புது டெல்லி : கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தின் பத்தாம் ஆண்டு நினைவு நாளான இன்று, குஜராத் முதல்வரும் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து நடைபெற்ற முஸ்லீம்களின் மீதான இனக்கலவரங்களைத் தூண்டியதாக குற்றம் சாட்டப்படுபவருமான நரேந்திர மோடியை வளர்ச்சியின் நாயகன் என்று பாஜக வானளாவ புகழ்ந்துள்ளது.
நரேந்திர மோடி வளர்ச்சி பாதையில் குஜராத்தை எடுத்து சென்றவர் என்றும் சர்வதேச அளவில் அவர் பெயரெடுத்துள்ளதாகவும் கூறிய பிஜேபி செய்தி தொடர்பாளர் ஜகத் பிரகாஷ், "கோத்ராவை தொடர்ந்த கலவரங்கள் மோடியை துரத்த வில்லை" என்றும் கூறினார்.
"கோத்ராவின் வலியால் காங்கிரஸ் புலம்பவில்லை" என்றும் குஜராத்தில் காங்கிரஸ் துடைத்தெறியப்பட்ட வலியில் காங்கிரஸ் புலம்புவதாகவும் கூறிய பிரகாஷ், ஓட்டு வங்கி அரசியலை நடத்த முயன்ற காங்கிரஸின் திட்டம் மோடியால் முறியடிக்கப்பட்டதாக கூறினார். மேலும் "நாடெங்கும் மக்களை பிரித்து ஆதாயம் தேடும் காங்கிரஸ் குஜராத்தில் அவ்வாறு செய்ய முடியாததற்கு காரணம் மோடியின் நிர்வாகம்" என்றும் கூறினார்.
No comments:
Post a Comment