Thursday, July 19, 2012

ரமலான் நோன்பை முன்னிட்டு முஸ்லிம்களுக்கு KIFF-ன் தலைவர் வெளியிட்ட வாழ்த்து செய்தி

குவைத்:குவைத்தில் வாழும் முஸ்லிம்களுக்கு கண்ணியமிக்க ரமலான் நோன்பு வாழ்த்துக்களை குவைத் இந்தியா ஃபிரடர்னிட்டி ஃபாரத்தின் தமிழ் பிரிவு தலைவர் சகோ.அம்ஜத் அலி தெரிவித்துள்ளார்கள்.


புனிதமிக்க ரமலான் நோன்பு தொடங்கியதையொட்டி அவர் வெளியிட்ட அறிக்கையில்: நோன்பு ஒரு கேடயம் எனபது ஹதீஸாகும்.கேடயம் என்பது எதிரிகள் விடுகின்ற அம்புகளை, ஈட்டிகளை, வாள் வீச்சுக்களை தடுக்கின்ற அன்றைய பாதுகாப்பு கலமாகும். அதை ரசூல்(ஸல்) அவர்கள் நோன்புக்கு உவமித்துக் காட்டியுள்ளார்கள். இதன் மூலம் நாம் எதிர்கொள்கின்ற அரசியல்,பொருளாதாரம்,சமூக,பண்பாட்டுச் சவால்கள்,ஆன்மீக,மானசீக சவால்களை எதிர்கொள்ள நோன்பை ஒரு கேடயமாக பயன்படுத்தி இம்மையிலும்,மறுமையிலும் வெற்றியாளர்களாக நம்மை ஆக்கிக் கொள்ள வேண்டும்.

நப்ஷும்,ஷைத்தானும்,உலக மாயையும் எம்மை ஆட்டிபடைக்காமல் அவற்றை கட்டுப்படுத்தும் பயிற்ச்சியாக தர்பிய்யத்தாக நோன்பு காலத்தை பயன்படுத்துவோமாக.


இந்நிலையில் ரமலான் நோன்பு தினத்தை வரவேற்கும் உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களுக்கும் குறிப்பாக குவைத் வாழ் முஸ்லிம்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.   

No comments:

Post a Comment