Monday, July 30, 2012

தேர்தல் வியாபாரத்துக்கு தயாராகி வரும் "மரண வியாபாரி" மோடி!


குஜராத் : மரண வியாபாரி மோடி, தேர்தல் நெருங்கி வரும் தற்போது அரசியல் வியாபாரத்தை லாபகரமாக நடத்தி முடிக்க தயாராகி வருகிறார்.
சமாஜ்வாதி கட்சியின்  "ஷாஹித் சித்தீகி"யை கவனிக்கும் விதத்தில் கவனித்து, அவர் நடத்தும் "நயீ துனியா" வாரப்பத்திரிக்கைக்கு  அளித்த பேட்டியில்,  தான் முஸ்லிம்களுக்கு எதிரி இல்லை என்று  தன்னிலை விளக்கம் அளித்ததுள்ளார், மோடி.

முஸ்லிம் இனப்படுகொலையில், தான் குற்றம் செய்யவில்லை என்றும், தன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், தூக்கு மேடை ஏறவும் தயார், என்றும் தெரிவித்திருந்தார்.

மோடியின் பசப்பு வார்த்தைகள் மீது முஸ்லிம்களுக்கோ இதர நடுநிலை மக்களுக்கோ நம்பிக்கை வரவில்லை, என்பதோடு "நயீ துனியா" ஆசிரியர் ஷாஹித் சித்தீகி கட்சியிலிருந்தே ஓரங்கட்டப்பட்டு விட்டார்.

அதையடுத்து, அஹ்மதாபாத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்த நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு பேசிய மஹராஷ்ட்ரா மாநில எம்.பி.யும், மராத்தி பத்திரிகையான ‘லோக்மத்’தின் ஆசிரியருமாகிய விஜய் தார்தாவை பயன்படுத்திய மோடி, ‘பொறுப்புணர்விலும், பணிகளைச் செய்து முடிப்பதில் காட்டும் அர்ப்பணிப்பு உணர்விலும் புலியைப் போன்று செயல்படுகிறார்’ நரேந்திர மோடி, என புகழாரம் சூட்டிக்கொண்டார்.

அதற்கு பகரமாக, அகமதாபாதில் நடைபெற்ற நிகழ்ச்சியில், விஜய் தார்தாவுக்கு பத்திரிகைத் துறையில் அவரது சிறந்த சேவையைப் பாராட்டி,  சிறந்த சமூக சேவைக்கான  ‘தருண் கிராந்தி’ விருது வழங்கி கவுரவித்தார், மோடி. தற்போது, பாபா ராம்தேவும், மோடி எந்தத் தவறையும் செய்யவில்லை, நான் அறிந்த வரையில் குஜராத்தில் ஊழல் எதுவும் நடைபெறவில்லை, என்று  நற்சான்று வழங்கியுள்ளார்.

ஆனால்,  அன்னா ஹசாரே குழுவினர் பாபா ராம்தேவின் இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஊழலுக்கு எதிரான "லோக் ஆயுக்தா" நீதிமன்றத்தை பல ஆண்டுகளாக அமைக்காமல், ஊழலில் மூழ்கி வரும் மோடிக்கு இப்படி நற்சான்று வழங்கக்கூடாது, என்று ராம்தேவை கண்டித்தனர்.

No comments:

Post a Comment