Thursday, August 16, 2012

ராஜஸ்தான் : முஸ்லிம்களின் மீது "பஜ்ரங் தள்" தாக்குதல் -ஊரடங்கு உத்தரவு!


ராஜஸ்தானின் சரோஹி மாவட்டம் "கிருஷன் கஞ்" பகுதியில் நேற்று பள்ளிக்கூடம் ஒன்றில் தேசியக்கொடி ஏற்றிய பிறகு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.
காலை 11.30 மணி அளவில் "கால்பந்து" விளையாட்டின் போது பந்து ஒருவரின் மீது பட்டது தொடர்பாக வாக்குவாதம் நடந்தது. அதை தொடர்ந்து "பஜ்ரங் தள்" அமைப்பின் கன்வீனர் "இந்தர் சிங்" தலைமையில் 500 பேர் கொண்ட கும்பல், பட்டாக்கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் முஸ்லிம்களின் வீடுகளை குறிவைத்து தாக்க தொடங்கியது.  இதில் ஒரு வீடு முற்றாக சேதப்படுத்தப்பட்டது.

ஹோட்டல் ஒன்றும் அடித்து நொறுக்கப்பட்டது.  2 இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஒரு ஜீப் தீக்கிரையாக்கப்பட்டது. 10 முஸ்லிம் வாலிபர்கள் காயமடைந்தனர்.  அதில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

கலவரக்காரர்களை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்ட இரு காவலர்களுக்கும் காயமேற்பட்டது. சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., நவ்தீப் சிங்கின்  உத்தரவின் பேரில் போலீஸ் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கலவர கும்பலை கட்டுப்படுத்த முடியவில்லை .

"கிருஷன் கஞ்"  சுற்றுப்புறங்களில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டு பதட்டம் நிலவியது. கலவரக்கும்பலை சேர்ந்த 20 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.  நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment