Sunday, July 1, 2012

மேற்கும் வங்கம் : மம்தாவின் ஜம்பம்


27% முஸ்லிம் மக்கள் தொகை கொண்ட மேற்கு வங்கத்தில், அரசுப்பணிகளில் முஸ்லிம்களுக்கு பட்டை  நாமம் போட்டுள்ளார், மம்தா பானெர்ஜி.
அரசின் பல்வேறு துறைகளில் உள்ள 651 பணியிடங்களை நிரப்புவதற்கான ஆணை நேற்று முன்தினம் (29/06) வெளியிடப்பட்டது.  அதில், முஸ்லிம்களுக்கு 23 பணியிடங்கள் மட்டுமே  ஒதுக்கப்பட்டுள்ளது.  34 ஆண்டுகால கம்யூனிச ஆட்சிக்கு முடிவு கட்டி, முதல்வராகியுள்ள மம்தா பானெர்ஜி, முஸ்லிம்களுக்கு வேலை வாய்ப்பில் உரிய இடம் தருவேன் என்று தேர்தல் வாக்குறுதி வழங்கினார்.

குறிப்பாக, பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட  ஒதுக்கீட்டில், முஸ்லிம்களுக்கு  10% உள்ஒதுக்கீடு வழங்கப்படும் என்று உறுதியளித்தார். ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைந்துள்ள இந்த நேரத்தில், முதன் முறையாக நிரப்பப்பட்ட இந்த 651 பணியிடங்களில் 23 இடங்களுக்கு மட்டுமே முஸ்லிம்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  இது  3.5% ஆகும். 27% மக்கள் தொகை கொண்ட ஒரு  மாநிலத்தில், முஸ்லிம்களுக்கு பட்டை நாமம் போட்டுள்ளார் மம்தா. குறிப்பாக, 2 முஸ்லிம்களுக்கு மட்டுமே ஒதுக்கீட்டு முறையில் பணி வழங்கப்பட்டுள்ளது.  மற்ற 21  முஸ்லிம்களும் பொதுப்பிரிவில் தேர்வாகியுள்ளனர், என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment