டெல்லி: சுவிஸைத் தொடர்ந்து பிரான்சிலும் இந்தியர்கள் கறுப்புப் பணம் பதுக்கியிருப்பது தெரியவந்துள்ளது. இந்தியர்களின் ரூ565 கோடி கறுப்புப் பணம் பிரான்சில் பதுக்கப்பட்டிருப்பது தெரியவந்திருப்பதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஐரோப்பிய நாடுகளுடன் இந்திய அரசு இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள இந்தியர்களின் பணம் குறித்த விவரங்களைப் பெற முடியும். தற்போதும் இந்த ஒப்பந்தம் மூலமே பிரான்சில் இந்தியர்களின் கறுப்புப் பணம் பதுக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
மேலும் 30, 675 சந்தேகத்துக்குரிய பண பரிமாற்றம் குறித்தும் நேரடி வரிகள் விதிப்பு வாரியம் கண்டறிந்திருக்கிறது. தற்போது வாரியத்தின் புலனாய்வு அமைப்பின் மூலம் இந்த பரிமாற்றங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
வெளிநாடுகளுடனான தகவல் பரிமாற்ற ஒப்பந்தங்களின் படி பல்வேறு பணப் பரிமாற்றம் தொடர்பாக தகவல்கள் கோரப்பட்டுள்ளன. வெளிநாடுகளுடன் இரட்டை வரிவதிப்பு தவிர்ப்பு தொடர்பாக 84 ஒப்பந்தங்களில் இந்தியா கையெழுத்திட்டிருக்கிறது. இதனால் இன்னும் பல்வேறு நாடுகளில் பதுக்கப்பட்டிஉர்க்கும் கறுப்புப் பணம் பற்றிய விவரங்கள் வெளிவரக் கூடும் என எதிர்பார்க்கலாம்.
No comments:
Post a Comment