ஈரானில் நடைபெற்ற அணி சேரா நாடுகள் இயக்கத்தின் "NAM" (Non Aligned Movement) மாநாட்டில் கலந்துக்கொண்ட பாலஸ்தீன ஆணையத்தலைவர் மஹ்மூத் அப்பாஸை கொலை செய்ய வேண்டும்,
என்று இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் "அவிக்டோர் லைபெர்மன்" ஆவேசமாக கூறியுள்ளார். நேற்று (01/09) இஸ்ரேலின் தொலைகாட்சி "சேனல்10" க்கு அவர் அளித்த பேட்டி : ஈரானில் நடைபெற்ற அணிசேரா இயக்கத்தின் "NAM" மாநாட்டில் பாலஸ்தீன தலைவர் "மஹ்மூத் அப்பாஸ்" கலந்துக்கொண்டது "இஸ்ரேல் வரலாற்றின் கருப்பு தினமாகும்". அவர், பாலஸ்தீனத்தின் "ரமல்ல அத்தாரிட்டி"யை சட்ட விரோதமானது என கூறியதற்கு பதிலடியாக, அவர் மாநாட்டிலிருந்து திரும்பி வரும்போதே அவரை வழிமறித்து "கொலை செய்திட வேண்டும்" என்று, வன்முறையை தூண்டும் வகையில் பேசினார்.
இஸ்ரேல் அமைச்சரின் இந்த பேட்டி "சேனல்10" தொலைகாட்சியில் ஒளிபரப்பப்பட்டதை தொடர்ந்து, பாலஸ்தீனத்தில் கடும் பதற்றம் நிலவுவதாக, அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் அமைச்சரின் இந்த பேட்டி "சேனல்10" தொலைகாட்சியில் ஒளிபரப்பப்பட்டதை தொடர்ந்து, பாலஸ்தீனத்தில் கடும் பதற்றம் நிலவுவதாக, அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment