அமெரிக்காவில் சீக்கியர்கள் கோவிலில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் நேற்று முன்தினம் (06/08) ஆறு பேர் பலியான அதிர்ச்சியிலிருந்து மீள்வவதற்குள்,
நேற்று (07/08) "மசூதி" ஒன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது (படத்தில் பார்ப்பது : மசூதியின் எழில் நிறைந்த தோற்றமும் - தீக்கிரையான பின்புள்ள காட்சியும்) மசூதி எரிக்கப்பட்ட சம்பவத்துக்கு "Concil on American Islamic Relations" (CAIR) கடும் கண்டனத்தை தெரிவித்திருப்பதோடு, நள்ளிரவில் மசூதி மீது நடந்த தாக்குதல் சம்பவத்துக்கு காரணமானவர்களை அடையாளம் காட்டுவோருக்கு 10,000 டாலர் பரிசுத்தொகையும் அறிவித்துள்ளது.
கடந்த 2007ல் கட்டப்பட்ட இந்த மசூதியில், சரியாக ஒரு மாதத்துக்கு முன் (04/07) இதே போன்ற, ஒரு தீவைப்பு முயற்சியும் நடத்தப்பட்டுள்ளது. எனினும் அப்போது மசூதிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பள்ளி வாசலின் இமாம் லஹ்முத்தீன் குறிப்பிடும் போது, இங்கு சராசரியாக ஒவ்வொரு தொழுகையிலும் 150 நபர்கள் கலந்துக்கொள்வதாகவும், பள்ளி ஆரம்பிக்கப்பட்ட நாள் முதலே, விஷமிகள் தொந்தரவு கொடுத்து வந்ததாகவும் வேதனை தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பாக இது வரை எவரும் கைது செய்யப்படவில்லை. எனினும் விசாரணை துவங்கி விட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையில், சீக்கிய குருத்துவாரா தாக்கப்பட்டதற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் வரும் 10ம் தேதி வரை தேசியக் கொடியை அரைகம்பத்தில் பறக்க விட அதிபர் ஒபாமா உத்தரவிட்டுள்ளார்.

No comments:
Post a Comment