Thursday, September 12, 2013

குவைத்தில் வீட்டு விசாவில் உள்ளவர்கள் தொழிலாளர் விசாவுக்கு மாற்றலாம்

வீட்டு வேலை விசாவில் வேலைபார்ப்பவர்கள் (விசா நம்பர் 20) தங்களது விசாவை தொழிலாளர் விசா நம்பர் 18-க்கு (சூன் விசா) மாற்ற முடியும் அதற்க்கான அறிவிப்புகளை சமூக நல மற்றும் தொழிலாளர் நல அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும் அதற்கான விதிகளையும் அறிவித்துள்ளது.
"வேலை செய்பவர் இகாமா யாருடைய ஸ்பான்செர்ஷிப்பில் உள்ளதோ அவர்களிடமும் மற்றும் அவர்களின் உறவினர்களிடமும் மட்டும் தான் மாற்ற முடியும், மேலும் குறைந்தது மூன்று வருடங்களும் நடப்பு ஸ்பான்சரிடம் குறைந்தது ஆறு மாதங்களும் பணியாற்றியவர்களுக்கு மட்டும் தான் இந்த சட்டம் பொருந்தும்"
இந்த சட்டம் இரண்டு மாத காலத்திற்கு நடைமுறையில் இருக்கும், இந்த சட்டம் விரைவில் அமலுக்கு வரவிருக்கிறது.

No comments:

Post a Comment