின் கீழே இடுக்கியில் பிரமாண்ட அணையை கேரளா கட்டி அதன் மூலம் மின்சாரம் தயாரித்து வருகிறது. இதற்கு போதுமான நீர் ஆதாரம் கிடைக்காததால் எதிர்பார்த்தப்படி மின்சாரம் உற்பத்தி செய்ய முடிய வில்லை.

குவைத்தில் பனி பெண்ணை சித்ரவதை செய்து கொன்ற தம்பதிக்கு மரண தண்டனை !


tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
பிலிப்பைன்சை சேர்ந்த வேலைக்கார பெண்ணை சித்ரவதை செய்து கார் ஏற்றி கொலை செய்த வழக்கில் கணவன், மனைவிக்கு குவைத் கோர்ட் மரண தண்டனை விதித்துள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர், குவைத்தில் ஒரு வீட்டில் வேலை செய்து வந்தார். 


அந்த வீட்டின் உரிமையாளர் மாற்று திறனாளி. அவரும் அவரது மனைவியும் சேர்ந்து வேலைக்கார பெண்ணை கொடுமை செய்து வந்துள்ளனர். திடீரென ஒருநாள் வேலைக்கார பெண் மர்மமான முறையில் மாயமானார். அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்காததால், அந்த தம்பதியின் மகன் அதிர்ச்சி அடைந்து போலீசில் புகார் கொடுத்தார். 

Monday, February 20, 2012

குட்டீஸ் டிவி பாக்கிறாங்களா? மன அழுத்தம் வரும் ஜாக்கிரதை!


தொலைக்காட்சி மற்றும் கம்யூட்டர்களில் அதிக நேரம் மூழ்கியிருக்கும் குழந்தைகளுக்கு மன அழுத்தம் ஏற்படுவதாக சமீபத்திய ஆய்வு முடிவு ஒன்று தெரிவித்துள்ளது. எனவே குழந்தைகள் வெளியிடங்களுக்குச் சென்று விளையாடும் நேரத்தை அதிகரிக்கவேண்டும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


குழந்தைகளுக்கு ஏற்படும் மன அழுத்தம் குறித்து இங்கிலாந்தின் பிரிஸ்டோல்ஸ் பல்கலைக்கழகத்தின் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் 4 முதல் 12 வயதுடைய 1486 குழந்தைகளிடம் இந்த ஆய்வினை மேற்கொண்டனர்.



அவர்களில் ஒரு பிரிவு குழந்தைகள் தொலைக்காட்சி, டிவிடி, வீடியோ கேம், கணினி போன்றவைகளை பார்க்கவைத்து கண்காணிக்கப்பட்டனர். மற்றொரு பிரிவு குழந்தைகளை வெளியிடங்களில் விளையாட வைத்தும், புத்தகம் படிக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர். பின்னர் இந்த குழந்தைகளின் நிலை குறித்து அவர்களின் பெற்றோரிடம் கேள்வி கேட்கப்பட்டது.