Thursday, July 5, 2012

மக்காவில் ரமலான் : தராவீ ஹ் தொழுகை அட்டவணை


ஹிஜ்ரி 1433 : இவ்வாண்டு, புனித மக்காவில் ரமலான் மாதத்தின் முதல் 5 நாட்களுக்கு "இப்ராஹீமுஷ்ஷுரைம்" அவர்கள், தராவீஹ் தொழுகையை தொழ வைப்பார்கள்.
6 ம் இரவு  முதல்  10 ம் இரவு  வரை "மாஹிருல் முஹீக்ஹி" அவர்களும் 10 முதல்  13 ம் இரவு வரை "அப்துர்ரஹ்மான் ஸுதைஸ்"  அவர்களும், அதை தொடர்ந்து   20 ம் இரவு வரை, "அப்துல்லாஹ் பின் அவாத்" மற்றும் "மாஹிருல் முஹீக்ஹி" ஆகிய இருவரும் தொழ வைப்பர்.   20 ம் இரவு முதல் 25 ம் இரவு வரை "அப்துல்லாஹ் பின் அவாத்"  அவர்களும்  25 ம் இரவு  முதல் ரமளானின் இறுதி  வரை "அப்துர்ரஹ்மான் ஸுதைஸ்"  அவர்களும் தொழ வைப்பார்கள்.

தஹஜ்ஜுத் தொழுகையின் பொறுப்பு "சவூதுஷ்ஷுரைம்"  அவர்களிடம் இருக்கும்.  மேலும்,  ரமளானின்  ஜும்ஆ  குத்பா உரைகளை பொறுத்த மட்டில்,  முதல் ஜும்ஆவில்  "சாலிஹுத்தாலிப்" அவர்களும்  இரண்டாம்  ஜும்ஆவில்  "தவக்குல் உசாமா" அவர்களும்  மூன்றாம்  ஜும்ஆ  "ஷுரைம்"  அவர்களும்,  நான்காம்  ஜும்ஆ மற்றும் பெருநாள் தொழுகை "ஸாலிஹ் பின் ஹமீத்" அவர்களும் தொழ வைப்பார்கள். மேற்கண்ட முடிவுகள் புனித மக்கா பள்ளிவாசலின் "நிர்வாக பொதுக்குழு"வில் எடுக்கப்பட்டதாக,  "அல் அரபிய்யா டாட் நெட்"டில்  தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment