Friday, July 13, 2012

உ.பி : கப்ரஸ்தான் சுற்றுச்சுவர் அமைக்க விடாமல் அராஜகம்!


உத்தரப்பிரதேசம் சஹாரன்பூர் மாவட்டத்தின் "நாசிர் புரா" கிராமத்தில் முஸ்லிம்களின் பட்டா நிலத்தில் "சுற்றுச்சுவர்" அமைக்க விடாமல்
அராஜகம் செய்து தடுத்தனர், அக்கிரமக்கார ஆக்கிரமிப்பாளர்கள். அரசாங்க பதிவேட்டின் படியும், ஆவணங்களின்படியும் முஸ்லிம்களுக்கு சொந்தமான "கப்ரஸ்தான்" இடத்தில், சில ஹிந்துக்கள் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர்.

மேலும், இந்த இடம் அரசாங்கத்தின் மூலம், தங்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டதாக, கூறி வந்தனர். கடந்த சில தினங்களுக்கு முன், மேற்படி இடத்தில், ஒருவரது "மய்யித்"தை அடக்கம் செய்ய முற்பட்டபோது, ஆக்கிரமிப்பாளர்கள், அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து "வருவாய்த்துறையினர்" போலீசார் முன்னிலையில் ஆஜராகி, இந்த இடம் முஸ்லிம்களுக்கு சொந்தமானது.

உரிய பேச்சுவார்த்தையின் மூலம் சுமூகமாக பிரச்சினை விரைவில் தீர்த்து வைக்கப்படும், என உறுதி வழங்கினார்கள். இதற்கிடையில்,  நேற்று (12/07) மேற்படி இடத்தை பாதுகாக்கும் வகையில், "சுற்றுச்சுவர்" அமைக்கும் பணியை முஸ்லிம்கள் துவங்கினர். இதையறிந்த ஆக்கிரமிப்பாளர்கள், கற்களை வீசியும், கம்புகளை கொண்டு தாக்கியும், பலரை காயப்படுத்தினர்.  உரிய நேரத்தில் போலீஸ் தலையிட்டதால், பிரச்சினை தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.  என்றாலும், இரு தரப்பிலும் தலா 8 நபர்களின் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர், போலீசார்.

வருவாய்த்துறையினரோ, இடம் முஸ்லிம்களுக்கு சொந்தமானது தான், ஆனால் அவர்கள், அதன் கட்டுமானப்பணிக்கு முறைப்படி அனுமதி பெறவில்லை என்று  கூறி, தங்கள் பொறுப்பை தட்டிக்கழித்தனர்.

No comments:

Post a Comment