Sunday, February 19, 2012

டில்லி வெடிகுண்டு: ஏன் ‘இவர்களே’ வெடிக்க வைத்திருக்க முடியாது?


வெளிநாடுகளில் இஸ்ரேலிய இலக்குகள் மீது குண்டு வெடிப்புத் தாக்குதல்கள் நடப்பதற்கும், தமது அமைப்புக்கும் எந்த தொடர்பும் கிடையாது என ஹெஸ்பொல்லா அமைப்பு மறுத்துள்ளது.
இந்தியா, தாய்லாந்து, ஜேர்ஜியா ஆகிய நாடுகளில் இந்த வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தன. இந்த தாக்குதல்களின் பின்னணியில் ஈரானிய அரசும், ஹெஸ்பொல்லா அமைப்பும் உள்ளதாக இஸ்ரேல் கூறியிருந்தது. ஹெஸ்பொல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா, “எமக்கும் இந்தத் தாக்குதல்களுக்கும் எதுவித தொடர்பும் கிடையாது என்று உங்களுக்கு நான் உறுதிகூற விரும்புகிறேன்” என்று தமது ஆதரவாளர்களுக்கு வெளியிட்ட செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.


ஹெஸ்பொல்லா அமைப்பின் ராணுவத் தளபதி இமாட் மொஹ்னியா கொல்லப்பட்ட 4-வது ஆண்டு நினைவு தினத்தில் நஸ்ரல்லா ஆற்றிய உரை, லெபனான் முழுவதிலும் டி.வி. ஒளிபரப்பு செய்யப்பட்டது. அந்த உரையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேலின் குற்றச்சாட்டை ஈரானும் மறுத்துள்ளது.
இந்த தாக்குதல்கள் தொடர்பாக கவனிக்கப்பட வேண்டிய மற்றொரு முக்கிய விஷயம், குண்டுகள் வெடிக்க வைக்கப்பட்ட 3 நாடுகளின் அரசுகளும், குண்டு வெடிப்புகளின் பின்னணியில் ஹெஸ்பொல்லா அமைப்போ, ஈரானோ இருப்பதாக வெளிப்படையாக அறிவிக்கவில்லை. தாய்லாந்து அரசு, இது ஒரு தீவிரவாத நடவடிக்கை என்பதை ஒப்புக் கொள்ளவே விரும்பவில்லை.
உளவுத்துறை வட்டாரங்களிலும், இந்தக் குண்டு வெடிப்புகள் சில சந்தேகங்களை எழுப்பியுள்ளன. சந்தேகத்துக்கு காரணம் என்ன? கீழேயுள்ள குறிப்புகளை கவனியுங்கள்:

 குண்டு வெடிப்புகள் நடைபெறுவதற்கு முன்னரே, இஸ்ரேலிய உளவுத்துறை ஷின்-பெட் தலைவர் யோரம் கோஹன், இப்படியான தாக்குதல்கள் திட்டமிடப் படுவதாக தம்மிடம் உளவுத் தகவல்கள் உள்ளதாக தெரிவித்தார். அதற்காக உலகின் 3 வெவ்வேறு நாடுகளின் நகரங்களில் ஏஜென்டுகள் ஊடுருவி விட்ட தகவலும் தமக்கு தெரியும் என்றும் அவர் கூறினார்
 குண்டுவெடிப்புகளுக்கு உபயோகிக்கப்பட்ட எந்த வெடிகுண்டுகளும் வீரியமானவை அல்ல. மிகச் சாதாரணமானவை. 2 மீட்டர் தொலைவுக்குமேல் பாதிப்பை ஏற்படாத குண்டுகள். (குண்டுவெடிப்புகளில் யாரும் கொல்லப்படவில்லை. பாங்காக்கில் குண்டு வைத்த நபரின் காலடியே குண்டு வெடித்தும், அவர் கொல்லப்படவில்லை)
 குண்டு வைத்தவர்களும் பெரிய திறமைசாலிகளாக தெரியவில்லை. அவர்களின் தொடர்புகள், மற்றும் இருப்பிடத்தை மிகச் சுலபமாக தாய்லாந்து போலீஸே கண்டுபிடித்தது. உலக அளவில் மிக அருமையான உளவு நெட்வேர்க் வைத்திருக்கும் இஸ்ரேலிய உளவுத்துறை மொசாத், இவர்களை ட்ரேஸ் பண்ணவில்லை என்று கூறுவது பெரிய தமாஷ். அது எப்படி? அடுத்த குறிப்பை பாருங்கள்.
 குண்டு வெடிப்பு நடக்கப்போகிறது என்று  சக உளவுத்துறை ஷின்-பெட் தலைவர் கூறுகிறார். குண்டு வைத்தவர்களும் பெரிய மாயாவிகள் அல்ல. புதுடில்லியிலும், பாங்காக்கிலும் மொசாத்துக்கு அட்டகாசமான நெட்வேர்க் உள்ளது. ஈரான் அல்லது ஹெஸ்பொல்லா ஏஜென்டுகள் இந்த நாடுகளில் நடமாடினாலே மொசாத் தெரிந்து கொள்ளும் அளவுக்கு மொசாத் ஏஜென்டுகள் உள்ளனர். இந்தியாவுடனும், தாய்லாந்துடனும் இஸ்ரேலுக்கு நெருக்கம் உள்ளது.

இவ்வளவுக்குப் பின்னரும், அமெச்சூர்தனமான குண்டுவெடிப்புகள் நடந்துள்ளன. அவற்றில் யாரும் கொல்லப்படவில்லை. மேலேயுள்ள தரவுகளை வைத்து, ஒரு தடவைக்கு இரு தடவைகளாக யோசித்தால் ஏற்படக்கூடிய சந்தேகம், “இந்தக் குண்டுகளை ஏன் மொசாத்தே வைத்திருக்க முடியாது?” கீழேயுள்ள குறிப்புகளையும் படித்து விடுங்கள்.

 கடந்த காலத்தில், எகிப்திலும், பிரிட்டனிலும், ஜேர்மனியிலும், இஸ்ரேலிய இலக்குகள் மீதான தாக்குதல்கள் என அடையாளம் காட்டப்பட்ட சில தாக்குதல்களை மொசாத்தே திட்டமிட்டு நடத்தியதாக பின்னர் தெரிய வந்தது.

 மொசாத் வெளிநாடுகளில் தமது ஏஜென்டுகளை வேறு நாட்டு பாஸ்போர்ட்டுகளுடன் நடமாட விட்டுள்ளது

 வெளிநாடுகளில் மொசாத் சில தாக்குதல்களுக்காக ஆள் சேர்ப்பு செய்யும்போது, தம்மை சி.ஐ.ஏ. என்று அடையாளம் காட்டிக்கொண்ட குற்றச்சாட்டும் உள்ளது

இப்போது, மீண்டும் ஒருமுறை மேலே நாம் குறிப்பிட்ட சந்தேகத்தை யோசித்துப் பாருங்கள் – “இந்தக் குண்டுகளை ஏன் மொசாத்தே வைத்திருக்க முடியாது?”

No comments:

Post a Comment