டெல்லி: ஆங்கிலேயர் ஆட்சியல் இந்தியா தற்போதைவிட நன்றாக இருந்ததாக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பக்வத் தெரிவித்துள்ளார். இது குறித்து ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பக்வத் தெரிவித்ததாக முன்னணி செய்தித்தாள் ஒன்றில் வெளியான செய்தியில் கூறியிருப்பதாவது, பணபலமும், ஆள்பலமும் உள்ளவர்கள் தான் அரசியலில்ஆதிக்கம் செலுத்துகின்றனர். விண்ணைத் தொடும் விலை உயர்வால் மக்கள் அவதிப்படுகின்றனர். கடந்த 64 ஆண்டுகளில் கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் ஆட்சியில் இருந்துள்ளன. இருப்பினும் நாட்டின் நிலைமையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. எது தவறாகப் போனது என்பதை மக்கள் தான் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்றார்.
வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசையும் தாக்கியுள்ளதாக அமைந்துள்ளது பக்வத்தின் பேச்சு. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அரசியல் முகம்தான் பாஜக என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்.எஸ்.எஸ். பல்வேறு தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக காங்கிரஸ், இடதுசாரிகள் குற்றம்சாட்டி வரும் நேரத்தில் இந்தியா ஆங்கிலேயர்கள் காலத்தில் சிறப்பாக இருந்ததாக பக்வத் தெரிவித்துள்ளார்.
இவர்கள் ஆங்கிலேயர்களுக்கு ஜால்ரா அடித்தும் ஆங்கிலேயனுக்கு ஷு துடைத்தும் சுகபோகமாக வாழ்ந்தார்கள் ,இந்திய நாட்டின் சுதந்திரத்துக்கு போராடிய வீரர்களை காட்டி கொடுத்து பிழைப்பு நடத்தியவர்கள் தான் இந்த ஆர் எஸ் எஸ் பயங்கரவாத கூட்டம்.
2007ம் ஆண்டு நடந்த ரயில் தாக்குதலில் 68 பேர் கொல்லப்பட்டனர். அதில் பெரும்பாலானோர் பாகிஸ்தானியர்கள். இந்த தாக்குதல் வழக்கில் இந்தூரைச் சேர்ந்த ஆர். எஸ். எஸ். ஆதரவாளர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment