Monday, September 2, 2013

ரஷியாவில் 2050-ல் முஸ்லிம்களின் ஆட்சி

உலக முஸ்லிம் அறிஞர்களுக்கான சர்வதேச ஒன்றியத்தின் டிரஸ்டிகள் கமிட்டி உறுப்பினரும் இஸ்லாமிய சிந்தனையாளருமான டாக்டர் முஹம்ம்த் அமாரா அண்மையில் தமது ஆய்வு ஒன்றை வெளியிட்டார்.

ரஷிய ஒன்றியத்தின் மக்கள்தொகை கணக்கெடுப்பு ஒரு உண்மையை வெளியிட்டுள்ளது. ரஷ்யாவை முன்பு தாதாரியர்கள் ஆட்சி செய்ததை போன்று 2050-ல் முஸ்லிம்கள் ஆட்சி செய்வார்கள் என்பதே அந்த செய்தியாகும்.

துருக்கி ஐரோப்பாவை சுமக்கிறது; ஐரோப்பா இஸ்லாத்தை சுமக்கிறது, அப்படியானால் எதிர்காலம் இஸ்லாத்திற்கே! என்று டாக்டர் அமாரா குறிப்பிட்டார்.
ரஷியாவில் சுமார் 20 மில்லியன் (2 கோடி) முஸ்லிம்கள் உள்ளனர். இது சோவியத் ரஷியா 15 குடியரசுகளாகப் பிரிந்த பின்னர் உள்ள நிலையாகும். தலைநகர் மாஸ்கோவில் மட்டும் 10 லட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் வசிக்கின்றனர். தற்போது ரஷிய முஸ்லிம்கள் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்துவருகின்றனர். 

இன்னும் ஏராளமான பள்ளிவாசல்கள் மீட்கப்படாமலேயே உள்ளன. 1917-ல் நடந்த கம்யூனிச புரட்சிக்கு முன்னர் ரஷியாவில் 14 ஆயிரத்துக்கும் அதிகமான பள்ளிவாசல்கள் இருந்தன. படிப்படியாக குறைந்து 80 பள்ளிவாசல்கள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன. ரஷிய முஸ்லிம்கள் சந்திக்கும் மற்றொரு பிரச்சனை, தேவையான அளவில் இமாம்களோ, பிரச்சாரகர்களோ இல்லாததுதான். 

அவர்களுக்குப் பயிற்சியளிக்கும் மையங்களும் கிடையாது. கடின முயற்சிகளுக்கு பிறகு ரஷியாவெங்கும் 4 ஆயிரம் பள்ளிவாசல்கள் மீட்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment