Monday, July 9, 2012

குவைத்: வெளிநாட்டவர்களை வெளியேற்றும் விதிமுறைகள் கடுமையாகிறது


குவைத் சிட்டி: வெளிநாட்டவர்களை வெளியேற்றும் விதிமுறைகளை உள்துறை அமைச்சகம் நேற்று மிகவும் கடுமையாக்கியுள்ளது.

அதில் ரெட் சிக்னல்களை தாண்டுபவர்கள் உடனடியாக அவர்களுடைய சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கபடுவார்கள் என்றும் 180kph அதிகமான வேகத்தில் ஓட்டும் போதும் பிடிபடுபவர்கள், தண்டதொகையை கட்டாமல் காலம் கடத்துபவர்கள் இவர்கள் அனைவரையும் திருப்பி அனுப்பபடுவர்கள் என்றும் உள்துறை அமைச்சகத்தின் செய்தி குறிப்பு கூறுவதாக அரப் டைம்ஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.


மேலும் காலாவதியான விசா உள்ளவர்கள், தவறான வேலை செய்பவர்கள் ஆகியோரும் இதில் அடங்குவார்கள். குவைதில் வாகனம் ஓட்டுபவர்கள் விதிமுறைகளுக்கு உட்பட்டு மிகவும் கவனமாக செயல்பட வேண்டும்.

No comments:

Post a Comment