Sunday, September 1, 2013

கைது செய்யப்பட்டது யாஸீன் பட்கல் அல்ல!-வழக்கறிஞர்

புதுடெல்லி: யாஸீன் பட்கல் என்று கூறி 2 தினங்களுக்கு முன்பு போலீஸ் கைது செய்ததாக கூறப்படும் நபர் உண்மையில்  யாஸீன் பட்கல் அல்ல என்று அவரது வழக்கறிஞர் கூறியுள்ளார்.

இது குறித்து வழக்கறிஞர் எம்.எஸ். கான் கூறியது: யாஸீன் பட்கல் என்று கைது செய்யப்பட்ட நபர் முஹம்மது அஹ்மத் சித்தி பாபா ஆவார். இந்தியாவால் தேடப்படும் முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள 12 நபர்களில் ஒருவராக இண்டலிஜன்ஸ் அதிகாரிகள் இவரை குறிப்பிடுவது தவறாகும். இவர்தாம் யாஸீன் என்பதை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு புலனாய்வு ஏஜன்சிகளுக்கு உண்டு. கைது செய்யப்பட்டவர் யாஸீன் என்பதை நிரூபிக்க அவர்களின் வசம் ஆதாரம் எதுவுமில்லை.
அஹ்மத் சித்தி பாபாவை யாஸீன் பட்கல் என்று பெயர் மாற்றியது இண்டலிஜன்ஸ் ஏஜன்சிகள் என்று அவரது உறவினரும், பெங்களூரைச் சார்ந்த வழக்கறிஞருமான அக்மல் ரஸ்வி நேற்று முன் தினம் குற்றம் சாட்டியிருந்தார். 10-வது வகுப்பு கூட வெற்றி பெறாத முஹம்மது அஹ்மத் சித்தி பாபாவை, பொறியியல் பட்டதாரியாக மாற்றியது மற்றும் 1983-ஆம் ஆண்டு பிறந்த அஹ்மதை 1973-ஆம் ஆண்டு பிறந்தார் என்று கூறுவது குறித்து அக்மல் ரஸ்வி விமர்சித்திருந்தார்.

No comments:

Post a Comment