Tuesday, November 29, 2011

குவைத் அரசு ராஜினாமா



kuwait-government
குவைத் சிட்டி:ஊழல் குற்றச்சாட்டின் காரணமாக அரசுக்கு எதிராக போராட்டம் நடந்ததை தொடர்ந்து குவைத் அரசு ராஜினாமா செய்துள்ளது.அரசியல் நெருக்கடியை குறித்து விவாதிக்க நடந்த அவசர கூட்டத்தில் இம்முடிவு மேற்கொள்ளப்பட்டது.பிரதமரும், அமைச்சரவை உறுப்பினர்களும் ராஜினாமா கடிதத்தை குவைத் அமீருக்கு அளித்துள்ளதாக அந்நாட்டின் தேசிய தொலைக்காட்சி கூறுகிறது.பிரதமர் ஷேக் நாஸர் அல் முஹம்மது ராஜினாமா செய்யக்கோரி பேரணி நடத்த எதிர்கட்சியினர் தீர்மானித்ததை தொடர்ந்து இந்த அவசர கூட்டம் நடத்தப்பட்டது.
அரசு ராஜினாமா செய்யவேண்டும் என அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த 3 அமைச்சர்களும் கோரிக்கை விடுத்தது அரசை நெருக்கடியில் ஆழ்த்தியது.பாராளுமன்றத்தில் அத்துமீறி நுழைந்த எட்டு எம்.பிக்களுக்கு விசாரணையிலிருந்து பாதுகாப்பு அளிக்கக்கூடாது என வலியுறுத்தும் மனுவில் கையெழுத்திட மறுத்த சட்டம் மற்றும் பொதுவிவகாரத்துறை அமைச்சர் முஹம்மது அல் அஃப்ஸி முதன் முதலாக ராஜினாமா கடிதத்தை அளித்தார்.
அரசு ராஜினாமா செய்துவிட்டு பாராளுமன்றத்தை கலைக்கவேண்டும் என்பது எதிர்ப்பாளர்களின் கோரிக்கையாகும். ஆனால், பாராளுமன்றம் கலைக்கப்படுமா என்பது தெரியவில்லை. பாராளுமன்றம் கலைப்பது தொடர்பாக தகவல் கிடைக்கவில்லை என சபாநாயகர் ஜாஸிம் அல் குராஃபி தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நுழைந்த வழக்கில் கைதான 24 பேரின் காவலை மேலும் 21 தினங்களுக்கு நீட்டி நீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டிருந்தது.ஏழு பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.ஜஸ்டிஸ் பேலஸிற்கு முன்பாக கைதுச்செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினரும், எதிர்கட்சி எம்.பிக்களும் முகாமிட்டுள்ளனர்.சில ஆளுங்கட்சி உறுப்பினர்கள் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாக பணம் கைப்பற்றியது தொடர்பான வழக்கில் விசாரணையை சந்திக்கின்றனர். 

குண்டுவைக்க பணம் – வாக்குமூலத்தை சிபிஐ மிரட்டி வாங்கியதாக பல்டி அடிக்கும் அசீமானந்த்




asimanand
டெல்லி:மாலேகான் வெடிகுண்டு தாக்குதல் வழக்கில் கைதாகி, தாக்குதலுக்கு காரணம் ஹிந்துதுவா தீவிரவாதிகள் என்று ஒப்புக்கொண்ட பின்னர், இப்போது ஜாமீனில் வெளிவந்துள்ள ஹிந்துத்துவ தீவிரவாதி சுவாமி அசீமானந்த், ஜனாதிபதி, பிரதமர், உள்துறை அமைச்சர் மற்றும் தேசிய மனித உரிமை ஆணையம் ஆகியவற்றுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில்;’என்னை மிரட்டி வாங்கிய வாக்குமூலம் அதை, நான் பின்வாங்கிய பின்னும், எந்த நீதிமன்றமும் குறிப்பிடாதபோது எவ்வாறு அதை எடுத்துக்கொள்ளலாம்?, எப்படி தேசிய புலனாய்வு அமைப்பு மாலேகான் வழக்கில் முஸ்லிம் குற்றவாளிகளின் ஜாமீன் மனுக்களை ஏற்றுக்கொள்ளலாம், இந்த விவகாரங்களை எப்படி மத்திய அரசு அமெரிக்காவுடனும் ஐநாவுடனும் பகிர்ந்து கொள்ளலாம்?’ என கேட்டு எழுதியுள்ளார்.
‘என்ன பரிகாசமான நீதி இது. ஒரு பக்கம் என்னைப் போன்ற ஹிந்து சன்யாசிகள் நினைத்துகூட பார்க்கமுடியாத அளவுக்கு புலனாய்வு அமைப்புகளால் கொடுமை படுத்தப்படுகிறார்கள்!. இவ்வாறு மிரட்டி வாங்கிய வாக்குமூலத்தை வைத்து இன்னொரு பக்கம் முஸ்லிம் குற்றவாளிகள் ஜாமீனில் வெளிவருகிறார்கள்.
என்னை விபத்தில் சிக்கி கொலைச் செய்ய போவதாக சிபிஐ அதிகாரிகள் மிரட்டினார்கள். ஒரு ஹிந்துவாக இருப்பதினால் எனக்கு மனித உரிமை இல்லையே என்று வெட்கப்பட்டேன். என் குடும்பத்தினரை காக்கவே அவர்களுக்கு பலியானேன்’ என்று கூறியுள்ளார்.
இதே அசீமானந்த், முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான சுனில் ஜோஷிக்கு ஜூன் 2006ல்  கணிசமான முஸ்லிம் மக்கள் இருக்கும் பகுதிகளில் குண்டுவைக்க ரூபாய் 25,000 வழங்கியதாக சில நாட்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்ட பரத்பாய் ஒப்புக்கொண்டுள்ளதாக தேசிய புலனாய்வு அமைப்ப தெரிவித்துள்ளது.
வழக்கின் முக்கிய குற்றவாளிகளான 7 நபர்களில், சுனில்ஜோஷி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுவிட்டார். தேவேந்தர் குப்தா, லோகேஷ் ஷர்மா, அசீமானந்த், பரத்பாய் கைது செய்யப்பட்டுள்ளனர், சந்தீப் டாங்கே மற்றும் ராமச்சந்திர கல்சங்கரா ஆகியோரை தேடிவருகின்றனர்.

Monday, November 28, 2011

ஊமையாகிப்போன ஊடகங்கள்





ஒரு புகழ்பெற்ற மைதானம்....!
அதுவும் தேசத்தின் தலை நகரம்...!
பல்லாயிரக்கணக்கான மக்கள் சங்கமித்த இடம்....!
எங்கே போனது ஊடகம்?
ஒரு வேளை ஊமையாகிப்போனதோ?

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா : ஒரு சமூக நல இயக்கம், கடந்த 1989 ஆம் ஆண்டிலே தொடங்கப்பட்டு  ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடி வருகிறது. இந்தியாவின் கடைக்கோடி மாநிலமான கேரளாவிலிருந்து தொடங்கப்பட்ட இந்த பேரியக்கம் படிப்படியாக வளர்ச்சி அடைந்து இன்று இந்தியாவின் எட்டுத்திசைகளிலும் மக்கள் பேராதரவோடு சமூகப்பணிகளை ஆற்றி வருகிறது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா எடுக்கும் ஒவ்வொரு பணிகளும் மக்கள் நலனுக்காகவே செய்யப்படுகிறது. ஆகவே தான் தென் இந்தியாவைக்காட்டிலும் தற்போது வட இந்தியாவில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஒரு வேகமான அதுவும் படிப்படியான் வளர்ச்சி அடைந்து வரும் இயக்கத்தினால் தேசவிரோத சக்திகளுக்கும், வகுப்புவாத சக்திகளுக்கும், ஊழல்வாதிகளுக்கும் பெரும் தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். இந்திய சுதந்திரத்திற்காய் தங்களது சதவீதத்தைவிட அதிகமான மக்கள் போராடியதாக வரலாறு கூறியிருந்தும், சுதந்திரத்தை இழந்து, கண்ணியத்தை இழந்த இந்த முஸ்லிம் சமூகம் தீவிரவாதிகளாய் சித்திரக்கப்படும் போது, தீவிரவாதிகள் யார்? தேசியவாதி யார்? என்பதை மக்கள் மன்றத்தில் கொண்டு சேர்க்கும் விதமாக எந்த ஒரு முஸ்லிம் அமைப்பும் சிந்தித்திராத, முயற்ச்சி செய்திராத ஒரு கண்ணியமான செயல் தான் சுதந்திர தின அணிவகுப்பு.

மதக்கலவரங்களாலும், மோதல்களாலும் அப்பாவி மக்களை கொன்று குவித்த சங்கப்பரிவார சக்திகள் இந்த அணிவகுப்பை கண்டு நடுங்கி மிரள, அவர்களால் பாதிக்கப்பட்ட மக்களோ ஆனந்தக் கண்ணீர் விட்டனர் அணிவகுப்பைக்கண்டு.

கடந்த 2010ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அலஹாபாத் உயர் நீதி மன்றத்திலிருந்து வெளியான் தீர்ப்பிற்குப் பின் இனியும் பாபரி மஸ்ஜித்திற்காக போராட வேண்டுமா? என்று எண்ணிய முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் "நீதி தேடும் பாபரி மஸ்ஜித்" என்ற தலைப்பில் நாடு முழுவதும் நடத்திய பிரச்சாரங்கள், விழிப்புணர்வு நாடகங்கள் போன்றவற்றால் பெரிதும் ஈர்க்கப்பட்டனர்.

முஸ்லிம் சமூகத்தின் வலிமைக்காவும், வளர்ச்சிக்காவும் தொலை நோக்கு சிந்தனையோடும், சாத்தியக்கூறாக விழங்கக்கூடிய பல பணிகளை செய்து வரும் பாப்புலர் ஃப்ரண்டால் தூக்கம் தொலைந்து திறியும் உளவுத்துறை எப்படியாயினும் பாப்புலர் ஃப்ரண்ட் செய்யும் பணிகளை தடுத்திட வேண்டும் என்ற முனைப்பில் பல்வேறு சூழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதற்கு உளவுத்துறையினர் அதிகம் பயன்படுத்துவது ஊடகத்துறையைத்தான்.

பாப்புலர் ஃப்ரண்ட் பற்றிய தவறான செய்திகளை பரப்புவதில் மட்டுமே முனைப்புடன் செயல்படுகிறது இந்த ஊடகத்துறை. இதில் எந்த பத்திரிக்கையும், நாளிதழும் விதிவிலக்கல்ல... ஆனால் பாப்புலர் ஃப்ரண்ட் செய்யும் சமூக சேவைகளை இந்த பத்திரிக்கைகள் பிரசுரிப்பதே இல்லை. காரணம் மக்கள் மத்தியில் பாப்புலர் ஃப்ரண்ட் மீது நற்பெயர் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறது உளவுத்துறை.

தேசத்தின் தலைநகரமான புதுடெல்லியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்ட ஓர் இடம் அதுவும் புகழ்பெற்ற ராம்லீலா மைதானத்தில் பிரம்மாண்டமான ஒரு மாநாட்டை நடத்தி முடித்திருக்கிறது பாப்புலர் ஃப்ரண்ட். ஆனால் இது பற்றிய செய்தி எந்த நாளிதழிலும் வெளிவரவில்லை (சிறு பத்திரிக்கைகளைத்தவிர). அப்படியானால்? ஊடகம் ஊமையாகிப்போனதோ?

ஊடகங்கள் இந்தச்செய்திகளை மக்கள் மன்றத்தில் எடுத்துச்செல்கிறதோ? இல்லையோ? பாப்புலர் ஃப்ரண்டின் வளர்ச்சி ஊடகங்களில் கைகளில் இல்லை. ஊடகங்கள் செய்யும் தவறான பிரச்சாரங்களை ஒரு ஏணியாக உபயோகப்படுத்தி பாப்புலர் ஃப்ரண்ட் தனது கால்களை ஆழமாக பதித்து வருகிறது. பாப்புலர் ஃப்ரண்ட் மக்களால், மக்களுக்காக ஏற்படுத்தப்பட்ட இயக்கம். இறையருளால் அது தன்னுடைய இலக்கை அடைந்தே தீரும்! இன்ஷா அல்லாஹ்!

வரலாறு படைத்த பாப்புலர் ஃப்ரண்டின் சமூக நீதி மாநாடு



Social Justice conference Grand Public Meet. mulayam singh
புதுடெல்லி:ஒடுக்கப்பட்ட-சிறுபான்மை மக்களின் சமூகநீதிக்கான போராட்டத்தில் புதிய வரலாற்றை படைத்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநாடு நிறைவுற்றது.
அரபிக்கடல் பகுதியில் உருவான நவீன சமூக இயக்கம் யாத்திரைகளுக்கு இடையே கற்களையும், முட்களையும் தாண்டி வரலாற்று நினைவுச் சின்னங்களின் அழகு நிறைந்த மாநகரத்தின் இதயத்தை தன் வசப்படுத்தியது. இரண்டு தினங்களாக நடந்த சமூக நீதி மாநாட்டில் ஏராளமான வரலாற்று சம்பவங்களுக்கு சாட்சியம் வகித்த ராம்லீலா மைதானம் மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்தது. அத்துடன் பாப்புலர் ஃப்ரண்டின் செயல் வீரர்களின் கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கமும் ஒன்றிணைந்த பொழுது மாநாடு டெல்லியில் ஒவ்வொரு சாதாரண குடிமகனுக்கும் சொந்தமானது.
ராம்லீலா மைதானத்தில் நேற்று மதியம் துவங்கிய பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம்சிங் யாதவ் முக்கிய விருந்தினராக கலந்துகொண்டார். சமூகநீதிக்கான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் போராட்டத்தில் நாங்களும் உடனிருக்கிறோம் என முலாயம் கூறினார். அவர் தனது உரையில் குறிப்பிட்டதாவது: ‘சச்சார் கமிட்டி அறிக்கையும், ரங்கநாத் மிஸ்ரா கமிட்டி அறிக்கையும் முஸ்லிம்களின் துயரமான நிலையை சுட்டிக்காட்டிய பொழுதும் அது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ள காங்கிரஸ் காட்சி தயாராகவில்லை. தேர்தல் காலத்தில் மக்களை முட்டாள்களாக்கும் உபகரணமாகவே காங்கிரஸிற்கு இந்த அறிக்கைகள் மாறின. இரண்டு தடவை வாய்ப்பு கிடைத்த பிறகும் காங்கிரஸ் முஸ்லிம்களுக்காக ஒன்றும் செய்யவில்லை. முஸ்லிம்கள் ஒன்றிணைந்தால் நாட்டை ஆட்சிபுரிவது யார்? என்பதை கூட அவர்களால் தீர்மானிக்க முடியும். முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவோம் என கூறும் மத்திய அமைச்சர், அதற்காக ஒரு மசோதா கூட கொண்டுவர தயாராகவில்லை.’ இவ்வாறு முலாயம்சிங் கூறினார்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான் அவர்களின் தலைமை உரையுடன் மாநாட்டு பொதுக்கூட்டம் துவங்கியது. ஆல் இந்தியா மஜ்லிஸே முஷாவரா தலைவர் செய்யது ஸலாஹுத்தீன், ஆல் இந்தியா முஸ்லிம் தனியார் சட்டவாரிய செயலாளர் மெளலானா முஹம்மது வலீ ரஹ்மானி, ராமஜென்மபூமி கோயில் முக்கிய புரோகிதர் மஹந்த் ஆச்சார்யா சத்தியோந்திர தாஸ் மகராஜ், சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.அபூபக்கர், லோக் ஜனசக்தி பொதுச்செயலாளர் அப்துல் ஃஹாலிக், அஜ்மீர் ஷரீஃப் காதிம் ஸய்யித் ஸர்வார் ஸிஸ்தி, ஃபதேஹ்பூரி இமாம் முஃப்தி முஹம்மது முகர்ரம் அஹ்மத், ராஷ்ட்ரீய ஸஹாரா எடிட்டர் அஸீஸ் பர்ணி, ஆல் இந்தியா மில்லி கவுன்சில் துணைத்தலைவர் மவ்லானா டாக்டர்.யாஸீன் உஸ்மானி, அம்பேத்கர் சமாஜ்வாதி கட்சி தலைவர் பாயி தேஜ்சிங், ஜாமிஆ மில்லியா பல்கலைக்கழக பேராசிரியர் ஹஸீன் ஹாஷியா, ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் தலைவர் மவ்லானா உஸ்மான் பேக், நேசனல் விமன்ஸ் ஃப்ரண்ட் துணைத் தலைவர் எ.எஸ்.ஸைனபா, கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் அனீஸ்ஸுஸமான் ஆகியோர் உரை நிகழ்த்தினர். இப்பொதுக்கூட்டத்தில் தவிர்க்க இயலாத காரணத்தால் கலந்துக்கொள்ளவியலாத லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வானின் வாழ்த்துச்செய்தி மாநாட்டில் வாசிக்கப்பட்டது.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் பொதுச்செயலாளர் கெ.எம்.ஷெரீஃப் வரவேற்புரை நிகழ்த்தினார். ராஜஸ்தான் மாநில தலைவர் முஹம்மது ஷாஃபி நன்றி நவின்றார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய துணைத்தலைவர் முஹம்மது அலி ஜின்னா ‘டெல்லி பிரகடனத்தை’ வாசித்தார்.

Sunday, November 27, 2011

சமூகநீதி மாநாட்டிற்கு உற்சாகமான துவக்கம்


புதுடெல்லி:வரலாற்றின் ராஜபாதையில் புதிய காலடித் தடங்களை பதித்துக்கொண்டு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் இரண்டு நாள் மாநாடு திரளான மக்கள் ஆதரவுடன் உற்சாகமாக துவங்கியது.
flag hosting
நேற்று காலை 9.30 மணிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான் நட்சத்திரம் பதித்த மூவர்ண கொடியை ஏற்றி மாநாட்டை துவக்கி வைத்தார். தேசிய-மாநில தலைவர்களும், பல்வேறு மாநிலங்களில் இருந்து வருகை தந்த பல்லாயிரக்கணக்கான பிரதிநிதிகளும் தக்பீரையும், கோஷங்களையும் உரத்த குரலில் முழங்கிய பொழுது மாநாட்டு நகர் மெய் சிலிர்த்தது.
ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் தலைவர் மவ்லானா உஸ்மான் பேக் பிரார்த்தனை புரிந்தார். டெல்லி 100-வது ஆண்டை கொண்டாடும் சரித்திர வேளையில் சிறுபான்மை, ஒடுக்கப்பட்ட மக்களை பலப்படுத்துவதற்கான புதிய காலடித்தடமாக பாப்புலர் ஃப்ரண்டின் மாநாடு துவங்கியது குறிப்பிடத்தக்கது.

Friday, November 25, 2011

டெல்லியில் நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி





புதுடெல்லி: நேற்றைய தினம் 23.11.2011 அன்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சிற்கு ஏற்பாடு செய்திருந்தது. பிற்பகல் 12 மணி அளவில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு தேசிய தலைவர் இ.எம். அப்துர் ரஹ்மான் தலைமை தாங்கினார். பாப்புலர் ஃப்ரண்டின் உயர்மட்ட குழு தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர்.


26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் ராம்லீலா மைதானத்தில் நடக்க இருக்கும் சமூக நீதி மாநாடு வெற்றி பெறுவதற்காக உங்களது ஒத்துழைப்பையும், ஆதரவை எதிர்பார்க்கிறோம். அனைவரும் ஒன்றினைந்து தேசத்தை நீதியால் கட்டமைப்போம் என்று  கேட்டுக்கொள்கிறேன்.

ஊடக தொடர்பாளர்
அனீஸ் அஹமது

பத்திரிக்கையாளர்களுக்கு தேசிய தலைவர் அளித்த பேட்டியின் விபரம் வருமாறு
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக நடைபெற விருக்கும் "சமூக நீதி மாநாடு" புதுடெல்லி ராம்லீலா மைதானத்தில் 26 மற்றும் 27 ஆகிய தினங்களில் நடைபெறும். மாநாட்டிற்கான பணிகள் பெரும்பாலும் முடிந்துவிட்ட நிலையில், இந்தியாவில் இருந்து ஒவ்வொரு பகுதிகளிலிருந்தும் மக்கள் புறப்பட்டு டெல்லியை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர். மாநாட்டின் இறுதி நாளான 27ஆம் தேதி அன்று நடக்க விருக்கும் பொதுக்கூட்டத்திற்கும் மிகப்பெரிய அளவில் மக்கள் திரண்டு வருவார்கள் என எதிர்பார்க்கிறோம்.

மக்களின் உரிமைக்காகவும், நீதிக்காகவும், ஒற்றுமையுடன் பல்வேறு சமூக தலைவர்கள், அறிவுஜீவிகள், சமூக ஆர்வளர்கள் கலந்து கொள்ளக்கூடிய வகையில் இம்மாநாடு அமையும். நமது முன்னோர்கள் கனவு கண்ட "சமூக நீதி" என்பது எல்லா மக்களுக்கும் கிடைக்க வேண்டும், அதற்காக மக்கள் தயாராக வேண்டும் என்ற அடிப்படையில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இம்மாநாட்டின் லட்சியமாகும். இன்றைய காலகட்டத்தில் நமது தேசம் பல ஆபத்துக்களை எதிர்கொண்டு வருகிறது. அவற்றில் ஊழல், மதவாத சக்திகள், காலணியாதிக்கம், தலித் மற்றும் சிறுபான்மை மக்களுக்கு எதிரான தாக்குதல்கள், விவசாயிகளின் தற்கொலைகள் மற்றும் மனித உரிமைய் மீறல்கள் போன்றவை மிக ஆபத்தானதாகும். இத்தகைய நிலையில் மக்களை ஒன்று திரட்டி சமூக நீதிக்காக போராட வேண்டிய கட்டாயச் சூழல் ஏற்பட்டுள்ளது. 26ஆம் தேதி காலை 9:30 மணி அளவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.எம். அப்துர்ரஹ்மான் பாப்புலர் ஃப்ரண்டின் மூவர்ணக்கொடியை ஏற்றி மாநாட்டினை துவக்கி வைப்பார். முதல் நாளன்று இரண்டு கருத்தரங்கங்கள் நடைபெறும். இரண்டாம் நாளான 27ஆம் தேதி அன்று மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறும்.

Thursday, November 24, 2011

பாப்புலர் ஃப்ரண்ட் நடத்தும் சமூக நீதி மாநாடு: அரசியல், சமூக பிரமுகர்கள் பங்கேற்பு



புதுடெல்லி:வருகிற 26,27 ஆகிய தினங்களில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் பாப்புலர் ஃப்ர்ண்ட் ஆஃப் இந்தியா சார்பாக நடைபெறவிருக்கும் சமூக நீதி மாநாட்டில் அரசியல் மற்றும் சமூகத்துறையை சார்ந்த பிரபலங்கள் பங்கேற்கின்றார்கள்.
சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ், காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஆஸ்கர் பெர்னாண்டஸ், லோக் ஜனசக்தியின் தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் உள்பட பல்வேறு தலைவர்கள் இம்மாநாட்டில் கலந்துகொள்கின்றனர்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் மாநாட்டு நிகழ்ச்சிநிரலை குறித்து பேட்டியளித்தார்.
pfi sjc
இம்மாநாடு, சிறுபான்மை சமூகங்களின் சமூக நீதிக்கான போராட்டத்தில் இம்மாநாடு நிர்ணாயக பங்கினை வகிக்கும் என இ.எம்.அப்துற்றஹ்மான் தெரிவித்தார்.
வருகிற 26-ஆம் தேதி சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு பாப்புலர் ஃப்ர்ண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் மாநாட்டுத் திடலில் கொடியை ஏற்றிவைப்பார்.
26-ஆம் தேதி டுகெதர் எம்பவர்மெண்ட்: டயலாக் வித் ஃப்யூச்சர், பீப்பிள்ஸ் ரைட் டூ ஜஸ்டிஸ் ஆகிய தலைப்புகளில் இரண்டு கருத்தரங்குகள் நடைபெறும்.

Wednesday, November 23, 2011

திருப்பூர் மக்களுக்காக ரூபாய் 8 லட்சம் நிதி வசூல் ஆனது


திருப்பூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கடந்த வெள்ளிக்கிழமை 18.11.2011 அன்று தமிழகம் முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக ஜும்மா தொழுகையின் போது மஸ்ஜிதுகளில் நிவாரண நிதி திரட்டப்பட்டது. ஏற்கனவே கூறியது போல திரட்டப்பட்ட நிதி திருப்பூர் ஜமாத்தாரிடம், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில ஏ.எஸ். இஸ்மாயில் வழங்கினார். ரூபாய் 8 லட்சம் நிதியாக திரட்டப்பட்டது.


சமூக நீதி மாநாடு


Tuesday, November 22, 2011

சமூக நீதி மாநாட்டிற்காக தயாராகும் தலை நகரம்.


பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக இந்த மாதம் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் புதுடெல்லி ராம்லீலா மைதானத்தில் சமூக நீதி மாநாட்டை நடத்த இருப்பதை தாங்கள் நன்கு அறிவீர்கள். மாநாட்டிற்காக தற்போது குறைந்த நாட்களே இருக்கின்ற நிலையில் சமூக நீதி மாநாட்டை வரவேற்பதற்காக தலைநகரம் தயாராகிவருகிறது. மாநாட்டிற்கான ஏற்பாடுகளை துவங்குவதற்காக தொண்டூழியர்கள் (வாலண்டியர்ஸ்) இந்தியாவின் பல நகரங்களிலிருந்தும் டெல்லையை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள்.



தலைநகரில் மாநாட்டிற்கான பிரச்சாரங்கள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. பொதுக்கூட்டங்கள், தெருமுனைக்கூட்டங்கள், வீடுவீடாகச் சென்று மக்களுக்கு தெரிவிப்பது, சுவரொட்டிகள், துண்டு பிரசுரங்கள் போன்றவற்றின் மூலமாக பிரச்சாரங்கள் நகரம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஜும்மா தினத்தில் டெல்லீல் பிரசித்திப்பெற்ற ஜும்மா மஸ்ஜிதில் வெளிநாட்டவர்கள் முதற்கொண்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து மாநாட்டிற்கான பிரச்சார நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.


வாருங்கள் டெல்லியை நோக்கி!

இந்தியாவில் எல்லா பகுதிகளிலும் மாநாட்டை வரவேற்பதற்காக காத்துக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு இடத்திலும் மாநாட்டிற்கான பிரச்சாரத்தின் போது "வாருங்கள் டெல்லியை நோக்கி!" என்ற அழைப்பு விடுக்கப்பட்டது. இதனை மக்கள் ஏற்றுக்கொண்டு தற்போது பல்லாயிரக்கணக்கான மக்கள் நாட்டின் பல பாகத்திலிருந்தும் டெல்லி புறப்பட தயாராகி வருகிறார்கள். ஒரு நிகழ்ச்சியில் பங்கெடுக்கப்போகிறோம் என்ற எண்ணத்தில் அல்லாது சமூக நீதியை அடைந்தே தீருவோம் என்ற லட்சிய வேட்கையோடு தங்களது சொந்த மண்ணிலிருந்து தலைநகரை நோக்கி வருவதற்கு தயாராகிக்கொண்டிருக்கிறார்கள்.

மாபெரும் மாநாடு

மாநாட்டு திடலான ராம்லீலா மைதானம் அருகே டீக்கடை நடத்திக்கொண்டிருப்பவரிடம் கேட்டதற்கு " कान्फॆरन्स् हर् थिन् हॊथॆ रॆह्थॆ हॆ, लॆकिन् छब्बीस्, स्थायीस् को येक् बदा कान्फॆरन्स् होने वाले."(ராம்லீலா மைதானத்தில் ஒவ்வொரு  நாளும் மாநாடு நடைபெற்று வருகிறது. ஆனால் 26 மற்றும் 27 ஆகிய தேதிகள் ஒரு மிகப்பெரிய பிரம்மாண்டமான மாநாடு நடைபெறப்போவதாக உணர்கிறேன்) எனக்கூறினார்.

மாநாட்டை காண்பதற்காக ஆர்வம், சமூக நீதியை அடைய வேண்டும் என்கிற வேட்கை அடித்தட்டு மக்களிடம் இருந்து அனைவருக்கும் போய் சென்றடைந்துள்ளது என்பதை உணர்த்துகிறது.


ஐ. முஹம்மது தன்வீர்
ஊடக தொடர்பு
மொபைல்: +91 85278 24518
மின்னஞ்சல்: sjcmediateam@gmail.com

    ஆர்.எஸ்.எஸ்-ற்கு பல்லக்கு தூக்கும் தினமலரின் மற்றுறொரு செய்தி


    சென்னை: திருப்பூரில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது எத்துனையோ சமூக, சமுதாய அமைப்புகள் களம் இறங்கி நிவாரணப்பணிகளில் ஈடுபட்டது. ஆனால் ஆர்.எஸ்.எஸ் என்ற ஒரு இயக்கம் மட்டுமே மீட்புப் பணிகளில் ஈடுபட்டது போன்ற செய்தியை வெளியிட்டிருக்கிறது தினம் மலர்  என்ற ஃபாசிஸ பத்திரிக்கை.

    சமீபத்தில் திருப்பூரில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும்பாலான மக்கள் அவதிப்பட்டு வீடுகளை இழந்து, உடமைகளை இழந்து மிகவும் சிறமப்பட்டனர். வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட அடுத்த நாள் முதலே பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஈத் பெருநாள் என்று கூட பொருட்படுத்தாமல் களத்தில் இறங்கி மக்களுக்கான் நிவாரணப்பணிகளின் ஜாதி, மத பேதமின்றி பணியாற்றினர். சமீபத்தில் வெளியான புதிய தலைமுறை பத்திரிக்கையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒருவர் கூறும் போது "பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவினர் தான் தங்களுடைய உயிரையும் பொருட்படுத்தாது நிவாரணப்பணிகளில் ஈடுபட்டு எங்களை காப்பாற்றினார்கள்" என்று கூறியுள்ளார்.

    தோல்வியை தழுவிய ஜனசேதனா ரத யாத்திரை!




    pm race yatra
    கராச்சியில் பிறந்து இந்தியாவில் குடியேறிய லால் கிருஷ்ணா அத்வானியின் பிரதமர் பதவி மீதான தீராத மோகத்தால் உருவான ஜன சேதனா யாத்திரை நமத்துப்போன பட்டாசு போல டெல்லியில் பிசுபிசுத்து போனதில் எவருக்கும் கவலை இருப்பதாக தெரியவில்லை. இந்த யாத்திரை தோல்வியை தழுவியதில் அதிகம் மகிழ்ச்சி அடைபவர்கள் அவரது கட்சியான பா.ஜ.கவை சார்ந்தவர்களே ஆவர்!
    ஊழலுக்கு எதிரான மத்திய தர வர்க்கத்தினரிடையே வீசும் எதிர்ப்பு அலையை தீவிர வலதுசாரி ஹிந்துத்துவாவுக்கு சாதகமாக்கி மீண்டும் அதிகாரத்தின் ஏணிப் படியாக மாற்றுவதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக அத்வானி ரதயாத்திரைக்கு கிளம்பினார். முன்பு இதே அத்வானி  நடத்திய ராம ரதயாத்திரையின் மூலம் சிறுபான்மை முஸ்லிம்களின் குருதியால் இந்திய தேசம் வன்முறைக் காடாக மாறியதை யாரும் மறந்துவிட முடியாது.
    1990-ஆம் ஆண்டு அத்வானி  சோமநாதபுரத்திலிருந்து துவக்கி வைத்த முதல் யாத்திரை 3 ஆயிரத்திற்கும் அதிகமான மக்களின் படுகொலையுடன் முடிவடைந்தது. அவற்றுடன் ஒப்பிடுகையில் தற்போதைய ஊழல் எதிர்ப்பு ரத யாத்திரை அமைதியாக நடந்தது என கூறலாம். அதற்கு காரணம், ஆர்.எஸ்.எஸ்ஸின் வன்முறை மனோநிலையை கொண்ட பிரிவினர் இந்த யாத்திரைக்கு போதுமான ஆதரவை அளிக்காததே ஆகும்.
    பத்திரிகையாளர்களுக்கு லஞ்சம் கொடுத்துதான் அடிக்கடி வழியில் பஞ்சரான ரதயாத்திரைக்கு பா.ஜ.க உற்சாகம் அளித்தது. வெடிக்குண்டு கைப்பற்றப்பட்டதாக ஒரு சில செய்திகள் வெளியானதும், ஜெயலலிதாவின் ஒத்துழைப்புடன் ஒரு சில ‘பயங்கர….வாதிகள்(?)’  கைதுச் செய்யப்பட்டாலும் அதனால் எவ்வித பலனும் ஏற்படவில்லை.
    டெல்லியில் ஜெயின் சகோதரர்களிடமிருந்து ஹவாலா பணத்தை கைப்பற்றிய நற்பெயரும் அத்வானிக்கு உண்டு. அன்று ஹவாலா மோசடியில் சிக்கியவர்கள் தேசிய தலைவர்கள் என்பதால் ஜே.கே.ஜெயினின் டைரிக் குறிப்பு ஆதாரமாக ஏற்றுக் கொள்ளபடவில்லை.
    அத்வானியின் செல்வாக்கு கொடிக்கட்டி பறந்த தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சியின் போது பொதுச் சொத்துக்களை தனியாருக்கு தாரை வார்க்க தனியாக அமைச்சகம் ஒன்று துவங்கப்பட்டது. தலித்-சிறுபான்மை எதிர்ப்பாளரான அருண்சோரிதான் இத்துறைக்கு அமைச்சராக அதாவது இடைத்தரகராக செயல்பட்டார்.
    கனிமொழியும், ஆ.ராசாவும் சிறையில் அடைக்கபடுவதற்கு காரணமான 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் துவங்கியதும் பா.ஜ.க தலைமையிலான என்.டி.ஏ ஆட்சியின் போதுதான். பாதுகாப்புத் துறையிலும், கார்கில் போரில் இறந்துபோன ராணுவ வீரர்களின் உடல்களை கொண்டுசெல்வதற்கு வாங்கிய சவப்பெட்டியிலும் கூட ஊழல் புரிந்து சாதனைப் படைத்த கட்சிதான் பா.ஜ.க. இத்தகைய புகழ்பெற்ற கட்சியின் முன்னாள் தலைவர் பங்காரு லட்சுமணன் லஞ்சமாக ஒரு கோடி ரூபாயை கைப்பற்றியதை டெஹல்கா தனது ரகசிய கேமராவில் பதிவுச் செய்தது.
    குஜராத்தில் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திரமோடி பொதுச் சொத்துக்களை டாட்டாவுக்கும், அம்பானிக்கும் தாரை வார்த்துவிட்டு வளர்ச்சியின் நாயகனாக நடித்து வருகிறார்.
    வடமாநிலங்களில் அத்வானி குளிரூட்டப்பட்ட ரதத்தில் ஊழலைக் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வூட்டிக் கொண்டிருக்கும் வேளையில்தான் பா.ஜ.கவின் தென்னக ஹீரோ எடியூரப்பா நிலமோசடி வழக்கில் கைதுச் செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். இதற்கு முன்னர் சட்டவிரோத சுரங்கத் தொழில் மூலமாக 16 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு இழப்பீட்டை ஏற்படுத்தியதாக லோக ஆயுக்தா குற்றம் சாட்டிய ஜனார்த்தன ரெட்டி சி.பி.ஐயால் கைதுச் செய்யப்பட்டுள்ளார். உத்தராகண்டில் அம்மாநில பா.ஜ.க முதல்வர் ரமேஷ் பொக்ரியால் பதவி விலக நேர்ந்ததற்கு ஊழல்தான் காரணம். இந்நிலையில் பா.ஜ.க ஊழலை குறித்து பேசுவதே காமெடியாகும். திருடனை குறைகூறும் கொள்ளையர்களுக்கு சமமானதுதான் பா.ஜ.க.
    அக்கட்சியில் பிரதமருக்கான ஆடையை தைத்து இஸ்திரி போட்டு கசங்காமல் காத்து வரும் நரேந்திர மோடியும், கடுமையாக உடற்பயிற்சி மேற்கொண்டு உடலிலிருந்து ஊளைச் சதைகளை குறைத்து ஃபெய்ஸ் லிஃப்டிங் நடத்தி அழகனாக முயற்சிக்கும் நிதின் கட்கரியும், இளமையை இன்னமும் நாம் இழந்துவிடவில்லை என கருதும் முன்னாள் பல்கலைக்கழக பேராசிரியர் முரளி மனோகர் ஜோஷியும் எழுப்பும் சவால்களை சந்திக்க கூட ஜனசேதனா யாத்திரை அத்வானிக்கு உதவாது என்பதுதான் உண்மை.
    அ.செய்யது அலீ.

    Saturday, November 19, 2011

    ஜெயலலிதாவின் நம்பிக்கை துரோகம்..


    மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில் எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும் என்று சொன்ன தமிழக முதல்வர் ஜெயலலிதா அதிரடியாகப் பேருந்துக் கட்டணம், பால் விலை போன்றவைகளை உயர்த்தி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். மின்சாரக் கட்டணத்தையும்  உயர்த்த  மின்சார ஒழுங்கு முறை ஆணையத்துக்கு அரசு பரிந்துரை செய்துள்ளது. விரைவில் மின்சாரக் கட்டண உயர்வையும் தமிழக மக்கள் தங்கள் தலையில் சுமக்க வேண்டி வரும். 

    பால் விலை, பேருந்துக் கட்டண உயர்வு குறித்துத் தொலைக் காட்சியில் தெரிவித்த தமிழக முதல்வர் 'வழக்கம் போலவே கருணாநிதி ஆட்சியைச் சாடினார்.மேலும் தமிழக அரசின் இலவசத் திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி தராததாலும் போக்குவரத்துக் கழகச் சொத்துக்கள் வங்கிகளில் அடைமானம் வைக்கப் பட்டுள்ளதாலும் பெருகி வரும் நஷ்டத்தை ஈடு கட்டக் கட்டணங்களை  உயர்த்துவதாக விளக்கமும் அளித்துள்ளார் ஜெயலலிதா.
    மக்களை வசியப்படுத்த, 'தி மு கவின் தேர்தல் அறிக்கை'யைப் பார்த்துத் தாம் காப்பியடித்த தேர்தல் அறிக்கை வெளியிடும்போது மத்திய அரசின் நிதி கிடைத்தால் இலவசங்கள் தருவேன் என ஜெயலலிதா சொல்லவில்லையே! ஏதோ தம் பையிலிருந்து கொடுப்பதுபோல் அம்மி முதல் ஆட்டுக்குட்டிவரை அள்ளி வழங்குவதாக அறிவித்து விட்டு இப்போது மத்திய அரசின் நிதி கிடைக்கவில்லை எனப் பழி போடுவது வாக்களித்த மக்களை நயவஞ்சகமாக ஏமாற்றுவதாகும். தமிழக அரசின் இலவசத் திட்டங்களுக்கு நிதி தருவோம் என மத்திய அரசு ஜெயலலிதாவுக்கு வாக்குறுதி ஏதும் கொடுத்திருக்கவில்லையே? பின் ஏன் இந்தத் திசை திருப்பும் நாடகம்?
    தி மு க ஆட்சியின் போது பேருந்துக் கட்டணத்தை உயர்த்துவதற்குப் பேருந்து உரிமையாளர்கள் பலமுறை முயன்றும் கருணாநிதி ஒப்புக்கொள்ளவில்லை என்பதையும் கருணாநிதியைக் குறை சொல்லும் ஜெயலலிதா எண்ணிப்பார்க்க வேண்டும்.

    கூடங்குளம்:பேச்சுவார்த்தை தோல்வி



    kudumkulam
    கூடங்குளம்:கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்னை தொடர்பாக மத்திய, மாநில குழுக்கள் இடையே வெள்ளிக்கிழமை நடைபெற்ற 2-ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.
    போராட்டக் குழுவினரின் அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் அளித்துவிட்டதாக மத்திய நிபுணர் குழுவினரும், போராட்டம் தொடரும் என போராட்டக் குழுவினரும் தெரிவித்தனர்.
    கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தி இடிந்தகரையில் அப்பகுதி மக்கள் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக தொடர் போராட்டம் நடத்திவரும் நிலையில், இந்தப் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாதது பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
    திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில் மத்திய நிபுணர் குழு சார்பில் ஏ.இ.முத்துநாயகம் உள்ளிட்ட 13 பேரும், மாநிலக் குழு சார்பில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் இரா.செல்வராஜ் மற்றும் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த புஷ்பராயன் உள்ளிட்ட 5 பேரும் பங்கேற்றனர். கூட்டத்தில், அணுஉலை பாதுகாப்பு தொடர்பாக மாநிலக் குழுவில் இடம்பெற்றுள்ள போராட்டக் குழுவினரின் கேள்விகளுக்கு மத்திய குழுவினர் விளக்கங்களை அளித்தனர். இருப்பினும், அந்த விளக்கங்கள் போராட்டக் குழுவினருக்குத் திருப்தியளிக்கவில்லை என்று தெரிகிறது. 2 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எதுவும் எட்டப்படவில்லை.