Saturday, September 7, 2013

மோடி பதவி விலக்கோரி குஜராத்தில் முழு அடைப்பு!

போலி என்கவுண்டர் வழக்கில் கைது செய்யப்பட்ட வன்சரா, முதல்வர் மோடிக்கும் இதில் தொடர்பு உண்டு என பகிரங்கமாக குற்றசாட்டுகளை கூறியிருந்தார். இந்நிலையில் மோடி பதவி விலக கோரி குஜராத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது.
இதையடுத்து காங்கிரஸ் தலைவர்கள் முன் எச்சரிக்கையாக கைது செய்யப்பட்டனர்.
குஜராத்தில் நடந்த போலி என்கவுண்டர் தொடர்பான வழக்கில் போலீஸ் அதிகாரிகள் பலர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவரான டி.ஜி.வன்சாரா ராஜினாமா செய்தார். மேலும் முதல்வர் நரேந்திர மோடி மீது குற்றம் சாட்டி அரசுக்கு பரபரப்பு கடிதம் அனுப்பினார். அரசின் கொள்கைகளைத்தான் செயல்படுத்தினேன். தனது நண்பர் அமித்ஷாவை காப்பாற்ற முயற்சி எடுத்த மோடி என்னை பாதுகாக்க தவறி விட்டதாக அதில் கூறியிருந்தார்.
வன்சராவின் இந்த குற்றச்சாட்டையடுத்து நரேந்திர மோடி பதவி விலக கோரி காங்கிரஸ் குரல் கொடுத்து வருகிறது. பாராளுமன்றத்திலும் நரேந்திரமோடிக்கு எதிராக காங்கிரஸ் எம்.பி.க்கள் பிரச்சினையை கிளப்பினார்கள்.
இதற்கிடையே நரேந்திரமோடி பதவி விலக கோரி குஜராத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்த காங்கிரஸ் அழைப்பு விடுத்தது. இதையடுத்து மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட காங்கிரஸ் தலைவர்களும், நிர்வாகிகளும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்படடனர். முக்கிய நகரங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

No comments:

Post a Comment