Tuesday, July 10, 2012

3 நிபந்தனைகளை நிறைவேற்றினால் மட்டுமே ஆளுநரிடம் ராஜினாமா கடிதம் கொடுக்க சதானந்த கவுடா முடிவு

 Karnataka Sadananda Gowda Sets 3 Conditions
பெங்களூர்: கர்நாடக அரசியலில் நெருக்கடிக்கு தீர்வு காணப்பட்டுவிட்டதாக கருதிவந்த பாஜக மேலிடத்துக்கு சதானந்த கவுடாவின் புதிய நிபந்தனைகள் அதிர்சியைக் கொடுத்துள்ளது. தங்களது நிபந்தனைகளை நிறைவேற்றினால் மட்டுமே ஆளுநரிடம் சதானந்த கவுடா முறைப்படி பதவி விலகல் கட்டிதத்தைக் கொடுப்பார் என்றும் அறிவித்துள்ளதால் குழப்பம் நீடித்துவருகிறது.
பாஜக மேலிடப் பிரதிநிதிகளான ராஜ்நாத்சிங், அருண்ஜேட்லி முன்னிலையில் இன்று காலை பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தைக் கூட்டி புதிய முதல்வராக ஜெகதீஷ் ஷெட்டரைத் தேர்வு செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் எம்.எல்.ஏக்கள் கூட்டத்துக்கு முன்பாக சதானந்த கவுடா புதிய நிபந்தனைகளை விதித்திருக்கிறது.
- முதல்வர் பதவியை ராஜினாமா செய்யும் சதானந்த கவுடாவுக்கு மாநில பாஜக தலைவர் பதவி வழங்க வேண்டும்
- கோவிந்த் கர்ஜோலை துணை முதல்வராக நியமிக்க வேண்டும்
- சதானந்த கவுடா ஆதரவாளர்களுக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்க வேண்டும். அமைச்சர்கள் யார் என்ற பட்டியலை வெளியிட வேண்டும்
என்பதுதான் சதானந்த கவுடா தரப்பு விதித்திருக்கும் நிபந்தனைகள். இந்த நிபந்தனைகளை நிறைவேற்றினால்தான் ஆளுநரிடம் முறைப்படி சதானந்த கவுடா ராஜினாமா கடிதம் கொடுப்பார் என்றும் கூறப்பட்டிருக்கிறது.
இன்று காலை முதல் சதானந்த கவுடா வீட்டில் அவரது ஆதரவு அமைச்சர்கள் 18 பேரும் எம்.எல்.ஏக்கள் 35 பேரும் ஒன்று கூடி ஆலோசானை நடத்தி வருகின்றனர். சதானந்த கவுடா தரப்பின் புதிய நிபந்தனைகளால் கை பிசைந்து நிற்கிறது பாஜக மேலிடம்.

No comments:

Post a Comment