Sunday, July 22, 2012

கொல்கத்தாவிலும் கைது படலம் ஆரம்பம் : ஹாரூன் ரஷீத் மனைவி கண்ணீர்!


உயர் கல்வி கற்றும், வேலை கிடைக்காததால் ட்யூஷன் மாஸ்டராக வாழ்க்கையை தொடங்கிய ஹாரூன் ரஷீத் நேற்று முன் தினம் (20/07) மாலை கடத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
வேதனை மிகுந்த இந்த சம்பவம் குறித்து, அவரது மனைவி ரப்-அத் சுல்தானா கண்ணீர் மல்க கூறியதாவது : வெள்ளிக்கிழமை (20/07) பிற்பகல் 2 மணியளவில், அடையாளம் தெரியாத சிலர் "போலியோ சொட்டு மருந்து" கொடுக்கும் ஊழியர்களாக தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு, குழந்தைகள் குறித்த விபரங்கள் கேட்டு சென்றனர்.

 மாலை 4 மணி வாக்கில் அடையாளம் தெரியாத வேறு சிலர் மீண்டும் சொட்டு மருந்து குறித்து பேசிக்கொண்டே ,வீட்டுக்குள் புகுந்து எனது கணவரின் சட்டைக்காலரை பற்றிப்பிடித்து மூன்றடுக்கு மாடியிலிருந்து தரதரவென்று இழுத்து சென்றனர். காரணம் கேட்ட போது, அவர் தடை செய்யப்பட்ட "சிமி" அமைப்புடன் தொடர்புள்ளவர் என கூறி கடத்தல் காரர்களை விட மோசமானவர்களாக நடந்துக்கொண்டு கடத்தி சென்றனர்.

அவர்கள் குறித்த தகவல் கேட்டபோது "வாய்க்கு வந்தபடி கேட்ட வார்த்தைகளால்" திட்டினர். அருகில் உள்ள "கார்டன் ரீச்" காவல் நிலையத்தில் கணவர் குறித்து விசாரித்தவருக்கு, உரிய தகவல் கிடைக்கவில்லை.  பின்பு "மட்டியா பிரிட்ஜ்" காவல் நிலையத்துக்கு சென்றும் பயனில்லை.

வேறு சிலர் மூலம் "STF" போலீசார் வசம் கணவர் ஹாரூன் ரஷீத் இருப்பதாக சொல்லப்பட்டது.  24மணி நேரம் கடந்த பின்பும் முறையான எந்த தகவலும் இல்லை. பீகாரை பூர்வீகமாக கொண்ட ஹாரூன் ரஷீதின் தகப்பனார் அப்துல் கய்யூம் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் கொல்கத்தாவில் குடியேறி "ஹிந்துஸ்தான் லிவர் கம்பெனி"யில்  40 ஆண்டு பனிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

அவரது மூத்த மகன் ஹாரூன் ரஷீத், கடந்த 2000ம் ஆண்டில் கல்லூரியின் இறுதியாண்டில் 30க்கும் மேற்பட்ட, சக நண்பர்களுடன் சுற்றுலா சென்றிருந்தார். அப்போது "சிமி" தொடர்பு என காரணம் கூறப்பட்டு குஜராத் போலீசால் கைது செய்யப்பட்ட அவர், எந்த இயக்கத்தின் தொடர்பும் இல்லாத "நிரபராதி" என நீதிமன்றத்தால் 2001ம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டு, வீடு திரும்பினார்.

2001க்குப்பிறகு, இந்த 11 ஆண்டில் தனது மகன் கொல்கத்தாவை விட்டு எங்கும் எப்போதும் சென்றதில்லை, எனக்கூறுகிறார்.  தற்போது ,பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி கொல்கத்தா போலீஸ், அவர் முஸ்லிமாக இருப்பதற்கான தண்டனை வழங்கியிருப்பதாக வேதனைப்படுகிறார்.

No comments:

Post a Comment