Saturday, September 1, 2012

ராஜ்தாக்கரே ஒன்றும் மும்பையின் பூர்வகுடி அல்ல.. பீகாரிலிருந்து குடியேறியவர்தான்..

டெல்லி: மகாராஷ்டிர மாநிலம் மராட்டியர்களுக்கு மட்டுமே சொந்தமானது என்று அவ்வப்போது கூச்சல் போட்டு வன்முறையைத் தூண்டும் மராட்டிய நவநிர்மாண் சேனாவின் தலைவர் ராஜ்தாக்கரே இப்பொழுது வசமாக சிக்கிக் கொண்டிருக்கிறார்.
மும்பையில் அண்மையில் ஆசாத் மைதானத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவம் தொடர்பாக பீகாரைச் சேர்ந்த ஒருவரை மும்பை போலீசார் கைது செய்தனர். இதற்கு பீகார் தலைமைச் செயலர் எதிர்ப்புத் தெரிவித்து மும்பை காவல்துறை ஆணையருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.
இது தொடர்பாக கருத்துத் தெரிவித்திருந்த ராஜ்தாக்கரே, பீகாரிகளை ஊடுருவல்காரர்கள் என்றும் வந்தேறிகள் என்றும் கூறியிருந்தார்.
ராஜ்தாக்கரேயின் இக்கருத்தை விமர்சித்துள்ள காங்கிரஸ் கட்சியின் திக்விஜய்சிங், பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்தான் ராஜ்தாக்கரே என்று ஒரேயடியாகப் போட்டுத்தாக்கினார். அப்படியானால் ராஜ்தாக்கரேயும் ஒரு ஊடுருவல்காரர்தானா? என்றும் கேள்வி எழுப்பியதுடன் மும்பையில் குடியேறும் முன்பு அவர் பீகாரிலிருந்து மத்திய பிரதேசத்தில் செட்டிலாகி இருந்தார் என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
மேலும் மும்பை நகரமானது உண்மையில் மீனவர்களின் குடியிருப்புப் பகுதி என்றும் மற்ற அனைவருமே வந்தேறிகள்தான் என்றும் அதிரடி காட்டியிருக்கிறார்.
இதுக்குப் பெயர்தான் பூமாராங்கிப் போன கதையோ!

No comments:

Post a Comment