Sunday, February 12, 2012

சிரியாவில் கலவரம் பரவுகிறது: ராணுவ தளபதி சுட்டுக்கொலை !


சிரியாவில் கலவரம் பரவுகிறது: ராணுவ தளபதி சுட்டுக்கொலைசிரியாவில் அதிபர் பஷார் அல்-ஆசாத்துக்கு எதிரான பொதுமக்கள் போராட்டம் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு காலப்போ நகரில் போராட்டக்காரர்கள் மீது ராணுவம் நடத்திய தாக்குதலில் 60 பேர் கொல்லப்பட்டனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் 2 இடங்களில் நடந்த கார் கண்டு தாக்குதலில் 28 பேர் பலியாகினர். 235 பேர் காயம் அடைந்தனர். இதனால் நாடு முழுவதும் கலவரம் பரவியதில் நேற்று மட்டும் 25 பேர் உயிரிழந்தனர்.  
இதற்கிடையே நேற்று சிரியாவின் ராணுவ தளபதி இசா அல்- காவ்லி என்பவர் தலைநகர் டமாஸ்கசில் சுட்டுக் கொல்லப்பட்டார். நேற்று காலை அவரது வீட்டுக்கு  மர்ம நபர்கள் துப்பாக்கியுடன் வந்தனர். பின்னர் அவரை சரமாரியாக சுட்டனர். படுகாயம் அடைந்த அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். சிகிச்சை அளித்தும் அங்கு அவர் பரிதாபமாக இறந்தார்.
சிரியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் போராட்டம் நடந்து வருகிறது. இந்த நிலையில், ராணுவ தளபதி சுட்டு கொல்லப்பட்டது இதுவே முதல் முறையாகும்.

No comments:

Post a Comment