Thursday, August 30, 2012

அஜ்மல் கசாபுக்கு தூக்கு தண்டனை அறிவிப்பு : குஜராத் குற்றவாளிகளுக்கு தண்டனை அறிவிக்கப்படவில்லை!

மும்பை தாக்குதல் வழக்கில் தூக்குத் தண்டனையை எதிர்த்து கசாப் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

அஜ்மல் கசாப்புக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை சரிதான், என்று கூறி அதனை உறுதி செய்ததோடு, தூக்குத் தண்டனையை எதிர்த்து கசாப் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 

குஜராத் முஸ்லிம் இனப் படுகொலை தொடர்பாக, அஹ்மதாபாத்தில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கின் மீதும், இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. குஜராத் கூட்டுப் படுகொலை வழக்கில்,  விஸ்வ இந்து பரிஷத் தலைவன் பாபு பஜ்ரங்கி மற்றும் முன்னாள் அமைச்சர் மாயா கோட்னானி உள்ளிட்ட 32 பேர் குற்றவாளிகள், என தீர்ப்பளித்த நீதிமன்றம், அவர்களுக்கு எந்த தண்டனையும் அறிவிக்கவில்லை. 

4 ஆண்டுகளுக்கு முன் தவறு செய்த "அஜ்மல் கசாப்" அன்று முதல் இன்று வரை ஜெயிலில் உள்ள நிலையில், தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், குஜராத் கலவரம் நடந்து 10 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில், தவறு செய்தவர்கள் எந்த தண்டனையும் அனுபவிக்கவில்லை என்பதோடு, தற்போதும் தண்டனை அறிவிக்கப்படாதது, ஏமாற்றம் அளிக்கிறது. 

குறிப்பாக, அன்றைக்கு நரேந்திர மோடி அமைச்சரவையில் அமைச்சராக இருந்த, குற்றவாளி "மாயா கோட்னானி" என்பவர், இன்றைக்கும் எம்.எல்.ஏ.,வாக இருக்கிறார். உள்கட்சி கோஷ்டிப்பூசல் காரணமாக, தற்போது அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை.

No comments:

Post a Comment