Thursday, May 31, 2012

பெட்ரோல் விலை உயர்வு: தமிழகத்தில் 'பாரத் பந்த்' பிசுபிசுத்தது!

 Petrol Price Hike Bharat Bandh Fails To Halt Normal
சென்னை: பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து பாஜக அழைப்பு விடுத்த பாரத் பந்த் தமிழகத்தில் படுதோல்வியடைந்தது. பஸ்கள் வழக்கம் போல் இயங்குகின்றன. பள்ளி, கல்லூரிகள் திறந்துள்ளன.
அரசு, தனியார் அலுவலகங்களும் வழக்கம் போல் செயல்படுகின்றன.

இன்று பஸ், ரயில்கள் வழக்கம் போல் ஓடும் என்றும், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் வழக்கம் போல செயல்படும் என்றும் மத்திய, மாநில அரசுகள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் முழு அடைப்புக்கு பால் முகவர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. ஆனால் இன்று கடை அடைப்பு இல்லை என்று வணிகர் சங்கங்கள் அறிவித்துள்ளன. த.வெள்ளையன் தலைமையிலான வணிகர் சங்கங்களின் பேரவை மட்டுமே கடை அடைப்பு நடைபெறும் என்று அறிவித்துள்ளது. ஆனாலும் பெரும்பாலான கடைகள், வர்த்தக நிறுவனங்களும் திறந்துள்ளன.

Monday, May 21, 2012

காற்றாலை மின் உற்பத்தி தொடர்ந்து அதிகரிப்பு- மின்வெட்டு மேலும் குறையும்

 Wind Power Goes High Tn
சென்னை: தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி தொடர்ந்து அதிகரித்து வருவதால் தமிழகத்தின் பல பகுதிகளிலும் மின்வெட்டு அளவு குறையும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். இருப்பினும் தலைநகர் சென்னையில் வழக்கம் போல தொடர்ந்து பெரும்பாலான பகுதிகளில் வழக்கம் போல 2 மணி நேர மின்வெட்டு அமலிலேயே உள்ளது.
அதேபோல தமிழகத்தின் பிற பகுதிகளிலும் பல மணி நேர மின்வெட்டு என்பதிலிருந்து பெரிய அளவில் மாற்றம் இல்லை.

கடந்த மாதம் காற்றாலை மின் உற்பத்தி மூலம், 2500 மெகாவாட்டுக்கும் மேல் கூடுதலான மின்சாரம் கிடைத்தது. இதனால் படிப்படியாக மின்வெட்டு ஓரளவு குறைந்தது.

மீரா குமார், அப்துல் கலாம் ஓ.கே, பிரணாபை ஜனாதிபதியாக ஏற்க முடியாது- மமதா

 Mamata Won T Endorse Pranab Mukherjee President
டெல்லி: மீரா குமார் நல்லவர், அப்துல் கலாம் நல்ல குடியரசுத் தலைவராக இருந்தவர். கோபால் காந்தி நல்ல திறமையுடன் கூடியவர். இவர்களில் யாரை குடியரசுத் தலைவர் பதவிக்கு நிறுத்தினாலும் சரிதான். ஆனால் பிரணாப் முகர்ஜியை குடியரசுத் தலைவராக ஏற்க முடியாது என்று மேற்கு வங்க முதல்வரும், திரினமூல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி கூறியுள்ளதால் காங்கிரஸ் வட்டாரம் கலக்கமடைந்துள்ளது.
குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளர் விவகாரத்தில் மீண்டும் சூட்டைக் கிளப்பியுள்ளார் மமதா. இதுகுறித்து அவர் கூறுகையில், மீரா குமாரை எனக்குப் பிடிக்கும், மிகவும் மென்மையாக பேசக் கூடியவர் அவர். கோபால் காநந்தி சிறந்த முறையில் செயலாற்றுபவர். அப்துல்கலாம் சிறந்த குடியரசுத் தலைவராக செயல்பட்டவர்.

Saturday, May 19, 2012

ஒபாமா- ஹோலண்டே சந்திப்பு


ஆப்கானிஸ்தானில் உள்ள பிரெஞ்ச் படைகள் 2012ஆம் ஆண்டுக்குள் வெளியேறிவிடும் என பிரான்ஸ் ஜனாதிபதி ஹோலண்டே தெரிவித்துள்ளார்.
சிகாகோவில் நாளை நடைபெறும் நேட்டோ மாநாட்டில் ஆப்கானிஸ்தானின் எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தெரிகிறது.
இக்கூட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, பிரான்ஸ் ஜனாதிபதி ஹோலண்டோ, ஜேர்மன் பிரதமர் ஏஞ்சலா மார்க்கெல் உட்பட பல தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

உணவுக்கட்டுப்பாடுதான் மஞ்சள் காமாலைக்கு முதல் மருந்து!

To Prevent Jaundice Keep Diet வைரஸ் கிருமியின் தாக்குதலால் ஏற்படுவது தான் மஞ்சள் காமாலை. இரத்தத்தில் பிலிரூபின் என்ற வேதிப்பொருள் அதிகரிப்பதால் ஏற்படும் நிலை தான் மஞ்சள் காமாலை. மஞ்சள் காமாலை வந்தால் கல்லீரல், மண்ணீரலோடு மற்ற உறுப்புகளும் பாதிக்கப்படும். ஈரல் பாதிப்பினால் வரும் மஞ்சள் காமாலை நோய்கள் பெரும்பாலும் ஹெபடைட்டிஸ் A வைரஸ் கிருமியினாலேயே வருகின்றன.இது பிறந்த குழந்தைக்கும்கூட வர வாய்ப்பு உள்ளது. இது சில தினங்களில், சில வகையான மருந்துகள் சாப்பிட்டாலே சரியாகிவிடும்.

Thursday, May 17, 2012

பொருளாதார சிக்கல்களை எதிர்கொள்ள கடினமான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டிய தருணம்: பிரணாப்

 Pranab Wants Austerity What Other
டெல்லி: நாட்டின் பொருளாதார சிக்கல்களை எதிர்கொள்ள சில கடினமான சிக்கன நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என்று நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக அவர் அவர் பேசியதாவது:

நாட்டின் பொருளாதார வளர்ச்சியானது 8.4 விழுக்காடாக 2 ஆண்டுகள் இருந்து வந்தது. ஆனால் 2011-12-ம் ஆண்டில் இந்த வளர்ச்சியானது 6.9 விழுக்காடாகக் குறைந்து போனது. இது நமக்கு ஏமாற்றத்தைத் தரக்கூடியதுதான்.

புதுக்கோட்டை தேர்தலில் தேமுதிகவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரவு

 Cpm Support Dmdk Pudukkottai Bypoll
சென்னை: புதுக்கோட்டை இடைத்தேர்தலில் தேமுதிகவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவளிக்கும் என்று அக்கட்சியின் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு நடைபெற உள்ள இடைத்தேர்தலில் ஆளும் கட்சி அதிகாரபலத்தையும், பணபலத்தையும் பயன்படுத்தி அராஜகம் செய்வார்கள் என்பதால் தேர்தல் புறக்கணிப்பு செய்யப்போவதாக சில எதிர்க்கட்சிகள் அறிவித்து விட்டன.

ஆளும் கட்சியின் தேர்தல் தில்லுமுல்லுகளையும், அதிகார பலத்தையும், பணபலத்தையும், மக்களைத் திரட்டி எதிர்கொள்வதற்குப் பதிலாக, தேர்தலில் போட்டியிடாமல் விலகி இருப்பது சரியான அரசியல் அணுகுமுறையாக இருக்காது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்தது.

Wednesday, May 16, 2012

நூற்றாண்டு கால முஸ்லிம் மயானம் ஆக்கிரமிப்பு!

முசப்பர் நகர் :பல நூறு ஆண்டுகளாக முஸ்லிம்களின் பயன் பாட்டில் உள்ள மயானம் (கப்ரஸ்தான்) தற்போது, சிலரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசம், முசப்பர் நகர் மாவட்டம், ஜடூதா பகுதியில் உள்ள கப்ரஸ்தான், ஒரு சில விஷமிகளால் ஆக்கிரமிக்கப்பட்ட செய்தியறிந்து, மாவட்ட ஜமியதுல் உலமா தலைவர் மவுலானா நாசர் முஹம்மத், பொதுச்செயலாளர் மெஹர்பான் அலி மற்றும் உள்ளூர் ஆலிம் தாஹிர் காசிமி உள்ளிட்ட தலைவர்கள், மக்களை சந்தித்து விவரம் கேட்டனர்.

ஊர் தலைவர் நிஜாமுத்தீன் உள்ளிட்ட பொது மக்கள் கூறும்போது, பல நூறு வருடங்களாக முஸ்லிம் அடக்கஸ்தலமாக பயன் பட்டு வரும் ஜடூதா பகுதியில், சில நாட்களாக ஒரு சில விஷமிகள் அதை ஆக்கிரமித்து, மாட்டு சாணங்கள் உள்ளிட்ட கழிவுகளை அங்கு கொட்டி வந்த அவர்கள், கடந்த மார்ச் 29 (29/03/12) அன்று, திடீர் என கொட்டகை அமைத்தும் பூஜை புனஸ்காரங்கள் செய்தும், ஆக்கிரமிப்பு வேலையில் ஈடு பட்டனர். முஸ்லிம்கள், இதற்க்கு கடும் எதிர்ப்பை தெரிவித்த போதும், மாவட்ட நிர்வாகம் ஆக்கிரமிப்பை அகற்றும் விஷயத்தில் மெத்தனத்துடன் செயல்படுகிறது, என்றும் குற்றம் சாட்டுகின்றனர்.

கடும் மின் தட்டுப்பாட்டில் மக்கள்.. அதிமுக அரசின் ஓராண்டு சாதனைக்கு ரூ.25 கோடியில் விளம்பரம்!

 With Rs 25 Cr Jaya Breaks Record For One Day Advt Spend
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தமிழக முதல்வராக பொறுப்பேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இந்த ஓராண்டு நிறைவு விழா விளம்பரங்களுக்காக மட்டும் அரசு ரூ.25 கோடி செலவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு பொறுப்பேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இதை அக்கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். ஓராண்டு நிறைவு விழாவையொட்டி அதிமுக அரசு நாட்டின் அனைத்து நாளிதழ்களின் முதல் பக்கத்தில் பெரிய விளம்பரத்தைக் கொடுத்துள்ளது. அரசின் சாதனைகளை விளக்கிக் கூறும் இந்த விளம்பரங்களுக்காக மட்டும் அதிமுக அரசு ரூ.25 கோடி செலவு செய்துள்ளது என்று கூறப்படுகிறது.

புதுக்கோட்டை இடைத்தேர்தலுக்கான தேமுதிக வேட்பாளர் ஜாகீர் உசேன் : விஜயகாந்த்

 Zakir Hussain Dmdk Candidate Pudukottai By Poll
சென்னை: புதுக்கோட்டை இடைத்தேர்தலில் தேமுதிக சார்பில் ஜாகீர் உசேன் நிறுத்தப்படுவார் என்று அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முத்துக்குமரன் எம்.எல்.ஏ. சாலை விபத்தில் காலமானார். இதைத் தொடர்ந்து ஜூன் 12-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே அதிமுக சார்பில் கார்த்திக் தொண்டமான் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது. கடந்த முறை போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட், திமுக, மதிமுக, பாமக ஆகிய கட்சிகள் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துவிட்டன.

Sunday, May 13, 2012

10 நாட்களில் குடும்ப அட்டை திட்டம்!

சென்னை, மே 13- ரேஷன் பொருட்கள் எதுவும் வேண்டாம்; முகவரியை உறுதிப்படுத்த மட்டுமே குடும்ப அட்டை தேவை என்றால், புதிய அட்டைகள் 10 நாளில் வழங்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
இதுபோன்று, தட்கல் முறையில் கார்டு தேவைப்படுபவர்கள், 2 அல்லது 3 ஆண்டுகள் அந்த பகுதியில் இருந்ததற்கான இருப்பிட சான்றிதழை மட்டும் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். மண்டல அதிகாரிகள் அந்த முகவரிக்கு வந்து பரிசோதனை செய்வர். உண்மையில் அதே முகவரியில் இருப்பது உறுதி செய்யப்பட்டால், உடனே தட்கல் முறையில் ரேஷன் கார்டு வழங்கப்படும்.

சர்கோசி மீது ஊழல் புகார்


பிரான்சில் நடந்த ஜனாதிபதி தேர்தலில், தற்போதைய ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசியை சோசலிஸ்ட் கட்சி வேட்பாளர் பிராங்கோய்ஸ் ஹோலண்டே தோற்கடித்தார்.
இவர் எதிர்வரும் 15ஆம் திகதி ஜனாதிபதியாக பதவி ஏற்கிறார். இந்நிலையில் சர்கோசி மீது ஊழல் புகார் கூறப்பட்டுள்ளது.
மேலும் அவர் சட்டத்துக்கு புறம்பாக தேர்தல் நிதி வசூலித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சென்னையில் நாளை மறுநாள் குலுக்கல் மூலம் ஹஜ் பயணிகள் மூலம் தேர்வு


சென்னை: 2012-ம் ஆண்டுக்கான ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வோரைத் தேர்வு செய்ய நாளை மறுநாள் தமிழ்நாடு மாநில ஹஜ் குழு குலுக்கல் நடத்த உள்ளது.
ஹஜ் பயணம் மேற்கொள்வதற்காக தமிழகத்தைச் சேர்ந்த 12 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். ஆனால், தமிழ்நாட்டிற்கான ஒதுக்கீடு சுமார் 3000 மட்டுமே. இதனால் மத்திய ஹஜ் குழுவின் அறிவுறுத்தலின் படி நாளை மறுநாள் குறா எனப்படும் குலுக்கல் நடைபெற உள்ளது.. 

சென்னை ராயப்பேட்டை புதுக்கல்லூரி வளாகத்தில் ஆனைக்கார் அப்துல் ஷூக்கர் கலையரங்கத்தில் நாளை மறுநாள் மாலை 3 மணியளவில் நடைபெற உள்ளது.

குஜராத் குண்டுவெடிப்பில் 'பலியானவர்' திரும்பி வந்தார்- இழப்பீட்டை திருப்பிக் கொடுத்தது குடும்பம்!


குஜராத் மாநிலம் அகமதாபாத்தில், 2008ம் ஆண்டு ஜூலை 26ம் தேதி நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் பலியானதாக கூறப்பட்டவர் திடீரென திரும்பி வந்தார். இதையடுத்து அவரது குடும்பத்தினர், அரசு கொடுத்த நிவாரண நிதியை அரசிடமே திருப்பிக் கொடுத்தனர்.
காடியா என்ற பகுதியைச் சேர்ந்தவர் விபுல் படேல். 36 வயதான இவர் கடந்த 2008ம் ஆண்டு ஜூலை 26ம் தேதி அகமதாபாத்தில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்திற்குப் பிறகு காணாமல் போனார். அந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 57 பேர் உயிரிழந்தனர். அதில் ஒருவரது உடல் மட்டும் அடையாளம் காண முடியவில்லை. இதையடுத்து அந்த உடல் விபுல் படேல்தான் என்ற முடிவுக்கு அவரது குடும்பத்தினர் வந்தனர். 55 நாட்கள் கழித்து விபுல் படேல்தான் அது என்று அவரது குடும்பத்தினர் அடையாளம் காட்டினர்.

Saturday, May 12, 2012

உலக சுகாதார மையத்தில் இந்தியா மீது அமெரிக்கா புகார்.


சிக்கன், முட்டை உள்பட வேளாண் பொருட்களை இறக்குமதி செய்து கொள்ள இந்திய பல கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்று இந்தியாவிடம் அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது.
இதுதொடர்பாக இந்தியாவுடன் பல முறை பேச்சு நடத்தியும் பலன் இல்லை. இந்நிலையில், உலக சுகாதார நிறுவனத்தின் குறைதீர்வு கமிட்டியிடம் அமெரிக்கா புகார் தெரிவித்துள்ளது. இந்தியாவில் உறுதியான மார்க்கெட்டை பிடிக்க அமெரிக்க வேளாண் பொருட் உற்பத்தியாளர்கள் ஆர்வமாக உள்ளனர்.

நாடாளுமன்றத்தில் நாளை 60-ம் ஆண்டு விழா கொண்டாட்டங்கள்


 Parliment Have Special Sitting On Sunday Mark 60 Yrs டெல்லி: இந்திய நாடாளுமன்றத்தின் அறுபதாண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வு நாளை நடைபெறுகிறது.
மக்களவை, மாநிலங்களவை இரண்டும் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்குக் கேள்வி நேரமின்றி தொடங்குகின்றன. மக்களவையில் அவை முன்னவரான மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, "இந்திய நாடாளுமன்றத்தின் அறுபது ஆண்டு பயணம்' என்ற தலைப்பில் விவாதத்தைத் தொடங்கி வைத்துப் பேசுவார். அவரைத் தொடர்ந்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், மக்களவையில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள் சார்பில் தலா ஒரு உறுப்பினர் நாடாளுமன்றத்தின் சிறப்பு குறித்து உரையாற்றுவர்.

மாலை 5.30 மணிக்கு மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் சிறப்புரையாற்றுகிறார். அவரைத் தொடர்ந்து மாநிலங்களவைத் தலைவரும் குடியரசுத் தலைவருமான ஹமீது அன்சாரி, மக்களவைத் தலைவர் மீரா குமார் ஆகியோரும் உரையாற்றுவர்.

Friday, May 11, 2012

பன்றிக் கொழுப்பு.. உஷார்....................


கடந்த மாதத்தில் இணையத்தில் தமிழ் சகோதரர்களுக்கு மத்தியில் உலா வந்த மின்னஞ்சல் செய்தி சற்று அதிர்ச்சியளிக்கு முகமாகவே இருந்ததுஅந்த மின்னஞ்சலில் குறிப்பிட்டிருந்த செய்தி:
அதாவது ஷேக் சாஹிப் என்னும் சகோதரர் பிரான்ஸ் நாட்டிலுள்ள பிகால் (Pegal)என்ற நகரத்தில் உணவுப் பொருட்கள் தரக்கட்டுப்பாட்டு மையத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அவர் பணியாற்றும் துறை தரத்தை நிர்ணயம் செய்யும் துறை (Quality Control) என்பதால் உணவு மற்றும் மருந்துப் பொருட்களை ஆய்வு செய்து அதன் தரத்தை பதிவு செய்வதே அவருக்குக் கொடுக்கப்பட்ட வேலை.

எந்த ஒரு நிறுவனமாக இருந்தாலும் அவர்களின் தயாரிப்பை விற்பனைச் சந்தையில் அறிமுகப்படுத்தும் போது உணவுப் பொருளாக இருந்தாலும்மருந்துப் பொருளாக இருந்தாலும் அதை சோதனைக்குட்படுத்திய பின்பே அறிமுகப்படுத்தும். அவ்வாறு மேற்கொள்ளப்படும் சோதனையில் விற்பனைக்கு வரவிருக்கும் உணவு மற்றும் மருந்துகளின் கலவையை (ingredients) சோதனை செய்து அதை பிரான்ஸ் நாட்டின் உணவு தரக்கட்டுப்பாடு மையம் அங்கீகாரம் அளித்தபின் மட்டுமே விற்பனைக்காக வெளிவரும். உணவுத் தரக்கட்டுப்பாடு மையத்தில் உணவுப்பொருட்களை பிரித்து அதன் கலவையை (ingredients) ஆய்வு செய்வார்கள். இந்த கலவைகள் சிலவற்றிற்கு அறிவியல் பெயர்களும் இருக்கும்சிலவற்றிற்கு குறியீட்டுப் பெயர்களும் இருக்கும். எடுத்துக்காட்டாக E-904, E-141 என்று.

Thursday, May 10, 2012

இறைவா!...என் மாமியாரை மன்னிப்பாயா!(சிறுகதை)


ஓரளவு வசதியான வீடுதான். ரஹீம்: அவன் மனைவி ஆயிஷா: மற்றும் அவனது வயதான தாய் மர்யம்:. இந்த மூன்று பேரையும் சேர்த்து ஆயிஷாவின் வயிற்றில் வளரும் ஆறு மாத குழந்தை. இந்த நான்கு பேர் வசதியாக வாழ இந்த வீடு போதும்தான். ரஹீமுக்கு திருமண மாகி 6 வருடங்கள் ஆகி விட்டது. இந்த வருடம் தான் அவனது மனைவி உண்டாகி இருப்பது அவனுள் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு புறம் மகிழ்ச்சி: மறுபுறம் அவனது தாயார் ஒரு வாரம் முன்பு வாத நோயால் பாதிக்கப்பட்டு ஒரு கால் ஒரு கை விளங்காமல் போன சோகம். டாக்டரும் கையை விரித்து விட்டார். இனி படுக்கையில்தான் தனது வாழ்நாளை தனது தாயார் கழிக்க வேண்டுமாம். சிந்தனை வயப்பட்டவனாக தனது மளிகை கடையை திறக்க ரஹீம் சென்று கொண்டிருந்தான்.

ஆயிஷா தனது மாமியாருக்கு மருந்துகளை கலக்கி கொடுத்துக் கொண்டிருந்தாள். இரண்டு நாட்களாகி விட்டது. மாமியாரின் துணிகளையும் மாற்றியாக வேண்டும். தனது கணவன் வருவதற்குள் மதிய உணவையும் தயார் பண்ண வேண்டும்: என்று எண்ணியபடியே வேலைகளில் மும்முரமானாள் ஆயிஷா. 'ஆயிஷா..கொஞ்சம் இங்கே வாம்மா..' மாமியாரின் குரல் கேட்டு அடுப்பங்கரையிலிருந்து ஹாலுக்கு வந்தாள் ஆயிஷா. ஆயிஷாவின் முகத்தை பார்ப்பதற்கே வெட்கப்பட்டுக் கொண்டு தனது முகத்தை திருப்பிக் கொண்டார் மர்யம். நிலைமையை புரிந்து கொண்ட ஆயிஷா மாமியாரின் உடைகளை மாற்ற ஆயத்தமானாள். ஆம்...படுக்கையையே கழிவறையாக்கிய மாமியாரை பரிதாபமாக பார்த்துக் கொண்டே அவரை தூக்கி சுவற்றோடு சாய வைத்தாள். உடுத்திய துணிகள், விரிப்பு அனைத்தையும் ஒன்று விடாமல் எடுத்து துவைக்க போட்டாள் ஆயிஷா.. தனது மருமகள் தனக்காக செய்யும் அனைத்து வேலைகளையும் நோட்டம் விட்டுக் கொண்டே இருந்தார் மர்யம்....

Tuesday, May 8, 2012

ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை குறையுங்கள்: இந்தியாவுக்கு ஹில்லாரி கோரிக்கை

 Hillary Clinton Meet Sm Krishna Hafiz Saeed
டெல்லி: அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவை இன்று சந்தித்து பேசினார்.
அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் 3 நாள் சுற்றுப்பயணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தியா வந்தார். அவர் தனது பயணத்தின் கடைசி நாளான இன்று வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவை சந்தித்து பேசினார்.

அப்போது ஆப்கானிஸ்தான் விவகாரம், தீவிரவாதம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஹில்லாரி கிருஷ்ணாவுடன் பேசினார். மேலும் இந்தியா ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவ்வாறு உலக நாடுகள் ஈரானிடம் இருந்து எண்ணெய்யை இறக்குமதி செய்வதைக் குறைத்தால் தான் டெஹ்ரான் அணு சக்தி திட்டம் தொடர்பான சர்வதேச கோரிக்கையை ஏற்றுக்கொள்ளுமாறு அந்நாட்டை வலியுறுத்த முடியும் என்றார்.

கேரள முதல்வர் தமிழர்களை இளிச்சவாயர்களாக நினைக்கிறார்: உதயகுமார் தாக்கு


நெல்லை: கேரளாவில் அணு மின் நிலையம் அமைக்க அம்மாநில முதல்வர் உம்மன்சாண்டி தயாராக இருக்கிறாரா என்று கூடங்குளம் போராட்டக்குழு தலைவர் உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
கூடங்குளம் அணு உலை எதிர்ப்புக் குழு மீது போடப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 4வது கட்டமாக கடந்த 1ம் தேதி முதல் போராட்டக்குழுவினர் 24 பேர் காலவரையற்ற உண்ணாவிரத்தை தொடங்கினர். 7வது நாளான நேற்று 302 பெண்கள் உள்பட 376 பேர் உண்ணாவிரதம் இருந்தனர். இவர்களில் 15 பெண்கள் மயங்கினர். அவர்கள் இடிந்தகரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

கூடங்குளம் அணு மின் நிலையத்தில் இன்னும் 10 நாட்களில் மின் உற்பத்தி தொடங்கும் என்ற முதல்வர் அறிவிப்பை அடுத்து போராட்டக்குழுவினர் அடுத்த கட்ட போராட்டம் குறித்து ஆலோசனை நடத்தினர். 

ஹஜ் யாத்ரீகர்களுக்கான மானியத்தை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு

 Sc Strikes Down Haj Subsidy Be Eliminated 10 Years
டெல்லி: ஹஜ் பயணம் செய்யும் இஸ்லாமிய யாத்ரீகர்களுக்குத் தரப்படும் மானியத்தை ரத்து செய்யுமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் மானியத்தை படிப்படியாகக் குறைத்து 10 ஆண்டுகளுக்குள் ஹஜ் பயணத்துக்கான மானியத்தை முற்றிலும் நிறுத்துமாறும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிபதிகள் அல்தமஸ் கபீர் மற்றும் ராஜன்னா பிரகாஷ் தேசாய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

ஆண்டுதோறும் ஹஜ் பயணத்துக்கு பிரதமரின் நல்லெண்ண தூதர்களாக அனுப்பப்படுவோரின் எண்ணிக்கையை 2 ஆகக் குறைக்குமாறும் நீதிபதிகள் கூறியுள்ளனர். பயணிகளுடன் நல்லெண்ணத் தூதர்கள் என்ற பெயரில் 10 பேர் போவது கூட தேவையில்லாதது, அந்த எண்ணிக்கையை 2 ஆகக் குறைக்க வேண்டும் என்றனர்.

மேலும் இந்திய ஹஜ் கமிட்டி எப்படி செயல்படுகிறது என்பதையும், ஹஜ் பயணத்துக்கு யாத்ரீகர்கள் எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்பதையும் ஆய்வு செய்யப் போவதாகவும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

Sunday, May 6, 2012

சென்னையில் வாட்டும் கத்திரி... வேலூர், நத்தம், கோபியில் சூறாவளியுடன் மழை


சென்னை: தமிழகத்தில் கத்தரி வெயில் சீசன் துவங்கியதையடுத்து நேற்று சென்னையில் 105 டிகிரி வெயில் அடித்துள்ளது. இன்று காலை முதல் லேசான மேக மூட்டமாக காணப்படுகிறது. அதேசமயம், வேலூர், நத்தம், கோபிச்செட்டிப்பாளையத்தில் சூறாவளிக் காற்றுடன் நல்ல மழை பெய்துள்ளது.
தமிழகத்தில் சுட்டெரிக்கும் கத்திரி வெயில் கடந்த 4ம் தேதி துவங்கியது. வரும் 28ம் தேதி வரை கத்திரி வெயில் காலம் நீடிக்கும். கத்திரி வெயில் சுட்டெரிப்பதால் சென்னையில் தினமும் 100 டிகிரி வெப்பம் நிலவுகிறது. இதனால் மதிய வேளைகளில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைவாகவே உள்ளது.

வெப்பத்தை தணிக்க மக்கள் தர்பூசணி, இளநீர், பழச்சாறு, ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானங்களை உட்கொள்கிறார்கள். இது தவிர ஏராளமானோர் நுங்கு, கிருணிப்பழம், வெள்ளரிக்காய் ஆகியற்றை வாங்கி உண்கிறார்கள். இதனால் பழம், பழச்சாறு, குளிர்பானக் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அங்கு வியாபாரம் படுஜோராக நடக்கிறது.

ரயில் எங்கு செல்கிறது, எங்கு நிற்கிறது என்று தெரிய வேண்டுமா?


 A Website Track The Trains நாகர்கோவில்: நாடு முழுவதும் இயக்கப்படும் ரயில்கள் எந்த இடத்தில் சென்று கொண்டிருக்கிறது என்ற விபரத்தை வழங்கும் வகையில் புதிய இணையதளம் ஒன்றை ரயில்வேத் துறை துவங்கியுள்ளது.
நாட்டில் ஓடும் ரயில்கள் எங்கு சென்று கொண்டிருக்கிறது என்பதை அறிய ரயில்வேத்துறை www.trainenquiry.com என்ற இணையதளத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த இணையதளத்திற்கு சென்று 20 நொடியில் எந்த ஒரு ரயிலின் சேவை விபரங்களையும் அறிய முடியும்.

எதிரி ஏவுகணைகளை அழிக்கும் ஏவுகணைகள் தயார்..2 நகரங்களில் நிறுத்தப்படும்!


 India S Missile Defence Shield Ready டெல்லி: இந்தியாவின் அதி நவீன ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணைத் திட்டம் முழுமையாக தயாராகி விட்டது. இந்த வகை ஏவுகணைகளை விரைவில் 2 நகரங்களில் நிறுத்தத் திட்டமிட்டப்பட்டுள்ளது.
இப்படிப்பட்ட அதி நவீன ஏவுகணைகளை வைத்துள்ள ஒரு சில நாடுகளின் வரிசையில் இந்தியாவும் தற்போது சேர்ந்துள்ளது.

மத்திய பாதுகாப்பு ஆய்வு மற்றும் வளர்ச்சிக் கழகமான டிஆர்டிஓ இதை உருவாக்கியுள்ளது. மேலும் இதை வெற்றிகரமாகவும் சோதித்துப் பார்த்துள்ளது. இந்த ஏவுகணைகள், 2000 கிலோமீட்டர் தூரம் வரை ஊடுறுவிச் சென்று எதிரிகளின் ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் தன்மை கொண்டதாகும். இதை 2016ம் ஆண்டுவாக்கில் 5000 கிலோமீட்டர் வரை மேம்படுத்தும் திட்டத்தையும் டிஆர்டிஓ வைத்துள்ளது.

Saturday, May 5, 2012

பாபர் மசூதி இடிப்பு: அத்வானி மீதான வழக்கு ஜுலை 25-ல் விசாரணை

டெல்லி: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சி.பி.ஐ. தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றத்தில் ஜூலை 25-ந் தேதி விசாரணை நடைபெற உள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி 1992-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6-ந் தேதி கரசேவகர்களால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.

சங்பரிவார் அமைப்புகளை சேர்ந்த தலைவர்களின் பேச்சுக்களால் தூண்டப்பட்டுத்தான் கரசேவகர்கள் மசூதியை இடித்தனர் என்றும், இது முன்கூட்டியே திட்டமிட்டு நடத்தப்பட்ட சதிச்செயல் என்றும் குற்றம் சாட்டப்பட்டது.

மனநோய்க்கு மருந்தாகும் சீரக கசாயம்

Health Benefits Cumin
சீரகத்தைப் பிரித்தாலே சீர் + அகம் என்ற வார்த்தைகள் கிடைக்கும். நம் உடலின் அனைத்து பாகங்களையும் சீராக்கி நோயின்றி வாழ வகுக்கிறது சீரகம். இதன் மருத்துவ குணத்திற்காகவே இந்திய சமையலில் அன்றாடம் பயன்படுத்தப்படுத்தப்படுகிறது.

சமையலுக்கு சுவையும், மணமும் தருவதில் சீரகம் பல வழிகளில் உதவுகிறது. பலவித மசாலாப் பொடி தயாரிப்பில் இது ஓர் முக்கிய பங்கு பங்கு வகிக்கிறது. செரிக்காமை, வாயுத் தொல்லை இவைகளுக்கு மாமருந்து.

சீரகத்தில் உயர்தர இரும்புச் சத்து உள்ளது. இது ரத்த சிகப்பு அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. இதன் மூலம் ஆக்சிஜனை உடலின் அனைத்து பகுதிகளுக்கும் கடத்த உதவுகிறது. உடலுக்கு சக்தி கிடைக்கிறது.

Friday, May 4, 2012

கட்டுப்பாடான உணவு மூளையை பாதுகாக்கும் : விஞ்ஞானிகள் தகவல்

வயதாக வயதாக மூளையின் நினைவாற்றல் குறைந்துவிடும். ஆனால் ஒருசிலர் மட்டுமே சின்ன சின்ன விசயங்களைக் கூட நினைவில் வைத்துக்கொண்டு அசத்துவார்கள். இதற்குக் காரணம் அவர்களின் உணவுப் பழக்கமே. குறைவாகவும், கட்டுப்பாடோடும் மூளையை இளமையோடு வைத்திருக்கும் என்று கண்டறிந்துள்ளனர் இத்தாலிய விஞ்ஞானிகள்.

கட்டுப்பாடான உணவு முறையால் நடைபெறும் ஒரு மூலக்கூறுச் செயல்பாடு, மூளை முதுமை அடைவதில் இருந்து காப்பாற்றுகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

இதுதொடர்பாக அமெரிக்க தேசிய அறிவியல் அகாடமி இதழில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில், எலிகள் மீது செய்யப்பட்ட ஆய்வு ஒன்று விவரிக்கப்பட்டிருக்கிறது.

பிரிட்டன் உள்ளாட்சி தேர்தல்: எதிர்க்கட்சிக்கு வெற்றி வாய்ப்பு


பிரிட்டனில் நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் ஆளும் கூட்டணியை கட்சியைச் சேர்ந்த கன்சர்வேட்டிட் கட்சியும், லிபரல் டெமாக்ரெடிக் கட்சியும் பெரும் தோல்வியைச் சந்தித்துள்ளன.
அதே வேளை எதிர்க்கட்சியான தொழிற்கட்சி பெரும் வெற்றி பெற்று வருகிறது.
அதிகமான உள்ளூராட்சி கவுன்சில்களுக்கான முடிவுகள் வந்திருக்கும் நிலையில், இதுவரை தொழிற்கட்சி 470க்கும் அதிகமான இடங்களை கைப்பற்றியிருக்கிறது.

குடியரசுத் தலைவர் வேட்பாளர்- பிரணாப் முகர்ஜிக்கு கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு வலுக்கிறது!

 Presidential Poll Candidate Pranab
டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கூட்டணிக் கட்சி சார்பில் பிரணாப் முகர்ஜி நிறுத்தப்படுவார் என்பது உறுதியாகிவரும் நிலையில் அவரை ஆதரிப்பதாக வெளிப்படையாகவே கூட்டணிக் கட்சிகள் அறிவித்திருப்பது டெல்லி அரசியலில் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
பிரணாப் முகர்ஜி

குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரணாப் முகர்ஜியே வேட்பாளராக இருப்பார் என்கிற வகையில் ஊடகங்கள் அனல் பறக்க விவாதங்களை முன் வைத்து வருகின்றன. இருப்பினும் பிரணாப்பை நிதி அமைச்சர் பொறுப்பிலிருந்து விடுவித்து கட்சிப் பொறுப்பிலிருந்தும் விடுவித்து குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளராக முன் நிறுத்தினால் ஏற்படும் இழப்புகளை காங்கிரஸ் கட்சி கணக்கிட்டு ஒரு ஊசலாட்டமான போக்கில்தான் காங்கிரஸ் இருந்து வந்தது.

பிரதமர் கனவு

பிரணாப் முகர்ஜியும் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட 1984-ம் ஆண்டிலேயே தம்மை பிரதமர் வேட்பாளராக முன்நிறுத்திக் கொண்டவர். அவரைப் பொறுத்தவரையில் பிரதமர் பதவி என்பது நிறைவேறாத 30 ஆண்டுகால கனவுதான் என்று சொல்ல வேண்டும். தன்னை பிரதமராக அறிவிக்க அப்போது பிரணாப் முயற்சித்ததால் ராஜிவ் காந்தியின் கோபத்துக்கு ஆளானவர். இருப்பினும் அவரது சீனியாரிட்டியும் சின்சியாரிட்டியும் ராகுல்காந்தி காலம் வரை தாக்குப் பிடித்து நம்பர் 2- என்ற நிலையில் இருக்க வைத்திருக்கிறது.

மாவீரன் திப்புசுல்தான் நினைவு நாள்


மாவீரன் திப்புசுல்தான்இன்று மாவீரன் திப்பு சுல்தான் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கெதிராக தனது இன்னுயிரை தியாகம் செய்த நாள்.
1799 ஆம் மே மாதம் நான்காம் தேதி சாதாரண சிப்பாய் போல் ஆங்கிலேய அந்நிய படைக்கெதிராக களமிறங்கி தனது உடலில் கடைசி மூச்சு நிற்கும் வரை உறுதியுடன் போராடி உயிர் தியாகியானார் மாவீரன் திப்பு. அந்த வீரத் திருமகனின் வரலாற்றை நினைவுக்கூறுவது இந்திய தேசத்தின் விடுதலை வரலாற்றையே நினைவுக்கூறுவதற்கு சமமாகும்.
“ஆடுகளைப் போல 200 ஆண்டுகள் வாழ்ந்து பிழைப்பதை விடப் புலியைப் போல 2 நாட்கள் வாழ்ந்து மடியலாம்”
எதிரிகளுடன் தீரமுடன் போரிட்டு குண்டு காயங்களுடன் கோட்டை வாயிலில் சரிந்து கிடந்த திப்புவிடம் அவரது பணியாள், “அரசே! யாரேனும் ஒரு ஆங்கிலேயே அதிகாரியை அழைக்கட்டுமா? சரணடைந்து விடலாம்” என பதறியவாறு கூறிய வேளையில் திப்பு உதிர்த்த உன்னத வார்த்தைகள் தாம் மேலே கண்டவை.

Thursday, May 3, 2012

குடியரசுத் தலைவர் வேட்பாளராக ஹமீத் அன்சாரிக்கு எதிர்ப்பு- சுஷ்மாவுக்கு சமாஜ்வாதி கடும் கண்டனம்


டெல்லி: குடியரசுத் தலைவர் வேட்பாளராக ஹமீத் அன்சாரியை முன்நிறுத்த பாரதிய ஜனதாவின் சுஷ்மா ஸ்வராஜ் எதிர்ப்புத் தெரிவித்திருப்பது அவர்களது மதவாதப் பார்வையையே வெளிப்படுத்துகிறது என்று சமாஜ்வாதி கட்சி சாடியுள்ளது.
இது தொடர்பாக சமாஜ்வாதி கட்சியின் எம்.பி. மோகன்சிங் கூறியுள்ளதாவது:

நாட்டின் குடியரசுத் தலைவர் தேர்தலில் யார் நிற்க வேண்டும் என்பதை பாஜக தீர்மானிக்கக் கூடாது. குடியரசு துணைத் தலைவர் ஹமீத் அன்சாரியை குடியரசுத் தலைவர் வேட்பாளராக நியமிக்க எதிர்ப்புத் தெரிவித்து சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்த கருத்துகள் மதச்சார்பின்மை சீர்குலைக்கும் மதவாத சிந்தனையின் வெளிப்பாடே.

படு வேகத்தி்ல் பாய்ந்து வரும் காற்றாலை மின்சாரம்-கரண்ட் 'கட்' வெகுவாக ரத்து!


tamilnadu wind power decreases power cut tamil nadu சென்னை: தமிழகத்தில் நேற்று பல பகுதிகளில்மின் வெட்டு வெகுவாக குறைந்திருந்தது. சில இடங்களில் முழுமையாகவே மின்வெட்டு ரத்து செய்யப்பட்டிருந்தது. ஏன் இப்படி என்று மக்களுக்குப் பெரும் குழப்பம். ஆனால், காற்றாலைகள் மூலம் கிடைக்கும் மின்சாரம் அபரிமிதமாக வருவதால்தான் மின்வெட்டு பெருமளவில் குறைந்துள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் கூறுகின்றனர்.
தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சிக்காலத்திலிருந்து கடும் மின்வெட்டு மக்களை வாட்டி வருகிறது. இதைச் சொல்லியே ஆட்சிக்கு வந்தது அதிமுக. ஆனால் அவர்கள் வந்த பிறகுதான் மின்வெட்டு மிகப் பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்தது. தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் - சென்னையைத் தவிர்த்து- பாதி நாட்கள் கரண்ட் கிடையாது என்ற நிலைதான். பெரும்பாலான பகுதிகள் எப்போதும் இருளில் மூழ்கியேக் கிடந்தன.

தென்காசி மக்களைக் குளிர வைத்த தென்மேற்கு பருவக்காற்று


தென்காசி: தென்காசி பகுதியில் வசந்த காலமான தென்மேற்கு பருவக் காற்று காலம் தொடங்கியுள்ளது. இதன் எதிரொலியாக காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் மின்வெட்டு கஷ்டத்தில் இருந்து சற்று மீண்டுள்ளனர். 
ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தென்காசியில் நிலவும் சீசன் குற்றாலத்திற்கே உரிய சீசன் ஆகும். கேரளா மற்றும் தமிழகத்தின் மேற்கு பகுதியில் இது தென்மேற்கு பருவ மழைக்காலம் என்று கூறப்பட்டாலும் குற்றாலத்தில் மட்டுமே இது சாரலாகவும், தென்றல் காற்றாகவும், உடலுக்கும், மனதுக்கும் இதமளிக்கிறது. 

Tuesday, May 1, 2012

சென்னையிலும் தொடங்கியது ஜாதிவாரி கணக்கெடுப்பு


சென்னை: தமிழகத்தில் கடந்த வாரம் ஜாதி வாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு தொடங்கிய நிலையில் சென்னை மாநகராட்சிட்குட்பட்ட பகுதிகளில் இன்று தொடங்கியது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் கூறுகையில்,

ஜாதிவாரி கணக்கெடுப்பு பணிக்காக மாநகராட்சி ஆணையர், இணை ஆணையர்கள், மத்திய வட்டார துணை ஆய்வாளர், மாவட்ட வருவாய் அலுவலர் உள்பட 7,152 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். 64 பொறுப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளது. சமூக, பொருளாதார மற்றும் ஜாதிவாரி கணக்கெடுப்பின்போது பொதுமக்கள் தெரிவிக்கும் தகவல்கள் அனைத்தும் உடனுக்குடன் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படும்.

ஜனாதிபதி தேர்தல்: பாஜக கூட்டணியிலும் பிளவு!


Sharad yadav and Sushma swarajடெல்லி: ஜனாதிபதி தேர்தலில் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட காங்கிரஸ் வேட்பாளர்கள் யாரையும் ஆதரிக்க மாட்டோம் என்ற பாஜக தலைவர் சுஷ்மா ஸ்வராஜின் பேச்சு அவரது சொந்தக் கருத்தாகும் என்று தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முக்கியக் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் தெரிவித்துள்ளது.
இதன்மூலம் பாஜக கூட்டணியில் இந்த விஷயத்தில் ஒருமித்த கருத்து இல்லை என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

ஜனாதிபதி வேட்பாளர் யார் என்ற விஷயத்தில் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள கட்சிகள் ஆளுக்கு ஒரு பெயரை கூறி வருகின்றன. அதே போல எந்தக் கூட்டணியிலும் இல்லாத கட்சிகளும் வாய்க்கு வரும் பெயர்களை சொல்லி வருகின்றன.