Monday, October 21, 2013

ஈத் பெருநாளை முன்னிட்டு KIFF நடத்திய விளையாட்டு​ப் போட்டி..

குவைத்தில் பல்வேறு சமூக நல பணிகளை செய்துவரும் குவைத் இந்தியா ஃப்ரேட்டர்னிட்டி ஃபோரம் (KIFF) ஈத் பெருநாளை முன்னிட்டு விளையாட்டு தின விழா ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. 

கடந்த 18-10-2013 வெள்ளி அன்று ரிக்கா மைதானத்தில் வைத்து நடந்த இந்த நிகழ்வில் கால் பந்தாட்டம், கபடி, கை பந்தாட்டம், ஒட்டப்பந்தையம், கயிறு இழுக்கும் போட்டி உள்பட பல விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. கால்பந்து, கைப்பந்து, கபடி போட்டிகளில் வென்றவர்களுக்கும் பதக்கங்கள் வழங்கப்பட்டது. 

Thursday, September 12, 2013

குவைத்தில் வீட்டு விசாவில் உள்ளவர்கள் தொழிலாளர் விசாவுக்கு மாற்றலாம்

வீட்டு வேலை விசாவில் வேலைபார்ப்பவர்கள் (விசா நம்பர் 20) தங்களது விசாவை தொழிலாளர் விசா நம்பர் 18-க்கு (சூன் விசா) மாற்ற முடியும் அதற்க்கான அறிவிப்புகளை சமூக நல மற்றும் தொழிலாளர் நல அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும் அதற்கான விதிகளையும் அறிவித்துள்ளது.
"வேலை செய்பவர் இகாமா யாருடைய ஸ்பான்செர்ஷிப்பில் உள்ளதோ அவர்களிடமும் மற்றும் அவர்களின் உறவினர்களிடமும் மட்டும் தான் மாற்ற முடியும், மேலும் குறைந்தது மூன்று வருடங்களும் நடப்பு ஸ்பான்சரிடம் குறைந்தது ஆறு மாதங்களும் பணியாற்றியவர்களுக்கு மட்டும் தான் இந்த சட்டம் பொருந்தும்"

செப். 15 அண்ணா பிறந்த நாளில் 7 வருடம் கழிந்த ஆயுள் சிறைக்கைதிகளை விடுதலை செய்யவேண்டும்! – பாப்புலர் ஃப்ரண்ட்

சென்னை: செப்டம்பர் 15 அண்ணா பிறந்த நாளன்று 7 வருடம் கழிந்த ஆயுள் சிறைக் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழ் மாநிலத் தலைவர் ஏ.எஸ். இஸ்மாயீல் கேட்டுக் கொண்டுள்ளார். அவர் விடுத்துள்ள பத்திரிகை செய்தியில் கூறியிருப்பதாவது:
செப்டம்பர் 15 அறிஞர் அண்ணா அவர்களின்  பிறந்த நாளன்று, ஒவ்வொரு ஆண்டும் நன்னடத்தை விதிப்படி, கைதிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்படுவர்.
கடந்த தி.மு.க. ஆட்சியில், 2007ம் ஆண்டில்  16 ஆயுள்தண்டனை கைதிகளும், 2008ம் ஆண்டில் 1405 ஆயுள்தண்டனை கைதிகளும், 2009ம் ஆண்டில் 10 ஆயுள்தண்டனை கைதிகளும், 2010ம் ஆண்டில் 13 ஆயுள்தண்டனை கைதிகளும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
அதே போல் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில், 1992ல் 230 ஆயுள்தண்டனை கைதிகளும், 1993ல் 132 ஆயுள்தண்டனை கைதிகளும் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பிறந்த நாளில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

உ.பி கலவரத்தில் அரசியல் சதி: ஷிண்டே!

புதுடெல்லி:உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற கலவரத்தின் பின்னணியில் அரசியல் சதி இருக்கலாம் என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல்குமார் ஷிண்டே சூசகமாகத் தெரிவித்தார்.
மாநிலத்தின் முஸாஃபர்நகர் மற்றும் அதன் அண்டை மாவட்டங்களில் இரு வகுப்பினருக்கு இடையே கடந்த சனிக்கிழமை கலவரம் மூண்டது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40ஆகியுள்ளது. வன்முறையில் காயமடைந்தவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற கலவரத்தின் பின்னணியில் அரசியல் சதி உள்ளதாக மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் கூறியது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல்குமார் ஷிண்டேவிடம் டெல்லியில் செய்தியாளர்கள் புதன்கிழமை கேட்டனர். அதற்குப் பதிலளித்து அவர் கூறியது:

Saturday, September 7, 2013

மோடி பதவி விலக்கோரி குஜராத்தில் முழு அடைப்பு!

போலி என்கவுண்டர் வழக்கில் கைது செய்யப்பட்ட வன்சரா, முதல்வர் மோடிக்கும் இதில் தொடர்பு உண்டு என பகிரங்கமாக குற்றசாட்டுகளை கூறியிருந்தார். இந்நிலையில் மோடி பதவி விலக கோரி குஜராத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது.
இதையடுத்து காங்கிரஸ் தலைவர்கள் முன் எச்சரிக்கையாக கைது செய்யப்பட்டனர்.
குஜராத்தில் நடந்த போலி என்கவுண்டர் தொடர்பான வழக்கில் போலீஸ் அதிகாரிகள் பலர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவரான டி.ஜி.வன்சாரா ராஜினாமா செய்தார். மேலும் முதல்வர் நரேந்திர மோடி மீது குற்றம் சாட்டி அரசுக்கு பரபரப்பு கடிதம் அனுப்பினார். அரசின் கொள்கைகளைத்தான் செயல்படுத்தினேன். தனது நண்பர் அமித்ஷாவை காப்பாற்ற முயற்சி எடுத்த மோடி என்னை பாதுகாக்க தவறி விட்டதாக அதில் கூறியிருந்தார்.

Thursday, September 5, 2013

ஆஃப்கான் பாராளுமன்றத்தில் ஹிந்துக்கள், சீக்கியர்களுக்கு இட ஒதுக்கீடு! அதிபர் கர்சாய் அறிவிப்பு!

ஆஃப்கன் பாராளுமன்ற மக்களவை தேர்தலில் இந்து மற்றும் சீக்கிய மதத்தை சேர்ந்தவர்களுக்கு 2 தொகுதிகளை ஒதுக்கி ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமித் கர்சாய் உத்தரவிட்டுள்ளார்.
இதன் மூலம் தற்போது 250 ஆக இருக்கும் பாராளுமன்ற மக்களவை உறுப்பினர்களின்
எண்ணிக்கையில் இனி ஒரு இந்துவும், ஒரு சீக்கியரும் இடம் பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

குவைத்தில் ஃபாமிலி விசாவில் உள்ளவர்களுக்கு கைரேகை மற்றும் மருத்துவ சோதனை கட்டாயமாக்கப்படுகிறது.

குவைத்: ஃபாமிலி விசாவில் உள்ள 21 வயதுக்கு மேல் உள்ள பிள்ளைகள் மற்றும் இல்லத்தரசிகள் விசாவை புதுப்பிக்கும் போது கைரேகை மாற்றும் மருத்துவ சோதனை கட்டாயமாக்கப்படுகிறது குவைத் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. 

செப்டெம்பர் 3 2011-க்கு முன்பு எடுக்கப்பட்ட விசாவுக்கு இந்த நடைமுறை பொருந்தும். மேலும் இது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தான். ஏனென்றால் குவைத்தின் பாதுகாப்பு காரணம் கருதியும், பிள்ளைகள் மற்றும் இல்லத்தரசிகளின் ஆரோக்கியத்தை உறுதி செய்வதற்கும் தான் இது போன்ற நடவடிக்கைகளை எடுத்திருப்பதாக உள்துறை அமைச்சகம் தனது செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளது.