Tuesday, September 3, 2013

சிரியா மீது போர்: அமெரிக்காவுக்கெதிராக உலகம் முழுவதும் கண்டனங்கள்!

வாஷிங்டன்: சிரியா மீது போர் தொடுப்பதற்காக அமெரிக்க அதிபர் ஒபாமா காங்கிரஸ் ஒப்புதல் தேடி கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் அமெரிக்காவுக்கெதிராக உலகம் முழுவதும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
“Hands off Syria” (சிரியாவை விட்டு விடு) போன்ற பதாகைகளை ஏந்தி மக்கள் வீதிகளில் இறங்கி அமெரிக்காவுக்கெதிராக போராடி வருகிறார்கள்.
ஸ்பெயினில் வாழும் சிரிய மக்கள் பார்சிலோனாவில் உள்ள ஒரு சதுக்கத்தில் சிரியாவுக்கெதிராக அந்நிய நாடுகள் தலையிடுவதைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.
சிரியா மீது இராணுவத் தாக்குதல் தொடுக்க அமெரிக்கா நடவடிக்கைகள் எடுத்து வருவதற்கு சிரியாவும் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
“ஒபாமாவும், பிரிட்டிஷ் பிரதமர் கேமரூனும் மரத்தின் உச்சிக்கு ஏறி விட்டு எப்படி இறங்குவது என்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கின்றனர்” என்று சிரியாவின் ஐ.நா. நிரந்தர பிரதிநிதி பஷார் அல் ஜாப்பரி கூறியதாக சிரியா அரசு செய்தி நிறுவனமான SANA  செய்தி வெளியிட்டுள்ளது.
சிரியன் டிவிக்கு அளித்த பெட்டியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். “அமெரிக்காவிலுள்ள தீவிரவாத வலது சாரிகள், நியோ ஜியோனிஸ்டுகள், இஸ்ரேல், துருக்கி, சில அரபு நாடுகள் ஆகியவற்றின் அழுத்தம் தாங்க முடியாமல், வேறு வழியில்லாமல் ஒபாமா இதனை அறிவித்துள்ளார்” என்று அவர் தனது பேட்டியில் மேலும் கூறினார்.

No comments:

Post a Comment