Monday, September 2, 2013

அமெரிக்காவின் இணைய திருட்டு எதிரொலி! அரசின் முக்கிய துறைப் பணிகளில் ஜீமெயிலை நிறுத்த முடிவு!

அமெரிக்காவின் இரகசிய இணைய தகவல் திருட்டை தொடர்ந்து அரசின் முக்கிய பணிகளில் கூகுள் நிறுவனத்தின் ஜீமெயில் மின்னஞ்சலை பயன்படுத்துவதை நிறுத்த இந்திய தகவல் தொழில்நுட்ப துறை முடிவு செய்துள்ளது.
மேலும் உத்தியோகபூர்வமான தகவல் தொடர்புக்கு கூகுளின் ஜீமெயில் பயன்படுத்துவதை நிறுத்த அனைத்து பணியாளர்களுக்கும் விரைவில் அறிவிக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் கூகுள் உள்ளிட்ட இணைய சர்வர்கள் மூலம் தனிப்பட்ட மற்றும் உலக நாடுகளின் மின்னஞ்சல்கள் திருடப்பட்டு வேவு பார்க்கப்பட்ட தகவல் வெளியான பிறகு, இரகசியமாக அரசாங்க தகவல்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளை அதிகரிக்க இந்திய தகவல் தொழில்நுட்ப துறையால் திட்டமிடப்பட்டுள்ளது.
தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் அமெரிக்காவின் சர்வர்களான ஜீமெயில் போன்ற மின்னஞ்சல் சேவை வழங்குபவர்களை தடுக்க கிட்டத்தட்ட 5 லட்சம் பணியாளர்களுக்கு அறிவிப்பை அனுப்ப திட்டமிட்டுள்ளது. அதற்கு பதிலாக, இந்தியாவின் தேசிய தகவலியல் மையம் மூலம் மின்னஞ்சல் சேவை வழங்கப்படும் என்று அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment