Thursday, September 5, 2013

குவைத்தில் ஃபாமிலி விசாவில் உள்ளவர்களுக்கு கைரேகை மற்றும் மருத்துவ சோதனை கட்டாயமாக்கப்படுகிறது.

குவைத்: ஃபாமிலி விசாவில் உள்ள 21 வயதுக்கு மேல் உள்ள பிள்ளைகள் மற்றும் இல்லத்தரசிகள் விசாவை புதுப்பிக்கும் போது கைரேகை மாற்றும் மருத்துவ சோதனை கட்டாயமாக்கப்படுகிறது குவைத் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. 

செப்டெம்பர் 3 2011-க்கு முன்பு எடுக்கப்பட்ட விசாவுக்கு இந்த நடைமுறை பொருந்தும். மேலும் இது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தான். ஏனென்றால் குவைத்தின் பாதுகாப்பு காரணம் கருதியும், பிள்ளைகள் மற்றும் இல்லத்தரசிகளின் ஆரோக்கியத்தை உறுதி செய்வதற்கும் தான் இது போன்ற நடவடிக்கைகளை எடுத்திருப்பதாக உள்துறை அமைச்சகம் தனது செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளது. 

மேலும் குற்றவாளிகளை அடையாளம் காண்பதற்கும் மற்றும் தீராத நோயினால் பாதிக்கப்பட்டவர்களையும் கண்டுபிடிக்க உதவும் என்றும் அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த நடைமுறை உள்துறை அமைச்சகமும், சுகாதார அமைச்சகமும் தகவல்களை இணைத்த பிறகு இந்த சட்டம் அமலில் வருகிறது.

No comments:

Post a Comment