Tuesday, July 3, 2012

ஹோர்முஸ் ஜலசந்தியை இழுத்து மூடுகிறது ஈரான்.. நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு வந்தது!

 Iran Drafts Bill Block Hormuz Gulf Oil Tankers
டெஹ்ரான்: ஆசிய, ஐரோப்பிய நாடுகளின் எண்ணெய் வர்த்தகத்துக்கு முதன்மையான பயன்படுத்தப்படும் ஹோர்முஸ் ஜலசந்தியை மூடுவதற்காக ஈரான் நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அணு ஆயுதத் தயாரிப்பில் ஈரான் ஈடுபடுகிறது என்பது அமெரிக்கா, இஸ்ரேல், ஐரோப்பிய நாடுகளின் புகார். இதனால் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத் தடை விதித்தன. இதனை ஏற்றுக் கொண்டு ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை படிப்படியாக குறைத்துக் கொள்ளுமாறு இந்தியா,சீனா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு அமெரிக்கா நெருக்கடி கொடுத்து வந்தது. அமெரிக்காவுக்கான ஈரானுடனான வர்த்தக உறவுகளை இந்தியா உள்ளிட்ட நாடுகள் குறைத்துக் கொள்ளவும் செய்தன.
இருப்பினும் மத்திய கிழக்கு நாடுகளுடனான ஆசிய, ஐரோப்பிய நாடுகளின் எண்ணெய் வர்த்தகத்துக்கு முதன்மையாக பயன்படுத்தப்பட்டு வருவது ஈரானின் ஹோர்முஸ் ஜலசந்திதான். இந்த ஜலசந்தியை மூடப்போவதாக ஈரான் அவ்வப்போது எச்சரித்து வந்தது. ஹோர்முஸ் ஜலசந்தியை மூடினால் போர் தொடுப்போம் என்று அமெரிக்கா மிரட்டிப் பார்த்தது.
இந்நிலையில் ஈரான் நாட்டு நாடாளுமன்றத்தில் ஹோர்முஸ் ஜலசந்தியை மூடுவதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்நாட்டின் 100 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதற்கு ஒப்புதல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து ஹோர்முஸ் ஜலசந்தியில் போர்மேகம் சூழ்ந்திருக்கிறது.

No comments:

Post a Comment