Monday, February 27, 2012

முதல் முறையாக 2 மணி நேரம் 'பவர் கட்'...சென்னை மக்கள் செம டென்ஷன்!!


Power Cutசென்னை: மின் பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில், தமிழக அரசு அறிவித்துள்ள புதிய மின் தடை இன்று தமிழகம் முழுவதும் அமலுக்கு வந்தது. சென்னையில் முதல் முறையாக 2 மணி நேர தொடர் மின்வெட்டை சந்தித்த மக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.


தமிழகம் முழுவதும் நிலவி வரும் கடும் மின் தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில் திருத்தப்பட்ட மின்தடையை இன்று முதல் மின்வாரியம் அமல்படுத்தியது. அதன்படி இதுவரை ஒரு மணி நேரம் மட்டுமே மின்தடை இருந்த சென்னை மற்றும் புறநகர்களில் இன்று முதல் 2 மணி நேரமாக உயர்த்தப்பட்டது. பிற மாவட்டங்களில் 8 மணி நேர மின்தடை என்பது 4 மணி நேரமாக குறைந்தது.



இதுவரை ஒரு மணி நேரம் மட்டுமே மின்தடை இருந்ததால் பெரிதாக சென்னை மக்களுக்கு தெரியவில்லை. ஆனால் இன்று 2 மணி நேர மின்வெட்டு, அதுவும் தொடர்ச்சியாக 2 மணி நேர மின்வெட்டு என்பதால் மக்கள் செம டென்ஷனாகி விட்டனர்.



இது நாள் வரை மின்தடை குறித்து பெரிதாக கவலைப்படாமல் இருந்து வந்த சென்னை மக்களுக்கு இன்றுதான் மின்வெட்டின் கொடுமை புரிய ஆரம்பித்தது. யாரைப் பார்த்தாலும் ஒரே புலம்பல்தான். பெரும்பாலானவர்களுக்கு இந்த மின்வெட்டால் ஏற்பட்ட புழுக்கம் தாங்க முடியவில்லை. பிற மாவட்ட மக்கள் இது நாள் வரை பல மணி நேர மின்வெட்டை தாங்கிக் கொண்டார்களோ என்று பலரும் அனுதாபப்பட்டனர், ஆச்சரியத்துடன் பேசிக் கொண்டனர்.



சென்னையில் தற்போது பகலில் மட்டுமே மின்தடை அமலாக்கப்பட்டுள்ளது. காலை 8 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை 5 ஷிப்ட்களாக பிரித்து மின்தடையை நகர் முழுவதும் அமல்படுத்துகின்றனர்.

No comments:

Post a Comment