Thursday, August 30, 2012

அஜ்மல் கசாபுக்கு தூக்கு தண்டனை அறிவிப்பு : குஜராத் குற்றவாளிகளுக்கு தண்டனை அறிவிக்கப்படவில்லை!

மும்பை தாக்குதல் வழக்கில் தூக்குத் தண்டனையை எதிர்த்து கசாப் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

அஜ்மல் கசாப்புக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை சரிதான், என்று கூறி அதனை உறுதி செய்ததோடு, தூக்குத் தண்டனையை எதிர்த்து கசாப் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 

உலக அளவில் வளரும் நாடுகளின் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும்: அணிசேரா நாடுகளின் மாநாட்டில் மன்மோகன்சிங்

 Voice Developing Nations Should Increase
டெஹ்ரான்: வளர்ந்து வரும் நாடுகளின் குரல் உலகளவில் ஓங்கி ஒலிக்க வேண்டும் என்று அணிசேரா நாடுகளின் மாநாட்டில் பேசிய பிரதமர் மன்மோகன்சிங் வலியுறுத்தியுள்ளார்.
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இன்று தொடங்கிய அணிசேரா நாடுகளின் மாநாட்டில் மன்மோகன்சிங் பேசியதாவது:
அணிசேரா நாடுகளின் தலைமைப் பொறுப்பை ஏற்க இருக்கும் ஈரானுக்கு இந்தியா முழு ஒத்துழைப்பு வழங்கும். உலகத்தில் அமைதி, பொருளாதார நிலை, பாதுகாப்புத் தன்மை, மேம்பாடு என அனைத்திலும் அணிசேரா நாடுகளின் முக்கியத்தும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மாறிவரும் உலகச் சூழலில் அணிசேரா நாடுகள் அமைப்பின் தேவை அவசியமானதாக இருக்கிறது. மேற்கு ஆசியா மற்றும் வடக்கு ஆப்பிரிக்க நாடுகளில் வரவேற்கத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இதனை உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா ஆதரிக்கிறது. இப்படியான மாற்றங்களில் அன்னிய சக்திகளின் தலையீடு இருக்கக் கூடாது.

Tuesday, August 28, 2012

செவ்வாய் கிரகத்திலிருந்து மனிதக் குரலை அனுப்பிய கியூரியாசிட்டி

 Mars Rover Sends Back Human Voice Recording
பஸடேனா (கலிபோர்னியா): செவ்வாய் கிரகத்தில் முதல் மனிதக் குரல் பதிவு செய்யப்பட்டுள்ளது. பூமியிலிருந்து பதிவு செய்து அனுப்பப்பட்ட இந்தக் குரல், செவ்வாய்கிரகத்திலிருந்து நாசாவுக்குத் திரும்பியுள்ளது.
இதன் மூலம் செவ்வாய் கிரகத்தில் மனிதனின் முதல் சுவடு குரல் மூலம் பதிவாகியுள்ளது.
க்யூரியாசிட்டி தனது டெலிபோட்டோ கேமிராவில் எடுத்து அனுப்பியுள்ள புதிய படத்துடன் இந்த குரலையும் நாசா வெளியிட்டுள்ளது.

ஏசி காரில் தூக்கம் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்?


ஏசி காரில் நீண்ட நேரம் தூங்கும்போது கேபினுக்குள் கார்பன் மோனாக்சைடு வாயு பரவுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. இந்த வாயு உயிருக்கு ஆபத்தை விளைக்கும் என்று சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.
ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு செல்வதற்கு மட்டுமே காரை பயன்படுத்துவதில்லை. சிலருக்கு பொழுதுபோக்கு இடம். சிலருக்கு மனதையும், உடலையும் ரிலாக்ஸ் செய்யும் இடமாக பயன்படுகிறது.
இன்னும் சிலர் அலுவலக இடைவேளையில் காருக்குள் ஏசியை ஆன்செய்துவிட்டு ஒரு தூக்கம் போடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். மேலும், நீண்ட தூரம் செல்லும்போது களைப்பை போக்கிக் கொள்ள காரை ஓரங்கட்டிவிட்டு ஒரு தூக்கத்தை போட்டு விட்டு செல்வோரும் இருக்கின்றனர்.

Sunday, August 26, 2012

1992ல் "பாபரி மஸ்ஜித்" இடிக்கப்பட்டது!...... 2012 ல் "அக்பரி மஸ்ஜித்" இடிக்கப்படுகிறது!!

உயர்ஜாதி இந்துக்குக்களால் 1992ல் அயோத்தியில் "பாபரி பள்ளிவாசல்" இடிக்கப்பட்டதென்றால்,  2012ல் டெல்லியில் உள்ள "அக்பரி பள்ளிவாசலை" இடித்து தரைமட்டமாக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மசூதி இடிக்கப்பட்டால் சட்டம் ஒழுங்கு நிலை சீர்கெடும் என்று போலீஸ் எடுத்துக்கூறியும், அதை ஏற்க மறுத்த நீதிபதிகள் சஞ்சய்கிஷன் மற்றும் ராஜீவ் "எதை பற்றியும் தங்களுக்கு கவலை இல்லை, எப்பாடு பட்டாகிலும் சட்டம் நிலை நாட்டப்படவேண்டும்" என்று உத்தரவிட்டனர்.  இது பற்றிய விரிவான செய்தியாவது: 

டெல்லியில் "மெட்ரோ ரயில்" பணிகளுக்காக பல இடங்களில் பூமிக்கடியில் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தபோது, டெல்லி செங்கோட்டை (லால் கிலா) அருகில் பூமிக்கடியில் புதையுண்டு - சிதிலமடைந்து இருந்த முழுமையான பள்ளிவாசல் கட்டிட இடிபாடுகள் கண்டெடுக்கப்பட்டன. 

போலீசாரின் தடியடி, கண்ணீர்புகை குண்டு வீச்சால் டெல்லி வீதிகளில் சிதறி ஓடிய அன்னா ஹசாரே கோஷ்டி

 Arvind Kejriwal Defiant Calls Both Congress Bjp Threats டெல்லி: நிலக்கரி சுரங்க ஊழல் ஒதுக்கீடு தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் பாஜக தலைவர் நிதின் கத்காரி ஆகியோரது வீடுகளை டெல்லியில் முற்றுகையிட முயன்ற அன்னா ஹசாரே குழுவினர் மீது போலீசார் தடியடி நடத்தி , கண்ணீர் புகை குண்டுகளை வீசி, தண்ணீர் பீய்ச்சி அடித்து விரட்டியடித்தனர்.
டெல்லியில் இன்று காலை பிரதமர் மன்மோகன்சிங்கை கெஜிர்வால் தலைமையில் ஒரு குழுவினரும் சோனியா வீட்டை மனிஷ் சிஷோடியா,விஸ்வாஸ் தலைமையிலான குழுவினரும் பாஜக தலைவர் நிதின் கத்காரிவீட்டை சஞ்சய்சிங் தலைமையிலான குழுவினரும் முற்றுகையிட ஒன்று திரண்டனர். டெல்லியில் ஏற்கெனவே உஷாராக இருந்த போலீசார் அன்னா குழுவைச் சேர்ந்த அனைவரையும் கூண்டோடு தடுத்து வைத்து அப்புறப்படுத்தினர். அனைவரும் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு விடுவிக்கப்பட்டனர்.

Saturday, August 25, 2012

மு.க.ஸ்டாலின்,திருமாவளவன் உட்பட அனைத்து முஸ்லிம் அமைப்புகளும் கலந்து கொண்ட பிரமாண்ட பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கும் இயக்கமாக எஸ்.டி.பி.ஐ கட்சி இருந்து வருவது பாராட்டுக்குரியது என்று தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின்(எஸ்.டி.பி.ஐ) சார்பாக நேற்றைய தினம் இரவு சென்னை பெரியார் திடலில் ஈதுல் ஃபித்ர் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு எஸ்.டி.பி.ஐ மாநில தலைவர் தெஹ்லான் பாகவி தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் எஸ்.எம்.ரஃபீக் அஹ்மத், துணைத் தலைவர் ஏ.பிலால் ஹாஜியார், செயலாளர்கள் கே.செய்யது இப்ராஹீம், ஜி.அப்துல் ஸத்தார், வி.எம்.அபூதாஹிர், ஏ.செய்யது அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திராவிட முன்னேற்றக்கழகத்தின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

பாப்புலர் ப்ரண்ட் மாநில செயற்குழு உறுப்பினர் முஹமது யூசுப் காவல் துறை அதிகாரிகள் மீது தொடுத்த வழக்கில் நீதிமன்றம் பிறபித்த உத்தரவு

Friday, August 24, 2012

ஃபாசிஸ்டுகளின் நவீன ஆயுதம்: ஸைபர் தாக்குதல்!

ஒரு சமூகத்தில் நன்றியறிதல்களும்,பரஸ்பர பாராட்டுகளும் குறைந்து கண்டன குரல்கள் பெருகினால் அது நிம்மதி இழந்த சமூகமாக மாறிவிடும். 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் அப்படி ஒரு சமூகம் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்றால் அது கண்டிப்பாக சிறுபான்மையினராக வாழும் முஸ்லிம்களை தான் சாரும் என்பதில் மாற்றுக்கருத்துக்கள் இருக்க வாய்ப்பில்லை. 

சமீபத்தில் ஒரு சில விஷமிகளால் பரப்பப்பட்ட வதந்தி இந்தியாவையே உலுக்கியது.தென் மாநிலங்களில் வாழும் வட மாநிலத்தவர்களுக்கு முஸ்லிம்களால் ஆபத்து என்றும் அதற்கு சில பதிவுகளையும், புகைப்படங்களையும், வீடியோக்களையும் ஆதாரமாக வைத்து சமூக வளைதளங்கள் மூலமாகவும், குறுஞ்செய்திகள் மூலமும், இன்டர்நெட் வழியாகவும் பரப்பிய செய்திகளால் வட மாநில மக்கள் தங்கள் சொந்த மாநிலத்துக்கே இடம்பெயர்ந்த காட்சி பத்திரிக்கை வாயிலாகவும், தொலைக்காட்சி வாயிலாகவும் பார்த்த எல்லோருடைய மனதிலும் இயல்பாகவே ஒரு கேள்வி எழுப்பியது இது ஜனநாயக நாடுதான? இது மத சார்பற்ற நாடுதான? 

Wednesday, August 22, 2012

அசாஞ்சேவுக்கு ஆதரவு: இங்கிலாந்தில் அரசு இணையத்தளங்கள் முடக்கம்


விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்ச் மீதான நடவடிக்கைகளை எதிர்க்கும் விதமாக இங்கிலாந்து அரசின் இணையத்தளங்களை மர்ம நபர்கள் முடக்கிப் போட்டுள்ளனர்.
விக்கிலீக்ஸ் இணைய தளத்தின் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச். அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் அரசு ரகசியங்களை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தியவர்.
அமெரிக்க அரசு அவர் மீது கடும் கோபத்துடன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்நிலையில் சுவீடன் நாட்டில் 2 பெண்களை பலாத்காரம் செய்ததாக அசாஞ்ச் மீது வழக்கு தொடரப்பட்டது.

Tuesday, August 21, 2012

பிரணாப் முகர்ஜி வெற்றி பெற்றது செல்லாது- உச்சநீதிமன்றத்தில் பி.ஏ.சங்மா வழக்கு

 Sangma Moves Sc Against Pranab S Election As President
டெல்லி: நாட்டின் குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரணாப் முகர்ஜி வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்க வலியுறுத்தி அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பி.ஏ.சங்மா உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் சார்பில் பிரணாப் முகர்ஜி நிறுத்தப்பட்டார். பாஜக, அதிமுக, பிஜூ ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் பி.ஏ.சங்மா போட்டியிட்டார். குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுக்களின் பரிசீலனையின் போதே பி.ஏ.சங்மா இத்தகைய ஆட்சேபத்தை தெரிவித்திருந்தார். இதையடுத்து வேட்புமனு பரிசீலனை ஒருநாள் ஒத்திவைக்கப்பட்டது.

Friday, August 17, 2012

ரூ.24,000 கோடி நிலத்தை ஜிஎம்ஆர் நிறுவனத்துக்கு ஆண்டுக்கு ரூ.100க்கு குத்தகைக்கு தந்த மத்திய அரசு

 Cag Slams Development Fee Concessional Land Delhi
டெல்லி: ரூ. 24,000 கோடி மதிப்புள்ள நிலத்தை ஜிஎம்ஆர் நிறுவனத்துக்கு ஆண்டுக்கு ரூ. 100க்கு குத்தகைக்குக் கொடுத்துள்ளது மத்திய அரசு. இதன்மூலம் நாட்டுக்கு ரூ. 24,000 கோடி இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய கணக்குத் தணிக்கை அமைப்பான சிஏஜி குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பான சிஏஜியின் அறிக்கை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்து. அதில், டெல்லியில் சர்வதேச விமான நிலையம் அமைக்க ஜிஎம்ஆர் நிறுவனத்துக்கு 239 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் இன்றைய சந்தை மதிப்பு ரூ. 24,000 கோடியாகும். ஆனால், அதை ஆண்டுக்கு ரூ. 100க்கு குத்தகைக்குத் தந்துள்ளனர்.

2ஜி ஊழலை விஞ்சிய நிலக்கரி சுரங்க ஊழல்: அரசுக்கு ரூ.1.86 லட்சம் கோடி இழப்பு: சிஏஜி குற்றச்சாட்டு

 Coal Block Allotments Cag Final Report Puts Loss
டெல்லி: கடந்த 2004-2009ம் ஆண்டில் நாட்டின் 57 நிலக்கரி சுரங்கங்களை ஏலமே விடாமல் தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கியதில் தேசத்துக்கு ரூ. 1.86 லட்சம் கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மத்திய தணிக்கைத் துறை (Comptroller and Auditor-General- CAG) குற்றம் சாட்டியுள்ளது.
இது தொலைத் தொடர்புத்துறையில் நடந்த  ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டால் ஏற்பட்ட ரூ. 1.76 லட்சம் கோடியை விட அதிகமாகும்.

Thursday, August 16, 2012

ராஜஸ்தான் : முஸ்லிம்களின் மீது "பஜ்ரங் தள்" தாக்குதல் -ஊரடங்கு உத்தரவு!


ராஜஸ்தானின் சரோஹி மாவட்டம் "கிருஷன் கஞ்" பகுதியில் நேற்று பள்ளிக்கூடம் ஒன்றில் தேசியக்கொடி ஏற்றிய பிறகு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.
காலை 11.30 மணி அளவில் "கால்பந்து" விளையாட்டின் போது பந்து ஒருவரின் மீது பட்டது தொடர்பாக வாக்குவாதம் நடந்தது. அதை தொடர்ந்து "பஜ்ரங் தள்" அமைப்பின் கன்வீனர் "இந்தர் சிங்" தலைமையில் 500 பேர் கொண்ட கும்பல், பட்டாக்கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் முஸ்லிம்களின் வீடுகளை குறிவைத்து தாக்க தொடங்கியது.  இதில் ஒரு வீடு முற்றாக சேதப்படுத்தப்பட்டது.

அமெரிக்க கடற்பகுதிக்குள் ரகசியமாக ஊடுருவி விட்டு திரும்பி வந்த ரஷ்ய நீர்மூழ்கி!

 Russian Attack Submarine Slipped Pa வாஷிங்டன்: ரஷ்யாவின் அணு சக்தியால் நீர்மூழ்கிக் கப்பல் அமெரிக்க கடற்படையின் அனைத்துக் கண்காணிப்புகளையும் மீறி அமெரிக்க கடற்பகுதியில் ஊடுருவி பல நாட்கள் உளவு பார்த்துவிட்டு திரும்பிச் சென்றுள்ளது.

ஏராளமான ஏவுகணைகளோடு அமெரிக்காவின் மெக்சிகோ வளைகுடா பகுதியில் உலா வந்த இந்த நீர்மூழ்கிக் கப்பல் அகுலா ரகத்தைச் சேர்ந்த தாக்குதல் கப்பலாகும்.

சுதந்திரதின வாழ்த்துச் செய்தி

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் ஏ.எஸ். இஸ்மாயில் மக்களுக்கு 65வது சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.

அவர் தன்னுடைய சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் " நாட்டின் நிலவி வரும் பொருளாதார ஸ்திரத் தன்மையற்ற சூழல், விலைவாசி உயர்வால் கேள்விக்குறியாகிப்போன மக்களின் அன்றாட வாழ்க்கை, பொருளாதாரம் ஒரு சிலர்டிஅம் மட்டுமே தேங்குதல், கார்ப்பரேட் கம்பெனிகளின் முறைகேடான அதீத வளர்ச்சி, பழங்குடி, ஆதிவாசிகளின் வாழ்வாதாரங்கள்  சுரண்டல், நாட்டில் சிறுபான்மைச் சமூகங்களுக்கு குறிப்பாக முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக நடத்தப்படும் அரச பயங்கரவாதம், வடகிழக்கு மாநிலங்களில் நடைபெற்று வரும் இனமோதல், ஃபாசிஸ சக்திகளின் சதி என சுதந்திர இந்தியா தன்னுடைய சுதந்திர அடையாளத்தை இழக்கச் செய்வதற்கான முயற்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதைப் போன்ற ஒரு இக்கட்டான சூழ்நிலையில் நாடு இன்று உள்ளது.

Tuesday, August 14, 2012

சுதந்திரம் எங்கள் பிறப்புரிமை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் ஏ.எஸ். இஸ்மாயில் அவர்களின் அறிக்கை

Freedom parade
சுதந்திர தினத்தை கௌவுரவிக்கும் விதமாக தேசத்தின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட, ரத்தம் சிந்திய தியாகிகளை போற்றும் விதமாகவும் பெற்ற சுதந்திரத்தை பேணிக்காக்கும் விதமாகவும், போராடிப் பெற்றசுதந்திரத்தை பாதுகாக்க அனைத்துத் தரப்பு மக்களும் உறதிமொழி ஏற்கும் விதமாகவும், சுதந்திரப் போராட்ட நினைவலைகளை மக்கள் மனதில் பூத்துக்குலுங்கச் செய்யும் விதமாக தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வந்தோம்.

அதன் ஒரு பகுதியாக கடந்த 2007 முதல் 2010 வரை மதுரை, கும்பகோணம் மற்றும் மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் சுதந்திர தின அணிவகுப்பு நடத்தி வந்தோம். 2011 ஆகஸ்ட்ல் நெல்லையில் சுதந்திர தின அணிவகுப்பு நடத்த தீர்மானித்திருந்தோம். ஆனால் சிறுபான்மை விரோதப் போக்குடன் செயல்பட்ட காவல்துறை நீதிமன்றத்தை அணுகக்கூட எங்களுக்கு வாய்ப்பு கிடைத்து விடாத அளவிற்கு கடைசி நேரத்தில் அனுமதியை ரத்து செய்தது.

ராம்தேவின் வருமான வரி மோசடிகள்.. நடவடிக்கைக்கு தயாராகும் மத்திய அரசு!

 Govt May Slap Tax Evasion Charges On Hostile Yoga Guru
டெல்லி: பாஜகவுடன் கைகோர்த்துக் கொண்டு நெருக்கடி கொடுத்து வரும் பாபா ராம்தேவுக்கு எதிராக வருமான வரித்துறையை களமிறக்கவுள்ளது மத்திய அரசு.
ப.சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்தபோது தான், டெல்லியில் முற்றுகைப் போராட்டம் நடத்திய ராம்தேவின் கூட்டத்தில் நள்ளிரவில் போலீசார் நுழைந்து லத்தியை சுழற்றி கூட்டத்தை கலைந்து ஓடச் செய்தனர்.
இந் நிலையில் கொஞ்ச காலம் சும்மா இருந்த ராம்தேவ், இப்போது அன்னா ஹசாரே தனது அமைப்பைக் கலைத்துவிட்டு இடத்தைக் காலி செய்ததும் அந்த இடத்தை முழுவதுமாக பிடிக்க முயன்று வருகிறார். முதலில் உண்ணாவிரதம் என்று கூறிவிட்டு திடீரென நாடாளுமன்றம் நோக்கி பேரணி என்று கூறிக் கொண்டு நேற்று டெல்லியையே அல்லோலப்படுத்தினார் ராம்தேவ்.

இதுதான் கடைசி அவகாசம்: சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெ.தரப்புக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை


 Sc Notice Sasikala On Dmk Leader Plea
டெல்லி: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் தொடர்ந்த வழக்கில் ஜெயலலிதா தரப்பு பதிலளிக்கும் வகையில் 3 வாரங்கள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால் இந்த வழக்கின் விசாரணையை எப்படி இழுத்தடிக்க முடியுமோ அப்படி ஜெயலலிதா தரப்பு இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது.

Friday, August 10, 2012

புனே குண்டு வெடிப்பு : தயானந்த் பாட்டீலை முஸ்லிமாக சித்தரிக்க முயல்கிறது என்.ஐ.ஏ.


புனே நகரில் 10 நாட்களுக்கு முன் நடந்த குண்டுவெடிப்பில், சந்தேகத்திற்கிடமாக காயமடைந்த "தயானந்த்  பாட்டில்" குறித்து விசாரித்து வரும் தேசிய புலனாய்வுக்குழு (NIA),
குண்டுவெடிப்பின் காரணங்களையும் குற்ற செயலில் ஈடுபட்டவர்களை குறித்தும் ஆய்வுகளை மேற்கொள்வதை விட்டுவிட்டு, தயானந்த் பாட்டில் முஸ்லிமாக இருப்பாரோ? என்ற ஒரே கோணத்தில் விசாரித்து வருகிறது.

ராம்தேவ் உண்ணாவிரதப் போராட்டத்தில் வெகு ஜோராக 24 மணி நேரமும் உணவு விநியோகம்

 Ramdev Goes Out Followers At Ramlila Maidan
டெல்லி: சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே குழுவினரின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு மக்களிடம் ஆதரவு கிடைக்காமல் போனநிலையில் டெல்லியில் 3 நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வரும் யோகா குரு ராம்தேவ், "ஸ்கெட்ச்" போட்டு வெற்றிகரமாக கூட்டத்தைக் கூட்டியிருக்கிறார்.
கறுப்பு பணத்தை இந்தியாவுக்கு கொண்டுவர வேண்டும், வலுவான லோக்பால் மசோதா தேவை என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராம்தேவ் டெல்லி ராம்லீலா மைதானத்தில் 3 நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகிறார்.

Thursday, August 9, 2012

அமெரிக்காவில் தொடரும் தாக்குதல் : நேற்று சீக்கியர் குருத்வாரா; இன்று மசூதி தீக்கிரை!


அமெரிக்காவில் சீக்கியர்கள் கோவிலில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் நேற்று முன்தினம் (06/08) ஆறு பேர் பலியான அதிர்ச்சியிலிருந்து மீள்வவதற்குள்,
நேற்று (07/08)  "மசூதி" ஒன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது (படத்தில் பார்ப்பது : மசூதியின் எழில் நிறைந்த தோற்றமும் - தீக்கிரையான பின்புள்ள காட்சியும்) மசூதி எரிக்கப்பட்ட சம்பவத்துக்கு "Concil on American Islamic Relations" (CAIR) கடும் கண்டனத்தை தெரிவித்திருப்பதோடு, நள்ளிரவில் மசூதி மீது நடந்த தாக்குதல் சம்பவத்துக்கு காரணமானவர்களை அடையாளம் காட்டுவோருக்கு 10,000 டாலர் பரிசுத்தொகையும் அறிவித்துள்ளது.

பதவி உயர்வுகளிலும் தாழ்த்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு-சட்டம் வருகிறது

 Reservation Promotion Bill Be Brought In Parliament
டெல்லி: அரசுப் பதவிகளில் இருக்கும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு பதவி உயர்வுகளிலும் இட ஒதுக்கீடு தரும் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வரவுள்ளது.
இத் தகவலை மத்திய அரசு இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தது.
இன்று காலை ராஜ்யசபா கூடியதும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி எழுந்து, கடந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலேயே தலித்களுக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு தருவதாக மத்திய அரசு உறுதிமொழி தந்தது. இது தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை அந்தக் கூட்டத்தையே மத்திய அரசு கூட்டவில்லை.

Tuesday, August 7, 2012

இஸ்லாத்தை ஏற்ற 17 "ஒலிம்பிக்" வீரர்கள்!


லண்டனில் நடை பெற்று வரும் "ஒலிம்பிக்" போட்டிகளில் உலகெங்கிலுமிருந்து பங்கெடுக்க  வந்திருக்கும் வீரர்-வீராங்கனைகளின் மத்தியில் "அப்துர்ரஹ்மான் கிரீன்" அவர்களின் தலைமையில் லண்டனில் செயல்படும் "Islamic Education and Research Academy" (IERA) சார்பில் "வாழ்வியல் நெறிமுறைகள்" குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.

மோட்சம் வேண்டுமா மோடியே...?


"குஜராத் இனக்கலவரம்"எத்துனை ஆண்டுகாலம் கடந்தாலும் இந்திய முஸ்லிம்களால் எளிதில் மறந்துவிட முடியாத ஒரு துயர சம்பவம். 2002ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அயோத்தியிலிருந்து அஹமதாபாத் நோக்கி வந்து கொண்டிருந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் இரயிலில் ஏற்பட்ட தீவிபத்தில் எஸ்-6 பெட்டியில் பயணம் செய்த கரசேவகர்கள் 56 பேர் உடல் கருகி உயர்ந்தனர். இதில் 56 நபர்கள் கொல்லப்பட்டார்கள் என்று ஒரு தரப்பு செய்திகள் வந்தாலும் மறுதரப்பில் சிலர் உயிர் பிழைத்தனர் என்று கூறுகிறது.


இந்த கோர விபத்து நடைபெற்ற மருநாளே மாநிலம் தழுவிய கடை அடைப்பிற்கு ஃபாசிஸ பயங்கரவாத அமைப்பான விஷ்வ ஹிந்து பரிஷத் அழைப்பு விடுத்தது. அதே போன்று குஜராத்தி பத்திரிக்கையான சந்தேஷ் நாளிதழ் முஸ்லிம்கள் தான் இரயிலுக்கு தீ வைத்தனர் என்ற விஷமச் செய்தியை பரப்பினர். மேலும் ஒரு இந்து மதத்தைச் சேர்ந்த இளம்பெண் கற்பழிக்கப்பட்டுவிட்டதாகவும் செய்திகளை கட்டவிழ்த்துவிட எல்லாவற்றிற்கும் தயாராக இருந்த ஃபாசிஸ் சங்கப்பரிவார கும்பல்கள் அப்பாவி மக்களுக்கு எதிராக கொலை வெறித்தாக்குதலில் ஈடுபட்டனர்.

"குஜராத் பரிவர்த்தன் கட்சி" - புதிய கட்சியின் பெயரை அறிவித்தார் கேசுபாய் பட்டேல்

 Keshubhai Formally Launches Gujarat Parivartan Party
அகமதாபாத்:குஜராத் மாநிலத்தில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி பிளவுபட்டுள்ளது. மாநில முதல்வர் நரேந்திர மோடியின் எதிர்ப்பாளர்களை ஒன்று திரட்டி மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல், குஜராத் பரிவர்த்தன் கட்சி என்ற புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகுவதாக கேசுபாய் பட்டேலும் அவரது ஆதரவாளர்களும் சனிக்கிழமையன்று அறிவித்தனர். இதைத் தொடர்ந்து புதிய கட்சியின் பெயரை அறிவிக்கப் போவதாகவும் கூறியிருந்தனர். இந்நிலையில் மாநிலத் தலைநகர் அகமதாபாத்தில் செய்தியாளர்களை சந்தித்த கேசுபாய் பட்டேல், தமது புதிய கட்சிக்கு குஜராத் பரிவர்த்தன் கட்சி என்ற பெயர் சூட்டியிருப்பதாகக் கூறியுள்ளார்.

Monday, August 6, 2012

புனே குண்டுவெடிப்பு: சிக்கிய தயானந்த பட்டீலுக்கு இந்து பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பா?

 Pune Serial Blasts Hours After Explosions Theories டெல்லி: புனே தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் இந்திய முஜாஹிதீன் அமைப்பினரின் கைவரிசை இருக்கலாம் என்பதுதான் அனைத்து ஊடகங்களின் தலைப்புச் செய்தியாக இருக்கிறது. அதே நேரத்தில் அனைத்து ஊடகங்களின் செய்திகளிலும் இந்து பயங்கரவாத அமைப்புகளின் கைவரிசையை மறுப்பதற்கில்லை என்ற தகவலும் ஒருவரியில் அடக்கப்பட்டிருக்கிறது.
இந்து பயங்கரவாதிகள் இதற்கு முன்பு இதே மகாராஷ்டிராவின் மாலேகானில் குண்டுவெடிப்பு சதியை அரங்கேற்றினர். முதலில் இதில் இந்தியன் முஜாஹிதீன், சிமி என பிற பெயர்கள்தான் அடிபட்டு வந்தன. ஆனால் அபினவ் பாரத் என்ற இந்து பயங்கரவாத அமைப்பின் தொடர்பு இதில் இருப்பது பின்னர் அம்பலமானது.

குவைத் இந்தியா ஃபிரடர்நிட்டி ஃபாரம் (KIFF)-ன் சார்பாக நடைபெற்ற இ ஃ ப்தார் விருந்து நிகழ்ச்சி

குவைத்: குவைத் இந்தியா ஃபிரடர்நிட்டி ஃபாரம் (KIFF) பாஹீல் கிளை நடத்திய இப்தார் விருந்து நிகழ்ச்சி நேற்று  மங்காபில் வைத்து சிறப்பாக நடைபெற்றது. 

சரியாக மாலை 5.45க்கு சகோதரர். ஷகீல் அவர்களின் துவக்கவுரையுடன் இனிதே ஆரம்பமானது. மேலும் நிகழ்ச்சி அனைத்தையும் அவரே தொகுத்து வழங்கினார். 

பின்னர் கலீலுர் ரஹ்மான் பாகவி அவர்கள் "வெற்றி அடைந்த குரான்" என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்கள், அவர் குறிப்பிடும் போது "குரானை வாழ்வியல் நெறியாகவும், வாழ்க்கை வழிகாட்டியாகவும் இருந்தால் ஈருலகிலும் வெற்றியாளர்களாக திகழ முடியும் என்ற உண்மையை நினைவுபடுத்தினார்கள், அதை பல வரலாற்று சம்பவங்கள் மூலம் அழகுற எடுத்துரைத்தார்கள்". 

Saturday, August 4, 2012

வீட்டை சுத்தம் செய்யணுமா? கோலா வெச்சு ட்ரை பண்ணுங்க...

Uses Cola Cleaning
குளிர்பானங்களில் ஒன்றான கோலா, குடிப்பதற்கு மட்டும் தான் பயன்படுத்த முடியுமா என்ன? இல்லை அதனை வைத்து வீட்டை சுத்தப்படுத்தலாம். சொல்லப்போனால் கோலாவும் ஒரு வகையான வீட்டை சுத்தப்படுத்தும் பொருட்களில் ஒன்றாகவும் பயன்படுத்தலாம். ஆகவே அடுத்த முறை கோலாவை வாங்கி முற்றிலும் குடித்துவிடாமல், சிலவற்றை சேமித்து வைத்து, வீட்டை சுத்தப்படுத்தலாம். அத்தகைய கோலா கறை போகாத, அழுக்கு நிறைந்த பொருட்களை எளிதில் சுத்தப்படுத்தும். அத்தகைய கோலாவை எவற்றிற்கெல்லாம் பயன்படுத்தலாம் என்று பார்ப்போமா!!!

கட்சி தொடங்க ஹசாரேவுக்கு கடும் எதிர்ப்பு- உருவப் படத்துக்கு தீ வைத்த ஆதரவாளர்கள்

சூரத்: அரசியல் கட்சி தொடங்க சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே குழுவினர் முடிவு செய்துள்ளதற்கு அவரது ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். குஜராத் மாநிலம் சூரத் நகரில் அன்னா ஹசாரே ஆதரவாளர்கள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் ஊழல் எதிர்ப்பு இயக்க பேனரையும் ஹசாரே உருவப் படத்தையும் தீ வைத்து எரித்தனர்.
வலுவான லோக்பால் மசோதா கொண்டுவரப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த ஆண்டு உண்ணாவிரதப் போராட்டம் என்ற ஆயுதத்தை கையிலெடுத்தது அன்னா ஹசாரே ஆதரவுக் குழு. அப்போது அரசாங்கம் ஹசாரே குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. தொடர்ந்தும் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தியது. அரசாங்கமும் முக்கியத்துவம் கொடுத்து பேச்சுவார்த்தை நடத்தியது.

Friday, August 3, 2012

சுதந்திர தின அணிவகுப்பு -பாப்புலர் ஃப்ரண்ட் யின் கோரிக்கையை பரிசிலிக்குமாறு காவல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவு


பாப்புலர் ஃப்ரண்ட் மீது 28 கொலை வழக்குகள் உள்ளன -நீதி மன்றத்தில் கேரளா டி.ஜி.பி யின் விஷம் தனம்


கொச்சி: தடை செய்யப்பட்ட இஸ்லாமிய இயக்கமான "சிமி"யில் முன்னால் உறுப்பினர்களாக இருந்தவர்கள் தான் இப்போது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தலைவராக இருக்கிறார்கள் என்பதால் அதனை ஒரு "அடிப்படைவாத அமைப்பு" என்று கூற்றை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனென்றால் முன்னால் சிமி அமைப்பில் இருந்தவர்கள் இன்றும் முஸ்லிம் லீக், சி.பி.எம், எல்.டி.எஃப்-ன் அனைத்து இந்திய தேசிய லீக் மற்றும் ஜமாத்தே இஸ்லாமி போன்ற அமைப்புகளிலும் இருக்கிறார்கள் என பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 



முன்னால் சிமி அமைப்பின் உறுப்பினர்கள் தான் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தலைவர்களாக இருக்கிறார்கள் என உளவுத்துறையின் கூற்றுக்கு எதிராக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கேரள உயர் நீதிமன்றத்தில் மேற்கொண்டவாறு அறிக்கை சமர்பித்துள்ளது. கடந்த ஜூலை 25ஆம் தேதியன்று உளவுத்துறை டி.ஜி.பி சார்பில் கொடுக்கப்பட்ட அறிக்கைக்கு பதில் அளிக்கும் விதத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் உயர் நீதிமன்றத்தில் இவ்வாறு அறிக்கை சமர்பித்தது. 

அன்னா ஹசாரே குழுவின் தப்புத் தாளங்கள்!

 Anna Seeks Political Asylum From The People
டெல்லி: மக்கள் ஆதரவை கிட்டத்தட்ட முழுமையாகவே இழந்து விட்டார் அன்னா ஹசாரே. அடுத்தடுத்து அவரது குழுவினர் செய்த தவறுகள், குழப்பங்கள் காரணமாக மக்களின் நம்பிக்கையை இக்குழு இழந்து விட்டது. இதனால் அடுத்து என்ன செய்வது என்பது குறித்து ஆழ்ந்து யோசிக்காமல் அரசியல் பிரவேசம் என்ற மிகப் பெரிய தவறான முடிவை எடுத்து விட்டார்கள். இது மக்களிடையே மட்டுமல்லாமல், அன்னாவின் ஆதரவாளர்களிடமே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஊழலுக்கு எதிரான இயக்கத்தின் மூலம் அன்னா ஹசாரே முதல் முறையாக போராட களம் இறங்கியபோது இதோ இன்னொரு காந்தி வந்து விட்டார் என்றுதான் மக்கள் பேசினார்கள். மகாத்மா காந்தியைக் கூட சற்று காலத்திற்கு மக்கள் மறந்து போய் விடும் அளவுக்கு எங்கு பார்த்தாலும் அன்னா படம்தான், பேனர்கள்தான்.

லஞ்சம் வாங்குபவர்கள் பற்றி புகார் கொடுக்கணுமா? இதைப் படிங்க

சென்னை: தமிழகத்தில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளை எளிதாகத் தொடர்பு கொள்ள உதவும் இணையதளத்தை வாசர்களுக்குக் கொண்டு செல்லும் கடமையுணர்வுடன் இந்தத் தகவலை வெளியிடுகின்றோம்.
லஞ்சம் எங்கு எங்கு எல்லாம் தலைவிரித்து ஆடுகின்றதோ அங்கு எல்லாம் சட்டம் வளைந்து நெளிந்து போகின்றது. இதனால் தான் பல குற்றச் செயல்கள் தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் உள்ளது. இது அரசின் தவறு அல்ல. ஒரு சிலரின் தவறே. நமது நாடு லஞ்ச லாவண்யம் இன்றி நேர்மையாக செயல்பட்டாலே உலக அளவில் முதன்மை நாடாகத் திகழும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
அரசு அதிகாரி ஒருவர் தன் கடமையைச் செய்ய லஞ்சம் கேட்கிறார் என்றால் அவரைப் பற்றி எங்கு எப்படிப் புகார் அளிக்க வேண்டும் என்று தெரியவில்லையா. உடனே http://www.dvac.tn.gov.in/ என்ற தமிழக லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளின் இணையதளத்திற்கு சென்று பார்க்கலாம். அங்கு லஞ்சம் குறித்து யாரிடம் புகார் தெரிவிக்கலாம் என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் தொலைபேசி எண் முதல் செல்போன் எண் வரை அத்தனையும் இந்த இணையதளத்தில் தெளிவாக உள்ளது.

Thursday, August 2, 2012

புனேவில் குண்டுகள் வெடிப்பு : அஸ்ஸாம் கலவரத்தை திசை திருப்ப உளவுத்துறை சதி?


மகாராஷ்டிர மாநிலம் புனேவில், ஐந்து குறைந்த சக்திகொண்ட குண்டுகள் வெடித்தன. ஆறாவது குண்டு செயலிழக்கச் செய்யப்பட்டது.
 புனே நகரின் மிகவும் பரபரப்பான ஜங்க்ளீ மகராஜ் சாலையில் இன்று மாலை வெடித்த இந்த குண்டுவெடிப்பால், ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

நாங்களும் அரசியல் பண்ண போறோம்: உண்ணாவிரத்ததை நாளை கைவிடுகிறோம்- அன்னா குழு

 Fast Enters 9th Day No Talks From Govt Team Anna
டெல்லி: ஊழலுக்கு எதிராகவும், வலுவான லோக்பால் மசோதா வேண்டியும் இன்றுடன் 9 நாட்களாக தொடர் உண்ணாவிரதம் இருந்து வரும் அன்னா குழுவினர் நாளை மாலை 5 மணியுடன் தங்களது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்துள்ளனர்.
ஊழலுக்கு எதிராகவும், வலுவான லோக்பால் மசோதா வேண்டியும் அன்னா குழுவினர் கடந்த 25ம் தேதி முதல் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். அன்னா ஹசாரேவும் கடந்த 29ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வருகிறார். 9 நாட்களாக தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வரும் அன்னா குழு உறுப்பினர்களான அரவிந்த் கெஜ்ரிவால், கோபால் ராய் மற்றும் மனீஷ் சிசோடியா ஆகியோரின் உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளது.

Wednesday, August 1, 2012

மகன் அகிலேஷ் அரசு மீது முலாயம் அதிருப்தி-அமைச்சர்களை விளாசித் தள்ளிய முலாயம்

 Mulayam Yadav Pulls Up Son Akhilesh Govt
லக்னோ: சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் தனது மகனும், உத்தர பிரதேச முதல்வருமான அகிலேஷ் யாதவ் தலைமையிலான அரசு மீது அதிருப்தி அடைந்துள்ளார்.
சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் தனது கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் கூட்டத்தை முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் நேற்று கூட்டினார். இந்த கூட்டத்தில் உத்தர பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ், ஆலம் கான் உள்ளிட்ட அமைச்சர்கள், சமாஜ்வாடி கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் ராம் அச்ரே குஸ்வாஹா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.