சிரிய அதிபர் பஷார் அஸதின் வீழ்ச்சி இஸ்ரேலை துடைத்தழிக்கும் ஒரு பேரனர்த்தத்தை உண்டாக்கும் என இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சின் பாதுகாப்பு மற்றும் அரசியல் சபைத் தலைவர் ஜெனரல் ஆமூஸ் கிலாட் எச்சரித்திருப்பதாக இஸ்ரேலிய இராணுவத்துக்கு சொந்தமான வானொலி சேவை செய்தி வெளியிட்டிருக்கிறது.
எகிப்து, ஜோர்தான் மற்றும் சிரியாவில் செயற்பட்டுவரும் இஹ்வானுல் முஸ்லிமூன் அமைப்பின் தலைமையில் மத்திய கிழக்கில் உருவாகப் போகும் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் விளைவாகவே இந்நிலை ஏற்படும் என்றும் அவர் எச்சரித்திருக்கிறார்.
இஹ்வானுல் முஸ்லிமூன் அமைப்பினர் இஸ்ரேலை அழித்து இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை கொண்டுவரும் திட்டத்தை கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இஸ்ரேல் பேரழிவொன்றை எதிர்நோக்குகின்றது. இஹ்வானுல் முஸ்லிமூன் அமைப்புடன் போர் புரிவதற்கான பெரும் அச்சுறுத்தல் தொடர்ந்தும் நிலவி வருகிறது எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
பலமுனைகளிலிருந்து சூழும் அபாயங்களை குறிப்பாக எகிப்திலிருந்து வரும் அபாயங்களை இஸ்ரேல் உணர்ந்திருக்கிறது. எனவேதான் துருக்கியுடனான உறவுகளை சீர் செய்ய இஸ்ரேல் தீர்மானித்தது. முஸ்லிம்களுடன் பலமுனைகளிலிருந்து போர்புரிய இஸ்ரேல் நிர்ப்பந்த்திக்கப் பட்டால், இறுதியில் அது நிச்சயம் பேரழிவையே ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்திருப்பதாக இஸ்ரேலிய இராணுவத்துக்கு சொந்தமான வானொலி சேவை மேலும் தெரிவித்திருக்கிறது.
sources-yarlmuslim
No comments:
Post a Comment