பாகிஸ்தான் நாட்டின் வெளியுறவு துறை மந்திரியாக இருப்பவர் ஹினா ரப்பானி கார். இவர் சமீபத்தில் இந்தியா வந்திருந்தார். சில முக்கிய நகரங்களுக்கும் பயணம் மேற்கொண்டார். பின்னர் பாகிஸ்தான் திரும்பிவிட்ட நிலையில், அவரது செல்போனுக்கு ஆபாச எஸ்.எம்.எஸ். ஒன்று வந்தது. அது இந்தியாவில் இருந்துதான் என்பதை அவர் உறுதி செய்தார்.
இதையடுத்து, அந்நாட்டு வெளியுறவு துறை மூலம், இந்திய அரசுக்கு விபரத்தை தெரிவித்து விசாரணை நடத்துமாறு அவர் கேட்டுக் கொண்டார். மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணையை தொடங்கினர். சி.பி.ஐ. அதிகாரிகளும் விசாரித்தனர்.
பாகிஸ்தான் மந்திரிக்கு ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பிய செல்போன், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு சொந்தமானது என்பதை குற்றப்பிரிவு போலீசார் கண்டு பிடித்தனர். இதைத் தொடர்ந்து, டெல்லியில் இருந்து சி.பி.ஐ. அதிகாரிகள் பெங்களூர் வந்து விசாரணை மேற்கொண்டனர். அடுத்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார், பெங்களூர் வந்து, சம்பந்தப்பட்ட இளைஞரின் முகவரியை சேகரித்தனர். சம்பந்தப்பட்ட செல்போன், ராய்ச்சூர் மாவட்டம், சிந்தனூர் தாலுகா, புத்தினி கிராமத்தைச் சேர்ந்த அமரேஷ் என்பருடையது என்பது தெரிய வந்தது.
இவரிடம், மத்திய குற்றப்பிரிவு போலீசாரும் உள்ளூர் போலீசாரும் விசாரணை நடத்தினர். ஆனால் அவர்தான் அனுப்பினார் என்பது உறுதி செய்யப்படாததால் அவர் இதுவரை கைது செய்யப்பட வில்லை. அவரது நண்பர்களிடமும், உடன் தங்கி இருந்தவர்களிடமும் விசாரணை நடந்து வருகிறது. செல்போனுக்கு சொந்தக்காரரான அமரேஷ், ராய்ப்பூரில் உள்ள தனியார் கோச்சிங் சென்டர் ஊழியர் ஆவார். பாகிஸ்தான் பெண் மந்திரிக்கு ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பியதை அவர் மறுத்தார். அவர் கூறியதாவது:-
பாகிஸ்தான் பெண் மந்திரிக்கு அனுப்பப்பட்ட எஸ்.எம்.சின் அடர்த்தி 15 நிமிடம் நீளம் கொண்டது என்று கூறப்படுகிறது. ஹினா ரப்பானியை பற்றி நான் கேள்விப்பட்டது கிடையாது. எனக்கு ஆங்கிலமோ, உருது மொழியோ தெரியாது. அப்படி இருக்கையில் நான் எப்படி அனுப்பி இருக்க முடியும்.
நான் வேலை பார்க்கும் கோச்சிங் சென்டரில், என்னுடன் மாணவர்கள் சிலர் தங்கி இருக்கின்றனர். அவர்களில் யாராவது எனது செல்போனை பயன்படுத்தி எஸ்.எம்.எஸ். அனுப்பி இருக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment