Tuesday, September 3, 2013

உணவுப் பாதுகாப்பு மசோதா: மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றம்!

காங்கிரஸ் அரசின் கனவுத் திட்டமான உணவுப் பாதுகாப்பு மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், நேற்று மாநிலங்களவையில் நீண்டநேர விவாதத்திற்குப் பின்னர், குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
எதிர்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் சார்பில் தெரிவிக்கப்பட்ட திருத்தங்கள், நிராகரிக்கப்பட்டன. அதன் பின்னர், மசோதா குரல் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. இதில் உணவுப் பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
உணவுப் பாதுகாப்பு மசோதாவை அமல்படுத்த தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என மத்தி‌ய உணவு அமைச்சர் கே.வி.தாமஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், இது சட்டரீதியிலான உரிமையாகும். இதில் உள்ள குறைகள் களையப்படும். இது முழு நிறைவானது அல்ல. மசோதாவை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். எப்போது அமல்படுத்துவது என முடிவு செய்யப்படவில்லை என்றார்.

No comments:

Post a Comment