தீவிரவாத குற்றச்சாட்டுக்களின் பெயரில், குறி வைத்து கைது செய்யப்படும் முஸ்லிம் இளைஞர்களின் குடும்பங்கள் மட்டுமில்லாமல், ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகமே கவலையில் ஆழ்ந்துள்ளது.
இது குறித்து கடந்த பல ஆண்டுகளாக பலரும் குரல் கொடுத்தும் பயனில்லை. மாறாக முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக சித்தரித்து, கைது படலம் நடத்தும் "நோய்" தீவிரம் அடைந்து வருகிறது. கடந்த 6 மாதங்களில் மட்டும் பீகாரை சேர்ந்த 15 படித்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டு, கொடுஞ்சித்திரவதைக்கு ஆளாகி வருகின்றனர்.
பல முஸ்லிம் இளைஞர்கள், ஜெயில்களில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டும் வருகின்றனர். இதற்கு ஜனநாயக ரீதியில் முற்றுப்புள்ளி வைத்திடும் வண்ணம், நாடாளுமன்ற உறுப்பினர் முஹம்மத் அதீப் அவர்களின் முன் முயற்சியால், நேற்று டெல்லியில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் பேசிய ராம் விலாஸ் பாஸ்வான் எம்.பி, மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லாஹ், கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஏ.பி. பரதன், டி.ராஜா, பத்திரிக்கையாளர்கள் குல்தீப் நய்யார், சீமா முஸ்தபா உள்ளிட்ட பல சமூக ஆர்வலர்களும், உள்துறை அமைச்சர் ப சிதம்பரத்தை கண்டித்து பேசினார். மத்திய மாநில அரசுகளின் கொலைவெறி கைதுகளையும், கொடும் சித்திரவதைகளுக்கு எதிராகவும் குரல் கொடுத்தனர்.
தங்கள் குடும்ப உறுப்பினர்களை கைது படலங்களுக்கு பலி கொடுத்துள்ள ஏராளமான ஆண்களும் பெண்களும் கூட்டத்தில் கலந்துக்கொண்டனர். பேச்சாளர்களின் உரைகளை கேட்ட அவர்கள், கண்ணீர் வடித்தபடி இருந்தனர். இந்த கண்ணீருக்கு கண்டிப்பாக பதில் சொல்லியே ஆக வேண்டும், தவறான நடைமுறைகளை வைத்துக்கொண்டு கோரத்தாண்டவமாடும் கொடுங்கோல் அதிகாரிகள்.

No comments:
Post a Comment