Tuesday, July 31, 2012

அஸ்ஸாம் மக்கள் மீண்டும் உங்களின் உதவியை எதிர்பார்கிறார்கள்.


அஸ்ஸாம் மக்கள் மீண்டும் உங்களின் உதவியை எதிர்பார்கிறார்கள். 

அரசு தரப்பு டி.ஜி.பி  ஜே.என். செளத்ரியின் அறிக்கை படி அஸ்ஸாம் மாநிலத்தில் ஏற்பட்ட இனக்கலவரத்தால் மொத்தம் 3,78,045 மக்கள் (முஸ்லிம்கள் 2,66,700, பெளத்தர்கள் 1,11,345) வீடுகளை இழந்து அநாதைகளாக ஆகியுள்ளனர். நூற்றுக்கணக்கானவர்கள் தங்களுடைய உயிர்களை இழந்துள்ளனர்.

அரசு தரப்பில் ஏற்படுத்தப்பட்ட நிவாரண முகாம்களின் விபரம் வருமாறு:

- நான்கு மாவட்டங்களில் மொத்தம் 235 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

- இதில் 99 முகாம்கள் பெளத்தர்களுக்காகவும், 135 முகாம்கள் முஸ்லிம்களுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

அஸ்ஸாம் மாநிலத்தில் பல்வேறு நலதிட்ட பணிகளை நடைமுறைப்படுத்தி வரும் ரிஹாப் இந்தியாவின் தொண்டூழியர்கள் நேரடியாக களத்தில் இறங்கி கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை மேற்கொண்டு வருகிறார்கள். கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிபுரிய ரிஹாப் இந்தியாவிற்கு உதவுமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறார்கள்.
நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்காக உடனடியாக சில வசதிகளை செய்துகொடுக்க வேண்டியுள்ளது.

Monday, July 30, 2012

தேர்தல் வியாபாரத்துக்கு தயாராகி வரும் "மரண வியாபாரி" மோடி!


குஜராத் : மரண வியாபாரி மோடி, தேர்தல் நெருங்கி வரும் தற்போது அரசியல் வியாபாரத்தை லாபகரமாக நடத்தி முடிக்க தயாராகி வருகிறார்.
சமாஜ்வாதி கட்சியின்  "ஷாஹித் சித்தீகி"யை கவனிக்கும் விதத்தில் கவனித்து, அவர் நடத்தும் "நயீ துனியா" வாரப்பத்திரிக்கைக்கு  அளித்த பேட்டியில்,  தான் முஸ்லிம்களுக்கு எதிரி இல்லை என்று  தன்னிலை விளக்கம் அளித்ததுள்ளார், மோடி.

முஸ்லிம் இனப்படுகொலையில், தான் குற்றம் செய்யவில்லை என்றும், தன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், தூக்கு மேடை ஏறவும் தயார், என்றும் தெரிவித்திருந்தார்.

பி.இ. மாணவர்களின் வேலைவாய்ப்பு தகுதி மிக, மிகக் குறைவாம்: சர்வே

பெங்களூர்: டயர் 2,3 மற்றும் 4 பொறியியல் கல்லூரிகளில் (ஐஐடி போன்றவை டயர் 1 கல்லூரிகள்) படித்து வெளியேறும் மாணவர்களில் 10ல் ஒரு மாணவருக்கு மட்டுமே உடனே வேலை கிடைக்கும் தகுதி உள்ளது என்று பர்ப்பிள்லீப் நிறுவனம் நடத்திய கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.
மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பெறும் தகுதி எவ்வளவு உள்ளது என்பதை அறிய நடத்தப்பட்ட தேர்வை நாடு முழுவதும் உள்ள ஏராளமான கல்லூரி மாணவர்கள் எழுதினர். கல்லூரி படிப்பில் 60 சதவீதம் மதிப்பெண் வைத்துள்ளவர்கள் மட்டுமே இந்த தேர்வை எழுத அனுமதிக்கப்பட்டனர். அவ்வாறு தேர்வு எழுதிய 198 கல்லூரிகளைச் சேர்ந்த 34,000 மாணவர்களின் மதிப்பெண்களை அடிப்படையாக வைத்து பர்ப்பிள்லீப் நிறுவனம் கணக்கெடுப்பு ஒன்றை நடத்தியது.

Sunday, July 29, 2012

பிரான்சில் பதுக்கப்பட்ட ரூ565 கோடி இந்திய கறுப்புப் பணம் அம்பலம்

டெல்லி: சுவிஸைத் தொடர்ந்து பிரான்சிலும் இந்தியர்கள் கறுப்புப் பணம் பதுக்கியிருப்பது தெரியவந்துள்ளது. இந்தியர்களின் ரூ565 கோடி கறுப்புப் பணம் பிரான்சில் பதுக்கப்பட்டிருப்பது தெரியவந்திருப்பதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஐரோப்பிய நாடுகளுடன் இந்திய அரசு இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள இந்தியர்களின் பணம் குறித்த விவரங்களைப் பெற முடியும். தற்போதும் இந்த ஒப்பந்தம் மூலமே பிரான்சில் இந்தியர்களின் கறுப்புப் பணம் பதுக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

மேம்படுத்தப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றி

 India Test Fires Brahmos Missile With New Systems
புவனேஸ்வர்: 290 கி.மீ. தூரம் வரை சென்று இலக்கை தாக்கும் பிரம்மோஸ் ஏவுகணையின் தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை இன்று காலை ஒரிசாவின் சந்திப்பூரில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
ஒலியை விட மூன்று மடங்கு வேகத்தில் 290 கி.மீ. தூரம் வரை சென்று இலக்கை தாக்கும் பிரம்மோஸ் ஏவுகணையை மேம்படுத்தும் வகையில் அதில் புதிய தொழில்நுட்பங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதையடுத்து புதிய தொழில்நுட்பங்களுடனான பிரம்மோஸ் சூப்பர்சானிக் ஏவுகணை இன்று காலை 10.45 மணிக்கு ஒடிஸா மாநிலத்தின் சந்திப்பூரில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த தளத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

இந்தியா நெக்ஸ்ட் :ஹிந்தி மொழியில் புதிய பத்திரிகை....


புது டெல்லி: "இந்தியா நெக்ஸ்ட்" என்ற மாதமிருமுறை வெளிவரும் புதிய பத்திரிகை, ஹிந்தி மொழியில் துவங்கப்பட்டுள்ளது. இதன் துவக்க விழா டெல்லி காந்தி பீஸ் பௌண்டேசனில் சனிக்கிழமை ஜூன் அன்று நடைபெற்றது. 


நிகழ்ச்சியில் இந்தியா நெக்ஸ்ட் பத்திரிக்கையின் நிர்வாக ஆசிரியர் அஞ்சும் நயீம் அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார்.


விழாவில் தலைமையுரை ஆற்றிய பதிப்பாளர் மற்றும் ஆசிரியரான இ அபூபக்கர் அவர்கள் தனது சிறப்புரையில் "இந்தி மொழி ஊடக துறையில் இது சிறிய முன்முயற்சி என்ற போதிலும் அர்த்தமுள்ள நெறிமுறை சார்ந்த ஊடகத்தை நோக்கிய பயணத்தில் இது சீரிய முயற்சி" என்று கூறினார்.

Saturday, July 28, 2012

அஸ்ஸாம் மக்கள் புறக்கணிப்பு : அன்னா ஹசாரே சாயம் வெளுத்தது!


ஊழலை ஒழிப்பேன் - நாட்டை காப்பேன் என வீர முழக்கமிட்டு வரும் சுய நலப் பேர்வழி அன்னா ஹசாரேவின் பொய் முகம் கிழிந்தது.


நாட்டின் மீது அக்கறையுள்ளவர் ஹசாரே என்ற எண்ணத்தில் டெல்லிவாழ் அஸ்ஸாம் மாநில தொழிலாளர்கள், நேற்று ஹசாரே குழுவை சந்தித்து அஸ்ஸாம் பிரச்சினைக்கும் சேர்த்து குரல் கொடுப்பார், என்ற நல்லெண்ணத்தில், ஹசாரே குழுவை சந்திக்க டெல்லி "ஜன்தர் மன்தர்" சென்றனர்.  

படுசொதப்பலாகிவிட்ட அன்னா ஹசாரே குழு உண்ணாவிரதம்.. தலைவரும் கிரேட் எஸ்கேப்

 Forget Crowd Even Leaders Missing Team Anna Fast Venue
டெல்லி: ஊழலுக்கு எதிராக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே குழுவினர் நடத்தி வரும் போராட்டத்துக்கு மக்கள் ஆதரவுதான் இல்லை என்றால் அந்த குழுவின் தலைவர்களும் கூட கலந்து கொள்ளவில்லை.


ஊழலுக்கு எதிராக கடந்த 4 நாட்களாக அன்னா ஹசாரே குழுவினர் டெல்லி ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். முதல் நாள் போராட்டத்துக்கு வந்த கூட்டம் அடுத்தடுத்த நாட்களில் படிப்படியாகக் குறைந்தது. நேற்று ராம்தேவ் கொஞ்சப்பேரை கூட்டி வந்தார். ஆனால் அவருடன் வந்த ஆதராவளர்களும் அவர் சென்ற பின்னர் எஸ்கேப்பாகிவிட்டனர்.

Friday, July 27, 2012

புர்ஜ் கலீபாவில் வீடு வாங்கிக் குவிக்கும் இந்தியர்கள்!

Indians Own More Than Hundred 900 Apartments
டெல்லி: உலகிலேயே மிக உயரமான கட்டடம் என்ற பெயரைப் பெற்றுள்ள துபாயின் புர்ஜ் கலீபாவில் உள்ள 900 குடியிருப்புகளில் 100க்கும் அதிகமான வீடுகளை இந்தியர்கள்தான் வாங்கியுள்ளனராம்.
உலகிலேயே மிகவும் ஆடம்பரமான குடியிருப்பு என்ற பெயரும் புர்ஜ் கலீபாவுக்கு உண்டு. இத்தகைய பெருமை வாய்ந்த இந்த குடியிருப்பில் வசிப்போரில் இந்தியர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறதாம்.
மொத்தம் உள்ள 900 குடியிருப்புகளில் 100க்கும் மேலான வீடுகளை இந்தியர்கள்தான் வாங்கியுள்ளனராம். மொத்தம் 828 மீட்டர் உயரம் கொண்ட கட்டடம் இது. உலகிலேயே இதுதான் மிகவும் உயரமான கட்டட வளாகமாகும்.

அதிரடி வேகத்தில் கூகுளின் புதிய இன்டர்நெட் சேவை!

Google Unveils New ultra-High Speed Google Fiber Internet service
அதி வேகத்தில் செயல்படும் புதிய இணையதள சேவையை (இன்டர்நெட் சேவையை) அறிமுகம் செய்கிறது கூகுள் நிறுவனம்.
இந்த புதிய இணையதள சேவையின் வேகம் குறித்த விஷயங்களை சோதனை செய்து பார்க்கும் வகையில், அமெரிக்காவில் உள்ள கன்சாஸ் நகர குடியிருப்பு பகுதிகளில் வரும் செப்டம்பர் மாதம் இந்த வசதி வழங்கப்படும்.
மற்ற இன்டர்நெட் வசதிகளை விடவும், கூகுள் நிறுவனத்தின் இந்த புதிய கூகுள் ஃபைபர் இன்டர்நெட் சேவை 100 மடங்கு வேகம் கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தண்ணீரில் இயங்கும் காரை கண்டுபிடித்த பாகிஸ்தான் எஞ்சினியர்

Pakistani Makes Car That Runs On Water
சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரில் இயங்கும் காரை கண்டுபிடித்து அசத்தியுள்ளார் பாகிஸ்தானை சேர்ந்த எஞ்சினியர் ஒருவர். அவரது கண்டுபிடிப்பை பாராட்டியுள்ள அந்நாட்டு அரசு அவருக்கும், அவரது கண்டுபிடிப்புக்கும் பலத்த பாதுகாப்பு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலேயற்றம் அச்சுறுத்தி வரும் இந்த வேளையில், மாற்று எரிபொருள் தொழில்நுட்பத்தை கண்டுபிடிக்க ஆட்டோமொபைல் துறை கற்ற வித்தைகளையும் போட்டு காட்டி வருகிறது.
இந்த நிலையில், பாகிஸ்தானை சேர்ந்த பொறியாளர் வாகர் அகமது என்பவர் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் மூலம் இயங்கும் காரை வடிவமைத்து அசத்தியிருக்கிறார். மேலும், அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள், விஞ்ஞானிகள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் நேற்று இஸ்லாமாபாத்தில் அந்த காரை சோதனை ஓட்டம் நடத்திக் காட்டி அசத்தியுள்ளார்.

கூட்டம் வராததால் டென்ஷன்... பத்திரிக்கையாளர்ளை தாக்கிய அன்னா ஆதரவாளர்கள்!

டெல்லி: அன்னா ஹஸாரே குழுவினரின் லேட்டஸ்ட் உண்ணாவிரதம் நாட்டு மக்களிடையே பெரும் கேலிப் பொருளாகி வருகிறது. கூட்டம் கொஞ்சமும் கூடாததால் கடும் கடுப்பில் உள்ள அன்னா ஆதரவாளர்கள், பத்திரிக்கையாளர்கள்தான் இதற்குக் காரணம் என்று பத்தாம்பசலித்தனமாக கருதி, இன்று செய்தி சேகரிக்க வந்த செய்தியாளர்களைத் தாக்கி தங்களது ஆத்திரத்தை தீர்த்துக் கொண்டனர்.
அன்னா ஹஸாரே குழுவினரின் போராட்டங்கள் மீது தற்போது அவர்களுக்கே நம்பிக்கை இல்லாமல் போய் விட்டது. அதுவும் மும்பையில் சில மாதங்களுக்கு முன்பு அன்னா ஹஸாரேவே டைரக்டாக உண்ணாவிரதம் உட்கார்ந்தபோது ஈ, காக்காய்களே அதிக அளவில் அங்கு ஆதரவு தெரிவிக்க அதிகம் கூடியிருந்தன. மக்களைக் காணவில்லை. இதனால் சுருக்காக தனது போராட்டத்தை முடித்துக் கொண்டு சொந்த ஊருக்குப் போய் விட்டார் அன்னா. அதன் பின்னர் அவர் போராட்டத்திற்கே வரவில்லை.
இந்த நிலையில், டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில், அன்னா குழுவினர் மறுபடியும் ஒரு உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதில் அன்னா குழுவைச் சேர்ந்த அரவிந்த் கேஜ்ரிவால் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். அன்னாவும் போராட்டத்தில் பங்கேற்றுள்ளார் என்ற போதிலும் அவர் உண்ணாவிரதம் இருக்கவில்லை.

2014ம் ஆண்டு தேர்தலில் குதிக்க ஹசாரே முடிவு? புதிய கட்சி தொடங்குவதில் தவறில்லையாம்!

 Anna Hazare Reveals His Plan 2014 General Elections
டெல்லி: 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே குழுவும் களமிறங்குகிறது. நாடு முழுவதும் வேட்பாளர்களைத் தேர்வு செய்து அவர்களை சுயேட்சையாகவே அல்லது ஒரு புது கட்சி சார்பாகவோ நிறுத்தப் போவதாக அன்னா ஹசாரே அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்த நேர்காணலில் கூறியுள்ளதாவது:
வலுவான லோக்பால் மசோதாவைக் கொண்டுவருவதில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும் மற்ற அரசியல் கட்சிகளும் துரோகம் செய்துவிட்டன. பாரதிய ஜனதாவோ அல்லது காங்கிரசோ ஆட்சிக்கு வந்தால் நாட்டின் எதிர்காலம் இருண்டுபோய்விடும்.

Thursday, July 26, 2012

அன்னா ஹசாரே குழுவின் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்துல கூட்டம் இல்லை

 Thin Attendance At Team Anna Fast Venue
டெல்லி: ஊழலுக்கு எதிராக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே குழுவினர் டெல்லியில் நடத்தி வரும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தின் 2-வது நாளில் கூட்டம் கணிசமாகக் குறைந்துவிட்டது.
மத்திய அமைச்சர்கள் 15 பேருக்கு எதிரான ஊழல் புகார்கள் குறித்து சிறப்பு விசாரணை நடத்த வேண்டும், எம்.பிக்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அன்னா ஹசாரே குழுவினர் நேற்று முதல் காலவரையற்ற போராட்டத்தை டெல்லியில் நடத்தி வருகின்றனர்.

Wednesday, July 25, 2012

நாட்டின் முதல் குடிமகனான ஜனாதிபதிக்கான அதிகாரங்கள் என்ன?

 Role Power India S President
டெல்லி: இந்திய ஜனநாயக அமைப்பில் குடியரசுத் தலைவர் என்பவர் முதல் குடிமகனாக இருந்தாலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றம் தான் அதிக அதிகாரம் கொண்டது. இருப்பினும் கூட முதல் குடிமகனான குடியரசுத் தலைவருக்கும் சில அதிகாரங்களை கொடுத்திருக்கிறது.
இந்திய அரசியல் சாசனத்தின் 53-வது பிரிவின் கீழ் குடியரசுத் தலைவருக்கென பிரத்யேகமான நிறைவேற்று அதிகாரங்கள் உள்ளன. நாட்டின் அனைத்து விவகாரங்களும் குடியரசுத் தலைவருக்கு தெரிவிக்கப்பட வேண்டும். பிரதமர், அமைச்சர்கள் உள்ளிட்ட அரசியல் சாசன ரீதியான உயர் நிலைப் பதவிகளை நியமிக்கவும் நீக்கவும் அதிகாரம் கொண்டவர்.

Tuesday, July 24, 2012

உணவும் உடற்பயிற்சியும் இதய நோயைத் தடுக்கும்!!!

Food Exercise Can Prevent Heart Disease
இன்றைய காலத்தில் இதய நோய் வருவது என்பது புதிதான விஷயம் அல்ல. அதிலும் அத்தகைய இதய நோய் பல இளைஞர்களுக்கும் விரைவில் வருகிறது. ஏனெனில் அதிகமான மனஅழுத்தம் வேலை செய்யும் இடங்களிலும், வீட்டிலும் அதிகம் இருப்பதே, இன்றைய இளைஞர்களுக்கு விரைவில் வருவதற்கு காரணம். முதலில் மாரடைப்பு 50 வயதை கடந்தவர்களுக்கு, அதிலும் ஆண்களுக்கே அதிகம் வரும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது பெண்களுக்கு 40 வயதானாலே மாரடைப்பு மற்றும் இதயத்தில் பக்கவாதம் போன்றவை வந்து தொல்லை தருகிறது.
இவையெல்லாம் வருவதற்கு ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவுப்பழக்கவழக்கங்கள் காரணங்களாக அமைகின்றன. ஆகவே அத்தகைய இதய நோயை வராமல் தடுக்க வேண்டுமென்றால், அதற்கு ஒரே ஈஸியான வழி நல்ல ஆரோக்கியமான உணவும், உடற்பயிற்சியும் வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Monday, July 23, 2012

பிரணாப் முகர்ஜியின் சம்பளம் எவ்வளவு என்று தெரியுமா...?

 What Pranab Mukherjee Will Earn
டெல்லி: நாட்டின் 13வது குடியரசுத் தலைவராக உருவெடுத்துள்ள பிரணாப் முகர்ஜிக்கு ஏகப்பட்ட சலுகைகள் காததிருக்கின்றன. அவருக்கு இனி மாதந்தோறும் ரூ. 1.50 லட்சம் சம்பளமாக கிடைக்கும்.
உலகிலேயே மிகப் பெரிய ஜனாதிபதி மாளிகை என்ற பெருமை படைத்தது ராஷ்டிபதி பவன். ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட இந்த மாளிகைதான் இனி பிரணாப் முகர்ஜியின் வீடு. சாதாரண கிராமத்திலிருந்து தனது புத்திசாலித்தனம், உழைப்பு, விடாமுயற்சி ஆகியவற்றால் இந்த நிலைக்கு உயர்ந்து சாதனை படைத்துள்ளார் பிரணாப் முகர்ஜி.

Sunday, July 22, 2012

ரூ. 10 லட்சம் அம்பாசடருக்கு டாட்டா.. ரூ. 12 கோடி பென்ஸில் ஏறப் போகும் பிரணாப்!

 President Wagon From Ambassador To Mercedes Benz
கொல்கத்தா: பிரணாப் முகர்ஜியின் முகவரி மட்டுமல்ல, அவரது காரும் கூட மாறப் போகிறது. இதுநாள் வரை தனது மேற்கு வங்க மாநிலத்தில் தயாரிக்கப்பட்ட அம்பாசடர் காரையே பயன்படுத்தி வந்த பிரணாப் முகர்ஜி இனிமேல் மெர்சிடிஸ் பென்ஸ் காரைப் பயனபடுத்தப் போகிறார்.
கடந்த ஐம்பது ஆண்டு்களாகவே அம்பாசடர் காரில் மட்டுமே பயணித்து வந்தவர் பிரணாப் முகர்ஜி. ஆனால் தற்போது குடியரசுத் தலைவர் தேர்தலுக்குப் பின்னர் அவர் முதல் முறையாக காரை மாற்றியாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குடியரசுத் தலைவருக்கான காராக ஜெர்மனியில் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் 600 காரே பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நீளமான லிமோசின் காரான இந்த பென்ஸானது, பல்வேறு வசதிகளுட்ன் கூடியதாகும். டிரைவருக்கும், குடியரசுத் தலைவருக்கும் இடையேயான பகுதி, சவுண்ட் புரூபுடன் கூடிய கண்ணாடியால் பிரிக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தாவிலும் கைது படலம் ஆரம்பம் : ஹாரூன் ரஷீத் மனைவி கண்ணீர்!


உயர் கல்வி கற்றும், வேலை கிடைக்காததால் ட்யூஷன் மாஸ்டராக வாழ்க்கையை தொடங்கிய ஹாரூன் ரஷீத் நேற்று முன் தினம் (20/07) மாலை கடத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
வேதனை மிகுந்த இந்த சம்பவம் குறித்து, அவரது மனைவி ரப்-அத் சுல்தானா கண்ணீர் மல்க கூறியதாவது : வெள்ளிக்கிழமை (20/07) பிற்பகல் 2 மணியளவில், அடையாளம் தெரியாத சிலர் "போலியோ சொட்டு மருந்து" கொடுக்கும் ஊழியர்களாக தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு, குழந்தைகள் குறித்த விபரங்கள் கேட்டு சென்றனர்.

 மாலை 4 மணி வாக்கில் அடையாளம் தெரியாத வேறு சிலர் மீண்டும் சொட்டு மருந்து குறித்து பேசிக்கொண்டே ,வீட்டுக்குள் புகுந்து எனது கணவரின் சட்டைக்காலரை பற்றிப்பிடித்து மூன்றடுக்கு மாடியிலிருந்து தரதரவென்று இழுத்து சென்றனர். காரணம் கேட்ட போது, அவர் தடை செய்யப்பட்ட "சிமி" அமைப்புடன் தொடர்புள்ளவர் என கூறி கடத்தல் காரர்களை விட மோசமானவர்களாக நடந்துக்கொண்டு கடத்தி சென்றனர்.

குடியரசுத் தலைவராகப் போகும் பிரணாப் முகர்ஜி முன்பு உள்ள சவால்கள் என்ன?

 President S Challenges Will Include Mercy Petition
டெல்லி: நாட்டின் 14-வது குடியரசுத் தலைவராக பொறுப்பேற்கும் பிரணாப் முகர்ஜி முன்பு உள்ள முக்கிய சவால்களில் ஒன்று அப்சல் குரு உள்ளிட்டோரின் கருணை மனுக்கள் மீது முடிவெடுப்பதுதான்.
2001-ம் ஆண்டு நாடாளுமன்றத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 12 பேர் பலியாகினர். இத்தாக்குதலில் தொடர்புடைய அப்சல் குருவுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் தமது தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி அப்சல் குரு கருணை மனு கொடுத்திருக்கிறார். இம்மனு மீது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

நாட்டின் 14-வது குடியரசுத் தலைவரானார் பிரணாப் முகர்ஜி

 Pranab Mukherjee Wins Presidential Election
டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் பிரணாப் முகர்ஜி வெற்றி பெற்றுளார். இதையடுத்து நாட்டின் 14-வது குடியரசுத் தலைவரானார் பிரணாப் முகர்ஜி.
குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் பிரணாப் முகர்ஜியும் எதிர்க்கட்சிகளின் சார்பில் சங்மாவும் போட்டியிட்டனர். கடந்த 19-ந் தேதி வாக்குப் பதிவின் போது மொத்தம் 8 லட்சம் வாக்குகள் பதிவாகின.

Saturday, July 21, 2012

பூமிக்கு அருகில் மேலும் ஒரு புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டது

 Planet Found Near Earth May Have Li
கலிபோர்னியா: பூமிக்கு அருகே மேலும் ஒரு புதிய கிரகம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக் கழகம் மற்றும் வாஷிங்டன் நிறுவனத்தை சேர்ந்த விண்வெளி விஞ்ஞானிகள் இந்த புதிய கிரகத்தைக் கண்டுபிடித்துள்ளனர்
புதிய கிரகமானது பூமியிலிருந்து 22 ஒளி ஆண்டு தொலைவில் உள்ளது. இந்த புதிய கிரகத்துக்கு 581ஜி என்று பெயரிட்டுள்ளது. பூமியைவிட இரண்டு மடங்கு பெரியதாக உள்ள இதில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியம் இருக்கிறது என்கின்றனர் விஞ்ஞானிகள்.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுக்கு படிப்பவரா நீங்கள்..."ஐ.ஜே.எஸ்"-ம் வருகிறதாம்...

டெல்லி: ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள்...இந்த வரிசையில் இப்போது வருகிறது ஐ.ஜே.எஸ். அதென்ன ஐ.ஜே.எஸ்?
ஆட்சி அதிகாரத்தில் உயர்நிலைப் பொறுப்பில் இருப்பவர்கள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள். காவல்துறையில் உயர்நிலைப் பொறுப்பில் இருப்பவர்கள் ஐ.பி.எஸ். அதிகாரிகள். இதேபோல வெளியுறவுத் துறைப் பணிகளுக்கு ஐஎப்எஸ், வருவாய்த் துறைக்கு ஐஆர்எஸ் என உள்ளது. இந்த வரிசையில் நீதித்துறையில் உயர்நிலைப் பொறுப்பாக ஐ.ஜே. எஸ். அதாவது இண்டியன் ஜூடிசியல் சர்வீஸ் என்பதை அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது.
இது தொடர்பான வரைவை சட்ட அமைச்சகம் தயாரித்திருக்கிறது. இன்னும் ஓரிருநாளில் கூட இருக்கும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் பெறப்பட்டுவிடும் என்று கூறப்படுகிறது.

Friday, July 20, 2012

முலாயம் போட்ட ஓட்டு செல்லாது என தேர்தல் ஆணையம் அறிவிப்பு..முகர்ஜிக்கு 708 ஓட்டு போச்சு...!

 President Poll Ec Cancels Mulayam Singh Yadav Vote
டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம்சிங் அளித்த வாக்கை ரத்து செய்வதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நேற்று நடைபெற்றது. டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் வாக்களித்த சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம்சிங் முதலில் எதிர்க்கட்சி வேட்பாளர் பி.ஏ.சங்மாவுக்கு வாக்களித்துவிட்டார். பின்னர் அதை கிழித்துப் போட்டுவிட்டு வேறு ஒரு வாக்குச் சீட்டு வாங்கி பிரணாப் முகர்ஜிக்கு வாக்களித்தார்.

Thursday, July 19, 2012

ரமலான் நோன்பை முன்னிட்டு முஸ்லிம்களுக்கு KIFF-ன் தலைவர் வெளியிட்ட வாழ்த்து செய்தி

குவைத்:குவைத்தில் வாழும் முஸ்லிம்களுக்கு கண்ணியமிக்க ரமலான் நோன்பு வாழ்த்துக்களை குவைத் இந்தியா ஃபிரடர்னிட்டி ஃபாரத்தின் தமிழ் பிரிவு தலைவர் சகோ.அம்ஜத் அலி தெரிவித்துள்ளார்கள்.


புனிதமிக்க ரமலான் நோன்பு தொடங்கியதையொட்டி அவர் வெளியிட்ட அறிக்கையில்: நோன்பு ஒரு கேடயம் எனபது ஹதீஸாகும்.கேடயம் என்பது எதிரிகள் விடுகின்ற அம்புகளை, ஈட்டிகளை, வாள் வீச்சுக்களை தடுக்கின்ற அன்றைய பாதுகாப்பு கலமாகும். அதை ரசூல்(ஸல்) அவர்கள் நோன்புக்கு உவமித்துக் காட்டியுள்ளார்கள். இதன் மூலம் நாம் எதிர்கொள்கின்ற அரசியல்,பொருளாதாரம்,சமூக,பண்பாட்டுச் சவால்கள்,ஆன்மீக,மானசீக சவால்களை எதிர்கொள்ள நோன்பை ஒரு கேடயமாக பயன்படுத்தி இம்மையிலும்,மறுமையிலும் வெற்றியாளர்களாக நம்மை ஆக்கிக் கொள்ள வேண்டும்.

2-ம் உலகப் போரில் யூதர்களை படுகொலை செய்த போர்க் குற்றவாளி 97 வயதில் கைது

 World S Most Wanted Nazi Held At 97
புடாபெஸ்ட்: 2-ம் உலகப் போரின் போது ஹங்கேரி நாட்டில் 16 ஆயிரம் யூதர்களின் மரணத்துக்கு காரணமாக இருந்த ஹிட்லரின் நாஜிப் படை அதிகாரி சிஸிக் ஸ்ட்ரே கைது செய்யப்பட்டுள்ளார்.
2-ம் உலகப் போரில் ஹிட்லரின் நாஜிப் படைகளால் மிகக் கொடூரமாக கொல்லப்பட்டனர். ஹங்கேரியில் 1944ம் ஆண்டு நாஜிப் படைகளின் அதிகாரியாக இருந்த சிஸிக் ஸ்ட்ரே சுமா 16 ஆயிரம் யூதர்களை நாஜிக்களின் கொலை முகாம்களுக்கு அனுப்பி வைத்தவர். அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்தார். கடந்த 68 ஆண்டுகாலமாக தலைமறைவு வாழ்க்கை வந்த அவரை இங்கிலாந்து வெளிவரும் தி சன் ஏடு கண்டுபிடித்து செய்தி வெளியிட்டது.

உள்ளே -வெளியே : டார்கெட் வைத்து முஸ்லிம்களை வேட்டையாடும் போலீஸ்!


டெல்லி: 12 ஆண்டுகளுக்கு முன் பயங்கரவாத குற்றச்சாட்டுக்களின் பேரில் கைது செய்யப்பட்ட  முஸ்லிம் இளைஞர்கள் காலித், முனீர், அர்ஷத், அப்துர்ரஜாக், முஹம்மத் அலீம் மற்றும் சொஹ்ராப் அஹ்மத் ஆகிய 6 பேர்,  நிரபராதிகள்
என இம்மாதம் 10ந்தேதி தீர்ப்பு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர். ATS போலீசார், இவர்கள் மீது சுமத்திய எந்த குற்றங்களும் நிரூபிக்கப்படவில்லை. பதட்டத்தை  உருவாக்கும் வகையில் "போஸ்டர் ஒட்டினார்கள்" என்ற, சிறு குற்றச்சாட்டும் கூட நிரூபிக்கப்படவில்லை.

Wednesday, July 18, 2012

நோன்பு கஞ்சி செய்யும் முறை


தேவையானவை:


அரிசி - ஒரு கப்
கடலை பருப்பு - கால் கப்
வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
கோதுமை குருணை - கால் கப்
கொத்து கறி - 100 கிராம்
பெரிய வெங்காயம் - ஒன்று
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 5
மல்லித் தழை - 2 கொத்து
புதினா - 2 கொத்து
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - அரை மேசைக்கரண்டி + ஒரு தேக்கரண்டி
தேங்காய் - ஒரு மூடி
பட்டை - ஒன்று

சென்னை ரயில் நிலையங்களில் ரகசிய கேமராக்கள்


சென்னை: சென்னையில் உள்ள ரயில் நிலையத்தில் நடைபெறும் கடத்தல், வழிப்பறி போன்ற குற்றங்களை தடுக்க ஆங்காங்கே ரகசிய கேமிராக்களை பொருத்தி கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.


சென்னையில் உள்ள ரயில் நிலையங்களில் குழந்தை கடத்தல், அரிசி கடத்தல், நகை பறிப்பு, பிக்பாக்கெட் போன்ற குற்றங்கள் வழக்கமாக நடைபெறுகின்றன. இதில் பணம் மற்றும் பொருட்களை இழக்கும் பயணிகள், ரயில்வே போலீசாரிடம் புகார் அளித்தாலும், பெரும்பாலான குற்றவாளிகளை பிடிக்க முடிவதில்லை.



மேலும் ரயில் நிலையங்களில் நடைபெறும் குற்ற சம்பவங்களை தடுக்க போலீசார், கண்காணிப்பில் ஈடுபட்டாலும், மறைமுகமாக பல குற்றங்கள் நடைபெறுவதை தடுக்க முடிவதில்லை. இதையடுத்து ரயில் நிலையங்களில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில், ஆங்காங்கே ரகசிய கேமராக்களை பொருத்த தென்னக ரயில்வே முடிவு செய்துள்ளது.

Tuesday, July 17, 2012

வறட்சியில் பிடியில் சிக்கித் தவிக்கும் 50% அமெரிக்கா!

 Drought Now Grips More Than Half The Nation
வால்டான்வில்லி: அமெரிக்காவுக்கு இது சோகமான காலம். அந்த நாட்டின் பாதிப் பகுதி வறட்சியின் பிடியில் சிக்கித் தவித்துள்ளதாம். வரலாறு காணாத வெயிலும், வராத மழையுமே இதற்குக் காரணம் என்கிறார்கள். மழை வர மேலும் தாமதமானால் அமெரிக்கா முழுவதுமே வறட்சியின் பிடியில் சிக்கிக் கொள்ளும் நிலை ஏற்படும் என தேசிய காலநிலை தகவல் மையம் எச்சரித்துள்ளது.
கடந்த 30கள் மற்றும் 50களில்தான் இப்படிப்பட்ட பெரும் வறட்சியை அமெரிக்காக சந்தித்தது. அதன் பிறகு தற்போதுதான் வறட்சி அங்கு தாண்டவமாட ஆரம்பித்துள்ளதாம். வறட்சி காரணமாக பயிர்கள் கருக ஆரம்பித்துள்ளனவாம். மழை வராவி்ட்டால் நிலைமை மேலும் மோசமாகும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேசிய காலநிலை தகவல் மையம் வெளியிட்டுள்ள மாதாந்திர அறிக்கையில், நாட்டின் 55 சதவீதப் பகுதியில் வறட்சி காணப்படுகிறது. கடந்த ஜூன் மாதம், இதுவரை இல்லாத அளவுக்கு பெரும் வெப்ப மாதமாக காணப்பட்டது. இப்படி ஜூன் மாதத்தில் கடும் வெப்ப நிலை நிலவியது அமெரிக்க வரலாற்றில் இது 14வது முறையாகும்.

ஜனாதிபதி தேர்தல்: விருப்பமே இல்லதான்... ஆனாலும் பிரணாப்பைதான் ஆதரிக்கிறோம்- மமதா அறிவிப்பு

 Presidential Poll Pained Mamata
கொல்கத்தா: குடியரசுத் தலைவர் தேர்தலில் பல திருப்பங்களை ஏற்படுத்தி வந்த மமதா பானர்ஜி தமது இறுதி முடிவில் அதிரடியாக ஒரு பல்டி அடித்திருக்கிறார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் பிரணாப் முகர்ஜியை திரிணாமுல் காங்கிரஸ் ஆதரிக்கும் என்று அதிரடியாக அறிவித்திருக்கிறார். குடியரசு துணைத் தலைவர் தேர்தல் பற்றி பின்னர் அறிவிப்பதாகவும் மமதா கூறியுள்ளார்.
கொல்கத்தாவில் தமது கட்சியினருடனான ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மமதா கூறியதாவது:
குடியரசுத் தலைவர் தேர்தலில் அப்துல்கலாமைத்தான் நிறுத்த விரும்பினேன்.ஆனால் இதர கட்சிகளின் ஆதரவு அதற்கு கிடைக்கவில்லை. தேர்தலில் வாக்களிக்காமல் இருந்தாலும் திரிணாமுல் காங்கிரஸின் வாக்குகள் வீணாகிவிடும்.

Monday, July 16, 2012

ரமலானை வரவேற்போம்!!!

புனிதமும்,கண்ணியமும்,ரஹ்மத்தும் நிறைந்த மாதமான ரமலான் நம்மை நெருங்கி கொண்டிருக்கிறது. ஈமான் கொண்ட அனைவரும் இந்த மாதத்தை எதிர்நோக்கியவாறு தங்களுடைய 5 கடமைகளில் ஒன்றான நோன்பை நிறைவேற்றி அல்லாஹ்வின் பொருத்தத்தை அடைய ஆவலாகவும், சந்தோஷமாகவும் உள்ளனர். 


ஏனென்றால் நோன்பு முஸ்லிம்களின் உள்ளங்களிலும்,வாழ்க்கையிலும் நல்லதொரு மாற்றங்களை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் அடுத்து வருகின்ற பதினோரு மாதங்களுக்குகான ஒரு பயிர்ச்சியாகவும் உள்ளது. மேலும் முஸ்லிம்களுக்கு இது ஒரு வசந்த காலம் என்று கூறும் அளவுக்கு நன்மைகள் பொதிந்து கிடக்கின்றன.


இறைவனை நினைவு கூர்தல், தர்மம் செய்தல், நோன்பு நோற்றல், ஐவேளை தொழுதல், இரவு நேர வணக்கங்கள், சொல்-செயல்-எண்ணங்கள் என்று அனைத்திலும் இறையச்சத்தை பேணுதல் என்று ஒரு அமைதியான, நிம்மதியான சூழலை ரமலான் நம்மிடையே ஏற்படுத்தி விடுகின்றது. ரமலானின் முழு பலனையும் அடைய வேண்டும் என்பதில் எந்த ஒரு முஸ்லீமுக்கும் இரு வேறு கருத்துக்கள் இருக்க முடியாது.

பதப்படுத்தப்பட்ட உணவுகள் புற்றுநோயை உண்டாக்குமா?

Can Processed Meat Give Cancer
இன்றைய பிஸியான உலகில் எதையும் வீட்டில் சமைத்து உண்ணும் பழக்கமே குறைவாக உள்ளது. அதிலும் நேரத்தை செலவு பண்ணாமல் சேகரிக்க, பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்ணுகின்றனர். அதிலும் பன்றிக் கறி, மாட்டிறைச்சி, கொத்துக்கறி, இஞ்சிபூண்டு கொண்டு செய்யப்பட்ட ஒரு சில உணவு வகைகள் மற்றும் மற்ற கெட்டுப் போகாமல் இருக்க கெமிக்கல் கலந்த உணவுப் பொருட்கள் போன்றவற்றை வாங்கி சாப்பிடுகின்றனர். இவ்வாறு பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை உண்பதால் புற்றுநோயானது ஏற்படும். அதிலும் ஒரு நாளைக்கு 150 கிராம் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்பது, 3-4 சிகரெட்களை பிடிப்பதற்கு சமமாகும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அது எப்படியென்று பார்ப்போமா!!!

Sunday, July 15, 2012

மலேரியா காய்ச்சலுக்குத் தடுப்பு மருந்து: விஞ்ஞானிகள் சாதனை


சுவிட்சர்லாந்தில் பேஸெல் நகரத்தில் உள்ள மருத்துவக் கல்லூரியின் திட்டத்தலைவரான பிளேய்ஸ் ஜெண்ட்டான் 40 ஆண்டுகால உழைப்புக்குப் பின்பு மலேரியாக் காய்ச்சலுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடித்ததில் வெற்றிகண்டுள்ளார்.
RTS, S என்ற தடுப்பு மருந்து பல்வேறு மருத்துவ சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இப்போது நம்பிக்கை அளித்து வருகிறது.
மலேரியா நோய் வைரஸால் ஏற்படுவதில்லை. ஒட்டுண்ணியால் தோன்றுகிறது. ஒட்டுண்ணியால் ஏற்படும் ஒரு நோய்க்குத் தடுப்புமருந்து கண்டுபிடித்திருப்பது இதுவே முதல் முறையாகும்.
இதுவும் மருந்து கொடுக்கப்பட்டவரில் நூற்றுக்கு ஐம்பது பேருக்குப் பலனளிக்கிறது. இந்த ஐம்பது பேர் பலனடைவதே மருத்துவ உலகில் குறிப்பிடத்தக்க சாதனையாகும்.

ஆதி மனிதனின் முழுமையான முதல் எலும்புக் கூடு கண்டுபிடிப்பு!

 Most Complete Pre Human Skeleton Discovered Scientists
லண்டன்: ஆதி மனிதன் ஒருவனின் முழுமையான எலும்புக்கூடு ஒன்று முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 20 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய எலும்புக் கூடு இது என்றும் தெரிய வந்துள்ளது.
ஆதி மனிதன் ஒருவனின் எலும்புக் கூட முழுமையாக நமக்குக் கிடைத்திருப்பது இதுவே முதல் முறையாகும். இதனால் விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆதி மனிதர்களின் உடல் கூறு குறித்த புதிய பரிமாணத் தகவல்கள் நமக்குக் கிடைக்கலாம் என்ற நம்பிக்கையும் பிறந்துள்ளது.
தென் ஆப்பிரிக்க விஞ்ஞானிகள்தான் இதைக் கண்டுபிடித்துள்ளனர். இது கண்டுபிடிக்கப்பட்டதே பெரும் சுவாரஸ்யமானதாகும். தென் ஆப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பர்க் நகரின் வடக்கே ஒரு பாறைப் பகுதியில் 2008ம் ஆண்டு இந்த எலும்புக்கூட கண்டுபிடிக்கப்பட்டது. இதை முழுமையாக ஆராய்ச்சி செய்வதற்காக ஆய்வகத்திற்குக் கொண்டு சென்றனர்.

Saturday, July 14, 2012

குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் அன்சாரி: ஐ.மு.கூட்டணி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

 Ansari Vice Presidential Candidate
டெல்லி: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் ஹமீத் அன்சாரியையே மீண்டும் வேட்பாளராக நிறுத்த ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி முடிவு செய்துள்ளது. டெல்லியில் இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்று மாலை வெளியிடப்பட்டது,
குடியாசுத் தலைவர் தேர்தலில் பிரணாப் முகர்ஜியை நிறுத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் ஹமீத் அன்சாரியையே மீண்டும் நிறுத்துவது என முடிவு செய்திருந்தது. இது தொடர்பாக கடந்த சில நாட்களாக கூட்டணிக் கட்சிகளுடன் காங்கிரஸ் தீவிர ஆலோசனை நடத்தி வந்தது.

தமிழகத்துக்கான ஹஜ் பயண ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும்: பிரதமருக்கு ஜெயலலிதாகடிதம்

 Tamil Nadu Cm J Jayalalithaa Petit
சென்னை: தமிழகத்துக்கான ஹஜ் புனிதப் பயண ஒதுக்கீட்டை கூடுதலாக வழங்க ‌மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
ஐந்தாண்டு ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளவதற்காக, தமிழ்நாடு ஹஜ் குழுமத்துக்கு 12 ஆயிரத்துக்கும் அதிகமானோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வந்துள்ளன. ஆனால் மும்பையில் உள்ள இந்திய ஹஜ் குழுமம், தமிழகத்துக்கு 2863 இடங்களை மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது.இந்த ஒதுக்கீடு மிகவும் குறைவானது என்று சொல்ல தேவையில்லை.

Friday, July 13, 2012

உ.பி : கப்ரஸ்தான் சுற்றுச்சுவர் அமைக்க விடாமல் அராஜகம்!


உத்தரப்பிரதேசம் சஹாரன்பூர் மாவட்டத்தின் "நாசிர் புரா" கிராமத்தில் முஸ்லிம்களின் பட்டா நிலத்தில் "சுற்றுச்சுவர்" அமைக்க விடாமல்
அராஜகம் செய்து தடுத்தனர், அக்கிரமக்கார ஆக்கிரமிப்பாளர்கள். அரசாங்க பதிவேட்டின் படியும், ஆவணங்களின்படியும் முஸ்லிம்களுக்கு சொந்தமான "கப்ரஸ்தான்" இடத்தில், சில ஹிந்துக்கள் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர்.

துணை ராணுவப் படைகளில் வீரர்களுக்கு மனஅழுத்தம்: வெளியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு


டெல்லி: எல்லை பாதுகாப்பு படை மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் ஆகிய பாதுகாப்பு படைகளை சேர்ந்த வீரர்களுக்கு அதிக மனஅழுத்தம் ஏற்படுகிறது. இதனால் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் சுமார் 51 ஆயிரம் பேர் ஓய்வு பெற்றுள்ளதாக ஒர் அதிர்ச்சி ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.
இந்திய நாட்டின் பாதுகாப்பில் முப்படைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதில் எல்லை பாதுக்காப்பு படை(பி.எஸ்.எப்), மத்திய ரிசர்வ் போலீஸ்(சி.ஆர்.பி.எப்) போன்ற துணை ராணுவ படைகள் பக்கபலமாக செயல்படுகின்றன.
மேற்கண்ட படைகள் பாதுகாப்பு பணிகளில் மட்டுமின்றி, வெள்ளம், தீவிபத்து, பஞ்சம் போன்ற இயற்கை சீற்றங்கள் மற்றும் விபத்துகள் ஏற்படும் போது பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதனால் பி.எஸ்.எப் மற்றும் சி.ஆர்.பி.எப் படைகளை சேர்ந்த வீரர்களுக்கு கடும் மனஅழுத்தம் ஏற்படுகிறது. இதையடுத்து இப்படைகளில் இருந்து ஓய்வு பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

Thursday, July 12, 2012

விண்டோஸ் 8 அக்டோபர் மாதம் வெளியாகிறது.

புதிய இயங்குதளத்தினை வருகிற அக்டோபர் மாதம் வெளியிடுவதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.நேற்றைய முன் தினம் உலகளவிலான பங்குதாரர் கண்காட்சி கனடாவில் உள்ள டோரண்டோவில் நடைபெற்றது.இந்த கண்காட்சியில் மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது புதிய இயங்குதளமான விண்டோஸ்-8 வருகிற அக்டோபர் மாதம் வெளியாகும் என்று அறிவித்திருக்கிறது.


இந்த கண்காட்சி 12 ஆம் தேதி வரை நடைபெறும்.இந்த இயங்குதளம் கொண்ட பிசி கம்ப்யூட்டர்கள் தயாரிக்கும் வேலைகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.இந்த வேலைகள் ஓரளவு முடிந்து வெளியாகும் தருவாயில் உள்ளது.

புதிய நில மோசடி புகாருடன் கர்நாடக முதல்வராக ஷெட்டர் இன்று பதவியேற்பு!

 Shettar Be Sworn As Karnataka Cm Today
பெங்களூர்: கர்நாடகத்தின் புதிய பாஜக முதல்வராக ஜெகதீஷ் ஷெட்டர் இன்று பதவியேற்றார்.
ஏகப்பட்ட நாடகங்களுக்குப் பிறகு நடந்த கர்நாடக பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் சட்டப்பேரவை பா.ஜ.க. தலைவராக ஜெகதீஷ் ஷெட்டர் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதையடுத்து, முன்னாள் முதல்வர்கள் எதியூரப்பா, சதானந்த கெளடா, பா.ஜ.க. தேசிய பொதுச் செயலாளர் எச்.என். அனந்த் குமார், பா.ஜ.க. மாநிலத் தலைவர் கே.எஸ். ஈஸ்வரப்பா ஆகியோருடன் ஆளுநர் மாளிகைக்கு வந்த ஜெகதீஷ் ஷெட்டர், ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநர் எச்.ஆர். பரத்வாஜிடம் கோரிக்கை வைத்தார்.

Wednesday, July 11, 2012

5 ஆண்டுகளில் ரூ. 1662 கோடி வருமானம் பார்த்த காங்... பாஜகவுக்கு 852 கோடிதான்!

 Congress Raises Rs 1 662 Crore 5 Years Bjp 852 Crores
டெல்லி: நாட்டின் பொருளாதாரம் எந்த லட்சணத்தில் இருந்தால் என்ன, பணவீக்கம் எகிறிக் கொண்டே போனால் என்ன, ரூபாய் மதிப்பு குறைந்து கொண்டே போனால் என்ன... அரசியல் கட்சிகளின் பண இருப்பு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டேதேன் போகிறது. குறிப்பாக காங்கிரஸ் கட்சிதான் இந்தியாவிலேயே மிக மிகப் பெரிய பணக்கார கட்சியாக ரொம்ப உசரத்தில் போய் நிற்கிறது
கடந்த ஐந்து ஆண்டுகளில் இக்கட்சிக்கு ரூ. 1662 கோடி அளவுக்கு வருமானம் கிடைத்துள்ளதாம். பாஜகவின் பங்கு ரூ. 852 கோடியாகும்.

Tuesday, July 10, 2012

முஸ்லிம் இளைஞர்கள் கைதுக்கு மத்திய மாநில அரசுகளே பொறுப்பு -குல்தீப் நய்யார்

தீவிரவாத குற்றச்சாட்டுக்களின் பெயரில், குறி வைத்து கைது செய்யப்படும் முஸ்லிம் இளைஞர்களின் குடும்பங்கள் மட்டுமில்லாமல், ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகமே கவலையில் ஆழ்ந்துள்ளது.


இது குறித்து கடந்த பல ஆண்டுகளாக பலரும் குரல் கொடுத்தும் பயனில்லை. மாறாக முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக சித்தரித்து, கைது படலம் நடத்தும் "நோய்" தீவிரம் அடைந்து வருகிறது.  கடந்த 6 மாதங்களில் மட்டும் பீகாரை சேர்ந்த 15 படித்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டு, கொடுஞ்சித்திரவதைக்கு ஆளாகி வருகின்றனர்.

"தூங்கிக் கொண்டே அரசை வழிநடத்துபவர்': வாஜ்பாய் குறித்து 'டைம்' சொன்னது மறந்து போச்சா? -ப.சி

 Time Said Vajpayee Was Asleep At The Wheel In 2002
டெல்லி: மன்மோகன் சிங் ஒரு செயல்படாத பிரதமர் என்ற டைம் பத்திரிக்கையின் கருத்து தவறானது என்றும், இதைக் காரணம் காட்டி மன்மோகன் சிங் பதவி விலக வேண்டும் என்ற பா.ஜ.கவின் கோரிக்கை ரசனையற்றது என்றும் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
மேலும் 2002ம் ஆண்டு இதே டைம் பத்திரிக்கை அப்போதைய பாஜக பிரதமர் வாஜ்பாயை தூங்கும் பிரதமர் என்று கூறியதையும், அதை அப்போது பாஜகவினர் கடுமையாக கண்டித்ததையும் சிதம்பரம் சுட்டிக் காட்டியுள்ளார்.

3 நிபந்தனைகளை நிறைவேற்றினால் மட்டுமே ஆளுநரிடம் ராஜினாமா கடிதம் கொடுக்க சதானந்த கவுடா முடிவு

 Karnataka Sadananda Gowda Sets 3 Conditions
பெங்களூர்: கர்நாடக அரசியலில் நெருக்கடிக்கு தீர்வு காணப்பட்டுவிட்டதாக கருதிவந்த பாஜக மேலிடத்துக்கு சதானந்த கவுடாவின் புதிய நிபந்தனைகள் அதிர்சியைக் கொடுத்துள்ளது. தங்களது நிபந்தனைகளை நிறைவேற்றினால் மட்டுமே ஆளுநரிடம் சதானந்த கவுடா முறைப்படி பதவி விலகல் கட்டிதத்தைக் கொடுப்பார் என்றும் அறிவித்துள்ளதால் குழப்பம் நீடித்துவருகிறது.
பாஜக மேலிடப் பிரதிநிதிகளான ராஜ்நாத்சிங், அருண்ஜேட்லி முன்னிலையில் இன்று காலை பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தைக் கூட்டி புதிய முதல்வராக ஜெகதீஷ் ஷெட்டரைத் தேர்வு செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் எம்.எல்.ஏக்கள் கூட்டத்துக்கு முன்பாக சதானந்த கவுடா புதிய நிபந்தனைகளை விதித்திருக்கிறது.

Monday, July 9, 2012

பெஸ்ட் பேக்கரி கலவர வழக்கு... 4 பேர் குற்றவாளிகள், 5 பேர் விடுதலை: மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு

 Four Found Guilty Best Bakery Riots
மும்பை: குஜராத், பெஸ்ட் பேக்கரி எரிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் 4 பேர் குற்றவாளிகள் என்று மும்பை உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. அவர்களுக்கான தண்டனையையும அது உறுதி செய்துள்ளது. அதேசமயம், ஐந்து பேர் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரம் இல்லை என்று கூறி அவர்களை விடுதலை செய்யவும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
வதோதராவில் உள்ளது பெஸ்ட் பேக்கரி என்ற பேக்கரிக் கடை. குஜராத் மாநிலம் கோத்ராவில் வன்முறை வெடித்தபோது 2002ம் ஆண்டு மார்ச் 1ம் தேதி இந்த பேக்கரிக்குள் ஒரு கும்பல் புகுந்தது. அங்கு புகுந்து வன்முறையில் அக்கும்பல் ஈடுபட்டது. பேக்கரியும் தீவைத்து எரிக்கப்பட்டது. இதில் 14 பேர் கொல்லப்பட்டனர்.

குவைத்: வெளிநாட்டவர்களை வெளியேற்றும் விதிமுறைகள் கடுமையாகிறது


குவைத் சிட்டி: வெளிநாட்டவர்களை வெளியேற்றும் விதிமுறைகளை உள்துறை அமைச்சகம் நேற்று மிகவும் கடுமையாக்கியுள்ளது.

அதில் ரெட் சிக்னல்களை தாண்டுபவர்கள் உடனடியாக அவர்களுடைய சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கபடுவார்கள் என்றும் 180kph அதிகமான வேகத்தில் ஓட்டும் போதும் பிடிபடுபவர்கள், தண்டதொகையை கட்டாமல் காலம் கடத்துபவர்கள் இவர்கள் அனைவரையும் திருப்பி அனுப்பபடுவர்கள் என்றும் உள்துறை அமைச்சகத்தின் செய்தி குறிப்பு கூறுவதாக அரப் டைம்ஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

Sunday, July 8, 2012

கள்ளநோட்டை கண்டுபிடிக்க உதவும் ரிசர்வ் வங்கி இணையதளம்

Rbi Launches Website Explain Detection Of Fake Currency
டெல்லி: கள்ளநோ்ட்டு குறித்து மக்கள் இடையே விழிப்புணவர்வு ஏற்படுத்த மத்திய ரிசர்வ் வங்கி புதிய இணையதளம் ஒன்றை துவங்கியுள்ளது.
நாட்டில் கள்ளநோட்டு புழக்கம் அதிகரி்த்துள்ளது. இதையடுத்து கள்ளநோட்டு குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மத்திய ரிசர்வ் வங்கி புதிய இணையதளம் ஒன்றைத் துவங்கியுள்ளது. அதில் கள்ளநோட்டுகளை கண்டுபிடிக்கும் வழிகள் குறித்த விளக்கங்கள் உள்ளன.
www.paisaboltahai.rbi.org.in என்ற அந்த இணையதளத்திற்கு சென்றால் ரூ.10, ரூ.20, ரூ.50, ரூ.100, ரூ.500 மற்றும் ரூ.1,000 ரூபாய் நோட்டுகளின் படங்கள் உள்ளன. அவற்றை கிளிக் செய்தால் உண்மையான நோட்டில் உள்ள அம்சங்கள் பட்டியிடலிடப்பட்டுள்ளன. இதை வைத்து நீங்கள் கள்ளநோட்டை எளிதில் கண்டுபிடித்துவிடலாம். வேண்டும் என்றால் அந்த படங்களை பதவிறக்கம் செய்து கொள்ளலாம். இது குறித்த ஆவணப் படத்தையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

எதிர்பார்த்த அளவுக்கு எதையும் சாதிக்கவில்லை மன்மோகன் சிங்- டைம்

 Time Magazine Dubs Manmohan Singh Underachiever
நியூயார்க்: பிரதமர் மன்மோகன் சிங் எதிர்பார்த்த அளவுக்கு செயல்படவில்லை, எந்த சாதனையையும் செய்யவில்லை. பொருளாதார சீர்திருத்தங்களை துணிச்சலுடன் செயல்படுத்த அவர் தயக்கம் காட்டுகிறார் என்று அமெரிக்காவின் டைம் பத்திரிக்கை கட்டுரை வெளியிட்டுள்ளது.
டைம் பத்திரிக்கையின் ஆசியப் பதிப்பின் கவர் ஸ்டோரியாக மன்மோகன் சிங் இடம் பெற்றுள்ளார். 'The Underachiever - India needs a reboot' என்ற தலைப்பில் பிரதம்ர் மன்மோகன் சிங்கையும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசையும் விமர்சித்துள்ளனர். மன்மோகன் சிங் சாதிக்கத் தவறி விட்டதாகவும் அதில் விமர்சித்துள்ளனர்.

உத்தரப்பிரதேசத்தில் 3 மாதத்தில் 1149 கொலைகள்: கட்டுப்படுத்த முடியாதம் தடுமாறும் முதல்வர் அகிலேஷ்

 Akhilesh Fails Curb Goondaraj 1149 Murders Three Months
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் முதல்வர் அகிலேஷ் யாதவ் பொறுப்பேற்ற 3 மாதங்களில் 1146 கொலைகள் நிகழ்ந்திருக்கின்றன. ரவுடிகள் ராஜ்ஜியத்தை கட்டுப்படுத்த முடியாமல் அகிலேஷ் யாதவ் தடுமாறி வருகிறார்.
கடந்த ஆண்டில் இதே காலத்தில் 714 கொலைச் சம்பவங்கள் நடந்திருக்கின்றன. இந்த ஆண்டு மார்ச் முதல் ஜூன் மாதம் வரை மொத்தம் 472 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகி இருக்கின்றன. கடந்த ஆண்டில் 384 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகி இருந்தன. இதேபோல் மார்ச் மாதம் முதல் ஜூன் வரை மொத்தம் 2001 ஆட்கடத்தல் வழக்குகள் பதிவாகி இருக்கின்றன. கடந்த ஆண்டோ 1803 வழக்குகள்தான் பதிவாகி உள்ளன.

Saturday, July 7, 2012

முஸ்லிம்களுக்கு 10% உள் ஒதுக்கீடு : மேற்கு வங்க சட்டசபையில் தீர்மானம்!


கடந்த 65 வருடங்களாக, கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் புறக்கணிக்கப்பட்டு வந்த, மேற்கு வங்கத்தில்  வாழும் 27% முஸ்லிம்கள், நிவாரணம் பெறும் வகையில்
வெள்ளிக்கிழமையன்று (06/07) மேற்கு வங்க சட்டசபையில், சரித்திரம் வாய்ந்த தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம்,  பாதிக்கப்பட்டு வந்த முஸ்லிம் சமூகம், நிவாரணம் பெறத்துவங்கும். மாநிலத்தில் அமலில் இருந்து வரும் பிற்படுத்தப்பட்டோருக்கான 17% இட ஒதுக்கீட்டிலிருந்து, முஸ்லிம்களுக்கு  10%  "உள் ஒதுக்கீடு" வழங்கும் தீர்மானம் அனைத்துக்கட்சிகளின் ஆதரவோடும் நிறைவேற்றப்பட்டது.  

Friday, July 6, 2012

இதயநோயை தடுக்கும் வால்நட்!

Walnuts Lower Cholesterol Other Cv
‘வால்நட்' எனப்படும் அக்ரூட் கொட்டை உடல் கொழுப்பை எளிதில் கரைத்து இதயநோய்களை தடுக்கிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உடலில் கொழுப்பின் அளவு அதிகரித்தால் மாரடைப்பு உள்ளிட்ட இதய பாதிப்புகள் தாக்கும் அபாயம் ஏற்படும். உடல் பருமன் மற்றும் கொழுப்பு சத்தால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு உணவு முறைகளே முதல் காரணமாக கூறப்பட்டாலும் போதிய உடற்பயிற்சி இன்மையும் ஒரு காரணம். உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைத்து ஆரோக்கியத்தை அதிகரிப்பதில் அக்ரூட்டுக்கு முதலிடம் கொடுக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். ‘வால்நட்' எனப்படும் அக்ரூட் கொட்டை உடல் கொழுப்பை எளிதில் கரைத்து ஆரோக்கியத்தை அதிகரிப்பது சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

Thursday, July 5, 2012

கேஸ் சிலிண்டர் வெடிப்பு மரணங்கள் தமிழ்நாட்டில் அதிகம்: முதலிடத்தில் குஜராத்!

 Lpg Cylinder Is Ticking Bomb State
தமிழ்நாட்டில் சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்து கடந்த ஆண்டு மட்டும் 586 பெண்கள் உயிரிழந்துள்ளதாக தேசிய குற்றப்பதிவேடுகள் ஆணையத்தின் புள்ளிவிபரத்தில் தெரியவந்துள்ளது. இந்தியாவிலேயே அதிக அளவில் கேஸ் சிலிண்டர் விபத்து நடந்த மாநிலமாக குஜராத் உள்ளது. அம்மாநிலத்தில் மட்டும் 735 பேர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக தேசிய குற்றப்பதிவேடுகள் ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளி விவரம் வருமாறு:-

கேஸ் ஸ்டவ் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்தும், கேஸ் கசிவினால் ஏற்படும் தீ விபத்திலும் பலியாவோர் எண்ணிக்கை அதிகரித்தபடி செல்கிறது. பல வழிகளில் பாதுகாப்பு மற்றும் முன் எச்சரிக்கை தொடர்பான விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்படுகின்றன. ஆனாலும், விபத்துகள் குறைந்த பாடில்லை.

மக்காவில் ரமலான் : தராவீ ஹ் தொழுகை அட்டவணை


ஹிஜ்ரி 1433 : இவ்வாண்டு, புனித மக்காவில் ரமலான் மாதத்தின் முதல் 5 நாட்களுக்கு "இப்ராஹீமுஷ்ஷுரைம்" அவர்கள், தராவீஹ் தொழுகையை தொழ வைப்பார்கள்.
6 ம் இரவு  முதல்  10 ம் இரவு  வரை "மாஹிருல் முஹீக்ஹி" அவர்களும் 10 முதல்  13 ம் இரவு வரை "அப்துர்ரஹ்மான் ஸுதைஸ்"  அவர்களும், அதை தொடர்ந்து   20 ம் இரவு வரை, "அப்துல்லாஹ் பின் அவாத்" மற்றும் "மாஹிருல் முஹீக்ஹி" ஆகிய இருவரும் தொழ வைப்பர்.   20 ம் இரவு முதல் 25 ம் இரவு வரை "அப்துல்லாஹ் பின் அவாத்"  அவர்களும்  25 ம் இரவு  முதல் ரமளானின் இறுதி  வரை "அப்துர்ரஹ்மான் ஸுதைஸ்"  அவர்களும் தொழ வைப்பார்கள்.

பாபர் மசூதியை இடிக்க நரசிம்ம ராவ் உடந்தையாக இருந்தார்: குல்தீப் நய்யார் சுயசரிதை

 Narasimha Rao Performed Puja During Demolition Of Babri
டெல்லி: பாபர் மசூதி இடிப்புக்கு மறைந்த முன்னாள் பிரதமர் நரசிம்மராவும் உடந்தையாக இருந்தார் என்று பிரபல பத்திரிக்கையாளர் குல்தீப் நய்யார் எழுதியுள்ள புத்தகத்திலும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மறைந்த மூத்த காங்கிரஸ் தலைவர் அர்ஜூன் சிங் எழுதி, விரைவில் வெளியாகவுள்ள சுயசரிதையிலும் பாபர் மசூதி விவகாரத்தில் ராவ் மீது கடும் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளது.
'A Grain of Sand in the Hourglass of Time' என்ற அந்தப் புத்தகத்தில், மசூதியை இடிக்கப் போகிறார்கள்.. நடவடிக்கை எடுங்கள் என்று நரசிம்ம ராவிடம் நேரடியாகவே சொன்னேன். அதை அவர் காதிலேயே வாங்கவில்லை என்று அர்ஜூன் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.