புவனேஸ்வர்: 290 கி.மீ. தூரம் வரை சென்று இலக்கை தாக்கும் பிரம்மோஸ் ஏவுகணையின் தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை இன்று காலை ஒரிசாவின் சந்திப்பூரில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
ஒலியை விட மூன்று மடங்கு வேகத்தில் 290 கி.மீ. தூரம் வரை சென்று இலக்கை தாக்கும் பிரம்மோஸ் ஏவுகணையை மேம்படுத்தும் வகையில் அதில் புதிய தொழில்நுட்பங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதையடுத்து புதிய தொழில்நுட்பங்களுடனான பிரம்மோஸ் சூப்பர்சானிக் ஏவுகணை இன்று காலை 10.45 மணிக்கு ஒடிஸா மாநிலத்தின் சந்திப்பூரில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த தளத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
பிரம்மோஸ் ஏவுகணை ஏற்கனவே ராணுவம், கடற்படை ஆகியவற்றில் இணைக்கப்பட்டுள்ளது. அதை மேலும், மேலும் மேம்படுத்தும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
ரஷ்யா-இந்தியா கூட்டு முயற்சியில் உருவாக்கப்ப்டட பிரம்மோஸ் ஏவுகணை கடந்த மார்ச் மாதம் 28ம் தேதி இதே தளத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment