டெல்லி: கள்ளநோ்ட்டு குறித்து மக்கள் இடையே விழிப்புணவர்வு ஏற்படுத்த மத்திய ரிசர்வ் வங்கி புதிய இணையதளம் ஒன்றை துவங்கியுள்ளது.
நாட்டில் கள்ளநோட்டு புழக்கம் அதிகரி்த்துள்ளது. இதையடுத்து கள்ளநோட்டு குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மத்திய ரிசர்வ் வங்கி புதிய இணையதளம் ஒன்றைத் துவங்கியுள்ளது. அதில் கள்ளநோட்டுகளை கண்டுபிடிக்கும் வழிகள் குறித்த விளக்கங்கள் உள்ளன.
www.paisaboltahai.rbi.org.in என்ற அந்த இணையதளத்திற்கு சென்றால் ரூ.10, ரூ.20, ரூ.50, ரூ.100, ரூ.500 மற்றும் ரூ.1,000 ரூபாய் நோட்டுகளின் படங்கள் உள்ளன. அவற்றை கிளிக் செய்தால் உண்மையான நோட்டில் உள்ள அம்சங்கள் பட்டியிடலிடப்பட்டுள்ளன. இதை வைத்து நீங்கள் கள்ளநோட்டை எளிதில் கண்டுபிடித்துவிடலாம். வேண்டும் என்றால் அந்த படங்களை பதவிறக்கம் செய்து கொள்ளலாம். இது குறித்த ஆவணப் படத்தையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த இணையதள முகவரி மத்திய ரிசர்வ் வங்கியின் இணையதளத்திலும் உள்ளது. இந்த இணையதளத்தில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கள்ளநோட்டுகளின் விவரங்கள் உள்ளன.
கள்ளநோட்டு விவகாரம் குறித்து ரிசர்வ் வங்கியின் கவர்னர் டி. சுப்பாராவ் கூறுகையில்,
கள்ளநோட்டுப் பிரச்சனையை தீர்க்க அரசும், போலீசாரும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். கள்ளநோட்டு எது, நல்லநோட்டு எது என்று கண்டுபிடிப்பது குறித்து மக்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டியது அவசியம் என்றார்.
No comments:
Post a Comment