Thursday, February 16, 2012

பயங்கரவாதிகளை உருவாக்குகிறது ஆர் எஸ் எஸ் : சி.பி. ஐ.(எம்) கடும் தாக்கு !


சம்சௌதா ரெயில் குண்டுவெடிப்பு விவகாரம்: ஆர்.எஸ்.எஸ். மீது சி.பி. ஐ.(எம்) குற்றச்சாட்டு2007-ம் ஆண்டு சம்சௌதா எக்ஸ்பிரஸ் ரெயிலில் குண்டு வெடித்து 68 பேர் பலியானார்கள். இந்த ரெயில் குண்டு வெடிப்பு குறித்து விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக கமல் சௌகான் என்பவர் கைது செய்யப்பட்டார். 


கைது செய்யப்பட்டவர் குறித்து சி.பி. ஐ.(எம்)-ன் மூத்த தலைவர் சீத்தாராம் யெச்சூரி கூறியிருப்பதாவது:- இவர் மத்திய பிரதேசத்தில் நீண்ட காலமாக ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளராக உள்ளார். அதனால் ஆர்.எஸ்.எஸ்.  அமைப்புக்கு இந்த குண்டுவெடிப்பில் தொடர்பு இருக்கிறது. இந்துத்துவா பயங்கரவாதத்தை உருவாக்கும் நோக்கத்தில் ஆர்.எஸ்.எஸ். செயல்படுகிறது. 
மேலும், 2008-ல் மாலேகானில் நடந்த தாக்குதல், 2007-ல் ஹைதராபாத் நகரின் ஒரு மசூதி மற்றும் அஜ்மர் ஷெரிப் தர்காவில் நடந்த தாக்குதல் ஆகியவற்றுக்கும் இந்த ரெயில் விபத்துக்கும் தொடர்பு உள்ளது என கூறியுள்ளார். 

No comments:

Post a Comment