Tuesday, February 14, 2012

ஆசிய, பசிபிக் பகுதியில் படை குவிப்பு: அமெரிக்காவுக்கு சீனா கண்டனம்


ஆசிய, பசிபிக் பகுதியில் படை குவிப்பு: அமெரிக்காவுக்கு சீனா கண்டனம்சீன துணை பிரதமர் ஷீ ஜின்பிங் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இந்த சுற்றுப்பயணம் தொடர்பாக அவர் அமெரிக்கா பத்திரிகையில் கட்டுரை ஒன்று எழுதியுள்ளார்.அதில் அவர் கூறியிருப்பதாவது:- 


ஆசியா பசிபிக் கடல் பகுதியில் அமெரிக்கா, சீனா இரு நாடுகளுக்கும் தேவையான இடங்கள் உள்ளன. ஆனால் இந்த மண்டலத்தில் அமெரிக்கா தனது படைகளைகுவித்து வருகிறது. இதை நாங்கள் விரும்பவில்லை. இது நம்பிக்கை இழக்கும் வகையில் உள்ளது.


அமைதி, பொருளாதார வளர்ச்சியை விரும்பும் நாடுகள் இதை செய்வது சரியாக இருக்காது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். ஷீ ஜீன்பிங் இன்று அமெரிக்கா அதிபர் ஒபாமாவை சந்தித்து பேசுகிறார். மேலும் அமெரிக்கா ராணுவ தலைமையிடம் டைகன் சென்று அமெரிக்கா அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். அவர் அமெரிக்கா சுற்றுப்பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

No comments:

Post a Comment